முதல் பக்கம் தொடர்புக்கு  

இலைக்கருகல் நோய்
(மைக்ரோடோச்சியம் ஒரைசே)

தாக்குதலின் அறிகுறிகள்:  
  • இலை நுனியிலிருந்து கீழ்நோக்கி மங்கிய அல்லது கரும்பழுப்பு நிறத்துடன் புள்ளிகள் காணப்படும்.
  • முதிர்ந்த இலைகளில் வெளிரிய பழுப்பு நிற நீள வடிவமுடைய ஒளிஊடுருவக்கூடிய புள்ளிகள் காணப்படும்.
  • இலைத்தாளில் பல புள்ளிகள் இணைந்து, பின் இறுதியில் இலைகள் கருகிவிடும்.
  • நோய் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து பின் இலைகள் கருகியது போன்று காட்சியளிக்கும்.
  • ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய இலை நுனிகள் மற்றும் இலை ஓரங்கள்.நோய் தாக்கப்பட்ட இலை நுனிகளில் நடுநரம்பின் அருகில் பிளவு ஏற்படும்.
  • குறிப்பாக அதிக காற்றின் போது இலைநுனிப்பிளவுகள் பெருமளவில் காணப்படும்.
Rice Leaf Scald Disease Leafscald2_w400
இலைக்கருகல் நோய் இலைக்கருகல் நோய்

மேலே செல்க

  நோய்க் காரணி: (மைக்ரோனோச்சியம் ஒரைசே)
conidia of rice leaf scald pathogen rice leaf scald pathogen
  • பூசணத்தின் மேல்பரப்பில் பூசண இழைச் சிதில்கள் உருவாகின்றன. இவை வில் வடிவத்திலிருந்து நிலா வடிவமாகவும், இளமையாக இருக்கும்போது ஒற்றை உயிரணு (திசு) கொண்டது.
  • முதிர்ச்சி நிலையில் 2 உயிரணுக்களுடனும் அவ்வபோது 2-3 குறுக்குச் சுவருடனும் காணப்படும். அஸ்கி நீள உருளை வடிவத்திலிருந்து குண்டாந்தடி வடிவமாகவும், ஒருகுமிலுடனும் காணப்படும்.
  • (அஸ்கஸின் உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்கள் ஏறக்குறைய விறைப்பானதாக இருக்கும். மேலும் அவை பூசணவித்துக்கள் வெளிவரும்போதும் பிரியாது.) அஸ்கோஸ்போர்ஸ் (பூசண இழைகள்) ஒன்றாக இணைந்தும், நிமிர்ந்தும், சற்று வளைந்தும், 3-5 குறுக்குச் சுவருடனும் காணப்படும்.
இலைக்கருகல் நோய்காரணியின் கொனிடியா இலைக்கருகல் நோய்காரணி

மேலே செல்க

கட்டுப்பாடு முறைகள்:  
  • அதிகளவு உரங்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். பெனோமைல், கார்பென்டசீம், குய்ட்டோஜுன் மற்றும் தியோஃபனேட்-மிதைல் ஆகியவற்றுடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  • பெனோமைல், ஃபென்டின் அசிடேம், எடிஃபென்பாஸ் மற்றும் வலிடாமைசின் ஆகியவற்றை வயலில் தெளிக்கவேண்டும்.
  • கேப்டோஃபால், மேன்கோசிப் மற்றும் காப்பர் ஆக்ஸிக்லோரைடு, ஆகியவற்றை இலைவழி உரமாக அளிக்கவேண்டும்
mancozeb Validamycin
மேங்கோசெப் தெளிக்கவும் வாலிடாமைசின்-தடுப்பு மருந்து
மேலே செல்க