| 
        கேரளாவின் நெல் இரகங்கள் 
           
        
          
           
           
           
          
            
              குறுகிய கால இரகங்கள் 
பருவம் : விரிப்பு(I பயிர்/ இலையுதிர் காலம்), முண்டகன் (II பயிர்/குளிர்ப்பருவம்), புன்சா (III பயிர்-கோடைக்காலம்)  | 
             
            
              | இரகங்கள் | 
              காலம்(நாட்கள்) | 
              தவிடு நிறம்,  
              தானிய வகை | 
              தனிச்சிறப்புகள் | 
             
            
              ஹ்ரஸ்வா 
              (சியுஎல் 24-20) | 
              75-80  | 
              சிவப்பு, 
             நடுத்தரம், தடிப்பு  | 
              மிக குறுகிய கால இரகம். பயிர் இழப்பு ஏற்படும் இடங்களில் இது பொருத்தமானவை.  இலைமடிப்பு பூச்சிக்கு இலக்காகும்.  நேரடி விதை பயிர்  இரகம்.  | 
             
            
              | கட்டமோடன் (உயரம்)(பிடிபி 28) | 
              110-115  | 
              சிவப்பு  | 
              மேட்டுப்பாங்கான நிலம் (மோடன்). வறட்சி  எதிர்ப்புத் திறன் கொண்டது. | 
             
            
              | கருத்தமோடன்(உயரம்) (பிடிபி 29) | 
              105-110  | 
              சிவப்பு  | 
              மேட்டுப்பாங்கான நிலம் (மோடன்). வறட்சி  எதிர்ப்புத் திறன் கொண்டது. | 
             
            
              | ஸ்வர்ண மோடன் (உயரம்) (பிடிபி 30) | 
              105-110  | 
              சிவப்பு  | 
              மேட்டுப்பாங்கான நிலம் (மோடன்). வறட்சி  எதிர்ப்புத் திறன் கொண்டது. | 
             
            
              | அன்னப்பூர்ணா(பிடிபி 35) | 
              95-100  | 
              சிவப்பு,  
              குட்டையான தடிப்பு  | 
              நேரடி விதைப்புக்கு ஏற்றது. குலைநோய், கதிர்உறை கருகல் நோய், புகையான் ஆகியவை எளிதில் தாக்கக் கூடியது.  முதல் மற்றும் மூன்றாம் பருவப் பயிறுக்கு ஏற்றது. | 
             
            
              | ரோகிணி (பிடிபீ 36) | 
              85-105  | 
              வெள்ளை, நீளம், தடிப்பு  | 
              விரிப்புப் பருவத்தில் நன்கு வளரக் கூடியது.  ஆனால் முண்டகன் பருவத்திற்கு ஏற்றதல்ல.  நேரடி விதைப்புக்கு ஏற்றது. | 
             
            
              | திருவேணி | 
              100-105  | 
              வெள்ளை, நீளம், தடிப்பு  | 
              புகையானால் தாக்குதல் ஏற்படுவதை தாங்கும் தன்மை பெற்றது.  குலைநோய் மற்றும் கதிர் உறை கருகல் நோய் எளிதில் தாக்கக் கூடியது. | 
             
            
              | ஜ்யோதி(பிடிபீ 39) | 
              110-125  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              புகையான், குலைநோயை தாக்குதலில் மிதமாகத் தாங்கும் திறன் பெற்றது.  கதிர் உறைக் கருகல் நோய் எளிதில் தாக்கும் நேரடி விதைப்பு, பயிர் நடுதல்.  மேலும் கோல் மற்றும் குட்டநாடுவின் சிறப்பு அமைப்புகள் ஆகியவற்றுகளுக்கு ஏற்ற இரகம். | 
             
            
              | ஸ்வர்ணபிரபா(பிடிபீ 43) | 
              105-110  | 
              வெள்ளை, நீளம், தடிப்பு  | 
              மேட்டுப்பாங்கான நிலம் (மோடன்) மற்றும் நஞ்சை நிலத்திலுள்ள 3 பருவங்களுக்கும் ஏற்ற இரகம், குலைநோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.  கதிர் உறைக் கருகல் நோய் மற்றும் நுண்ணுயிர் இலைக்கருகல் நோய்களால் தாக்கக்கூடியது.  குருத்துப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.  கூட்டு முண்டகனுக்கு சிறந்த முதல் பயிர் கூறு ஆகும். | 
             
            
              மட்டதிருவேணி 
              (பிடிபீ 45) | 
              100-105  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              புகையானுக்கு தாங்கும் ஆற்றல் பெற்றது. குலைநோய் மற்றும் இலை உறைக் கருகல் நோயால் தாக்கக்கூடியது. முதல் மற்றும் இரண்டாம் பயிர்வகைக்கு சிறந்தது. | 
             
            
              | கைராளி(பிடிபீ 49) | 
              110-115  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              குலைநோய், கருகல் நோய், ஆனைக்கொம்பன் ஈ மற்றும் இலைமடிப்பிதழ் நோய் ஆகியவற்றை மிதமாய் தாங்கும் ஆற்றல் பெற்றது.  மூன்று பருவங்களிலும் இதனை பயிர் செய்யலாம். | 
             
            
              | காஞ்சனா (பிடிபீ 50) | 
              105-110  | 
              சிவப்பு, நீளம் தடிப்பு  | 
              கோல் மற்றும் குட்டநாட் வட்டாரத்திற்கு ஏற்ற வகை.  கருகல் நோய், குலைநோய் குருத்து பூச்சி, ஆனைக்கொம்பன் ஈ ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.  அனைத்துப் பருவங்களுக்கும் ஏற்றது. | 
             
            
              | கார்த்திகா(எம் ஒ -7) | 
              105-125  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              மூன்று பருவங்களுக்கும் ஏற்றது.  இலையுறைக்கருகல் நோய், இலையுறை அழுகல் நோய் மற்றும் புகையான் ஆகியவற்றை மிதமாய் எதிர்க்கும் ஆற்றல் உடையது.  கூட்டுமுண்டகனுக்கு சிறந்த முதற்பயிர் கூறு ஆகும். | 
             
            
              | அருணா(எம் ஒ 8) | 
              100-110  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              புகையான், குருத்து பூச்சியை தாங்கும் ஆற்றல்.  ஆனைக்கொம்பன் ஈ இலையுறை கருகல் நோய், இலையுறை அழுகல் ஆகியவைக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.  ஒரு மாதம் வரை விதை உறக்கம் கொண்டது.  குளிர்காலத்திற்கு ஏற்ற வகை.   | 
             
            
              | மகோம்  (எம்ஒ 9) | 
              100-110  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              புகையான், குருத்து பூச்சி ஆனைக்கொம்பன் ஈ, இலை மடிப்பிதழ் ஆகிய பூச்சிகளுக்கும் இலையுறைக் கருகல் மற்றும் இலையுறை  அழுகல் நோய்களுக்கும் மிதமான எதிர்ப்பு சக்தியைக் கொண்டது.  ஒரு மாதம் வரை விதை உறக்கம் கொண்டது.  குளிர் காலத்திற்கு ஏற்ற வகை.  அனைத்து பருவங்களிலும் பயிரிடச் சிறந்தது. | 
             
            
              | ரெமானிகா (எம்ஒ 15)  | 
              100-105  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              குட்டையான, போதுமான துார்களைக் கொண்டது.  புகையானுக்கு எதிர்ப்புத் திறனும் ஆனைக்கொம்பன் ஈ க்கு மிதமான எதிர்ப்புத் திறனும் உடையது. | 
             
            
              | ரேவதி (எம் ஓ 17) | 
              105-110  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              குட்டையான, போதுமான துார்களுடையது.  புகையானுக்கு எதிர்ப்புத் திறனும் ஆனைக்கொம்பன் ஈக்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது.  3 வாரங்களை வரை விதை உறக்கம் கொண்டது.  3 பருவங்களுக்கும் ஏற்றது.  சிறப்பாக குட்டநாடின் கூடுதல் பயிராக விளங்குகிறது. | 
             
            
              கிருஷ்ணாஞ்சனா  
              (எம்ஒ 19) | 
              105-110  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              போதுமான துார்களுடையது.  புகையானுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.  மூன்று வாரங்கள் வரை செயலற்ற பண்பு.  அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது.  குறிப்பாக குட்டனாடின் கரி நிலங்களுக்கு ஏற்ற வகை.  இரும்பு நஞ்சியல்பை தாங்கும் ஆற்றல் கொண்டது.  | 
             
            
              | பாக்யா (கயம்குலம்-2)  | 
              100  | 
              சிவப்பு  | 
              ஓனட்டுக்கராவின் முதல் பயிர் பருவத்திற்கும், கிழக்கு செம்பொறைப் பகுதிக்கும் ஏற்றது.   முன் வளர்ச்சி நிலைகளில் ஏற்படும்.  வறட்சிக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.  குலைநோய், குருத்துப்பூச்சி, இலை சுருள் பூச்சி மற்றும் கூண்டுப்புழு ஆகியவைக்கு மிதமாக தாங்கும் ஆற்றல் கொண்டது. | 
             
            
              | ஓணம் (கயம்குலம் -3) | 
              95  | 
              சிவப்பு  | 
              முன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் வறட்சியைத் தாங்கும்திறன் கொண்டது.  கருகல் நோய், இலையுறை கருகல் நோய் மற்றும் குலைநோய் ஆகியவற்றை மிதமாக எதிர்க்கும் திறன் கொண்டது..ஓனட்டுக்கரா பகுதியின் முதல் பயிர் பருவத்தில் உலர் விதைப்பிற்கு ஏற்ற இரகம். | 
             
            
              | எஎஸ்டி 17 | 
              100-105  | 
              வெள்ளை, குட்டை, தடிப்பு  | 
              சிறந்த தானியத்தரம் மற்றும் அதிக மகசூல். | 
             
            
              | அகல்யா | 
              90-100  | 
              சிவப்பு  | 
              சிறந்த சமையல் தரம், இலைமடிப்பிதழ் நோய்க்கு தாங்கும் ஆற்றல், முன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஈர அழுத்தத்தையும் தாங்கும். | 
             
            
              | ஹர்ஷா (பிடிபி 55) | 
              105-110  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              மானாவாரி பயிரிடும் தாழ்வான நிலத்தில் நேரடி விதைப்புக்கு ஏற்றது.  குலைநோய் மற்றும் ஈர அழுத்தத்தை மிதமாக எதிர்க்கும் சக்தி கொண்டது. | 
             
            
              | வர்ஷா (பிடிபி 56)  | 
              110-115  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              பாசனம் செய்த தாழ்வான நிலத்தில் நேரடி விதைப்பிற்கும், நாற்று நடுவதற்கும் ஏற்றது.  நீலவண்டு பூச்சி தாக்குலுக்கு மிதமாக எதிர்க்கும் திறனைக் கொண்டது. | 
             
            
              | குஞ்சுகுஞ்சு வர்னா (விகே - 1) | 
              110-115  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              ஒளி உணர்வற்றது.  ஆனைக்கொம்பன் ஈ, இலைமடிப்பிதழ், குருத்து ஈ, குருத்து பூச்சி போன்ற பெரும்பாலான பூச்சிகளுக்கு மிதமாக தாங்கக் கூடியவை.  இருபோக பயிர் சாகுபடி மாவட்டங்களான பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடுவதற்கு ஏற்றது.  இலையுறை மற்றும் நுனிப்பகுதிகள் ஊதா நிறத்தில் இருக்கும். | 
             
            
              | குஞ்சுகுஞ்சு பிரியா (விகே - 2) | 
              105-110  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              ஒளி உணர்வற்றது.  ஆனைக்கொம்பன் ஈ, இலைமடிப்பிதழ், குருத்து ஈ, குருத்து பூச்சி போன்ற பெரும்பாலான பூச்சிகளுக்கு மிதமாக தாங்கக் கூடியவை.  இருபோக பயிரிடும்பரப்புகளான பாலக்காடு, திருச்சூர், எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்களில் நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடுவதற்கு ஏற்றது.  நிறமற்ற இரகம். | 
             
            
              | சிங்கம் | 
              95-100  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              ஒளி உணர்வற்ற பகுதி உயர இரகம்.  ஒனட்டுக்கராவின் முதற்பயிர் பருவத்திற்கு ஏற்றது.  இலையுறை கருகல் மற்றும் பழுப்பு இலைப்புள்ளி நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. | 
             
           
          மேலே செல்க 
             
           
          
            
              மத்திய கால இரகங்கள் 
                பருவம் : விரிப்பு(I பயிர்/ இலையுதிர் காலம்), முண்டகன் (II பயிர்/குளிர்ப்பருவம்), புன்சா (III பயிர்-கோடைக்காலம்)  | 
             
            
              | இரகங்கள் | 
              காலம்(நாட்கள்) | 
              தவிடு நிறம், 
                தானிய வகை | 
              தனிச்சிறப்புகள் | 
             
            
              | ஜெயா | 
              120-125  | 
              வெள்ளை, நீளம், தடிப்பு  | 
              மிக அதிக உற்பத்தித் திறன் கொண்டது.  புகையான், தத்துப்பூச்சி, மற்றும் வேறு பூச்சிகளால் எளிதில் தாக்கப்படும் இரகம். | 
             
            
              அஸ்வதி 
             (பிடிபி 37)  | 
              120-125  | 
              வெள்ளை, நீளம், தடிப்பு  | 
              முதற் பயிர்ப்பருவத்தில் உலர்ந்த விதைப்புக்கு ஏற்ற இரகம். | 
             
            
              | சபரி (பிடிபி 40) | 
              130-135  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              இலையுறை அழுகல் எளிதில் ஏற்படும். | 
             
            
              | பாரதி (பிடிபி 41) | 
              120-125  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              புகையானுக்கு தாங்கும் ஆற்றலுடையது.  குலைநோய்க்கு எதிர்ப்புச் சக்தி உடையது.  உலர்ந்த விதைப்புக்கு ஏற்ற இரகம். | 
             
            
              | சுவர்ணமோடன் (பிடிபி 42) | 
              110-115  | 
              வெள்ளை  | 
              உலர்ந்த விதைப்பு நிலைக்கு ஏற்றது.  மத்திய காலயான உயரம்.  பூச்சிகளுக்கும், நோய்களுக்கும் மிதமான எதிர்ப்பு சக்தி கொண்டது. | 
             
            
              | ஜெயத்தி (பிடிபி 46) | 
              120-125  | 
              வெள்ளை 
                | 
              புகையான், பச்சை தத்துப்பூச்சி, இலை மடிப்பிதழ், குலைநோய் மற்றும் பாக்டீரியா இலைக்கோடு நோய் ஆகியவற்றுக்கு எதிர்க்கும் திறன் கொண்டது.  சாயாத, பகுதி உயர்ந்த மற்றும் மூன்று பருவங்களுக்கும் ஏற்றவை. | 
             
            
              | ஆதிரா (பிடிபி 51) | 
              120-130  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              பகுதி உயர்ந்த, சாயாத தன்மை பெற்றது. குலைநோய், கருகல் மற்றும் புகையானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. முதல் மற்றும் இரண்டாம் பயிர் பருவங்களுக்கும், மலைப்பாங்கான இடத்திற்கும் ஏற்ற இரகம். | 
             
            
              | ஐஸ்வர்யா (பிடிபி 52) | 
              120-125  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              மேட்டுப்பாங்கான நிலத்திற்கு (மோடன்) ஏற்றது. குலைநோய் மற்றும் அழுகல் நோயை எதிர்க்கும் சக்தி கொண்டது. புகையான் பூச்சியை எதிர்க்கும் திறனும் கொண்டது. முதல் மற்றும் இரண்டாம் பயிர் பருவங்களுக்கு ஏற்றது.  | 
             
            
              | பத்ரா (எம் ஒ 4) | 
              120-125  | 
              சிவப்பு  | 
              குட்டநாடு பகுதியில் நிலவும் புஞ்சா பருவத்திற்கு ஏற்றது. பூச்சிகளும் நோய்களும் குறைவாக தாக்கும் தன்மை பெற்றது. புகையானுக்கு தாங்கும் தன்மை பலவீனமான ஒளிப்புலன் கொண்டது. | 
             
            
              | ஆஷா (எம் ஒ 5) | 
              115-120  | 
              சிவப்பு 
                | 
              குட்டனாடின் இரு பருவங்களுக்கும் ஏற்றது. பூச்சிகளுக்கும், நோய்களுக்கும்மிதமான தாங்கும் திறன் கொண்டது. புகையான் பூச்சிக்கு தாங்கும் ஆற்றல் கொண்டது. | 
             
            
              | பவிழம் (எம் ஒ 6) | 
              115-120  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              கதிரடித்தலுக்கு எளிதானது. புகையானுக்கு நடுத்தர எதிர்ப்பு கொண்டது.  தண்டு கருகல் நோய் மற்றும் இலையுறை அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.  இலையுறை கருகல் நோய்க்கு நடுத்தர எதிர்ப்பு சக்தி உடையது. | 
             
            
              | ரம்யா (எம் ஓ 10) | 
              110-120  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              புகையான், ஆனைக்கொம்பன் ஈ, இலையுறை கருகல் மற்றும் இலையுறை அழுகல் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்க்கும் திறன் கொண்டது.  பகுதி உயர்ந்த இரகம்.  மூன்று பருவங்களுக்கும் ஏற்றது.  ஒரு மாதம் வரை விதை உறக்கம் இருக்கும். | 
             
            
              | கனக்கோம் (எம் ஒ 11) | 
              120-125  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              புகையானுக்கு எதிர்ப்புடையது.  குருத்துப்பூச்சிக்கு மிதமான எதிர்ப்புடையது.  துங்குரோ நச்சுயிரி மற்றும் குலைநோய்க்கு எதிர்ப்புத் திறன் உடையவை.  பாக்டீரியா அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.  பகுதி உயர்ந்த இரகமானது அனைத்து 3 பருவங்களுக்கும் ஏற்றது. | 
             
            
              ரஞ்சினி 
              (எம் ஓ 12)  | 
              115-120  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              குட்டையானது. குலைநோய் மற்றும் புகையானை எதிர்க்கும் திறன் உடையது.  | 
             
            
              பவித்ரா  
              (எம் ஒ 13) | 
              115-120  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              குட்டையான, மத்திய காலயான துார்களுடையது.  புகையான் மற்றும் ஆனைக்கொம்பன் ஈ மற்றும் உயிர்துாய வழி - 5 ஆகியவற்றை எதிர்க்கும் திறன் கொண்டது.  | 
             
            
              | பஞ்சமி (எம் ஒ 14) | 
              115-120  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              குட்டையான, மத்திய காலயான துார்களுடையது.  புகையான் மற்றும் ஆனைக்கொம்பன் ஈ, மற்றும் உயிர்துாய வழி - 5 ஆகியவற்றை எதிர்க்கும் திறன் கொண்டது. | 
             
            
              | உமா (எம் ஓ 16) | 
              115-120 முண்டகன் 120-135 விரிப்பு  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              குட்டையான மற்றும் மத்திய காலயான துார்களை உடையது.  சாயாத தன்மை கொண்டது.  புகையான் மற்றும் ஜிஎம் உயிர் துாய வழி - 5 இரண்டையும் எதிர்க்கும் சக்தி கொண்டது.  3 வாரங்கள் வரை விதை உறக்கம்.  மூன்று பருவங்களுக்கும், சிறப்பாக குட்டநாடின் கூடுதல் பயிர் பருவத்திற்கும் தகுந்தது. | 
             
            
              | கரிஷ்மா (எம் ஓ 18) | 
              115-120  | 
              சிவப்பு, மத்திய கால, தடிப்பு  | 
              குட்டையான மற்றும் மத்திய காலயான துார்களை உடையது.  புகையானை எதிர்க்கும் திறன் கொண்டது.  ஆனைக்கொம்பன் ஈக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.  மூன்று பருவங்களுக்கும் சிறப்பாக குட்டனாடில் கரிப் பருவத்திற்கும் ஏற்றது.  கரும்பு நஞ்சியல்பை தாங்கும் ஆற்றல் கொண்டது. | 
             
            
              | வைட்டில்லா - 1 (சூட்டுப்பொக்காலி) உயர்ந்தது | 
              115  | 
              சிவப்பு  | 
              பொக்காலி இடங்களுக்கும் ஏற்ற இரகம். | 
             
            
              | வைட்டில்லா-2(செரு விரிப்பு) (உயர்ந்த) | 
              125-130  | 
              சிவப்பு, தடிப்பு  | 
              எர்ணாக்குளம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள உவர்ப்பு மண் பகுதிகளின் விரிப்பு பருவங்களுக்கும் ஏற்றது. | 
             
            
              | வைட்டில்லா - 3 | 
              110-115  | 
              சிவப்பு  | 
              எர்ணாக்குளம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கடலோர  பகுதிகளின், விரிப்பு பருவங்களுக்கு ஏற்றது. | 
             
            
              | வைட்டில்லா-4 | 
              120-125  | 
              சிவப்பு  | 
              கடலோர உவர்ப்பு பகுதிகள், வெள்ளப்பெருக்கு இடங்கள் மற்றும் மடுமூழ்கி பகுதிகளில் நிலவி வரும் விரிப்புப் பருவத்திற்கு ஏற்ற இரகம்.  | 
             
            
              | வைட்டில்லா -5 | 
              115-120  | 
              சிவப்பு 
                | 
              உயரம், மிதமா சாய்தல், ஆகிய பண்புகளைக் கொண்டது. நுண்ணியிர் இலைக்கருகல் நோய், இலை சூட்டுப்புண், குருத்துப்பூச்சி இலை மடிப்பிதழ் மற்றும் நெல் நாவாய்ப்பூச்சி ஆகியவற்றைத் தவிர மற்ற நோய்கள் மற்றும் பூச்சிகளைத் தாங்கும் தன்மை பெற்றது.  | 
             
            
              | அரத்தி (எசிவி -1)  | 
              120-135  | 
              சிவப்பு 
                | 
              ஒரு மாதம் வரை விதை உறக்கம். தென் மண்டலத்தில் உள்ள விரிப்புப் பருவத்திற்கு ஏற்றது. காலதாமத விதைப்பு மற்றும் மிகுமுதிர்ச்சி அடைந்த நாற்று நடுவதற்கும் ஏற்றது. இலையுறை கருகல் நோய், இலையுறை அழுகல் மற்றும் புகையான் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்பு சக்தி கொண்டது. | 
             
            
              | எஎஸ்டி 16 | 
              110-115  | 
              வெள்ளை, குட்டை, தடிப்பு  | 
              சிறந்த தானிய தன்மை மற்றும் அதிக மகசூல். | 
             
           
          மேலே செல்க           
           
            
              நீண்ட கால இரகங்கள்  
                பருவம் : முண்டகன் (II பயிர்/குளிர்ப்பருவம்) | 
             
            
              | இரகங்கள் | 
              காலம்(நாட்கள்) | 
              தவிடு நிறம், 
                தானிய வகை | 
              தனிச்சிறப்புகள் | 
             
            
              | லக்ஷ்மி (கயன்குலம் -1) | 
              175-180  | 
              சிவப்பு  | 
              இரண்டாம் பயிர் பருவத்துக்கு ஏற்றது. சுருள் பூச்சி, குலைநோய், கருகல் நோய் மற்றும் இலையுறை கருகல் நோய் ஆகியவற்றை மிதமாய் எதிர்க்கும் திறன் பெற்றது. குருத்துப்பூச்சியை நியாயமாக எதிர்க்கும் சக்தி கொண்டது. | 
             
            
              | தன்யா (கயன்குலம் -4) | 
              160-165  | 
              சிவப்பு  | 
              ஒளி உணர்வுடையது. குருத்துப்பூச்சி, ஆணைக்கொம்பன் ஈ, இலையுறை கருகல் நோய் மற்றும் குலைநோய் ஆகியவற்றை மிதமாக எதிர்க்கும் திறன் கொண்டது. | 
             
            
              | ரேஷ்மி (பிடிபீ 44) | 
              150-160  | 
              சிவப்பு 
                | 
              கூட்டுமுண்டகனில் முண்டகன் பருவம் போல இரண்டாம் பயிருக்கு ஏற்றது.  இலை மடிப்பிதழ் நோயை எதிர்க்கும் சக்தி கொண்டது.  ஆனைக்கொம்பன் நோயை தாங்கும் ஆற்றல் பெற்றது. | 
             
            
              | நீரஜா (பிடிபீ 47) | 
              140-150  | 
              வெள்ளை  | 
              இலை மடிப்பிதழ் நோயை மிதமாய் எதிர்க்கும் சக்தி பெற்றது.  இலைநோயை முற்றிலும் எதிர்க்கும் திறன் கொண்டது.  இலையுறை கருகல் நோய் ஏற்படும்.  சாயாத்தன்மை, ஒளி உணர்கின்ற, செயலற்ற தன்மை கொண்டது.  வெள்ளப்பெருக்கு மற்றும் மடுமுழ்கி பகுதிகள், பூத்தல்படம்ஸ் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றது. | 
             
            
              | நிலா (பிடிபீ 48) | 
              160-180  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              ஒளி உணர்வு பெற்றது.  குறைந்த செயற்கை உரத்தில், சிறந்த நெல்மணி, மற்றும் வைக்கோல் மகசூல் தரும் தன்மை கொண்டது.  கரின்கோரா விளைச்சலுக்கு ஏற்ற இரகம்.  இலைப்பேன்,புகையானை முற்றிலும் எதிர்க்கும் சக்தி கொண்டது.  ஆனைக்கொம்பன் ஈ, குருத்துப்பூச்சி, இலைக்கருகல் நோய் ஆகியவற்றை மிதமாய் எதிர்க்கும் திறன் பெற்றது.  ஜனவரிமாதத்தின் பாதி வரை நீர் அளித்தல் சீராக இருக்கும் பகுதிகளுக்கு ஏற்ற இரகம். | 
             
            
              | மங்களமகசூரி (பிடிபீ 53) | 
              140-145  | 
              சிவப்பு , மத்திய கால, ஒடுங்கிய மென்மையான 
                | 
              பல்நிலை தடுப்பாற்றல், இரும்பு நஞ்சியல்பை தாங்கும் தன்மை.  நீர் தேங்கிய இடங்கள் குறைந்த உரம் அளிப்புக்கு நன்கு ஏற்றவை. | 
             
            
              கருணா  
              (பிடிபீ 54) | 
              140-145  | 
              சிவப்பு, நீளம், தடிப்பு  | 
              பல்நிலை தடுப்பாற்றல், இரும்பு நஞ்சியல்புத் தன்மையை தாங்கும் தன்மை ஆற்றல் குறைந்த உரத்திற்கு நன்கு பதிலளித்தல்.  பழுப்புப்புள்ளி நோய் எளிதில் தாக்கும், இரண்டாம் பயிர் பருவத்திற்கு ஏற்றது.  | 
             
            
              | கொட்டரக்கரா - 1 (சேரடி) | 
              140-145  | 
              சிவப்பு 
                | 
              நீர் சூழ்ந்த ஆழ்மண் நிலத்திற்கு ஏற்றது. | 
             
            
              மகரம்  
              (கேடி ஆர் 2) | 
              160-165  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              ஒளி உணர்வுடையது.  கிழக்கு குறுமண் வட்டாரத்திற்கு ஏற்றது.  கூட்டுமுண்டகன் அமைப்பின் இரண்டாம் பயிர்ப் பகுதிப் பொருள். | 
             
            
              | கும்பம் (கேடிஆர் 3) | 
              165-175  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு 
                | 
              ஒளி உணர்வுடைய, சாய்வைத் தாங்கும் தன்மை கொண்டது.  கிழக்கு குறுமண் வட்டாரத்திற்கு ஏற்றது.  கூட்டுமுண்டகன் அமைப்பின் இரண்டாம் பயிர்ப்பகுதிப் பொருள். | 
             
            
              | பன்கஜ் (பகுதி உயர்ந்த) | 
              135-140  | 
              வெள்ளை  | 
              வடிகட்டிய ஆழ்மண் நிலத்திற்கு ஏற்றது.  இலைக்கருகல் நோய் ஏற்படும். | 
             
            
              | ஹெச்  4 (உயர்ந்த) | 
              125-145  | 
              சிவப்பு, தடிப்பு  | 
              வடிகட்டிய ஆழ்மண் நிலத்திற்கு ஏற்றது. | 
             
            
              | மஹ்சூரி (உயர்ந்த) | 
              125-145  | 
              வெள்ளை, சன்ன ரக அரிசி  | 
              நிறை முதிர்ச்சியின் போது அதிக அளவு தானிய சிந்தல் ஏற்படும்.  குலைநோய் தாக்கும். | 
             
            
              | தீப்த்தி | 
              150-160  | 
              சிவப்பு 
                | 
              பகுதி உயர்ந்த, ஒளி உணர்வு மிக்க குலைநோய், இலைமடிப்பிதழ் நோய், குருத்துப்பூச்சி ஆகியவற்றை மிதமாய் எதிர்க்கும் சக்தி பெற்றது.  வறட்சியை மிதமாய் எதிர்க்கும் தன்மையும் கொண்டது. | 
             
            
              | பொன்னி | 
              140-145  | 
              வெள்ளை, மத்திய கால, சன்ன ரகம்  | 
              சன்ன ரக தானியத்தரம் வாய்ந்த அரிசி. | 
             
            
              | வெள்ளை பொன்னி | 
              135-140  | 
              வெள்ளை, மத்திய கால, சன்ன ரகம்  | 
              சன்ன ரக தானியத்தரம் வாய்ந்த அரிசி. | 
             
            
              | பொன்மணி | 
              160-165  | 
              வெள்ளை, குட்டை, தடிப்பு  | 
              புகையானை எதிர்க்கும் சக்தி கொண்டது.  அதிக மகசூல் ஆற்றல். | 
             
            
              | பிரனவா | 
              130-135  | 
              வெள்ளை, மத்திய கால, சன்ன ரகம்  | 
              பல்நிலை தடுப்பாற்றல்.  சித்துாரில் கரிசல் மண் நிலத்திற்கு ஏற்ற இரகம். | 
             
            
              | சுவேதா | 
              140-145  | 
              வெள்ளை, குட்டை, தடிப்பு  | 
              சித்துாரில் கரிசல் மண் நிலத்தின்  இரண்டாம் பயிர்  நாற்று நடுதல் பயிருக்கு ஏற்றது. | 
             
            
              | தனு | 
              150-160  | 
              சிவப்பு, குட்டை, தடிப்பு  | 
              ஒளி உணர்ச்சியுள்ள இரகம்.  ஒனட்டுக்கராவின்  இரண்டாம் பயிர் வகைக்குச் சிறந்தது.  இலையுறை அழுகல் நோய், பழுப்பு இலைப்புள்ளி மற்றும் குருத்துப்பூச்சி ஆகியவையை தாங்கும் ஆற்றல் பெற்றது. | 
             
           
          மேலே செல்க           
           
            
              
                
                  
                    வாசனையும் மருத்துவ குணமும் கொண்ட சிறப்பு இரகங்கள் 
                     | 
                   
                  
                    | இரகம் | 
                    வயது
                      (நாட்கள்)  | 
                     தானிய அமைப்பு | 
                    ஏற்ற சாகுபடி முறை | 
                      | 
                   
                  
                    | கண்டகசாலா | 
                    150-180  | 
                    சிறிய, உருண்டையான வைக்கோல் நிறமுடைய வாசனை மிக்க அரிசி கொண்ட வெண்மை வெளித்தோல் உடைய தானியம்.   | 
                    கரீப் பருவத்தில் நடுவதற்கு ஏற்றது.  | 
                      | 
                   
                  
                    | ஜீரகசாலா | 
                    150-180  | 
                    சற்று நீண்ட, சன்னமான வைக்கோல் நிறமுடைய வாசனை மிக்க அரிசி கொண்ட வெண்மை வெளித்தோல் உடைய தானியம்.   | 
                    கரீப் பருவத்தில் நடுவதற்கு ஏற்றது. | 
                      | 
                   
                  
                    | வேலும்பலா | 
                    180  | 
                    நீளமான, சன்னமான வெண் நிறமுடைய வாசனை மிக்க அரிசி கொண்ட வெண்மை வெளித்தோல் உடைய தானியம்.  
                      | 
                    கரீப் பருவத்தில் நடுவதற்கு ஏற்றது. | 
                      | 
                   
                  
                    | சோமாலா | 
                    165-180  | 
                    சிறிய, சன்னமான, செம்மை கலந்த வைக்கோல் நிறமுடைய வாசனை மிக்க அரிசி கொண்ட வெண்மை வெளித்தோல் உடைய தானியம்.  | 
                    மேட்டு நிலங்களில் நேரடி விதைப்புக்கு ஏற்றது.  | 
                      | 
                   
                  
                    | காயாமா | 
                    150-180  | 
                    சிறிய, உருண்டையான வைக்கோல் நிறமுடைய வாசனை மிக்க அரிசி கொண்ட வெண்மை வெளித்தோல் உடைய தானியம்.  | 
                    கரீப் பருவத்தில் நடுவதற்கு ஏற்றது. | 
                      | 
                   
                  
                    | கோத்தம்பலரி காயாமா | 
                    120-130  | 
                    சிறிய, சன்னரக, கருப்பு நிறமுடைய வாசனை மிக்க அரிசி கொண்ட வெண்மை வெளித்தோல் உடைய தானியம். 
                      | 
                    கரீப் பருவத்திற்கு ஏற்றது. | 
                      | 
                   
                  
                    | பூக்கிளதாரி | 
                    130-135  | 
                    சிறிய, சன்னமான, வைக்கோல் நிறமுடைய வாசனை மிக்க அரிசி கொண்ட வெண்மை வெளித்தோல் உடைய தானியம்.  | 
                    ரபி பருவத்தில் பல்லியல் பகுதிகளில் நடவுக்கு ஏற்றது.  | 
                      | 
                   
                  
                    | நவரா | 
                    70-75  | 
                    பயிர் உயரமாக, மெல்லிய பூங்கொத்துகளுடன் இருக்கும்.மஞ்சள் அல்லது கருப்பு நிற, நடுத்தரமான நீளத்துடன் கூடிய கதிர்கள் உருவாகும். மஞ்சள்  பூங்கொத்தில் உருவாகும் கதிர்மணி மஞ்சள் கலரிலும், கருப்பு பூங்கொத்தில் உருவாகும் மணி பழுப்பு நிறத்திலும் இருக்கும். தானியகரு, வாசனையற்று பிசுபிசுப்பற்று இருக்கும்.  
                      | 
                    நஞ்சையில் கோடை பயிராக பயிரிடவும், மேட்டு நிலங்களில் கரீப் பருவத்திற்கும் ஏற்றது.  | 
                      | 
                   
                  
                    | செந்நெல்லு | 
                    120-125  | 
                    மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பூங்கதிர்கள் உருவாகும். மஞ்சள் நிற கதிரில் உருவாகும் மணிகள் தங்க மஞ்சள் நிறத்திலும், சிவப்பு நிற கதிரில் உருவாகும் மணிகள் அடர் சிவப்பு நிறத்திலும் இருக்கும். விதை உறை பழுப்பு நிறமுடையது. தானிய கரு வாசனையற்று, பிசுபிசுப்பற்று இருக்கும்.   | 
                    சிவப்பு நிற ரகம், கரீப்பருவத்தில் தென்னந்தோப்பில் பயிரிட ஏற்றது. மஞ்சள் நிற ரகம் கரீப் மற்றும் ரபி பருவத்தில் நஞ்சையில் பயிரிட ஏற்றது.  | 
                      | 
                   
                  
                    | கவுஞ்சின் பூந்தலா | 
                    150-160  | 
                    ஒளி உணர்வு மிக்க ரகம்., நீண்ட, வெள்ளை தானியங்கள் உருவாகும். 
                      | 
                    ரபி பருவத்திற்கு ஏற்றது.  | 
                      | 
                   
                 
                | 
             
           
          மேலே செல்க 
          |