முதல் பக்கம் தொடர்புக்கு  

இலைச் சுருட்டுப்புழு

தாக்குதலின் அறிகுறிகள் :
  • இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும்.
  • புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டி, இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.
  • தீவிர தாக்குதலின்போது, முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.
  • இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்.

தாக்குதலின் தன்மை :

நெற்பயிரின் இலைகள் சுருண்டு, மடிந்து, சில சமயத்தில் ஒன்றாக இணைந்து அதன் மேல் வெள்ளை நிறப் திட்டுக்கள் காணப்படும். இந்த அறிகுறி, அவ்விடத்தில் புழுக்கள் உட்கொண்டதை உணர்த்துகிறது. சுருண்ட அந்த இலைகளை திறக்கும்போது புழுக்கள் உள்ளிருப்பதைக் காண முடிகிறது.

நீளவாக்கில் மடிக்ப்பட்ட இலைகள் திசுக்கள் சுரண்டப்பட்ட இலைகள்
வெண்நிறத்தில் தீய்ந்தது போன்ற தோற்றம் புழுக்கள் இலைகளில் தென்படும்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :  


 அறிவியல் பெயர் - ஃனபாலோக்ரோசிஸ் மெடினாலிஸ்

  • முட்டை :
    தட்டையாக, முட்டை வடிவத்தில், மஞ்சளான வெள்ளை நிறத்தில் காணப்படும்.

  • புழு :
    பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டு விளங்கும். முன்மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும், பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும்.

  • கூட்டுப்புழு :
    கூட்டுப்புழுவின் காலம் 7-10 நாட்கள்.

  • முதிர் பூச்சி :
    அந்துப் பூச்சியானது மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்டது. அதில் நிறைய கருப்பு அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்தில் கருப்புநிற பட்டையான கோடுடனும் காணப்படும்.
   
இலை மடிப்பு புழு இலை மடிப்பு புழு முதிர்ப்பூச்சி

மேலே செல்க

மேலாண்மை :  

உழவியல் முறைகள் :

  • இலைச்சுருட்டுப் புழுவிற்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான காவேரி, அகாலி, டிகேஎம் 6, டிகேஎம் 12, ஏடிடீ 46, டிபிஎஸ் 2, டிபிஎஸ் 3, ஏடிடீ 44, பிஒய் 4, கைராளி, அகல்யா, குஞ்சு குஞ்சு வர்ணா, குஞ்சு குஞ்சு பிரியா, ரேஷ்மி (பிபீடி 44), நீரஜா (பிபீடி 47) மற்றும் தீப்தி ஆகிய இரகங்களைப் பயிரிடுதல்.
  • வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்குதல்.
  • அதிக அளவு தழைச்சத்து உரங்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • பூச்சிகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெருதலைக் கட்டுப்படுத்த கார்போஃப்யூரான் (அ) போரேட் குறுணைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • பூச்சி தாக்கப்பட்ட இலைகளை கத்தரித்து விடவேண்டும்.
  • இலை மடிப்புகளில் இருக்கும் புழுக்களை கீழே விழவைக்க கயிறை பயன்படுத்த வேண்டும்.
  • முள்ளுள்ள கொப்பு கொண்டு இலை மடிப்புகளைத் திறக்க வேண்டும்.
   
போரேட் குருணைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் வரப்புகளை சுத்தமாக வைக்கவும்
ஏடீடி 46 - எதிர்பபு இரகத்தை பயன்படுத்தவும டி.பி.எஸ்.3 - எதிர்பபு இரகத்தை பயன்படுத்தவும்

இரசாயன முறைகள் :

  • பொருளாதார சேத நிலை அளவு: தழைப்பருவத்தில் 10 சதவிகிதம் இலைச்சேதம் மற்றும் பூத்தல் பருவத்தில் 5 சதவிகிதம் கண்ணாடி இலைச் சேதமும் ஏற்படும்.
  • கவனமான, மற்றும் முறையான கண்காணிப்பின் அடிப்படையில், அதன் தொகையை மதிப்பீடு செய்யலாம்.
  • இலை சுருட்டுப்புழுக்களின் இயற்கையான எதிரிகள் இருப்பின், இரசாயன முறை இடுதலை தாமதப்படுத்துதல் வேண்டும்.
  • பூச்சித் தாக்குதலின் ஆரம்பநிலையில் தாக்கப்பட்ட இடத்திற்கு இரசாயனம் தெளிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் தாக்குதல் வயல் முழுதும் சீராக ஏற்பட்டால் வயல் முழுவதும் ஒரே சமயத்தில் தெளிக்க வேண்டும்.
  • பொருளாதார சேத நிலை அளவைப் பொருத்து கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டும் :
    ஃபெனிட்ரோத்தியான் 50 இசி 1000 மிலி/ எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 எஸ் எல் 1000 மிலி/எக்டர் (அ) பாசலோன் 35 இசி 1500 மிலி/ எக்டர் (அ) குயினல்பாஸ் 25 இசி 1000 மிலி/ எக்டர் (அ) டைக்லோரோவாஸ் 76 (நீரில் கரையும் செறிவு) 250 மிலி/ எக்டர் (அ) பாஸ்போமிடான் 40 (எஸ்எல்) 600 மிலி/எக்டர் (அ) க்ளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மிலி/ எக்டர் (அ) கார்பரில் 50% நனையும் துாள் 1.0 கிலோ/எக்டர் (அ) ஃபென்தியான் 100 இசி 500 மிலி/எக்டர் (அ) புரபினோபாஸ் 50 இசி 1000 மிலி/எக்டர்

   
குளோர்பைரிபாஸ் தெளிக்கவும் பாஸ்போமிடான் தெளிக்கவும்
குயினைல்பாஸ் தெளிக்கவும் பூச்சிக்கொல்லி தெளிக்கவும்

உயிரியல் முறைகள் :

  • டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44, மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை @ 5 சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்/ எக்டர்/ முறை) என்ற அளவில் விட வேண்டும்.
  • முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை காலை நேரத்தில் வயலில் கட்டவும்.
  • இலையின் அடிப்பகுதியில் வெளிப்பக்கமாக முட்டைகள் இருக்கும்படியாக ஒட்டுண்ணி அட்டைகளை கட்டிவிடவும்.
  • முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை வயலில் கட்டுவதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்து கட்டிய பின் ஏழு நாட்கள் வரை இரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
   
முட்டை ஒட்டுண்ணி - டிரைக்கோகிராமா கைலோனிஸ் டிரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணியை வயலில் விடவும்

இயற்கையான எதிரிகள் மற்றும் கொன்றுண்ணிகளை பாதுகாத்தல் :
இயற்கையான எதிரிகள் :
  • இடோபிளெக்டிஸ் நரன்கே - இச்னுாமோனிடே குளவி
  • டிரைக்கோம்மா க்னபலோக்ரோசிஸ் - இச்னுாமோனிடே குளவி

கொன்றுண்ணிகள் :
  • நெற்பயிர் நாவாய்ப் பூச்சியான “சைடோரினஸ் லிவிடி பென்னீஸ்” @ 50-75 முட்டைகள்/மீ என்ற அளவில் விடுதல்.

இயற்கை எதிரி - டிரைக்கோம்மா க்னபலோக்ரோசிஸ இரை விழுங்கி - மிக்ராஸ்பிஸ் க்ரோசிரா

பொறி முறைகள் :
  • விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளைக் கவர்ந்து அதனைக் கொல்ல வேண்டும். 5 எக்டருக்கு குறைந்தது ஒரு விளக்குப் பொறியாவது வைக்க வேண்டும்.
  • நெற்பயிரின் தழைப் பருவத்தில் பூச்சியுண்ணுகின்ற பறவைகள் நிற்பதற்கான பலகைகளை (40-50/எக்டர்) வயலில் பொருத்துதல் வேண்டும்.
  • கட்டுப்பாட்டு முறைகளான மயக்கப் பொறிகளின் (10-12/எக்டர்) மூலம் இப்பூச்சிகளைக் கண்காணிக்க வேண்டும். 15-20 நாட்கள் இடைவெளியில் அதன் இனக் கவர்ச்சிப் பொருளை மாற்ற வேண்டும்.
   
விளக்குப்பொறி வைக்கவும் இனக்கவர்ச்சி பொறி வைக்கவும்
மேலே செல்க