முதல் பக்கம் தொடர்புக்கு  


நெல் இரகங்கள்

 

நெல் பயிர் செய்வதில் இந்தியா ஒரு முக்கியமான மையமாக விளங்குகிறது. உலகளவில் இன்று இரு முக்கியமான நெல் வகைகள் விளைவிக்கப்படுகின்றன. அவை, "ஒரைசா சட்டைவா இன்டிகா" மற்றும் "ஒரைசா சட்டைவா ஜப்போனிகா" ஆகியவை ஆகும். கிழக்கு இமயமலையின் மலையடிவாரக் குன்று பரப்புகளில்தான் முதன் முதலில் "இன்டிகா" இரக நெல் பயிரிடப்பட்டதாகவும், நெல் உற்பத்தி பற்றிய சீன குறிப்புகள் 4000 வருடங்களுக்கு முன்நோக்கியது என்றும், வரலாற்று ஆர்வலர்கள் நம்புகின்றனர். தற்போது பயிரிடப்படும் நெல் வகையில் 1,40,000-க்கும் மேற்பட்ட இரகங்கள் வழக்கில் உள்ளதாக (ஒரைசா சட்டைவா குடும்ப வகை புல்) கருதப்படுகிறது. ஆயினும், ரகங்களின் துல்லியமான எண்ணிக்கை ஒரு புதிராகவே உள்ளது.