தேங்காய் - விற்பனை தகவல்கள் :: கர்நாடக மாநிலம் வேளாண்மை விற்பனை வாரியம்

கர்நாடக மாநிலம் வேளாண்மை விற்பனை வாரியம்: 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியன்று இவ்வாரியம் தொடங்கப்பட்டது.  மாநில அளவில் வேளாண் விற்பனைத் துறையில் முழு வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன், விற்பனைக்குழுக்களுக்கும் மாநில அரசிற்கும் இடையே இணைப்பு பாலமாக இவ்வாரியம் இயங்கி வருகிறது.
வாரியத்தின் முதன்மைச் செயல்கள்:

  • மாநில அளவில் விற்பனைத்துறையில் ஒழுங்குமுறைகளை கையாண்டு, பொதுவான முன்னேற்றம் காணுதல்.
  • நலிவான விற்பனைக் குழுக்களை முன்னேற்ற பொருளாதார ரீதியில் கடன் மற்றும் மானியம் அளித்தல்
  • ஒழுங்குமுறை விற்பனை மூலம் வேளாண் பொருட்களை விற்பனை செய்வதன் தகவல்களை விளம்பரம் செய்தல்
  • மாநில அளவில் உள்ள விற்பனைக் குழுக்களின் மேலதிகாரிகள் மற்றம் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல்
  • தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளின் தகவல் சேவைகளைக் கொண்டு அனைத்து விற்பனைக் குழுக்களின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தல்
  • விவசாயிகளின் பாதுகாப்பிற்கான ஆயுள் காப்பீட்டிற்கு ஏற்பாடு செய்தல் தேவையெனில், மாநில அளவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சந்தா கட்டணத்திற்கான நிதியுதவி அளித்தல்
  • வேளாண் விற்பனை பற்றிய கருத்தரங்கு, பணிமனைக் கூட்டம் மற்றும் கருத்துக்காட்சி எற்பாடு செய்தல்,

தொடர்புக்கு:

கர்நாடக மாநிலம் வேளாண்மை விற்பனை வாரியம்
எண்:16, 2வது ராஜாபவன் சாலை, அஞ்சல் பெட்டி எண்: 5254,
பெங்களூர் – 560001
தொலைபேசி . 080-2863969, 080-2868237, தொலைபிரிதி:- 080-2863962
மின்னஞ்சல்- ksamb@ksamb.com, www.ksamb.gov.in








 

 

 

 

© 2010 TNAU. All rights reserved