முதல் பக்கம் தொடர்புக்கு  

ஊதுபத்தி நோய்

தாக்குதலின் அறிகுறிகள்:  
  • வெள்ளைப் பூசண இழைகள் கதிரின் கிளைகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பதால், கதிர்கள் கற்றையாகவும், அழுக்கு நிறத்துடனும், நீள் உருளை வடிவ அகர்பத்தி அல்லது ஊதுபத்தி போன்ற குச்சிகளாக வெளி வரும். எனவே இந்நோய் ஊதுபத்தி நோய் எனப் பெயர் பெற்றது.
  • வெள்ளைப் பூசண இழை மற்றும் பூசண இழை சிதில்கள் குறுக்கு வண்ணக்கோடுகளை கண்ணாடி இலைகளின் நரம்புகள் வழியே பூங்கொத்து வெளி வருதலுக்கு முன்னரே உருவாக்குகிறது. நோய் தாக்கப்பட்ட கதிர்களில் எவ்வித தானியங்களும் உருவாகாது.
  • நோய் தாக்கப்பட்ட பயிர்கள், பின் உருமாறிய தானியக் கதிர்கள் உருவாக்கும்.
  • கதிர் வெளிவரும்போதே விதைகளிலும் நோய் தாக்கம் ஆரம்பமாகிறது.
  • தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இந்நோய் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. பெரும்பாலும் தமிழ்நாட்டில மதுரை மாவட்டம், கேரளாவில் வையநாடு, கர்நாடகா மாநிலத்தில் கொள்ளிஹள் மற்றும் தென் கனரா மாவட்டங்களில் அதிகமாய் காணப்படுகிறது.
Distorted panicle with white mycelium and conidia Panicle emerge as straight dirty coloured cylindrical rods as udbathi
வெள்ளைப் பூசண இழை மற்றும் பூசண இழை சிதில்கள்கொண்டகதிர் அழுக்கு நிறத்துடனும், நீள் உருளை வடிவ ஊதுபத்தி போன்ற குச்சிகளாககதிர் வெளி வரும்

மேலே செல்க

  நோய் காரணி: இபிலிஸ் ஒரைசே சிட்
Ascomycete of euphelis oryzae

(உட்பிரிவு: டியூட்டரோமைக்கோடினா: தொகுதி: ஸ்பேய்ரோப்சிடேல்ஸ்: குடும்பம்: எக்சிபுலேசியே)

முழுமை நிலை: பலன்சியா ஒரைசே சட்டைவே ஹஸியோகா

(உட்பிரிவு: அஸ்கோமைக்கோடினா: தொகுதி (வரிசை): ஸ்பேரியேல்ஸ், குடும்பம்: ஹைப்போகிரியேசியே  இப்பூசணத்தின் முழுமைநிலை அஸ்கோய்சீட், ப்லன்சியா ஒரைசே சட்டைவே)

நோய் சுழற்சி:

  • பூசணம் விதை வழி பரவுகிறது. மேலும் இவை ஊடுருவும் தன்மையுடையது.
  • நோய் தாக்கப்பட்ட நாற்றுக்களின் இளம் இலைகளில் சாம்பலான வெள்ளை நிற படலமாக பூசண வளர்ச்சி காணப்படும். நோயுற்ற விதைகள் நிலையான நோய்க்கு முக்கிய பங்கு வகிப்பதில்லை.
  • பூசணம் புல்வகைகளான ஈஸ்அச்னி எலிகன்ஸ், சைனோடான் டேக்டைலான், பென்னிசிடம் சிற்றினம் மற்றும் ரொக்ரோஸ்டிஸ் டினுாய்ஃபோலியா ஆகியவற்றில் தோன்றி பயிர்களுக்கு பரவுகின்றது.
  • மிகவும் முன்னரே விதைத்த மற்றும் தாமதமாக விதைத்த பயிர்களில் நோயின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்படும்.
இபிலிஸ் ஒரைசே வித்துக்கள்
microscopic view of fungus Ephelis oryzae
நுண்நோக்கியில்நோய் காரணி - இபிலிஸ் ஒரைசே

மேலே செல்க

கட்டுப்பாடு முறைகள்:  
  • விதைப்பதற்கு நோயற்ற நல்ல விதைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • கேப்டன் அல்லது தீரம் உடன் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும்.
  • விதைகளை விதைப்பதற்கு முன், 50-54 செ வெப்ப அளவு கொண்ட வெந்நீரில் விதைகளை 10 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • விதைகளில் ஏதேனும் நோய்க் காரணிப் பொருள்கள் காணப்பட்டால் அவற்றை வெப்பலுாட்டம் முறை (சூரிய ஒளி நேர்த்தி) மூலம் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிகிறது.
  • வயலிலிருக்கும் நோயுற்ற பூங்கொத்துக்களை அகற்றி அழித்துவிட வேண்டும்.

Seed Treatment with Captan Solar treatment of seeds
கேப்டான் மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்க விதைக்கும் முன் விதைகளை சூரிய வெப்பத்தில் உலர்த்தவும்
மேலே செல்க