முதல் பக்கம் தொடர்புக்கு  

கதிர்நாவாய்ப்பூச்சி

தாக்குதலின் அறிகுறிகள் :

  • பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறு உறிஞ்சப்படும்.
  • நெல் மணிகளில் சாறு உறிஞ்சப்பட்டதால் பழுப்பு நிற திட்டுகளுடன் உமிகள் காணப்படும்.
  • நெல்மணிகள் விதையற்று பதராக மாறி நிமிர்ந்த பூங்கொத்துக்களைக் கொண்டிருக்கும்.
  • நெல் மணிகளில் பூச்சி உட்கொண்டு துளைகளில் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • தீவிர பூச்சித் தாக்குதலின் போது, முழு தானியக் கதிரும் தாக்கப்பட்டு நெல்மணிகள் முதிர்ச்சியடையாமல் போய்விடும்.
  • பால் பருவத்தின் போது நெல்வயலில், நாவாய்ப்பூச்சிகளின் வெறுக்கத்தக்க ஒரு மணம் வீசும்.
  • நாவாய்ப் பூச்சிகளை களைப்பதன் மூலம் வெறுக்கத்தக்க ஒரு மணம் வெளிவரும்.

தாக்குதலின் தன்மை :

இளம் பூச்சிகள் மற்றும் முதிர் நிலைப்பூச்சிகள் இரண்டும் சேதத்தினை ஏற்படுத்துகின்றன. குஞ்சுகள் பொரிக்கப்பட்டு 3-4 மணி நேரத்திற்குப்பிறகு அவை பயிர்களின் மேல் உணவு உட்கொள்கின்றன. நுனி அருகிலிருக்கும் இலைச்சாறின் மேல் உட்கொள்ளுதல் அல்லது பால்ப்பருவ நிலையில் வளர்ச்சியடையும் பூங்காம்பின் பால் போன்ற சாறுகளை உட்கொள்ளுதல். பால் சாறை உறிஞ்சுவதால், முழுவதும் நிரம்பப்படாத பகுதி நிரம்பிய தானியமற்ற உமிச் செதில்களுடன் காணப்படும். இவை வெறுக்கத்தக்க ஒரு மணத்தை வெளியிடுகிறது. அதுவே “குந்தி நாவாய்ப்பூச்சிகள்” எனப்படுகிறது. தீவிர பூச்சித் தாக்குதலினால் 50 சதவிகிதம் மகசூல் குறைவு ஏற்படுகின்றது. வைக்கோல் வெறுக்கத்தக்க மணத்தை அளித்து, அவை கால்நடைகளை ஈர்க்காத வண்ணம் இருக்கிறது.


தானிய மணிகளின் மீது உண்ட காயங்களும், புள்ளிகளும் காணப்படும்

கதிர்கள் பதராகி
நேராக நிற்கும்

வயலில் இளம்குஞ்சுகள் காணப்படும்

வயலில் நாவாய்பூச்சிகள் காணப்படும்
   

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :

             அறிவியல் பெயர் - லெப்டோகோரிசா அக்யூடா

  • முட்டை :
    முட்டைகள் வட்டமாக பழுப்பு நிற விதை போன்று, 2 மி.மீ நீளம் கொண்டு இரு வரிசைகளில் கூட்டமாக வைக்கப்பட்டிருக்கும். இலைத்தாளின் மேல்பரப்பில் உள்ள இலை நடுநரம்பு பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.

  • இளம் பூச்சிகள் :
    முதல் வளர்நிலை பூச்சிகள் மிகவும் சிறியதாக, 2 மி.மீ நீளம் கொண்டு, வெளிறிய பச்சை நிறமாக இருக்கும். பின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளில் ஆழ் பச்சை (கரும்பச்சை) நிறமாக மாறிவிடும்.

  • முதிர்ப்பூச்சி :
    முதிர்ச்சிநிலையை அடைந்த பூச்சிகள் பச்சையான மஞ்சள் நிறமாகவும், நீளமாக மெலிந்தும் ½ அங்குலம் நீளமுடன் நாவாய்ப்பூச்சிக்குரிய வெறுக்கத்தக்க ஒரு மணமுடன் இருக்கும்.
முட்டை இளம் பூச்சி
முதிர்ப்பூச்சி முதிர்ப்பூச்சி

மேலே செல்க


மேலாண்மை :

உழவியல் முறைகள்:


  • கதிர் பால்பருவத்தில் முறையான பூச்சிக் கண்காணிப்பு முறை மிகவும் அவசியம்.

  • வேறுபட்ட மாற்றுப்பயிர்களான வரப்பிலிருக்கும் புல்வகைகளை அழித்தல், முன்னரே நடவு செய்தல், மற்றும் தாமதமாக முதிர்ச்சியடையும் பயிர் வகைகளைப் பயிரிடுதல் ஆகியவை உழவியல் கட்டுப்பாட்டு முறைகள் ஆகும்.

  • வயல் நிலங்கள் மற்றும் வரப்புகள், பாத்திகள் ஆகியவற்றை களைச்செடிகள் மற்றும் புல்வகைகள் இல்லாதவாறு வைக்க வேண்டும்.

  • வலை மூலமாக அல்லது கைகளால் நாவாய்ப்பூச்சிகள் சேகரிப்பதன் மூலம் அதன் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

  • கவர்ச்சிப் பொருள்களான அரசன் அல்லது இறந்து போன நத்தைகள் அல்லது எலிகள் போன்று துர்நாற்றம் கொண்ட ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி, நெல்வயலிலிருக்கும் நாவாய்ப்பூச்சிகளைப் பிடிக்க வேண்டும்.

  • பெருவெட்டு தானியம் மற்றும் மயிரிழைகளைக் கொண்டது போன்ற சில பயிர் ரகங்கள் நெல் நாவாய்ப்பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டது ஆகும்.
நாவாய் பூச்சிகளை கைகளால் சேகரித்து அழிக்கவும் வயலை களைகளற்று வைக்கவும்
டி.கே.எம. 9 போன்ற குண்டு இரகங்களை பயன்படுத்தவும் நாவாய் பூச்சிகளை சேகரிக்க கை வலைகளை பயன்படுத்தவும்

இரசாயன முறைகள்:

  • பொருளாதார சேத நிலை அளவு :
    பூத்தல் பருவத்தின் போது 5 நாவாய்ப்பூச்சிகள்/ 100 நெற்கதிர்கள் மற்றும் பால்பிடிக்கும் பருவத்திலிருந்து தானியமணி முதிர்ச்சி நிலைப் பருவம் வரை 16 நாவாய்ப்பூச்சிகள்/100 நெற்கதிர்கள்.

  • அதிக அளவில் நாவாய்ப்பூச்சிகள் காணப்பட்டால் கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லினை ஒரு எக்டருக்கு 25 கிலோ என்ற அளவில் மொத்தம் இருமுறைகள் முதலில் பூத்தல் பருவத்திலும் பின் அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு மறுமுறை தெளிக்க வேண்டும்.

  • கேகேஎம் துகள் வடிவத்தில் 10 சதவிகிதம் வசம்பு வேர்க்கிழங்குப் பொடி மற்றும் 90 சதவிகிதம் பொடி சாம்பலும் அடங்கியது. இந்த துகள் வடிவம் நெற்கதிர் நாவாய்ப்பூச்சியினைத் துரத்துகிறது.

  • நாவாய்ப்பூச்சியின் தாக்குதல் பூத்தல் பருவத்தில் ஏற்படுவதால், பூச்சிக்கொல்லிகளின் அளிப்பை காலை 9 மணிக்கு முன்னர் அல்லது பகல் 3 மணிக்குப் பின்னர் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பூக்கள் கருவுறுதலில் எவ்வித பாதிப்பும் இன்றி செயல்படும்.

  • கீழ்வரும் ஏதேனும் ஒன்றை இருமுறைகள் தெளிக்க வேண்டும் :
    ஃபென்தியான் 100 இசி @ 500 மிலி/எக்டர் (அ) மேலத்தியான் 50 இசி @ 500 மிலி/எக்டர்.

வசம்பு பொடி சாறு தெளிக்கவும் கார்பைரில் தூவவும்
பூச்சிக்கொல்லியை தெளிக்கவும் மாலத்தியான் பயன்படுத்தவும்


உயிரியல் முறைகள்:


  • உயிரியல் கட்டுப்பாட்டுச் செயல்களில், சிறு குளவி வகைகள் முட்டைகளில் மேல் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனை உட்கொள்கிறது. மேலும் புல்தரை வாழ் வெட்டுக்கிளிகள் இதனை இரையாக்குகின்றன.

  • மேலும் கதிர்நாவாய்ப்பூச்சிகளின் இளங்குஞ்சுகள், மற்றும் முதிர்ப்பூச்சிகளை சிலந்திகள், தரைவண்டுகள், மற்றும் தட்டான் பூச்சிகள் இரையாக உட்கொள்கின்றன.

  • சில பூசணங்கள், இளம்பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் இரண்டையும் தாக்குகின்றன.
உயிர் எதிரி - புல்வெளி வெட்டுக்கிளி உயிர் எதிரி - பொறி வண்டு
நாவாய்பூச்சிகளை தின்னும் தட்டான் பூச்சிகள் முட்டைகள் மீது ஒட்டுண்ணியாகும் சிறு குளவிகள்

 

தாவரச்சாறு முறைகள்:

  • கீழ்வரும் ஏதேனும் ஒன்றை இருமுறைகள் தெளிக்க வேண்டும் :

     வேப்பங்கொட்டையின் சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர் (அ) நொச்சி இலைப்பொடி சாறு 5 சதவிகிதம் (அ) ஐப்போமியா இலைப் பொடி சாறு 5 சதவிகிதம் (அ) வேல மர இலைப் பொடி சாறு 5 சதவிகிதம்

 


கொடிபூவரசு இலை சாற்றை பயன்படுத்தவும் வேப்பங்கொட்டை சாறு தெளிக்கவும்
நொச்சி இலை சாற்றை பயன்படுத்தவும் கருவேல் பொடி சாற்றை பயன்படுத்தவும்
மேலே செல்க