முதல் பக்கம் தொடர்புக்கு  
தாவரவியல்
காலநிலை
புள்ளி விபரங்கள்
உலகின் நெல் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் 2008 - 09
இந்தியாவின் மாநிலங்களில் நெற்பயிரின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் 2009 - 2010
தமிழ்நாட்டில் நெற்பயிரின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் 2008 - 09
கேரளாவின் நெல் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் 2005 - 06
கர்நாடகாவின் நெல் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் 2006 - 07
இந்தியாவில் நெற்பயிரின் சுற்றுப்புற அமைவைப் பொருத்து அதன் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித்திறன்


நெற்பயிரின் தாவரவியல் பண்புகள்

            உலகில் உள்ள பெரும்பான்மையான (2.7 மில்லியன்) மக்களின் நிலையான உணவுப் பயிராக நெல் விளங்குகிறது. 44.6 மில்லியன் எக்டர்களில், 80 மில்லியன் டன் அளவு விளைச்சலில் ஒரு எக்டருக்கு, 1855 கிலோ சராசரி உற்பத்தித்திறனுடன் பயிரடப்படுகிறது. மேலும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஒரிசா, ஆந்திரபிரதேஷ், அஸாம், தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய மாநிலங்கள் 92 சதவிகிதம் பரப்பளவிலும் உற்பத்தியிலும் ஈடுபட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன.

தாவரஇனம்: பிளான்டே
பிரிவு: மேக்னோலியோபைட்டா
வகுப்பு: லில்லியோப்சிடா
வரிசை: சைபரேல்ஸ்
குடும்பம்: கிராமினியே
பேரினம்: ஒரைசா
சிற்றினம்: சட்டைவா
உள்சிற்றினம்: இன்டிகா
பொதுப்பெயர்: பேடி(ஆங்கிலம்), நெல்(தமிழ்),                         நெல்லு(மலையாளம்), பத்தா(கன்னடம்).
botany of paddy

மேலே செல்க

  வேர்
Paddy Root
  • சல்லிவேர்த் தொகுப்பைக் கொண்டது. இதில் கணுபக்கவேர் கிளைவேர்கள் உள்ளன.
  • நெற்தானியம் முளை விட்டதும் விதைவேருறை மற்றும் உமிச்செதிலைத் துளைத்து முளைவேர் தோன்றி பின்பு பக்கவேர் உருவாகிறது.
  • பக்க வேரிலிருந்து கிளைவேர் உருவாகிறது.
  • நாற்று வளர்ச்சி அடையும் பொழுது, அடிக்கணுலிருந்து தண்டுவேர் தோன்றும். நாற்றுகளை பிடுங்கினால் பெரும்பாலான வேர்கள் அறுந்து விரைவில் புதிய வேர்கள் தோன்றும்.
  • நெல் இரகங்களைப் பொருத்து அதன் வேர்த்தொகுதி அமைப்பு வேறுபடும்.
  • கரிம எரு மற்றும் மணிச்சத்து வேரின் வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. களிமண் போன்ற மண்ணே வேர் வளர்ச்சிக்கு சிறந்தது.
  • உயிர் கணுவிலிருந்து கணுவேர்கள் வளர்கின்றன. இது சுற்றியுள்ள நீரிலிருந்து செடிகள் உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ள உதவுகிறது.

மேலே செல்க

தண்டு  
  • நெற்தண்டு கணுக்களாலும், இடைக்கணுக்களாலும் ஆனவை
  • பொதுவாக இத்தண்டு இடைக் கணுக்களில் நீண்டும் நீள் உருளையாகவும், உள்துளையுடனும், கணுப்பகுதியில் திடமாகவும் இருக்கும்.
  • இடைக்கணுக்களின் நீளமும், எண்ணிக்கையும் அதன் இரகங்களைப் பொருத்து வேறுபடும். 10 முதல் 20 கணுக்களை கொண்டுள்ளது.
  • ஆழ்நீர் நெல் மற்றும் மிதக்கும் நெல் வகைகளில் தண்டுகள் மிக நீளமான இடைக்கணுக்களை கொண்டிருக்கும்.

Paddy Stem

மேலே செல்க

  தூர்கள்

Paddy tillers

  • கணுக்கள் நெற்தண்டுகளின் திடமான பகுதி.
  • கணுக்களில் தான் இலை மற்றும் மொட்டுகள் தோன்றுகின்றன.
  • கணுக்களின் மேல்பகுதியில் மொட்டுகள் ஒட்டிக்கொண்டு இலையுறையால் சூழ்ப்பட்டு இருக்கும்.
  • மொட்டிலிருந்து இலை அல்லது தூர்கள் உருவாகும்.
  • முன் தூர்கள் முதன்மையான தண்டிலிருந்து உருவாகி மாற்று அமைப்பில் இருக்கும்.
  • கடைக்கணுவிலிருந்து முதல்நிலை தூர் உருவாகி பின்பு இரண்டாம் நிலை தூர் உருவாகிறது.
  • இரண்டாம் நிலை துாரிலிருந்து மூன்றாம் நிலை துார் உருவாகிறது.
  • ஒவ்வொரு தூரும் தனிச் செடியாகும்.
  • நாற்று நட்டு 30 முதல் 40 நாட்கள் ஆனபிறகு தூர்கள் கட்டுவது அதிக அளவில் இருக்கும்.

மேலே செல்க

இலைகள்  
  • இலைகள் கணுக்களில் இருந்து தோன்றுகின்றன.
  • இலைகள் தண்டுகளில் மாற்று அமைப்பில் எதிர்திசையில் உருவாகும். ஒவ்வொரு கணுவிலிருந்தும் ஒவ்வொரு இலை உருவாகும். இலைகளின் எண்ணிக்கை இரகங்களைப் பொருத்து வேறுபடும்.
  • பூங்கொத்தின் கீழ் அமைந்திருக்கும் உச்சி இலையே கண்ணாடி இலை. பூங்கொத்துக்கு, ஒளிச்சேர்க்கை பொருள்களை வழங்குவதால் கண்ணாடி இலை தானியம் நிரப்புவதில் பெரும்பங்கு வகிக்கிறது
  • இலைப்பரப்பு மற்றும் இலையுறை இரண்டும் தொடர்ச்சியானவை.
  • வட்டக் கழுத்து பகுதி இலைப்பரப்பையும், இலையுறையையும் இணைக்கிறது.
  • கணுவின் மேலிருக்கும் தண்டிணை சுற்றியுள்ளது இலையுறை.
  • கணுவின் சுற்று மேல் இருக்கும் இலையடிப்பாகத்தில் உள்ள வீக்கமான இடமே உறைபுடைப்புக்காம்பணை. சில சமயத்தில் அது கணு போன்று தவறான தோற்றம் அளிக்கும்.
  • இலைதாள் தட்டையானவை. தாள் நீளம், அகலம், தடிப்புப்தன்மை, பரப்பு, வடிவம், நிறம், கோணம், ரோமம் ஆகிய பண்புகள் இரகத்திற்கு இரகம் மாறுபடும்.
  • இலையின் மேற்பரப்பில் நிறைய இணை இலை நரம்புகள் உள்ளன. இலைத்தாளின் அடிப்பகுதி வழவழப்பாகவும், இலை நடு நரம்பு முக்கிய திட்டுடனும் அமைந்திருக்கும்.
  • இலைத்தாளின் அடிப்பகுதியில் பெரும்பாலான இலைகளில் சிறிய இருகாது போன்ற ஒட்டுபாகம் கொண்டிருக்கும்.
  • இந்த சிறிய காது போன்ற அமைப்பு முதிர்ந்த இலைகளில் இருக்காது.
  • மற்றொரு இலை ஒட்டுபாகம் இலைப்பரப்படிச்செதில் காகிதத்தாள் போன்ற மெல்லிய தோல் கொண்டது. இது இலையுறைக்கும், இலைத்தாளுக்கும் இடையே உள்ளது.
  • மேலும் இது வழவழப்பாகவோ, மயிர் போலவோ இருக்கும்.

Paddy Leaf

மேலே செல்க

  பூங்கொத்து

Paddy tillers

  • நெற்தூர்களின் உச்சிப்பகுதி மஞ்சரியே பூங்கொத்து நெற்தண்டுகளில் உள்ள இடைக்கணுவின் மேல்பகுதியில் மஞ்சரி தோன்றுகின்றன. பூங்கொத்து நெற்பூங்கிளைகளைக்  கொண்டது அதுவே பின் நெற்தானியமாய் மாறுகின்றது.
  • மஞ்சரியின் அடிப்பகுதி மயிர் போன்ற வளையம் போல் காணப்படும்.  இதுவே தண்டையும், மஞ்சரியின் நீளத்தையும் அளப்பதற்கு புள்ளியய் விளங்குகிறது.  பூங்கொத்தின் அடிப்பகுதியே கழுத்து எனப்படுகிறது.
  • கிளைகள் உருவாகும் கணுக்களைத் தவிர மற்ற இடங்களில் பூங்கொத்து அச்சு தொடர்ச்சியானதாகவும், உள்துளையுடனும் இருக்கும்.
  • கிளைகள் பூங்கொத்து அச்சில் இருந்து உருவாகிறது. அந்த இடத்தில் ஏற்படும் அந்த வீக்கமே பூங்கொத்து இலையடிமூண்டு எனப்படும்.
  • பூங்கொத்து அச்சின் மேல் இருக்கும் ஒவ்வொரு கணுவும் முதல் நிலைகிளைகளைஉருவாக்குகிறது. அந்நிலையிருந்து இரண்டாம்நிலை கிளைகள் உருவாகின்றன. முதல் நிலை கிளைகள் தனியாகவோ அல்லது இணையாகவோ அமைந்திருக்கும்.
  • பூங்கொத்து பூங்கிளையை உருவாக்குகிறது. இவற்றில், சில, தானியங்களாக வளர்கின்றன. பூங்கிளை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை கிளைகளில் உருவாகிறது. பூங்கிளைதான் மஞ்சரி மற்றும் பூங்கொத்தின் முதன்மை கூறாக விளங்குகிறது. இதில் பூங்காம்பு, மற்றும் மலர்ப்பிரிவுகள் உள்ளடங்கும்.
  • மலர்ப்பிரிவு பூங்காம்பின் மேல் உருவாகிறது.
  • தொடக்கநிலை உமிச்செதில் பக்ககிளையாக பெரிதாகி குவளைவடிவ முகடு போல் பூங்காம்பில் மேல் அமைந்திருக்கும். பூங்கிளையின் கீழ்புற பகுதியில் அமைந்திருப்பதுதான் தொடக்கநிலை உமிச்செதில், கதிரடிக்கும்போது மீதமுள்ள பூங்கிளையிலிருந்து தொடக்கநிலை உமிச்செதில் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • மலர்ப்பிரிவுடன் இணைந்திருக்கும் மலட்டுச்செதிற்பூ சிறியதாகவும், பூவடி போன்ற பிதுக்கத்துடனும் காணப்படும். சிறிய அச்சாகிய கூட்டிலைக்காம்பு தனிபூங்காம்பை கொண்டுள்ளது. இது மலட்டுச்செதிற்பூவிற்கும், பூங்காம்பிற்கும் இடையே உள்ளது

மேலே செல்க

பூங்கிளை  
  • பூங்கிளை, சிறிய கூட்டிலைக்காம்பின் மேல் அமைந்திருக்கும், இது பூங்கொத்தின் கிளை முடிவில் உள்ளது.
  • நெற்பயிரில் உள்ள பூங்கிளை ஒற்றைமலர் வகையைச் சார்ந்தது. இது செதிற்பூ மற்றும் உமிச்செதிலினால் மூடப்பட்டுள்ளது.
  • இங்கு ஆறு மகரந்தக்கேசரம், இரண்டு வட்டமைவுகளில் ஒவ்வொன்றிலும் மூன்று என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளது. இதன் கம்பி இழை மிகவும் மென்மையானதும், துல்லியமானதுமாகும். மேலும் பூ மலர்ச்சியடையும் காலத்தில் அதன் வளர்ச்சி வேகமாய் இருக்கும்.
  • மகரந்தப்பை நீளமானது சூலகத்திற்கு ஒரு கருப்பையே உள்ளன. இரண்டு சூல்தண்டுகள் இறகுகளுடையதும், பக்கவாட்டில் அமைந்த கருப்பை சூல்மூடி வேறுபட்ட ஊதா நிறத்தில் இருக்கும்.
  • கருப்பை மூன்று சூலிலை, ஒரு உயிரணு, ஒரு விதைக்கருவுடன் கீழ்சூல் அமைப்புடன் காணப்படும்.
  • மகரந்தப்பை வெடித்துச்சிதறும் போது இறகுகளுடைய சூல்மூடி மகரந்தத்தூளால் சூழப்பட்டிருக்கும்.
  • பெரும்பாலும் நெற்பயிர் தன் மகரந்தச் சேர்க்கையாக இருப்பினும் இயற்கை அயல் மகரந்தச் சேர்க்கையும், 0.1 முதல் 4.0 சதவிகிதம் என்ற அளவில் வேறுபட்டு நடக்கின்றது.

Paddy Spikelets

மேலே செல்க

  தானியம்

Paddy grains

  • பூங்கிளையில் கருத்தரித்தல் முடிந்த பின்பு, விதைக்கரு விதையாக வளர்கின்றது. விதையுறை கருப்பை மேலுறையுடன் இணைகிறது.
  • கனியுறை: நிறைய அடுக்குகளாய், சதுரத்தண்டு வடிவமுடைய உயிரணுக்களால் அமைந்தவை, கனிபுறத்தோல், இவ்வுயிரணுக்கள் சற்று கெட்டியானது. மேலும் தொடர்ந்து உயிரணுக்கள் சுருங்கி கனி நடுத்தோல் உருவாகிறது. இந்த கனி நடுத்தோலில் இரண்டு முதல் மூன்று அடுக்குகள் இருக்கும். கனி உள்ளுறை குழாய் உயிரணுவினால் ஆனது. முதிர்ச்சி அடைந்த கனிமேல் உறையின் நிறமே அரிசியின் நிறம் ஆகும்.
  • விதையுறை: விதை உருவாகுவதற்கு ஏற்படும் அழுத்தத்தினால் விதை உள்ளுறை மற்றும் வெளியுறை நன்கு அழுத்தப்பட்டு அதன் வடிவத்தை இழக்கிறது. கனிமேல் உறையின் கீழ் அமைந்துள்ள சில உயிரணுக்கள் விதை உறை எனப்படுகிறது.
  • தவிடு: இது தனி செவ்வக வடிவு உயிரணுக்கள் ஆகும். விதையுறையை அடுத்து அமைந்திருக்கும் இதில் புரதச்சத்து அடங்கியுள்ளது. இவ்வடுக்கு சோளத்தைப்போல் அல்லாது நிறம் அற்றதாகக் காணப்படும்.
  • கருசூழ்தசை: தவிடிற்கு கீழ் அமைந்திருக்கும் அனைத்து திசுக்களும் உயிரணுக்களால் ஆனவை. இத்தசை முழுவதும் மாவுப்பொருளால் நிறைந்துள்ளது. இதுதான் கருசூழ் தசையை உருவாக்குகிறது.
  • விதைக்கரு: விதைக்கருவின் முக்கோணப் பிற்பகுதியில் உள்ள சதைப் பிதுக்கலே கீழ்ப்புறச்செதில். இந்த கீழ்ப்புறச்செதிலுக்கும், நடு அடுக்கிற்கும் கீழே புறவளர்ச்சி ஏற்படுகிறது. அதுவே உள் கீழ்ப் புறச்செதில் . இது போன்ற அமைப்பு நெல் விதைக் கருவிற்கு மட்டுமே தனித்துவமாக விளங்குகின்றது.

மேலே செல்க


காலநிலை

வானிலை மற்றும் மண் தேவை

        நெல் வெப்பமண்டல வானிலையில் விளையும் பயிர். எனினும் ஈரப்பதம் மிகுந்த மற்றும் மிதமான பருவநிலை உடைய பகுதிகளிலும் கூட செழிப்பாக வளர்கின்றது பெரும்பாலும் வேறுபட்ட உற்பத்தித்திறனுடன் எல்லா வகை மண்ணிலும் நெற்பயிர் விளைகின்றது மிகுந்த ஈரப்பசை, மிகுந்த வெப்பம், போதுமான மழைப்பொழிவு, நீர்பாசன வசதி உடைய எல்லா வகை மண்ணிலும் விளைகின்றது குறிப்பாக வண்டல் மண், சிவப்பு மஞ்சள் மண், செம்மண் கலந்த இருபுறை மண், மலை மண், சரிவு மண், குறுமண் கடற்கரை வண்டல் மண், செம்மண், கருப்பு மற்றும் செம்மண் கலவை, கருமண் ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன.

மேலே செல்க

நிலநேர்க்கோடு மற்றும் குத்துயரம்
  • உலகில் நெல் உற்பத்தி 39° தெற்கு நிலநேர்க்கோடு (ஆஸ்திரேலியா) முதல் 45° வடக்கு நிலநேர்க்கோடு (ஜப்பான்) மற்றும் 50° வடக்கு நிலநேர்க்கோடு (சீனா) வரை விரிவடைகிறது.
  • மிகவும் பரவலான நெல் உற்பத்தி 45° வடக்கு புவிநடுக்கோட்டுப் பகுதிகளுக்குள் உள்ளது.
  • இந்தியாவில் பல்வேறு மாறுபட்ட குத்துயரம் மற்றும் பருவநிலைகளில் நெற்பயிர் விளைவிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் நெல் சாகுபடி 8° முதல் 35° வடக்கு நிலநேர்க்கோடு வரை விரிவடைந்துள்ளது. மேலும் கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயர்நிலை வரை சாகுபடி செய்யப்படுகிறது.

மேலே செல்க

வெப்பநிலை
  • வெப்பமண்டலம், துணை வெப்பமண்டலம் சார்ந்த பகுதிகளில் விளையும் பயிர் ஆவதால் அதிக வெப்பமாக 20° செ முதல் 40° செ வெப்பநிலை அலகும் தேவைப்படுகிறது.
  • பகல் நேரத்தில் உகந்த வெப்பமாக 30° வெப்பநிலை அலகும் இரவு நேரத்தில் 20° வெப்பநிலை அலகும் நெற்பயிரின் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது.

மேலே செல்க

வளர்ச்சி கட்டங்கள் மற்றும் உகந்த வெப்பம்

பயிர் வளர்ச்சி கட்டங்கள் உகந்த வெப்பம் (வெப்பநிலை அலகு) (° செ)
முளைவிடும் பருவம் 20-35
முளைத்தெழும் நாற்று பருவம் 25-30
வேர்விடும் பருவம் 25-28
இலை நீள்தல் பருவம் 31
தூர் விடும் பருவம் 25-31
பூங்கொத்து வெளிவரும் பருவம் 15-30
பூமலர்ச்சி பருவம் 30-33
முதிர்ச்சி பருவம் 20-25

மேலே செல்க

சூரிய ஒளி
  • தாவரங்களின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக முக்கியமானவை.
  • பயிர் முதிர்ச்சியடையும் இறுதி 35 முதல் 45 நாட்களில் கிடைக்கும் சூரிய ஒளிக்கதிரால்தான் மகசூல் நிர்ணயிக்கப்படுகிறது.
  • பயிர் முதிர்ச்சியின் போது குறைந்த வெப்பநிலையைக் கொண்ட பிரகாசமான சூரியஒளி நெல் மணி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.
  • குறைந்த பட்சம் ஒரு நாளுக்கு 300 கலோரி/ சதுர செ.மீ தேவைப்படுகிறது.
  • சூரிய ஒளிக்கதிர் ஒரு நாளுக்கு 500-700 கலோரி/சதுர செ.மீ இருந்தால் அதிக மகசூல் பெறலாம்.

மேலே செல்க

மழைப்பொழிவு
  • நெல்பயிரிடும் முறையை தேர்ந்தெடுப்பதில் மழைப்பொழிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • நெற்பயிருக்கு அதிக அளவு மழையாக 150 முதல் 200 (செ.மீட்டர்) அளவு தேவைப்படுகிறது
  • நீர் தேங்கிய நிலையையும் தாங்கும் ஆற்றலைப் பெற்றது நெற்பயிர்.
  • மானாவாரி பயிராக நிலையாக நீர் தேங்கியிருக்கும் தாழ்வான பகுதி மற்றும் மேட்டுப்பாங்கான பகுதிகளில் நெற்பயிர் வளரும்.
  •  பயிர் வளர்ச்சிப் பருவத்தில் 125 (செ.மீட்டர்) அளவு மழை தேவைப்படும்.
  • மலர்வுக்காலத்தில் பெருமழைப் பொழிவு ஏற்பட்டால் பூத்தலில் மலட்டுத்தன்மை உண்டாகும்
  • முதிர்ச்சி நிலையில் நீர் தேக்கம் இருக்கக் கூடாது.

மேலே செல்க

ஒப்பு ஈரப்பதம்
  • தாவரத்திற்கு ஒப்பு ஈரப்பதம் நீர் தொடர்பைத் தருகிறது. ஆனால் இலை வளர்ச்சி ஒளிச்சேர்க்கை, மகரந்த சேர்க்கை நோய்கள் விளைச்சல் ஏற்படுவது ஆகியவற்றில் மறைமுகமாக பங்கு வகிக்கிறது.  
  • அதிக ஈரப்பதம் இருக்கும் நிலையில் பூச்சிகள் மற்றும் நோய்கள் அதிகமாக தாக்கும்.
  • அதிக ஈரப்பதம் இருப்பின் தாவர இலையில் பூசணவித்து எளிதாக உருவாகும்.
  • பெரும்பாலான பூச்சிகள் மற்றும் நோய்கள் மழைக் காலத்திலே உருவாகின்றன. ஆயினும் அசுவுணி, செதில்பூச்சி, செடிப்பேன், மாவுப்பூச்சி, சிலந்தி ஆகிய பூச்சிகள் கோடை காலத்திலே அதிகமாக தாக்குகின்றன.
  • குளிர்காலத்தில் குலைநோய் அதிகமாகக் காணப்படுகின்றன.
  • குளிர்ப்பருவத்தோடு (ராபிப்பருவம்) ஒப்பிடும் போது காரீப் பருவத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் ஆணைக்கொம்பன் ஈ அதிகமாக தாக்குகிறது.
  • மிதமாக மழைப்பருவம், 80 சதவிகிதம் ஒப்பு ஈரப்பதம் மற்றும் அளவு வானிலை வெப்பம் (20-33° சி) இருக்கும் நிலையில் புகையான் அதிகமாகத் தாக்குகிறது .

மேலே செல்க

காற்று
  • நெல் உற்பத்தியில் காற்று முக்கியமில்லாத ஒரு பண்பகம்.
  • ஆனால் மெல்லிய காற்று சிறந்தது. அது காற்றை கிளறி கரியமிலவாயுவை இலை பகுதிக்குக் கொண்டு செல்கிறது.
  • புயல்காற்று ஏற்படும்போது மிகுந்த சிதைவு ஏற்படும்.
  • மகரந்தச்சேர்க்கையின் போது, அதிக காற்றின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நிறைவு பெறாத கரு சூழ்தசை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • பூத்தல் காலத்தில் மிகுந்த காற்று சேதத்தை உண்டாக்கும்.
  • பூத்தல் காலத்தில் அதிக காற்று வேகம் இருப்பின் மகரந்த நீர் தேக்கம் ஏற்படும். மேலும் பூங்கிளை மலட்டுத்தன்மை அடைகிறது.

    மேலே செல்க


புள்ளி விபரங்கள்

உலகின் நெல் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் 2008 - 09

ஆதாரம்: www.indiaagristat.com

இந்தியாவின் மாநிலங்களில் நெற்பயிரின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல்
2009 - 2010

ஆதாரம்: www.indiaagristat.com

தமிழ்நாட்டில் நெற்பயிரின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் 2008 - 09



ஆதாரம்: www.indiaagristat.com


கேரளாவின் நெல் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் 2005 - 06

ஆதாரம்: www.indiaagristat.com

கர்நாடகாவின் நெல் பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் 2006 - 07

ஆதாரம்: www.indiaagristat.com

இந்தியாவில் நெற்பயிரின் சுற்றுப்புற அமைவைப் பொருத்து அதன் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித்திறன்

ஆதாரம்: Indian Farming, Oct 2006 - Special Issue

மேலே செல்க