| 
        நெற்பயிர் சாகுபடிச்சூழல்கள்
           
           
            நெல் விளையும் பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி செய்யும் முறை, பயிர் விளையும் நிலத்தின்  மண் வகை, கிட்டும் நீர் மற்றும் பொதுவான பருவக்காற்று, மழை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது .  
             
          தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் பின்பற்றப்படும் முதன்மை நெல் சாகுபடி ச்சூழல்கள் : 
          1.நன்செய்முறை - (சேற்றுமுறை) 
          2.மானாவாரி முறை - (புழுதி முறை) 
          3.பகுதி பாசன சாகுபடி முறை 
           
          
            
              |   | 
              நன்செய்முறை: (சேற்றுமுறை) | 
             
            
                | 
              சேற்றுமுறையை பாசன நெல் என்றும் கூறுவர்.  இந்த அமைப்பில் ஈர (பாசன) நிலையில் "விதைமுதல் விதை வரை" என்ற முறையில் பயிர் வளர்கின்றது.  நிலத்தை மீண்டும் மீண்டும் நன்கு உழுது மென்மையான  
                5-7 செ.மீ நிலையான நீர் தேங்கிய நிலைக்கு கொண்டு வருதல்.  மெல்லிய நீர் தேங்கிய நிலையை அடைந்த பின் நிலத்தை சமன்படுத்தல் வேண்டும்.  பின் நாற்றை நடுவதோ அல்லது முளை வந்த விதையை ஊன்றுதலோ அல்லது வீசி விதைத்தலோ செய்யலாம். பாசன நீர் இருக்கும் இடத்தில் இந்த முறையில் விளைச்சல் செய்யலாம்.  இப்பாசனப்பயிர் மொத்த நெல் உற்பத்தியில் 55 சதவிகிதம் பங்கு வகிக்கிறது 
               
                
                  | 
             
           
          நன்செய் அமைப்பில்  பின்பற்றப்படும் முறைகள் பின்வருமாறு 
1.திருந்திய நெல் சாகுபடி முறை 
           2.திருந்திய நெல் சாகுபடி முறை யின் நன்மைகள் 
           
           3.நஞ்சையில் சேற்றுவயலில் நேரடி  விதைப்பு              
           
          
            
              | மேலே செல்க | 
             
            
              | திருந்திய நெல் சாகுபடி முறை | 
             
            
               
              பயிர், மண், நீர் மற்றும் வேர் வளர்ச்சியை துாண்டும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவற்றின் மேலாண்மையை மாற்றுவதன் மூலம் பாசன நெல்லின் உற்பத்தி அதிகரிக்கிறது. திருந்திய நெல் சாகுபடி ஒரு தொழில்நுட்பம் அல்ல ஏனெனில் அதிக அனுபவத்தினால் இன்னும் பருவத்திற்கு பருவம் விரிவுபட்டும், முன்னேறிக் கொண்டும் உள்ளது.  இந்த அணுகுமுறையில் பல விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் அவர்களுடைய அறிவு மற்றும் உள்ளுணர்வைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை மிகவும் பயன் விளைவிக்கும் தன்மையுடனும், நிலையாகவும் மாற்றி  வருகின்றனர்.
  | 
             
            
               | 
             
           
           
          
            
              | திருந்திய நெல் சாகுபடியின் முக்கிய படிநிலைகள் | 
             
            
              - நாற்றங்கால் பரப்பு மற்றும் விதையளவு
 
                - நாற்றுக்களின் வயது
 
                - சதுர நடவு
 
                - நீர் மேலாண்மை
 
              - எந்திர (கோனோ) களைக்கருவியை உபயோகித்தல்
  
               | 
             
           
           
          
            
              | நாற்றங்கால் பரப்பு மற்றும் விதையளவு | 
                | 
             
            
              
                -  எக்டர் நடுவதற்கு 7-8 கிலோ விதை மட்டுமே போதுமானது.
 
                -  ஒரு எக்டருக்கு 100 சதுர மீட்டர் அளவு நாற்றங்கால் தயாரித்தல்.
 
                - மேட்டுப்பாத்திக்கு 1 x 5 மீ என்ற அளவில் 1 எக்டருக்கு 20 பாத்திகள் அமைத்தல்.
 
                -  மேட்டுப் பாத்திகளில் பாலிதீன் தாள் பரப்ப வேண்டும். இதன் மேல் 4 செ.மீ அளவு வரை மண்ணால் நிரப்ப வேண்டும்.
 
                -  நாற்றங்கால் பாத்தியில் 5 சதுர மீட்டருக்கு 375 கிராம் அளவு விதையை சீராகத் துாவ வேண்டும்.
 
                -  பூவாளி கொண்டு நீர் தெளிப்பது நன்று.
 
                -  பின்பு விதைப்பாத்திகளை தென்னை நார்க்கழிவு அல்லது வைக்கோலால் மூட வேண்டும். 
 
                | 
                | 
             
           
           
          
            
              |   | 
              நாற்றுக்களின் வயது : | 
             
            
                | 
              
                -  14 நாட்களான இளநாற்றுகளையே (3 இலைப் பருவம்) நடவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
                -  நாற்றங்கால் பாத்திகளில் போதுமான அளவு கரிம எரு கொடுத்திருந்தால் நாற்று வளர்ச்சி நன்றாக இருக்கும்.
 
                | 
             
           
           
          
            
              | நீர் நிர்வாகம் : | 
                | 
             
            
              
                -  செம்மை நெல் சாகுபடியில் நீர் நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நெல் வயலில் வேர்களுக்கு காற்றுச்சூழல் வசதியைத் தருவது முக்கியமானது.   
 
                -  முனை முறிந்த வேர்களைக் கொண்ட செடியால் கீழ் அடி மண்டலத்தின் எஞ்சிய மண் ஈரத்தை பெற முடியாது.  பெரிய மற்றும் நல்ல செயல் பண்புகள் கொண்ட வேரால் தான் ஈரப்பதத்தினை தக்க வைத்துக் கொள்ள முடியும்.  இதனால் அதன் வளர்ச்சியையும், உற்பத்தியையும் பாதுகாக்கலாம். 
 
                -  எனவே மண்ணில் ஈரத்தன்மையும், உலர்த்தன்மையும் மாறி மாறி நிலவ வேண்டும்.
 
                -  நீர் மறைய நீர் கட்டுதல் முதல் 10 நாட்களில் மிக முக்கியம்.
 
                - மயிர்க்கோடு வெடிப்பு உருவான பிறகு 2.5 செ.மீ ஆழத்திற்கு, கதிர் வெளியே தோன்றும் வரை, நீர்ப் பாசனம் தர வேண்டும்.
 
                -  கதிர் வெளியே தோன்றிய பிறகு 5 செ.மீ அளவிற்கு நீர் பாய்ச்சி கட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் பாய்ச்ச வேண்டும்.
 
                | 
                | 
             
           
           
          
            
              |   | 
              எந்திர (கோனோ) களைக்கருவியை உபயோகிக்கும் முறை | 
             
            
                | 
              
                - சதுர நடவு, களைக்கருவியை இரண்டு திசைகளில் எளிதாக உபயோகிக்க உதவுகிறது.  இதனால் களையைக் கட்டுப்படுத்த முடிகிறது.  செம்மை நெல்லில், நடவு நட்ட நாளிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் களைக்கருவியைப் பயன்படுத்தி களை எடுக்க வேண்டும்.  
 
                -  ஒரு ஏக்கர் களை எடுக்க மூன்று தொழிலாளர்கள் போதுமானது. 
 
                - களைகள் நசுக்கப்பட்டு, பின், மட்குதல் ஏற்படும்போது அதன் ஊட்டச்சத்துக்கள் மண்ணினுள் செல்கிறது. 
 
                -  மண்ணில் பயனுள்ள இயல்பு வேதிச் செயல் மற்றும் உயிரியல் வளம் அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி கிளர வேண்டும். 
 
                   
                -  வேர் களைதல் துார்களை அழுத்துவதால், துார்களில் வெடிப்பு ஏற்படுகிறது. 
 
                -  களைக்கருவியை உபயோகிக்க, நீர் அளவை கண்காணித்து வர வேண்டும்.விடுபட்ட களைகளை கைக்களை மூலம் எடுக்கலாம்.  இதனால் களை எடுப்பதற்கான செலவு 52.5 சதவிகிதம் குறைகிறது
 
                | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
           
          
            
              | திருந்திய நெல் சாகுபடி முறை  செயல்பாடுகள் | 
                | 
             
            
              திருந்திய நெல் சாகுபடி முறை யின் கொள்கைகள் கீழ்கண்ட செயல்பாடுகளின் மூலம் பூர்த்திச் செய்யப்படுகிறது
                | 
             
           
           
          
            
              | பருவம் | 
                | 
             
            
              - போதுமான நீர் பாசன வசதியுடன் கூடிய வறண் ட பருவம் மிகவும் ஏற்றது.
 
			  - பெருமழை பொழியும் பரப்புகளில் இம்முறை சாகுபடி கடினமானது. (தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை)
 
  | 
             
           
           
          
            
              | இரகங்கள் | 
                | 
             
            
              ஒட்டு இரகங்கள் மற்றும் அதிக துார் பிடிக்கும் இரகங்கள்.   | 
             
           
           
          
            
              | விதையளவு | 
                | 
             
            
              ஒரு குழிக்கு ஒரு நாற்று வீதம் ஒரு எக்டருக்கு 7- 8 கிலோ விதை  தேவைப்படும்.  | 
             
           
           
          
            
              | நாற்றங்கால் நிர்வாகம் | 
                | 
             
            
              
                -  தேவையான நாற்றங்கால் பரப்பு -  100 சதுர மீட்டர்/எக்டர் (அல்லது) 2.5 செண்ட்/எக்டர் - 1 செண்ட்/ஏக்கர்.
 
                -  நல்ல மக்கிய தரம் வாய்ந்த தொழுஉரம் இடுதல்.
 
                -  ஒரு எக்டரில் பயிரிட 1 x 5 மீ  அளவு மேட்டுப்பாத்தி 20 பாத்திகள் தேவைப்படுகிறது.
 
                   
                -  பொடியாக்கிய டைஅமோனியம் பாஸ்பேட், 95 கிராம்/மேட்டுப்பாத்தி என்ற விதத்தில் மொத்தமாக 1.9 கிலோ தேவைப்படும்.
 
                   
                -  அவ்வாறு உயர்த்தப்பட்ட பாத்திகளில் பாலிதீன் தாள் பரப்ப வேண்டும். பழைய பாலிதீன் சாக்குகளையும் பயன்படுத்தலாம்.
 
                   
                -  அதன்மீது 4 செ.மீ வரை மண் பரப்பிட வேண்டும்.
 
                   
                -  சூடோமோனாஸ் 10 கிராம்/கிலோ (விதை) என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
                   
                -  1 கிலோ விதைக்கு 75 கிராம் அசோபாஸ் என்ற உயிர் உரம் இட வேண்டும்.
 
                   
                -  ஒவ்வொரு 5 சதுர மீ நாற்றங்கால் பாத்திக்கும் 375 கிராம் விதை என்ற அளவில் சீராக பரப்ப வேண்டும்.
 
                   
                - பூவாளியில் தண்ணீர் ஊற்றுதல் ஏற்றது.
 
                   
                - பின்பு அந்த நாற்றங்கால் பாத்திகளை தென்னை நார்க்கழிவு அல்லது வைக்கோல் மூலம் மூடவேண்டும்.
 
                | 
             
           
           
          
            
              | நடவு வயல் தயாரித்தல் | 
                | 
             
            
              
                -  நடவு நிலம் தயாரிப்பிற்கு, கோடைக்காலத்தில் நிலத்தை நன்கு உழுது நீர் தேவையை சிக்கனப்படுத்த வேண்டும். 
 
                   
                -  நிலம் உழுவதற்கு 1 (அ) 2 நாட்கள் முன்னதாகவே நிலத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும்.  நிலத்தின் மேற்பரப்பு வரை தண்ணீர் நிரம்பியிருக்க வேண்டும். 
 
                   
                -  சேற்றுழவு செய்யப்படும்போது 2.5 செ.மீ ஆழம் வரை நீர் இருக்க வேண்டும். 
 
                   
                -  செம்மை நெல் சாகுபடியில் நிலத்தை சமன்படுத்துதல் முக்கியமானது. வயல் வடிகாலும் முக்கியமானதாகும். 
 
                | 
             
           
           
          
            
              | நடவு செய்தல் | 
                | 
             
            
              
                - நாற்றை முழு வேரோடு மண்ணுடன் எடுத்து உடனே நடவு செய்ய வேண்டும்.  
 
                   
                - 14 நாட்கள் ஆன நாற்றுகளையே நடவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் நாற்றுக்கு மூன்று இலைகள் இருக்கும். 
 
                   
                -  நாற்றங்கால் பாத்தி போதுமான கரிம எரு கொண்டு தயாரித்திருந்தால், நாற்றுகள் நல்ல வளர்ச்சியுடன் இருக்கும். 
 
                | 
             
           
           
          
            
              | பயிர் இடைவெளி | 
                | 
             
            
              
                -  போதுமான வளங்களை பயிர் எடுத்துக் கொள்ள 25 x 25 செ.மீ சதுர நடவு போதுமானதாக உள்ளது. 
 
                   
                -  அடையாளக்கருவியில் அடையாளமிட்டிருக்கும் அக்கோடுகள் சந்திக்கும் இடத்தில் ஒரு நாற்று என்ற அளவில் நடவு செய்ய வேண்டும்.
 
                   
                -  நாற்றை ரொம்ப ஆழமாக நடுதல் கூடாது.
 
                | 
             
           
           
          
            
              | உர மேலாண்மை | 
                | 
             
            
              
                - 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கு எரு, அல்லது 6.25 டன்/எக்டர் பசுந்தாள் உரம் இடுதல் வேண்டும்.
 
                - கரிம எரு தேவையான ஊட்டப் பொருள்களைத் தருவதால் செம்மை நெல் சாகுபடியில் அதிகமாக உபயோப்படுத்துகிறோம்.  கரிம எரு கார்பன் சத்துக்கு ஆதாரமாகி மண்வாழ் நுண்ணுயிரிகளுக்கும் தேவையான ஏற்ற நிலைமையை அளிக்கிறது.
 
                  - மண் பரிசோதனைப் பரிந்துரைப்படி செயற்கை உரம் அளிக்க வேண்டும்.
 
                  - இலை வண்ண அட்டையைக் கொண்டு தழைச்சத்து அளிக்க வேண்டும்.
 
                  - மண் பரிசோதனை வழி உர மேலாண்மையைக் கொண்டு மணிச்சத்து, சாம்பல்சத்து, அளிக்க வேண்டும்.
 
                  - அதன் தேவையைப்பொருத்து மேலுரத்துடன் வேதிச் செயற்கை உரம் கலந்து அளிக்கலாம். 
 
                | 
             
           
           
          
            
              | நீர் மேலாண்மை | 
                | 
             
            
              செம்மை நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை முக்கியமானது.  காற்றோட்ட சூழ்நிலையை உருவாக்குவதில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.  மயிர்க்கோடு போன்ற சிறு கீறல்கள் ஏற்படும் தருணம் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.  இதனை பூங்கதிர்கள் உருவாகும் பயிர்ப்பருவம் வரை பின்பற்ற வேண்டும்.  கட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர் கட்ட வேண்டும்.  நடவிலிருந்து அறுவடை வரை 40-50 சதவிகிதம் தண்ணீர் சேமிப்பு ஏற்படுகிறது.  நிலத்தடி நீர் பயன்படுத்தும் விவசாயிகள் தண்ணீர், அதன் நேரம், மின்சார சேமிப்பு ஆகியவற்றை உணர்வார்கள். 
                 
  -  மண்ணை ஈரமாக வைக்க முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மண் பூரித ஈரமாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
- தழைப்பருவத்தில் போதுமான காற்றோட்டம் கிடைக்க, ஈரப்படுத்துதல் மற்றும்  உலர்த்தலை மாற்றி மாற்றி இடைவெளி விட்டு செய்ய வேண்டும்.
 
- இலை வளர்ச்சி பருவத்திற்குப் பின் சீராக நீர் பாய்ச்ச வேண்டும்.
 
- எந்நிலையிலும் தண்ணீர் தேக்கம் இருக்கக் கூடாது.
   | 
             
           
           
          
            
              | (கோனோ)  களைக்கருவி உபயோகிப்பு | 
                | 
             
            
              
                -  திருந்திய நெல் சாகுபடியில் கோனோ  களைக்கருவி அவசியமானது.  
 
                   
                -  நட்டதிலிருந்து பத்து நாட்களுக்கு ஒருமுறை கோனோ  சுழல் களைக்கருவியை பயிர்களுக்கிடையே இரு திசைகளிலும் உபயோகிக்க வேண்டும்
 
                   
                -  பூங்கொத்து உருவாகும் வரை 10-15 நாட்கள் இடைவெளியில் நான்கு முறை கோனோ   சுழல் களைக்கருவியைக் கொண்டு களை எடுத்தல் போதுமானது
 
                   
                -  பயிரோடு சேர்ந்திருக்கும் களைகளை ஒன்று அல்லது இரண்டு கைக்களை மூலம் அகற்றலாம்.
 
                | 
             
            
              | மேலே செல்க | 
             
           
           
          
            
              | 	திருந்திய நெல் சாகுபடி முறையின் நன்மைகள் | 
                | 
             
            
              
                -  விதைத் தேவையில் சேமிப்பு- அகலமான இடைவெளியில் ஒற்றை நாற்று மட்டுமே நடுவதால் ஒரு எக்டருக்கு 7-8 கிலோ விதை போதுமானது.  குறிப்பாக வீரிய ஒட்டு விதை விலை அதிகமாக இருப்பதால் இம்முறையில் சாகுபடி செய்யும்போது செலவு குறையும்.
 
                   
                -  நாற்றங்கால் பரப்பு குறைதல் 
 
                   
                -  நாற்றங்கால் கால அளவு குறைதல்
 
                   
                -  துார்கள் அதிகமாகுதல்- ஒரு செடிக்கு 30 துார்கள் என்பது எளிதில் கிடைக்கக்கூடியது
 
                   
                -  அதிகமான வேர் வளர்ச்சி- வழக்கமான நெல் சாகுபடியைவிட திருந்திய   நெல் சாகுபடியில்  பயிர்ச் செடியைப் பிடுங்குவதற்கு அதிக வேகம் தரவேண்டும்.
 
                   
                -  மேம்பட்ட தானிய நிரப்பு- எண்ணிக்கையிலும், எடையிலும் அதிகமாக கதிர்கள் கிடைக்கும்.
 
                   
                -  நீர் சேமிப்பு- தழை வளர்ச்சியின் போது நன்கு நீர் பாய்ச்சி மண்ணை ஈரமாக வைத்தல் வேண்டும்.  ஆனால் இனப்பெருக்கப் பருவத்தில் குறைந்த அளவு நீரே போதுமானது.  வழக்கமான முறையைவிட திருந்திய  நெல்லில் 35-40 சதவிகிதம் நீர் சேமிக்கப்படுகிறது.
 
                   
                -  குறைவான சாய்தல்- இம்முறை  நெற்பயிருக்கு சிறந்த வளரும் சூழ்நிலையை அளிக்கிறது. இதனால் பலமான துார்கள், அதிக அளவு வேர் வளர்ச்சி ஏற்படுகின்றது. சாய்தல் தன்மையை எதிர்க்கும் சக்தி கொண்டது.
 
                   
                -  பூச்சிகள் மற்றும் நோய்களின் குறைவான தாக்கம் - திருந்திய  நெல் சாகுபடியில் பயிர்கள் நன்கு பலமாக இருப்பதால் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதல் குறைவாக உள்ளது. 
 
                   
                - வேதிச் செயற்கை உரம் குறைப்பு- திருந்திய  நெல் சாகுபடியில் வேதிச் செயற்கை உரம் அதிக மகசூலைத் தருவதாயினும், ஏழை விவசாயிகள் இன்றும் எளிதில் கிடைக்கும்,  கரிம எருவையே பயன்படுத்துகின்றனர்.  இதனால் வெளியில் இருந்து வாங்கும் இடுபொருள் செலவு குறைந்து, அதிக மகசூலையும் பெற முடிகிறது.
 
                   
                - தானிய மகசூல் அதிகரிப்பு - வழக்கமான முறையை விட செம்மை நெல் சாகுபடியில் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. செலவைப் பொருத்து நிகர வரவு 83 முதல் 206 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 
 
                   
                - வயலில் எலிகள்சேதம் குறைகிறது .
 
                   
                - அதிக நிகர லாபம்.
 
                | 
                
               
                | 
             
            
              | மேலே செல்க | 
             
           
           
          
            
              |   | 
               திருந்திய  நெல் சாகுபடி மேற்கொள்ளுதலில் உள்ள இடர்ப்பாடுகள் | 
             
            
                | 
              
                -  முறையான நீர்க்கட்டுப்பாடு முறைகளை பின்பற்ற வேண்டும்
 
                   
                -  ஆரம்பத்தில் அதிக தொழிலாளர்கள் தேவைப்படும்
 
                   
                -  நாற்று நடுவதற்கு தனித்திறமை தேவைப்படும்
 
                   
                -  வழக்கமான முறையை விட இம்முறையில் களை அச்சுறுத்தல் அதிகமாய் காணப்படும்.
 
                   
                -  இம்முறையில் உழைப்பு மிகுதியாக தேவைப்படுவதால் அதிகமான பரப்பளவில் பயிரிட முடியாது.
 
                   
                -  விவசாயிகள் பாரம்பரிய மன அமைப்பே கொண்டுள்ளனர்
 
                   
                -  தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வு குறைவு 
 
                   
                -  அடையாளமிடும் கருவி, களைக்கருவி ஆகிய சாதனங்கள் எளிதில் கிடைக்காது
 
                   
                -  நடவு நடும் தொழிலாளர்களிடையே ஒத்துழைப்பின்மை
 
                | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
           
          
            
              | பயிர் வளர்ச்சியில்  மாற்றங்கள்  | 
                | 
             
            
              
                -  உயர் தாவர வளர்ச்சி
 
                   
                -  அதிக  வேர் வளர்ச்சி 
 
                   
                -  அதிக துார்கள்
 
                   
                -  ஒரு சதுர மீட்டருக்கு அதிக எண்ணிக்கையிலான பூங்கொத்து உற்பத்தி
 
                   
                -  ஒரு பூங்கொத்துக்கு அதிக அளவிலான நெல்மணிகள்
 
                   
                -  ஒரு கதிரில்   அதிக சதவிகிதத்தில் தானிய நிரப்பு
 
                   
                -  சாயாத்தன்மை
 
                   
                -  அறுவடை வரை இலைப் பசுமை
 
                   
                -  வறட்சிப் பருவத்தில் எதிர்க்கும் சக்தி
 
                   
                - அதிக ஊட்டச்சத்து உபயோகிப்பு
 
                   
                - அதிக உயிர் வேதிச் செயல்
 
                   
                - அதிக மணிகள் மற்றும் வைக்கோல் மகசூல்.
 
                   
                - ஆலையில் அரைக்கும் நெல்லின் அதிக செய்பொருள் விளைவு.
 
                | 
                | 
             
            
              | மேலே செல்க | 
             
           
           
          பாரம்பரிய சாகுபடிமுறைக்கும், திருந்திய நெல் சாகுபடி முறைக்கும் உள்ள வேறுபாடுகள் 
           
          
            
              | செயல்பாடுகள் | 
              மூலகம் | 
              பாரம்பரிய சாகுபடிமுறை  | 
              திருந்திய  நெல் சாகுபடி | 
             
            
              நாற்றங்கால் 
(1 எக்டருக்கு)
                | 
              பரப்பு (கிலோ/எக்டர்)
விதை அளவு 
 
                              | 
              800 சதுர மீட்டர் 
              பரிந்துரைக்கப்பட்டது: 60 கிலோ/எக்டர்  | 
              100 சதுர மீட்டர் 
              7-8 கிலோ/எக்டர்  | 
             
            
              விவசாயிகள் நடைமுறை: 
              125 – 150  கிலோ/எக்டர  | 
             
            
              | நாற்று நடுதல் | 
              நாற்று வயது | 
              21+ | 
                | 
             
            
            
              | நாற்றுகளின் எண்ணிக்கை/குத்து | 
              2-3 + | 
              1 | 
             
            
              | முறை | 
              பரிந்துரைக்கப்பட்டது:செவ்வக முறை                | 
              சதுர முறை  | 
             
            
              விவசாயிகள் நடைமுறை:முறைமையற்ற நடவு                | 
             
            
              |   | 
              இடைவெளி | 
              பரிந்துரைக்கப்பட்டது:  15 x 10 cm  
                20  x 10 செ.மீ (135-155 நாள்  பயிர்)   | 
              25 x  25 cm | 
             
            
              விவசாயிகள் நடைமுறை:முறைமையற்ற நடவு                | 
             
            
              | ஒரு சதுர மீட்டருக்கு குத்தின் எண்ணிக்கை | 
              66 /  50 / ± | 
              16 | 
             
            
              | நீர்ப்பாசனம் | 
              பரிந்துரைக்கப்பட்டது | 
              கட்டிய நீர் மறைந்த ஒரு நாளுக்கு பின்பு 5 செ.மீ ஆழம் வரை பாசனம்  | 
              மண்ணில் சிறுகீறல்கள் ஏற்பட்டபின், கதிர்கள் உருவாகும் வரை, கட்டிய நீர் மறைந்த உடன்  மீண்டும் 2.5 செ.மீ ஆழத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும். | 
             
            
              | விவசாயிகள் நடைமுறை | 
              நீர் தேக்கி வைக்கும் முறை (மாறும் ஆழம்) | 
             
            
              | களை நீக்கல் | 
              பரிந்துரைக்கப்பட்டது | 
              முளைக்கும்முன் களைக்கொல்லி + கைக்களை (நடவு நட்ட 30 நாட்களுக்கு பிறகு (அல்லது) கைக்களை நடவு செய்து 15, 30 நாட்களுக்குப் பிறகு தர வேண்டும். | 
              நடவு செய்து  10,20,30,40 நாட்களுக்கு பிறகு கோனோ  சுழல் களைக்கருவியை கொண்டு இரு வரிசைகளுக்கு  இடையில் குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும்.  விடுபட்ட களைகளை கைக்களை மூலம்  எடுக்கலாம். | 
             
           
        
           செலவு ஒப்பீடு
           
          சாகுபடி செலவு 
           
          
            
              | வரிசை எண் | 
              விவரங்கள் | 
              மொத்த செலவினம் (ரூ/எக்டர்)                 | 
             
            
              | பாரம்பரிய சாகுபடிமுறை | 
              திருந்திய நெல் சாகுபடி முறை  | 
             
            
              | 1. | 
              நாற்றங்கால் | 
              2100 | 
              681 | 
             
            
              | 2. | 
              நடவு வயல் தயாரித்தல் | 
              2005 | 
              2005 | 
             
            
              | 3. | 
              இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் | 
              7254 | 
              7254 | 
             
            
              | 4. | 
              நாற்று நடுதல் | 
              2400 | 
              3200 | 
             
            
              | 5. | 
              களையெடுத்தல் | 
              3200 | 
              3200 | 
             
            
              | 6. | 
              நீர்ப்பாசனம் | 
              300 | 
              240 | 
             
            
              | 7. | 
              பயிர்ப் பாதுகாப்பு | 
              660 | 
              660 | 
             
            
              | 8. | 
              அறுவடை | 
              3500 | 
              3500 | 
             
            
              |   | 
              மொத்தம் | 
              21419 | 
              19060 | 
             
           
            
          பொருளாதார நன்மைகள் 
           
          
            
              | வரிசை எண் | 
              விவரங்கள் | 
              பாரம்பரிய சாகுபடிமுறை | 
              திருந்திய நெல் சாகுபடி முறை  | 
             
            
              | 1. | 
              தானிய மகசூலிலிருந்து வரும் வருவாய் @ ரூ.7/கிலோ | 
              42441 | 
              56014 | 
             
            
              | 2. | 
              வைக்கோல் மகசூலிலிருந்து வரும் வருவாய் @ ரூ.0.25/கிலோ | 
              2263 | 
              2918 | 
             
            
              | 3. | 
              மொத்த வருவாய் (ரூ/எக்டர்) | 
              44704 | 
              58932 | 
             
            
              | 4. | 
              மொத்த செலவு (ரூ/எக்டர்) | 
              21429 | 
              19060 | 
             
            
              | 5. | 
              நிகர லாபம் (ரூ/எக்டர்) | 
              11149 | 
              23868 | 
             
            
              | 6. | 
              செலவு-வரவு விகிதம் | 
              2.08 | 
              3.09 | 
             
           
           
          
            
              |   | 
              மேலே செல்க | 
             
            
              | பி.நஞ்சையில் சேற்று உழவில்   நடவு நெல்  | 
                | 
             
            
              
               நாற்றங்கால் பராமரிப்பு  | 
             
            
              | சேற்று நாற்றங்கால் | 
                | 
             
            
              நாற்றங்காலின் பரப்பு 
                ஒரு எக்டர் நடவிற்கு தண்ணீர் வசதியுடன் 20 சென்ட் (800 சதுர மீட்டர்) இடம்தேவை 
                விதை அளவு 
                  30 கிலோ (நீண்ட கால ரகம்)  
                  40 கிலோ (மத்திய கால ரகம்)  
                  60 கிலோ (குறுகிய கால ரகம்) 
                  20 கிலோ (கலப்பினம்)                 
                  விதைப்பாத்தி அமைத்தல் மற்றும் விதைத்தல்  
                 
                - தயாரிக்கப்பட்ட நிலத்தில்  2.5 மீ (அகலம்) உள்ள பாத்திகளாக பிரித்து 30 செ.மீ இடைவெளியுள்ள வாய்க்கால்களை பாத்தியைச் சுற்றிலும் அமைக்க வேண்டும்.
 
                - நிலத்தின் சமன் அமைப்பு, மண்ணின் தன்மையைப் பொருத்து பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரை அமைக்கலாம்.
 
                - வாய்க்கால் அமைக்கும்போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம் அல்லது வாய்க்காலை கல் உருளை மூலம் ஆழப்படுத்தி விதைப் பாத்திகளை உயரப்படுத்தலாம்.
 
              - பாத்தியை சமன்படுத்துவதால் வாய்க்காலில் நீர் வடியும்.முளைகட்டிய விதையினை பாத்தியில் பரவலாக துாவ வேண்டும். தண்ணீர் அளவு சிறு படலமாக இருத்தல் நல்லது.
 
  | 
                | 
             
           
           
          
            
              |   | 
              புழுதி நாற்றங்கால் | 
             
            
               
  | 
              நாற்றங்காலின் பரப்பு 
                20 சென்ட் (800 சதுர மீட்டர்) ஒரு எக்டர் நடவிற்குத் தேவை. 
                விதை அளவு 
                30 கிலோ (நீண்ட கால ரகம்) 
                40 கிலோ (மத்திய கால ரகம்)  
                60 கிலோ (குறுகிய கால ரகம்) 
                20 கிலோ (கலப்பினம்) 
                விதைப்பாத்தி அமைத்தல் மற்றும் விதைத்தல்  
                - புழுதி நிலத்தை நன்கு ஆழமாக உழ வேண்டும்.
 
                - மணல் கலந்த பசளை மண் இவ்வகை நாற்றங்காலுக்கு ஏற்றது.
 
                - 1 முதல் 1.5 மீ அகலம் உள்ள பாத்திகளும், வாய்க்காலும் அமைத்தல் வேண்டும்.  நிலத்தின் சரிவு, மண் ஆகியவற்றை பொருத்து நீளம் அமையும். மண் தன்மை களிமண்ணாக இருந்தால் மேட்டு பாத்தி பொருத்தமானது.
 
                - உலர் விதை விதைப்பு ஏற்றது.  விதை விதைத்த பின்னர், நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்ணால் மூடப்பட வேண்டும்.
 
                - மண் நனையும் அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.
 
                - நான்கு இலைப்பருவநிலை நாற்று நடவிற்கு ஏற்றது
 
                - கால்வாய் நீர் இல்லாத போது இவ்வகையான நாற்றங்கால் ஏற்றது.
    | 
             
           
           
            
              | நடவு வயல் தயாரிப்பு | 
                | 
             
            
              நிலம் தயாரித்தல் - பண்படுத்தல் 
               - கோடையுழவு கொடுத்தால், நிலம் தயாரிப்பில் தண்ணீரை சிக்கனப்படுத்தலாம்.
 
                - உழுவதற்கு 1 அல்லது 2 நாட்கள் முன்னதாகவே நீர் பாய்ச்ச வேண்டும்.  நிலத்தின் மேற்பரப்பு தண்ணீரால் நிரம்பியிருக்க வேண்டும்.
 
                - சேற்றுழவு கொடுக்கும்பொழுது 2.5 செ.மீ ஆழம் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
 
  | 
                | 
             
           
 
          
            
              |   | 
              இயற்கை எரு  மற்றும் அடியுரம் இடுதல் | 
             
            
               
  | 
              கரிமஎரு இடுதல்  : 
                - 12.5 டன் தொழு உரம்/மக்கு எரு அல்லது 6.25 டன்/எக்டர் பசுந்தாள் உரம் இடுதல் வேண்டும்.
 
                -  பசுந்தாள் உரப்பயிர் விதை 20 கிலோ/எக்டர் என்ற அளவில்   விதைத்ததை இழுவை  இயந்திரம் அல்லது பசுந்தாள் இடும் இயந்திரம் மூலமாக பசுந்தாளை 15 செ.மீ ஆழத்தில் மண்ணில் கலக்கி விடுதல் வேண்டும்.
 
                - முதல் சேற்றுழவு செய்யும்பொழுது முன் பயிரினையும் சேற்றோடு சேர்ந்து உழவு செய்ய வேண்டும்.  அப்போது பயிர்த் தூர்களால் தழைச்சத்து பெயர்ச்சி முடக்கம் ஏற்படுவதை சரிசெய்யலாம்.  இவ்வுழவின் போது 22 கிலோ யூரியா/எக்டர் அளிக்க வேண்டும்.
 
                - அடுத்த பயிர் நடுவதற்கு 10 நாட்கள் முன்னதாகவே இதனை செய்ய வேண்டும்.
 
                   
                  
                உயிர் உரம் இடுதல்: 
                10 பாக்கெட் (2000 கிராம்/எக்டர்) அசோஸ்பைரில்லத்துடன் 10 பாக்கெட்  (2000 கிராம்/எக்டர்) பாஸ்போபேக்டீரியா அல்லது 20 பாக்கெட் (4000 கிராம்/எக்டர்) அசோபாஸ் எடுத்து 25  கிலோ  மக்கிய  தொழு உரம்  மற்றும் 25 கிலோ பெருமணலுடன் நன்கு கலந்து   நடவிற்கு முன் சீராகத் துாவி விட வேண்டும்.
                மேலும் 2.5 கிலோ/எக்டர்  என்ற அளவில் சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் (பிஎப் 1) 50 கிலோ தொழு  உரம் மற்றும் 25 கிலோ பெருமணலுடன் நன்கு கலக்கி நடவுக்கு  முன் துாவி விட வேண்டும். 
                 இரசாயன உரங்கள் இடுதல் 
                - மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களைக் கணக்கிட்டு அளிக்க வேண்டும்.
 
                - பொது  பரிந்துரை: 150:50:50 கிலோ தழைச்சத்து:மணிச்சத்து: சாம்பல் சத்து/எக்டர்.
 
                - நடவுக்கு முன் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தில் 25 சதவிகிதத்தை அடியுரமாக இடவேண்டும்.
 
                - மணிச்சத்தை அடியுரமாக இடவேண்டும்.
 
                - நடவுக்கு முன் 25 கிலோ ஜின்ங் பாஸ்பேட்டை 50 கிலோ பெருமணலுடன் கலந்து இடவேண்டும்.
  
                 | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
             
           
           
          
            
              | தேவையான பயிர் எண்ணிக்கையை நிர்வகித்தல் | 
                | 
             
            
              நாற்றின் வயதும், பயிர் வளர்ச்சியும்  
               குறுகிய கால இரகமாயின் 18 முதல் 22 நாட்களான நாற்றுக்கள், மத்திய கால இரகமாயின் 25-30 நாட்களான நாற்றுக்கள், நீண்ட கால இரகமாயின் 35-40 நாட்களான நாற்றுக்கள் தக்க வயது எனக் கொள்ளவும்.  
                
                நாற்றிலிருந்து பிரித்து வயலில் நடவு செய்தல் 
                  
                    
                      | மண் | 
                      நடுமை மற்றும் குறைந்த வளம் | 
                      அதிக வளம் | 
                     
                    
                      | கால அளவு | 
                      குறுகிய காலம் | 
                      மத்திய காலம் | 
                      நீண்ட காலம் | 
                      குறுகிய காலம் | 
                      மத்திய காலம் | 
                      நீண்ட காலம்  | 
                     
                    
                      | இடைவெளி (செ.மீ) | 
                      15x10 | 
                      20x10 | 
                      20x15 | 
                      20x10 | 
                      20x15 | 
                      20x20 | 
                     
                    
                      | குத்துக்கள்/சதுர மீ | 
                      66 | 
                      50 | 
                      33 | 
                      50 | 
                      33 | 
                      25 | 
                     
                   
                   
                - குறுகிய கால இரகமென்றால் ஒரு குத்துக்கு 2-3 நாற்றுக்களும், மத்திய மற்றும் நீண்ட கால இரகமென்றால் 2 நாற்றுக்கள் என்ற அளவில் நடவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்
 
                  - மேலாக நடுவதே (3 செ.மீஆழம்) விரைவான வளர்ச்சியையும், அதிக துார்களையும் தரவல்லது.
 
                  - மிகவும் ஆழமாக நடுவது (> 5 செ.மீ) காலம் தாழ்த்தி பயிர் உயிர் பிடிக்கவும், துார்கள் குறைவாகத் தோன்றவும் வழிவகுக்கும்.
 
                  - வரிசை நடவு செய்வது களைக்கருவி பயன்படுத்துவதற்கும் மற்றும் அதன் வழி தோன்றும் பல பலனை பெற வழிவகுக்கும்.
 
                  - களை எடுக்கும் கருவி பயன்படுத்த குறைந்தபட்சம் 20 செ.மீ அகலமுள்ள வரிசை அமைப்பு தேவைப்படுகிறது. 
 
                  - மேலும் இடைவெளி இருக்கும் இடத்தில் 7 முதல் 10 நாட்களுக்குள் நாற்றுக்களை நிரப்ப வேண்டும்.
 
  | 
                | 
             
           
           
            
              |   | 
              நீர் மேலாண்மை | 
             
            
               
  | 
              - சேற்றுழவும், உழுது நிலத்தை சமன் செய்வதும் நீரின் தேவையைக் குறைக்கின்றன.
 
                - நடவு செய்யும் பொழுது, அதிக ஆழமான தண்ணீர் இருந்தால் நாற்றுகள் ஆழமாக நடப்பட்டு அதன் துார்கள் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.  எனவே மேலான நீர் (2 செ.மீ) அளவு இருப்பதே சிறந்தது. 
 
                - ஏழு நாட்கள் வரை 2 செ.மீ அளவு தண்ணீர் இருக்குமாறு பராமரித்தல் வேண்டும்.
 
                - பயிர் தழைத்தபிறகு நீர் தேங்கி இருப்பதே நெற்பயிருக்கு சிறந்தது. பயிர்க்காலம் முழுவதும் 5 செ.மீ அளவு வரை நீர் தேங்கி இருக்குமாறு பராமரிக்க வேண்டும். 
 
                - நெற்பயிரின் முக்கியமான நீர் பாய்ச்சும் பருவங்கள் 
 
                  அ) கூட்டுப்பூத்திரள் உருவாகுதல் பருவம், ஆ)கதிர் உருவாகுதல் பருவம், இ)பூட்டைப் பருவம் ஈ) பூத்தல் பருவம். இந்நிலைகளில் பாசன இடைவேளை குறிப்பிட்ட நேரத்தை விட அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
                - கதிர் உருவாகுதல் மற்றும் முதிர்ந்த நிலையில் 5 செ.மீ மற்றும் அதற்கு அதிகமான அளவு நீர் இருந்தால் வேர் அழுகல், இலை முதிர்வு, பூட்டைப்பருவம் தாமதமாகுதல், ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
 
                - மேலும் பூங்கொத்தில் தானியங்கள் நிரம்புவதின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் மற்றும் அறுவடை குறியீடு குறைவாகக் காணப்படும்.
 
  | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
             
           
          
            
              | நஞ்சையில் சேற்றுவயலில் நேரடி  விதைப்பு | 
                | 
             
            
              | பரப்பு மற்றும் நிலம் தயாரித்தல் | 
             
            
              பரப்பு 
                  நடவு செய்வதில் சிரமம் உள்ள அனைத்து பகுதிகளிலும் சேற்று வயல் நேரடி   நெல் விதைப்பு  முறை பின்பற்றப்படுகிறது. 
                   
 
                  நிலம் தயாரித்தல் 
                மே-ஜூலையில் மழை பெய்யும் காலத்தில், நீர்சேமிப்பு, களைகளை கட்டுப்படுத்துதல், கட்டிகளை உடைத்தல் ஆகியவற்றிற்காக மேலும் மேலும்  பல முறை  உழவு செய்ய வேண்டும். 
                உழவுக்கு 1 (அ) 2 நாட்கள் முன்னதாகவே வயலில் நன்கு நீர் பாய்ச்சவேண்டும். வயலில் மேல்பரப்பு நீரால் சூழ்ந்திருக்க வேண்டும்.  
               சேற்றுழவின் போது 2.5 செ.மீ ஆழம் வரை நீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.  
                நிலத்தை நன்கு சமப்படுத்துதல் மிக மிக அவசியமானது.  | 
                | 
             
           
 
          
            
              |   | 
              இரகங்கள் | 
             
            
               
  | 
              நடவுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து இரகங்களும் நேரடி சேற்றுவயல் விதைப்புக்கும்  ஏற்றது. அந்த இரகங்கள் பின்வருமாறு.  
                  
                    
                      | இரகங்கள் | 
                      கால அளவு (நாட்கள்) | 
                      விதைக்கும் காலம் | 
                     
                    
                      | பொன்மணி | 
                      160 to  165 | 
                      ஆகஸ்ட்  1-30  | 
                     
                    
                      | கோ 43, ஐஆர் 20, எடிடீ 38 , எடிடீ  39, பொன்னி, தரம் உயர்ந்த வெள்ளைப் பொன்னி | 
                      125  to135 | 
                      செப்டம்பர்  1-30  | 
                     
                    
                      | எடிடீ  36, எடிடீ 37 | 
                      105 to  110 | 
                      அக்டோபர்  1-10  | 
                     
                  | 
             
             
           
           
          
            
              | இயற்கையுரம் மற்றும் அடியுரம் இடுதல் | 
                | 
             
            
              கரிம எரு இடுதல்  
                 - தொழு உரம் அல்லது மக்கு எரு  12.5 டன் அல்லது 6.25 டன்/எக்டர் பசுந்தாள் உரம் இடுதல் வேண்டும் .
 
                - பசுந்தாள் உரப்பயிர் விதை 20 கிலோ/எக்டர் என்ற அளவில்   விதைத்ததை இழுவை  இயந்திரம் அல்லது பசுந்தாள் இடும் இயந்திரம் மூலமாக பசுந்தாளை 15 செ.மீ ஆழத்தில் மண்ணில் கலக்கி விடுதல் வேண்டும்.
 
                   
                  
                அடித் துாரினை மண்ணோடு கலக்குதல் 
                
                  - முதல் சேற்றுழவின் போது, முன்பயிரின் துார்களை மண்ணோடு சேர்த்து உழவு செய்ய வேண்டும். அப்போது 22 கிலோ யூரியா/எக்டர் அளிக்க வேண்டும். இந்நிலையில் பயிர்த்துார்களால் தழைச்சத்து பெயர்ச்சி முடக்கம் ஏற்படுவதை சரிசெய்யலாம்.
 
                - அடுத்தபயிர் நடுவதற்கு 10 நாட்கள் முன்னதாகவே இதனை செய்ய வேண்டும்.
 
                  
                உயிர் உரம் இடுதல் 
                அசோஸ்பைரில்லம் 2000கிராம்/எக்டர் மற்றும் பாஸ்போபேக்டீரியா 2000கிராம்/எக்டர் ஒவ்வொன்றும் 10 பாக்கெட் என்ற அளவில் எடுத்து 25 கிலோ மக்கிய தொழு உரம்  மற்றும் 25 கிலோ பெருமணலுடன் நன்கு கலந்து நடவிற்கு முன்பு சீராகத் துாவி விட வேண்டும். 20 பாக்கெட் (4000 கிராம்/எக்டர்) அசோபாஸ் பயன்படுத்தலாம்.மேலும் 2.5 கிலோ/எக்டர் என்ற அளவில் சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் (பிஎப்1) 50 கிலோ பண்ணையுரம் மற்றும் 25 கிலோ பெருமணலுடன் நன்கு கலக்கி நடவுக்கு முன் துாவிவிட வேண்டும். இரசாயன உரங்கள் இடுதல் 
                - மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களைக் கணக்கிட்டு அளிக்க வேண்டும்
 
                - பொது  பரிந்துரை: 50:25:25 கிலோ தழைச்சத்து :மணிச்சத்து: சாம்பல்சத்து/எக்டர்
 
                - நடவுக்கு முன் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தில் 25 சதவிகிதத்தை அடியுரமாக இடவேண்டும்.
 
                - மணிச்சத்தை அடியுரமாக இட வேண்டும்.
 
                - நடவுக்கு முன் 25 கிலோ ஜின்ங்பாஸ்பேட்டை 50 கிலோ பெருமணலுடன் கலந்து இடவேண்டும்.
                   | 
                
                   
                    | 
             
           
           
          
            
              |   | 
              விதைப்பு | 
             
            
               
  | 
              - எக்டருக்கு 60 கிலோ விதை தேவை 
 
                - விதைகளை முளை கட்டவிடுதல் வேண்டும்
 
                - உருளை விதைக்கருவி மூலம் முளைகட்டிய விதைகளை விதைத்தல் அல்லது வயலில் துாவி விடுதல் வேண்டும்.
 
                - "இருபயிர்" முறை என நெல்லும் பசுந்தாள் உரமும் ஒருங்கே விதைத்து உர நிர்வாகத்தில் சிக்கனமும், மகசூலில் மேன்மையும் பெறலாம். இதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள 'நெல்-பசுந்தாள் பயிர்  விதைப்பானை' பயன்படுத்தலாம்.
 
                   
                  
                பின்செய் நேர்த்தி:  
                - பயிர் களையப்படுவதும், பாடு நிரப்பப்படுவதும் விதைத்த 14-21 ஆம் நாட்களில் செய்யப்பட வேண்டும். இது முக்கியமான பயிர்பின்செய் நேர்த்தியாகும்.
 
                - நெல்லும் பசுந்தாள் பயிரும் ஒருங்கே பயிரிடப்பட்டிருந்தால், பசுந்தாள் செடியினை 40 செ.மீ உயர வளர்ச்சியில் அல்லது விதைத்த 30 நாட்களில் இதில் எந்தநிலை முந்துகின்றதோ அப்பொழுதே 'உருளைக் களை எடுப்பான்' கருவியைக் கொண்டு மடக்கி அழுத்தி மிதித்து விடல் வேண்டும்.
 
                - மீண்டும் 'உருளைக் களை எடுப்பானை' ஒரு வாரத்திற்கு பின் நெல் வரிசைகளுக்கு இடையே இழுப்பதால் வேரிற்கு புது பிராணவாயு கிடைக்கவும், தேவையற்ற அங்கக அமிலங்கள் வெளியேறவும்   வாய்ப்புகள்  கிடைக்கும்.
 
  | 
             
             
           
           
            
              | நீர் மேலாண்மை | 
                | 
             
            
              - விதைத்த முதல் வாரத்தில் மண் நனைய  நீர் பாய்ச்சுதல் போதுமானது.
 
                - பயிரின் வயதை பொருத்து நீர் பாய்ச்சுவதின் ஆழம் 2.5 செ.மீ வரை உயர்த்த வேண்டும்.
 
              - மிகையான நீரைவடிகட்ட வடிகால் வசதி அமைக்க வேண்டும் அல்லது சரியான நீர்ப்பாசன முறையை பின்பற்ற வேண்டும். கட்டிய நீர் மறைந்தபின் மறுபடியும் பாசனம் செய்ய வேண்டும்.  அறுவடைக்கு 15 நாட்கள் முன்னரே நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். 
 
  | 
                | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
           
           
          
            
              | மானாவாரி முறை | 
                | 
             
            
              இவ்வமைப்பில் போதுமானளவு உழவாழம் கிடைக்க கோடைக்காலத்தில் நிலத்தை நன்கு சேற்றுழவு செய்து பரம்படித்துக் கொள்ள வேண்டும்.  பருவமழைத் துாறலின் போது விதையை நேரடியாக விதைக்க வேண்டும்.  விதைகளை வீசுதல் மூலமாகவோ, நாட்டுக் கலப்பையின் பின் ஊன்றுதல் அல்லது கோடுகளில் துளைத்தல் மூலமாகவோ விதைக்கலாம்.  வரிசை விதைப்பு போதுமான அளவு பயிர் எண்ணிக்கையை உறுதி செய்வதால் இதுவே சிறந்தது.  மேலும் இதனால் களை எடுத்தல் மற்றும் ஊடுபயிர் சாகுபடி எளிதாகிறது.  
                
                 | 
              
                  | 
             
           
           
          
            
              | புழுதி விதைத்த மானாவாரி நெல் | 
             
            
              | நிலம் தயாரித்தல் | 
             
            
              - களைகளைக் குறைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் 1 (அ) 2 முறை கோடையுழவு கொடுக்கலாம்
 
                - கிட்டும் மழை மற்றும் மண்ணின் ஈரத்தன்மையை வைத்து நன்கு புழுதியுழவு கொடுக்க வேண்டும்.
 
                - களை மற்றும் நீர் மேலாண்மைக்கு தகுந்தவாறு நிலத்தை சமப்படுத்துதல் வேண்டும்.
 
                - இறுதியாக நிலம் தயாரித்த பிறகு விதைக்கும் நேரத்தில் நிலம் நன்கு பண் படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
 
                - முன் வளர் பருவத்தில் மிகுந்த நீரை வடிப்பதற்கு நிலத்தை சுற்றிலும் 3 மீட்டர் இடைவெளியில் 15 செ.மீ அகலத்தில் மேலோட்டமான வாய்க்கால் ஏற்படுத்த வேண்டும்.
 
  | 
                | 
             
           
           
            
              |   | 
              இரகங்கள் | 
             
            
               
  | 
              குறுகிய கால இரகங்களே மிகச்சிறந்தது 
                     | 
             
             
           
          
            
              | இயற்கை உரம் மற்றும் அடியுரம் இடுதல் | 
                | 
             
            
                
                  
                    - பொது  பரிந்துரை : 50:25:25 கிலோ தழைச்சத்து: மணிச்சத்து: சாம்பல் சத்து/எக்டர்
 
                    - அடியுரமாக 750 கிலோ தொழு உரத்துடன் மணிச்சத்து (25 கிலோ/எக்டர்) கலந்து அளித்தல் சிறந்தது
 
                - எங்கெல்லாம் இரும்புச்சத்து பற்றாக்குறை காணப்படுகின்றதோ அப்பகுதிகளில் விதைக்கும் முன்பே 50 கிலோ/எக்டர் இரும்பு சல்பேட் அளித்தல் அவசியம்.
  
                   | 
               
  | 
             
           
           
            
              |   | 
              விதையளவு மற்றும் விதைத்தல் | 
             
            
               
  
  | 
              - விதையளவு: 75 கிலோ/எக்டர்.
 
                - 1 சதம் பொட்டாசியம்குளோரைடுகரைசலுடன் 16 மணி நேரத்திற்கு (விதைமற்றும் பொட்டாஷ்கரைசல் 1:1)  முன்பு விதை கடின நேர்த்தி செய்து, பின்பு சேமிக்கும் அளவு ஈரத்தன்மை கிடைக்கும் வரை நிழலில் உலர வைக்க வேண்டும். இதன் மூலம் வறட்சியை தாங்கிக் கொள்ளும் ஆற்றலை பயிர் பெறுகிறது.
 
                - விதைக்கும் நாளன்று விதை கடின நேர்த்தி செய்யப்பட்ட விதையை ஒரு கிலோவிற்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் என்ற அளவில் கலக்கி பின்பு 2000 கிராம் அசோபாஸ் அல்லது அசோஸ்பைரில்லம் மற்றும் 600 கிராம் பாஸ்போ பேக்டீரியாவுடன் கலந்து விதைக்க வேண்டும்.
  
                  வீசி விதைத்தல்: குறைவான ஈரப்பதம் இருப்பின் விதைகளை வீசி விதைத்தல் வேண்டும். பின் இளக்க உருளையைப் பயன்படுத்தி விதைகளை ஈரமண்ணில் உட்செல்லுமாறு உபயோகிக்கலாம்.  
                     
                      வரிசை விதைப்பு: நாட்டுக்கலப்பை பின் விதை ஊன்றுதல்.  வீசி விதைத்தலை விட வரிசை விதைப்பே சிறந்தது.  விதைக்குங் கருவியைப் பயன்படுத்துவது  அதிக பயிர் எண்ணிக்கை, விதையளவு குறைத்தல், பயிர்பின்செய் நேர்த்தி ஆகியவற்றிக்கு உதவுகிறது. 
                 - விதைக்குங் கருவியைப் பயன்படுத்தி 20 செ.மீ வரிசைக்கு வரிசை இடைவெளி விட்டு விதை ஊன்ற வேண்டும்.
 
                    - நாட்டுக் கலப்பைக்கு பின்னாலும் விதைப்பு செய்யலாம்
 
                    - 3-5 செ.மீ ஆழத்திற்குள் விதைக்க வேண்டும். பரம்புப்பலகை பயன்படுத்தி மேற்பரப்பு மண்ணை சமன்செய்ய வேண்டும்.
 
                - சீர்மையான முளைப்பிற்கு முன்பருவகால விதைப்பே ஏற்றது.
 
  | 
             
           
          
            
              | பின்செய் நேர்த்தி | 
                | 
             
            
              
                - 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (2000 கிராம்/எக்டர்) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000கிராம்/எக்டர்) அல்லது அசோபாஸ் 20 பாக்கெட் (4000 கிராம்/எக்டர்) ஆகியவற்றுடன் 25 கிலோ தொழு உரம் அல்லது மணல்  கலந்து வயலில் முதல் மழை வந்தவுடன் தெளிக்கவும்.
 
                - பயிர் களைவதும், பாடு நிரப்பலும் விதை முளைத்த 14 முதல் 21 நாட்களுக்குள் அமைதல் நன்று
 
                - மிகவும் வறட்சியான காலங்களில் 1000 பிபிஎம் என்ற அளவில் (ஒரு மி.லி. லிட்டர் தண்ணீரில்) சைகோசெல்லை பயிருக்குத் தெளித்தல் வேண்டும்.
 
              - வறட்சியான காலத்தில் நீரின் தேவையைக் குறைக்க 3 சதவிகிதம் (30 மில்லி 1 லிட்டர் தண்ணீரில்) "கயோளின்" இலையில் தெளித்தலும், ஒரு சதவிகிதம் (10 மில்லி 1 லிட்டர் தண்ணீரில்) பொட்டாஷ் கரைசலைத் தெளித்தலும் இலை வழி நீர் ஆவியாவதைக் குறைத்து நல்ல பலனைத் தரவல்லது. 
   | 
               
  | 
             
           
           
          
            
              |   | 
              களை மேலாண்மை | 
             
            
               
  | 
              - முளைவிட்டு 15-21 நாட்களுக்குள் முதல் கைக்களை எடுக்க வேண்டும்.
 
                - முதல் களை எடுத்து 30-45 நாட்களில் இரண்டாம் கைக்களை எடுக்க ஏற்ற தருணம். 
 
                - பயிர் விதைத்து 5 நாட்களுக்குள் முளைக்க போதுமான மழை பெய்த உடனேயே பென்டிமெத்திலின் 1.0 கிலோ/எக்டர் அல்லது பிரிடிலாக்குளோர் + சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ/எக்டர் அளவில் அளிக்க வேண்டும்.  எஞ்சிய களைகளைக் கைக்களை மூலம் 30-35 நாட்களில் எடுக்க  வேண்டும்.
  
             |  
            
              |   | 
              மேலே செல்க                            
             |  
             
           
           
          
            
              | மானாவாரி மேட்டுக்கால் நெல் | 
             
            
              |  நிலம் தயாரித்தல் | 
             
            
              - பருவ மழையைப் பொறுத்துத்தான் நேரடி விதைப்பு நெல்லின் வெற்றி அடங்கியுள்ளது.
 
                - நன்கு தயாரிக்கப்பட்ட நிலத்தில் விதைப்பு செய்தால், பயிர் நிலைத்து நிற்கும்.
 
                - நன்கு ஆழமாக உழவு செய்த நிலத்தில், விதைகள் மண் ஈரத்தன்மையைப் பெற்று விரைவாகவும், சீராகவும் முளைக்கின்றன.
 
                - நிலத்தை நன்கு தயாரிப்பதன் மூலமாக சீரான பயிர் வளர்ச்சி, களையெடுப்பு, உரம் அளித்தல் ஆகியவை எளிதாக நடக்க உதவுகிறது.
  
               | 
                | 
             
           
           
          
            
              |   | 
              இரகங்கள் | 
             
            
               
  | 
              குறுகிய கால இரகங்களான  பிடிபீ 28, பிடிபீ 29, பிடிபீ 30
  | 
             
           
           
            
              | இயற்கை உரம் மற்றும் அடி உரம் அளித்தல் | 
                | 
             
            
              - தமிழ்நாட்டில், கடைசி உழவின் போது வளமான தொழு உரமாக மணிச்சத்து 25 கிலோ/எக்டர் என்ற அளவில் அளிக்கப்படுகிறது.
 
               - மணிச்சத்து 50 கிலோ/எக்டர் மற்றும் சாம்பல் சத்து 25 கிலோ/எக்டர் 2 பிரிவுகளாக, அதாவது விதைத்து 20-25 நாட்களில் ஒரு பாதியும் மற்றும் 40-45 நாட்களில் மறுபாதியும் அளிக்கப்படுகிறது.
 
             - கேரளாவில் (மோடன்) மேட்டுப்பாங்கான நிலத்தில் மணிச்சத்து (20 கிலோ/எக்டர்) என்ற முழு அளவை நிலம் தயாரிக்கும்போது, அடியுரமாக அளித்தல் மற்றும் தழைச்சத்து (40 கிலோ/எக்டர்), 3 பிரிவுகளாகப் பிரித்து அடியுரமாக முதல் பாகத்தையும், துார் விடும் பருவத்தில் இரண்டாம் பாதியையும் (விதைத்து 3 வாரத்திற்கு பின்) பூங்கொத்து உருவாகும் பருவத்தில் மீதமுள்ள பங்கையும் (பூத்தலுக்கு 30 நாட்களுக்கு முன்) அளிக்க வேண்டும்.
 
             - சாம்பல் சத்து (30 கிலோ/எக்டர்) அடியுரமாக ஒரே நேரத்திலோ அல்லது 2 மடங்காக  பிரித்து, அடியுரமாக ஒரு பாதியும், பூங்கொத்து  உருவாகும் பருவத்தில் மற்றொரு பாதியும் அளிக்கலாம்.
 
              
  | 
                | 
             
           
           
            
              |   | 
              விதை அளவு மற்றும் விதைப்பு | 
             
            
               
  | 
              விதை அளவ - 80-100 கிலோ/எக்டர்  
                   
                  வீசி விதைத்தல்: மண்ணின் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்போது விதையை வீசி விதைக்கலாம். உருளையை பயன்படுத்துவதன் மூலம் விதைகள் மண் ஈரத்தன்மையைப் பெறுகின்றன.  
                   
                  வரிசை விதைப்பு:  நாட்டுக்கலப்பை பின் விதை ஊன்றுதல்.  வீசி விதைத்தலை விட வரிசை விதைப்பே சிறந்தது.  விதைக்குங் கருவியைப் பயன்படுத்துவது  அதிக பயிர் எண்ணிக்கை, விதையளவு குறைத்தல், பயிர்பின்செய் நேர்த்தி ஆகியவற்றிக்கு உதவுகிறது.  
 | 
             
             
           
           
            
              | களை மேலாண்மை | 
                | 
             
            
              - மேட்டுப்பாங்கான நிலங்களில், களைகளினால் 50 சதவிகிதம் வரைமகசூல் குறைவு ஏற்படுகின்றது.
 
                - முதல் கைக்களை 15-20 நாட்களுக்குள் மற்றும் இரண்டாம் கைக்களை 45 நாளிலும் செய்ய ஏற்ற தருணம்.
 
                - சாதகமற்ற மழைக் காலங்களில், தியோபென்கார்ப் 2.5 லி/எக்டர் அல்லது பென்டிமெத்திலின் 3.0 லி/எக்டர் என்ற அளவில் விதைத்த 8 நாட்களுக்குப் பிறகு தர வேண்டும்.  30-35 நாட்களில் ஒரு கைக்களை எடுக்கப்பட்டபின்னர், போதுமான அளவு ஈரத்தன்மை இருந்தால் மணல் கலவையுடன் களைக் கொல்லியை பயன்படுத்த வேண்டும்.
  
               | 
                | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
           
           
            
              |   | 
              பகுதி பாசன சாகுபடி முறை | 
             
            
                | 
              இந்த அமைப்பில் பருவ மழையின் போது நன்கு உழுத உலர்ந்த மண்ணில் விதை விதைப்பு செய்யப்படுகிறது.  பருவமழை ஆரம்பித்தபிறகு நீர்கிட்டுவதால் அது ஈர நெல் எனப்படுகிறது.  சில ஆயக்கட்டு பரப்புகளில் நீர் வெளியீடு பற்றி எதிர்நோக்கும்போது, நெற்பயிர் அதிகபட்சமாக 45 நாட்களுக்கு பகுதி உலர்ந்த நிலைகளில் வளரும்.  பின் நீர் வந்தபிறகு இப்பயிர் நன்செய் நிலைக்கு மாற்றப்படுகிறது. 
                
                 | 
             
           
 
            
              இறவையுடன் புழுதி விதைத்தமானாவாரி நெல்   | 
             
            
              | பரப்பு மற்றும் நிலம் தயாரித்தல் | 
             
            
                | 
              பரப்பு  - தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள். 
                 
                      நிலம் தயாரித்தல் 
                 - கிட்டிய மழையையும், மண் ஈரத் தன்மையும் கொண்டு நன்கு உழவாழம் கிடைக்கும் வரை புழுதியுழவு கொடுக்க வேண்டும்.
 
                - மண் கடின தன்மை , கெட்டியான மண் உள்ள இடத்தில் ஜிப்சம் 1 டன்/எக்டர் அளிக்க வேண்டும்.
 
                - களை மற்றும் நீர் மேலாண்மைக்கு நிறைவான நிலசமப்படுத்துதல் முக்கியமானது.நிலத்தை சுற்றியும் மேலோட்டமான வடிகால் (15 செ.மீ அகலத்தில்)   3 மீட்டர்இடைவெளி விட்டு அமைக்க வேண்டும். இதனால் பயிர் முன் வளர்ச்சிக்காலத்தில் மிகுதியான நீர் இங்கு வடிய உதவுகின்றது
  
               | 
             
           
         
           
          
            
              | இயற்கை உரம் மற்றும் அடியுரம் இடுதல் | 
                | 
             
            
              பொது  பரிந்துரை: 75:25:37. 5கிலோ தழைச்சத்து: மணிச்சத்து: சாம்பல்சத்து/எக்டர் 
                - 750 கிலோ வளமான தொழு உரத்தை, இரசாயன உரமான மணிச்சத்தோடு (25 கிலோ/எக்டர்) கலந்து அடியுரமாக இட வேண்டும்.
 
                - முளைப்பிற்கு பின் தழைச்சத்து, சாம்பல் சத்து இரண்டும் 3 பிரிவுகளாக 20-25, 40-45, மற்றும் 60-65 நாட்கள் அளிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 25 கிலோ தழைச்சத்து மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து அளிக்க வேண்டும்.
 
              - துத்தநாகம் மற்றும் இரும்பு குறைபாடு இருக்கும் இடத்தில் ஜின்க்சல்ஃபேட் 25கிலோ/எக்டர், ஃபெர்ரஸ்சல்பேட் 50 கிலோ/எக்டர் என்ற அளவில் அடியுரமாக அளிக்க வேண்டும்.
 
  | 
                | 
             
           
           
          
            
              |   | 
              விதையளவு மற்றும் விதைப்பு | 
             
            
               
  | 
              - விதையளவு: 75 கிலோ/எக்டர் உலர்ந்த விதை.
 
                - 1 சதம் பொட்டாசியம்குளோரைடுகரைசலுடன் 16 மணி நேரத்திற்கு (விதைமற்றும் பொட்டாஷ்கரைசல் 1:1)  முன்பு விதை கடின நேர்த்தி செய்து, பின்பு சேமிக்கும் அளவு ஈரத்தன்மை கிடைக்கும் வரை நிழலில் உலர வைக்க வேண்டும். இதன் மூலம் வறட்சியை தாங்கிக் கொள்ளும் ஆற்றலை பயிர் பெறுகிறது.
 
                - விதைக்கும் நாளன்று விதை கடின நேர்த்தி செய்யப்பட்ட விதையை ஒரு கிலோவிற்கு 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் என்ற அளவில் கலக்கி பின்பு 2000 கிராம் அசோபாஸ் அல்லது அசோஸ்பைரில்லம் மற்றும் 600 கிராம் பாஸ்போ பேக்டீரியாவுடன் கலந்து விதைக்க வேண்டும்.
 
                - விதைக்குங் கருவியைப் பயன்படுத்தி, 20 செ.மீ வரிசை இடைவெளி விட்டு விதைக்கவேண்டும்.
 
                - நாட்டுக் கலப்பைக்குப் பின்னும் விதை விதைக்கலாம்
 
                - விதைப்பின் ஆழம் 3-5 செ.மீ அளவாக இருக்க வேண்டும். சமன்படுத்தும் பலகையின் மூலம் மேற்பரப்பு மண்ணை சற்று இறுக்கமாக்கச் செய்யலாம்.
 
                - சீரான முளைப்பிற்கு முன் பருவ விதைப்பே ஏற்றது.
 
              - மத்தியகால இரகத்தை முன் பருவ விதைப்பு செய்வதன் மூலம் அதிக தானிய மகசூல் கிடைக்கிறது.  மேலும் அதிக மழைக் காலத்தில் சமாளித்துக் கொள்ளும் தன்மையைப் பெறுகின்றன.
 
  | 
             
           
           
          
            
              | களை மேலாண்மை | 
                | 
             
            
              - முளைத்து 15-21 நாட்களுக்குள் முதல் கைக்களை எடுக்க வேண்டும்.
 
                - முதல் களை எடுத்து 30-45 நாட்களுக்குள் இரண்டாம் கைக்களை எடுக்க வேண்டும் .
 
              - பயிர் முளைத்த 5 தினங்களுக்குள் 'பென்டிமெத்தலின்' 1.0 கிலோ/எக்டர் அல்லது பிரிடிலாக்குளோர் + சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ/எக்டர் விதை முளைக்கப் போதுமானமழை பெய்தஉடனேயே அளித்து களையைக் கட்டுப்படுத்தலாம்.  களைக்கொல்லிஇடப்பட்ட தருணத்தில் எஞ்சியகளைகளை கைக்களை மூலம் 30-35 நாட்களில் எடுக்க வேண்டும்.
 
  | 
                | 
             
           
           
          
            
              |   | 
              நீர் மேலாண்மை | 
             
            
               
  | 
              - ஏரி அல்லது கால்வாய் நீரைப் பயன்படுத்தி 30-35 நாட்களுக்குப் பிறகு பாசனம் செய்ய வேண்டும்.
 
                - 2.5-5.0 செ.மீ ஆழம் வரை தான் நீர் பாய்ச்ச வேண்டும்.  கட்டிய நீர் மறைந்தவுடன் நீர் பாய்ச்சுதல் நல்லது.  இதன் மூலம் அதிகமான பரப்பளவில் இது போன்ற சாகுபடி முறையை மேற்கொள்ளலாம்.
  
               | 
             
            
              |   | 
              மேலே செல்க | 
             
           
       |