முதல் பக்கம் தொடர்புக்கு  

இலைப்பேன்

தாக்குதலின் அறிகுறிகள் :
  • மென்மையான இலைகளைக் கடித்து சுரண்டி, செடிகளின் சாறை உறிஞ்சிவிடும்.
  • இளம் நாற்றுக்களின் இலைகளில் மஞ்சள் நிற (அ) வெள்ளிநிற கீறல்களுடன் காணப்படும்.
  • இலை நுனி சுருண்டு மேலிருந்து கீழ்நோக்கி காய்ந்தும் காணப்படும்.
  • நாற்றங்கால் மற்றும் நடவு வயல் இரண்டையும் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும்.
  • பூச்சி தாக்கப்பட்டு சிதைவடைந்த இலைகள் அதன் ஓரங்கள் வழியே உள்நோக்கி சுருண்டு விடும். பூச்சிகள் தாக்குவதால் இலைகள் காய்ந்து, பயிர் வளர்ச்சியும் குன்றிவிடும். நீர் அழுத்த நிலைகளில், சேதம் மிகவும் அதிகமாய்க் காணப்படும்.

தாக்குதலின் தன்மை :

இளம் நிலை மற்றும் முதிர்நிலைப் பூச்சிகள் மென்மையான இலைகளைக் கடித்து சுரண்டி பயிரின் சாறை உறிஞ்சிவிடும்.  இதன் விளைவாக, இலைகளின் மேல், நன்கு மஞ்சள் நிறமான அல்லது வெள்ளிநிறக் கீறல்களுடன் காணப்படும்.  பின் இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, மேலிருந்து கீழ்நோக்கி காயத் தொடங்கிவிடும்.  தாக்குதல் தீவிரமாகும் நிலையில் முழு நாற்றங்காலும் காய்ந்து, நாற்றுக்கள் உற்பத்தி பாதிக்கப்படும்.  சில சமயங்களில் நடவு செய்த பயிர்ச் செடிகளும் இப்பூச்சிகளால் அதன் முன் வளர்ச்சி நிலையில் தாக்கப்பட்டு சேதம் அடையும்.

இளம் இலைகள் சுரண்டப்பட்டிருக்கும் இலைகளின் மீது வெள்ளை நிற வரிகள் காணப்படும்
இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருட்டப்படும் நுனி சுருண்டு, காய்ந்த இலைகள்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :  

     அறிவியல் பெயர் - ஸ்டென்கிடோத்திரிப்ஸ் பைஃபார்மிஸ்

  • முட்டை :
    பயிர்ச் செடியின் தண்டுகளை நோக்கி அதன் பக்கவாட்டில் அமைந்திருக்கும், மென்மையான இலைகளின் திசுக்களில் பூச்சிகள் முட்டைகளை தனியாக வைத்திருக்கும்.  முட்டைகள் நிறமில்லாமலும், பின் முதிர்ச்சிடையும்போது, வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும்.  இலைத்தாள் திசுக்களின் பிளப்புகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.  முட்டையின் மேல்பகுதியின் பாதி வெளிப்படுத்தியிருக்கும்.

  • இளம் பூச்சி :
    புதிதாக பொரிக்கப்பட்ட இளம்பூச்சிகள் தெள்ளத் தெளிவாக இருக்கும்.  ஆனால் முதல் தோல் உரித்தலுக்குப் பிறகு மஞ்சளான வெள்ளை நிறமாக மாறி பின் கருப்பான கால்கள், தலை மற்றும் உணர்கொம்புகளை உருவாக்குகிறது.  திறக்கப்படாத இளம் இலைகளின் மென்மையான திசுக்களை இளம் புழுக்கள் உட்கொள்ளும்.

  • கூட்டுப்புழு :
    சுருண்ட இலைகளின் உள்ளே கூண்டுப்புழுவதால் ஏற்படும்.  மேலும் அதன் புடைவளர்ச்சி மற்றும் இறக்கைகள் வளர்ச்சி தெளிவாகக் காணப்படும்.

  • முதிர்ப்பூச்சிகள் :
    முதிர்ச்சியடைந்த பூச்சிகள் 1 மி.மீ நீளம் கொண்டு கரும்பழுப்பு முதல்  கருப்பு நிறத்துடன் மயிரிழைகளாலான இறகுகளைக் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் இனப்பூச்சிகளைவிட சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும்.  பூச்சித் தொகையில் ஆண் இனப் பூச்சிகள் மிக அரிதாக காணப்படுவதால், கன்னி இனப்பெருக்கமுறையைக் கொண்டுள்ளது.  (பாலினச் சேர்க்கையில்லாத இனப்பெருக்கம்)
   
இளம் பூச்சி இரக்கையுடைய இளம் பூச்சி
முதிர்ப்பூச்சி முதிர்ப்பூச்சி

மேலே செல்க

மேலாண்மை:  
உழவியல் முறைகள் :

  • பூச்சி தாக்கப்பட்ட பயிர்களை 1-2 நாட்கள் இடைவெளி விட்டு நீரில் மூழ்கச் செய்ய வேண்டும்.
  • நாற்றுக்களின் மேல் ஈரத்துணியை போட்டு இழுக்க வேண்டும்.
  • பூச்சி தாக்கப்பட்ட வயலை நீரில் 2 நாட்களுக்கு நன்கு மூழ்கச் செய்ய வேண்டும்.  இலைப்பேன் கட்டுபாட்டிற்கு  இந்த உழவியல் முறை மிகவும் சிறந்தது.
  • பூச்சி எதிர்க்கும் திறன்/தாங்கும் திறன் கொண்ட இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும்.
நாற்றங்காலில் நீரை தேக்கி நிறுத்தவும் பயிர் மூழ்க நீர் கட்டவும்

இரசாயன முறைகள் :

  • பொருளாதார சேத நிலை அளவு மாதிரி எடுத்தல் :
    உள்ளங்கையை நீரால் நனைத்து, பின் நாற்றங்காலில் 12 இடங்களில் பயிர்ச் செடிகளின் மேல் கையைக் கொண்டு செல்ல வேண்டும்.  12 முறைகளில், செடிப்பேனின் தொகை 60 எண்ணிக்கையைக் கடந்துவிட்டால் (அ) 10 சதவிகித நாற்றுக்களில் முதல் மற்றும் இரண்டாம் இலைகளின் பாதிப்பரப்பு சுருண்டு காணப்படும்.

  • கீழ்வரும் ஏதேனும் ஒன்றை நாற்றங்கால் பருவத்தில் தெளிக்க வேண்டும் : பாஸ்போமிடான் 40 எஸ்எல் 50 மிலி / எக்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்எல் 40 மிலி/ எக்டர்.

  • கீழ்வரும் ஏதேனும் ஒன்றை நடவு வயல் பருவத்தில் தெளிக்க வேண்டும் : பாஸ்போமிடான் 40 எஸ்எல் 300 மிலி/ எக்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்எல் 500 மிலி/ எக்டர்.
பாஸ்போமிடான் தெளிக்கவும் மோனோகுரோட்டாபாஸ் தெளிக்கவும்
 
பூச்சிக்கொல்லி தெளிக்கவும்  


உயிரியல் முறைகள்:


  • கொன்றுண்ணி இலைப்பேன்கள், பொறி வண்டுகள், பூ நாவாய்ப்பூச்சிகள் மற்றும் செம்பலினிடு வண்டுகள் ஆகிய உயிரியல் காரணிகள்  இலைப்பேனின் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உட்கொண்டு அதனை அழிக்கின்றன.
  • இயற்கை உயிர் எதிரிகளாக பொறி வண்டுகள் செயல்படுகின்றன.
  • பூ நாவாய்ப்பூச்சி இயற்கை உயிர் எதிரியாக செயல்பட்டு இலைப்பேன்களை உண்ணும்.
  • செம்பலினிடு வண்டுகள் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உண்ணும்.
சிறு அலை நாவாய்பூச்சி பொறி வண்டுகள்
கொன்றுண்ணி இலைப்பேன்கள் நீர் வண்டுகள்
மேலே செல்க