பாசன மேலாண்மை

சொட்டு நீர்ப்பாசனம்

சொட்டு நீர்ப் பாசன அமைப்பை பொருத்துதல்

நீர்த் தேவை

அமைப்பதற்கான செலவு

பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்

உரப்பாசனம்

உரப்பாசன உபகரணங்கள்

 

  • வாழையின் வாழ்க்கைச் சுழற்சிக்குத் தேவையான மொத்த நீர்த் தேவை 900-1200 மி.மீ. இது மழையின் வாயிலாகவோ அல்லது பாசனத்தின் மூலமோ பெறப்பட வேண்டும்.

  • வாழையின் சிறந்த வளர்ச்சிக்கும், நல்ல உற்பத்தித் திறனுக்கும் அதன் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் சரியான அளவு நீர் கிடைக்கப்பெறச் செய்வதோடு வேர்ப்பகுதியில் தேங்கியுள்ள அதிகப்படியான நீரினை வெளியேற்ற முறையான வடிகால் வசதியும் இருப்பது அவசியம்.

  • பொதுவாக கோடைகாலங்களில் ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒருமுறையும், குளிர்க்காலங்களில் 7-8 நாட்களுக்கு ஒருமுறையும் நீர் பாய்ச்சுவது சிறந்தது.

  • வாழை பயிருக்குப் பல வழிகளில் நீர் பாய்ச்சப்படுகின்றது. ஒவ்வொரு முறையிலும் நன்மை, தீமைகள் உள்ளன.

  • அந்த முறைகளாவன: வெள்ள நீர்ப்பாய்ச்சல் அல்லது பாத்தி பாய்ச்சல், குழி பாசனமுறை, சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரப்பாசனம் ஆகும்.

  • தோட்ட நிலப்பகுதிளில் பொதுவாக வெள்ள/பாத்திப் பாசனம் செய்யப்படுகிறது. இம்முறையில் தேவைப்படும் நீரின் அளவு மற்றும் ஆட்கூலி செலவு அதிகம். அதோடு பாய்ச்சப்படும் நீரும், உரங்களும் சீராக பயிருக்குக் கிடைப்பதில்லை. இம்முறையில் நுாற்புழுக்கள் அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது.

  • குழிப் பாசனமுறை சேற்று நிலங்களில் பின்பற்றப்படுகிறது. இம்முறையில் இரு வரிசைகளுக்கு இடையே தோண்டப்பட்டுள்ள குழிகளில் நீர் பாய்ச்சப்படுகிறது. இக்குழிகள் மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் வழிந்தோட வடிகாலாகப் பயன்படுகிறது. 

மேலே செல்க

சொட்டு நீர்ப் பாசனம் என்பது குறிப்பிட்ட, சரியான அளவு நீரினை சீரான இடைவெளியில் பயிரின் வேர் மண்டலத்திற்கு அருகிலேயே அதன் தேவைக்கேற்ப அளிக்கும் முறையாகும். பயிர்க்காலம் முழுவதும் ஒரு குறித்த இடைவெளியில் குறைந்த அழுத்தம் கொண்ட பெரிய மற்றும் சிறிய, பக்கக் குழாய்களின் மூலம் நீர் சொட்டிகள் வழியே நீர் அளிக்கப்படுகின்றது.
இம்முறையில் மண்ணின் நீர் கொள்ளும் திறனை விடக் குறைந்த அளவில் நுண் கருவிகள் மூலம் மண்ணின் மேற்புறத்திலோ அல்லது மண்ணிற்கு சற்று அடியிலோ நீரானது சொட்டு சொட்டாக வழங்கப்படுகின்றது.

சிறப்பம்சங்கள்:

  • இது ஒரு சிறந்த அறிவியல் முறைப்பாசனம். இதன் முக்கிய அம்சங்களாவன
    வேரினுள் நீர்-காற்று விகிதத்தை சீராகப் பராமரிக்கவென நீரானது சிறிது சிறிதாக அளிக்கப்படுகின்றது.

  • நீர் சொட்டு சொட்டாக நீண்ட காலத்திற்கு வழங்கப்படுகின்றது.

  • பயிரின் தேவைக்கேற்ப தினசரி நீர் வழங்கப்படுகின்றது.

  • நீர் வயல் முழுவதுமின்றி பயிருக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது.

  • மண்ணின் ஈரப்பதமானது எப்போதும் தோட்ட அளவுக்கு ஏற்றவாறு அளிக்கப்படுகின்றது. இதனால் பயிரானது சீராகவும், விரைவாகவும் வளர்கின்றது.


சொட்டு நீர் பாசன அமைப்பின் பகுதிகள்:

முக்கிய அமைப்புகள்:

  • நிலத்தடியில் உள்ள தொட்டி
  • குழாய்கள் (அ) பம்ப்பு
  • வடிகட்டிகள்

பரவல் அமைப்பு:

  • பிரதானக் குழாய்
  • துணைக் குழாய்
  • பக்கக்குழாய்
  • நீர் சொட்டி/சொட்டுவான்

நிலத்தடியில் உள்ள தொட்டி :
  • ஆற்றல் தேவையைக் குறைக்கவும், நீராற்றலால் இயக்கப்படுகின்ற சொட்டு நீர்ப்பாசனத்தில் நீரின் அளவை சீராகப் பராமரிக்கவும், சற்று உயர்ந்த பகுதியின் நடுவே நிலத்தடித் தொட்டியினை அமைப்பது அவசியம்.

  • இத்தொட்டியின் அளவு மண்ணின் வகை, சொட்டுவானின் கொள்ளளவு மற்றும் பயிரின் நீர்த்தேவையைப் பொறுத்து மாறுபடும்.

குழாய்கள் (அ) பம்ப்பு:
  • மேற்புற தொட்டி/பம்ப்பு என்பது இந்த அமைப்பிற்கு போதுமான அழுத்தம் கொடுக்கத் தேவைப்படுகிறது. மைய விலக்கு விசைக்குழாய்கள் பொதுவாக குறைவழுத்த முறைக்கு பயன்படுத்தப்படுகின்றது.

வடிகட்டிகள்:

1) சரளைப் படுகை/வலை வடிகட்டிகள்:

உருளை வடிவத் தொட்டியில் கால்சியம் கார்பனேட் அற்ற கட்டிகள், சற்று பெரிய குறிப்பிட்ட அளவிலான (1.5-4 மி.மீ விட்ட அளவு) பொருட்களை வடிகட்ட இவை பயன்படுகின்றன. இவை ஆல்காக்கள் போன்ற எடை குறைந்த, நீரில் மிதக்கும் அங்ககப் பொருள்கள், கொழு மணல் மற்றும் சிறுகற்கள் ஆகியவற்றை வடிக்கக் கூடியவை.

2) திரை வடிகட்டி:
  • திரை வடிகட்டிகள் எப்போதும் குழாய் அடைப்பினைத் தவிர்க்க சிறு சிறு நுண்பொருள்களை வடிகட்ட உபயோகிக்கப் படுகின்றன.

  • பெரும்பாலான பொருள்கள் மணல் வடிகட்டியினால் வடிகட்டப்பட்ட பின்பு நுண் பொருள்கள், துகள்கள் மட்டுமே இதன் வழியே அனுப்பப்படுகின்றன. இத்திரை வடிகட்டி எந்த அளவிலான நுண்பொருள்களையும் வடிகட்டிய பின் துாய நீரினை மட்டுமே நுண்பாசன அமைப்பின் வழியே செலுத்துகின்றன.


3) மைய விலக்கு விசைக்குழாய் வடிகட்டிகள்:
  • கிணறு அல்லது ஆற்று நீரிலிருந்து மணல், நுண் கற்கள் மற்றும் அதிக பருமன் கொண்ட பொருட்கள் அனைத்தையும் இதன் மூலம் நன்கு வடிகட்டலாம்.

  • நீரானது கூம்பின் ஒரு கோணத்தில் வட்ட வடிவில் ஊற்றப்படும்போது மைய விசையினால் கனமான பொருள்கள் சுவரில் மோதச் செய்யப்பட்டு பிரிக்கப்படுகின்றன.

  • பிரிக்கப்பட்ட பொருள்கள் பாத்திரத்தின் குறுகிய பாதை வழியே அடிப்பகுதியில் சேகரிக்கப்படுகின்றன.


4) வட்டத் தகடு வடிகட்டிகள்:
  • வட்ட வடிவிலான வளையத்துடன் (வரித்தடம்) கூடிய வட்டத் தகடுகள் ஆல்காக்கள் மற்றும் அங்ககப் பொருட்கள் போன்றவற்றை நன்கு வடிகட்டப் பயன்படுகின்றது.

  • வடிகட்டுதலின் போது வட்டத் தகடுகள் ஒன்றாக சேர்த்து அமுக்கப்படுகின்றன.

  • இரண்டு அடுத்தடுத்த வட்டத் தகடுகளுக்கு இடையே ஒரு கோணத்தில் வேறுபட்ட அளவும், சுழன்று எழும் வேகமும் கொண்ட குழி அமைப்புகள் காணப்படுகிறது. இதன் வரித்தடம் வழியே வடிகட்டும் தரத்தினைத் தெரிந்துகொள்ளலாம். வட்டத் தகடு வடிகட்டிகள் பல்வேறு அளவுகளில் (25-400 மைக்ரான்) காணப்படுகின்றன.

  • திரும்ப பின்னோக்கி நீரைச் செலுத்துவதன் மூலம் வட்டத் தகடுகளை சுத்தம் செய்யலாம்.

பரவல் அமைப்பு:
பிரதானக் குழாய்:
  • இக்குழாய் நீரினை வயலுக்குள் எடுத்துச் சென்று துணைக் குழாயிடம் அளிக்கிறது.

  • இது தடித்த பி.வி.சி பைப்புகள் மற்றும் அதிக பருமன் கொண்ட பாலிஎத்திலீனால் ஆனது.

  • 65 மி.மீ விட்ட அளவுடைய குழாயுடன் 4-6 கி.கி/செ.மீ அழுத்தம் இதில் பயன்படுத்தப்படுகின்றது.


 துணைக்குழாய்:
  • இது பல பக்கக்குழாய்களுக்கு நீரை எடுத்துச் செல்கின்றது.

  • தரமான பி.வி.சி, அதிக பருமன் அல்லது குறைந்த பருமன் கொண்ட பாலிஎத்திலீன் 33 மி.மீ முதல் 75 மி.மீ விட்டமும் 2.5 கி.கி/செ.மீ அழுத்தமும் கொண்ட குழாய்கள் பயன்படுத்தப்படுகிறது.


பக்கக்குழாய்:
  • பக்கக் குழாய்கள் தம்முடன் இணைந்த சொட்டுவான்கள் மூலம் நீரினை பயிர்களுக்கு சீராக வழங்குகின்றன.
  • இவை பொதுவாக குறைந்த பருமன் கொண்ட பாலிஎத்திலீனால் ஆனது.
  • இக்குழாய்கள் 10, 12 மற்றும் 16 மி.மீ உட்புற விட்ட அளவும் 1-3 மி.மீ தடிமனான சுவரும் கொண்டிருக்கும்.

சொட்டுவான்கள்:
  • இவை உட்குழாயில் அழுத்தத்தினை 0.5-1.5 முதல் பூஜ்ஜியம் அளவு வளிமண்டல அழுத்தத்தில் நீரினை சொட்டும் ஆற்றல் கடத்தியாக செயல்படுகின்றன.

  • அழுத்தத்தை தாமே சரிசெய்து கொண்டவை, அழுத்தத்தை தாமே சரிசெய்ய இயலாதவை. நீர் சொட்டும் அளவை மாற்றி அமைக்கும் சொட்டுவான், சுழலும் சொட்டுவான்கள் மற்றும் 1-4 மி.மீ விட்டம் கொண்ட நுண்ணுாட்டக் குழாய்.

  • இவை பாலி புரப்பைலீன் அல்லது நீண்ட குறை பருமன் பாலி எத்திலீனால் ஆனவை.

மேலே செல்க

சொட்டு நீர்ப் பாசன அமைப்பை பொருத்துதல்

பிரதான உபகரணங்களைப் பொருத்துதல்:

வடிகட்டிகளைப் பொருத்தும்போது கீழ்க்கண்ட கருத்துக்களை நினைவில் கொள்ள வேண்டும்.

  1. பொருத்துவதற்கு ஏற்றவாறு மிக குறைந்த அளவு திருப்பு முனைகள் மற்றும் வளைவுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

  2. விசைக்குழாய்(அ) பம்ப் சொட்டுவானுடன் இணையுமிடத்தில் மணல்/திரை வடிகட்டி பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்துக் கொள்ளவும்.
  3. மணல்/திரை வடிகட்டியை எளிதில் பிரதானக் குழாயுடன் இணைக்கலாம்.

  4. விவசாயிகளின் வசதிக்கேற்ற வகையில் பின்சென்று சுத்தம் செய்யும் வழிவகை இருக்க வேண்டும். 

  5. நீரிணைப்பு குழாய்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  6. வடிகட்டும் வால்வுகள் செயல்பட போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.

  7. மணல் வடிகட்டி அதிர்வு அல்லது சுமையினால் உடைந்து விடாமல் இருக்க சிமெண்ட்டாலான அல்லது நல்ல கடினமான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பது அவசியம். திரை வடிகட்டிகள் அதிக எடை மற்றும் அதிர்வினைத் தாங்க வலுவான ஜி.ஐ கருவிகளால் தாங்கப்பட வேண்டும்.

  8. நீர் கசிந்து வீணாகாமல் இருக்க சரியான அளவு M -சீல் கலவை இட்டு ஜி.ஐ கருவிகளை நன்கு இறுக்கி அமைக்க வேண்டும்.

  9. வடிகட்டியின் உட்புற மற்றும் வெளிப்புற வழிகளில் அழுத்தமானிகளை அமைக்கவும்.

  10. எண்ணெய் குழாய்களை வடிகட்டியுடன் நேரடியாக இணைப்பதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக நீளமான குழாய்களையோ, விளிம்பு தட்டுகளையே இணைக்கப் பயன்படுத்தலாம்.


பிரதான மற்றும் துணைக் குழாய்களை இணைத்தல்:


  1. இடைச் சாகுபடிச் செயல்பாடுகளின்போது பாதிக்கப்படாமல் இருக்க, இக்குழாய்கள் 30-45 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும்.

  2. பொருத்துவதற்கு முன் குழாய்களில் உள்ள மண் ஏதும் இருந்தால் நீக்க வேண்டும். கரையும் சக்தியுள்ள சிமெண்ட்டினை பிரஷ் கொண்டு தடவி குழாய்களை ஒட்ட வேண்டும்.

  3. பி.வி.சி துணைக்குழாயுடன் வால்வினை இணைக்கும் போது அதன் ஆரம்ப பகுதியில் துப்பாக்கி வால்வு/பி.பி பந்து வால்வு அமைக்கப் பட்டிருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

  4. சரிவை நோக்கியிருக்குமாறு பிரதான அல்லது துணைக் குழாய்களின் முனையில் பாய் நீர்க் குழாய் வால்வு பொருத்தவும்.

  5. துணைக்குழாயில் துளையிடும் போது மேலிருந்து கீழாக சீரான அழுத்தம் கொடுப்பதன் மூலம் துளை வட்ட வடிவில் நன்றாக விழும். 

  6. துணைக்குழாயின் வரித்தடம் குழாயின் உட்புறம் அமையுமாறு துளைகளில் இரப்பர் குரோமெட் கொண்டு அமைக்கவும்.

  7. நீர்ப்போக்கு எளிதாக இருக்கும் வண்ணம் நிறுத்தும் அமைப்பினை கதவு வால்வினை நோக்கியவாறு அம்பு அல்லது அரங்கினை அமைக்கவும்.

  8. துளையிட்ட பின் நீர்கொண்டு துணைக்குழாயை அலசவும். இதனால் துளையிடும்போது அதனுள் சேர்ந்துள்ள மண் அடித்துச் செல்லபட்டு சுத்தமாகும். இல்லையெனில் இவ்வழுக்குகள் சொட்டுவானில் நுண்குழாய் மூலம் சென்று அடைத்துக்கொள்ளும்.


பக்கக்குழாய் மற்றும் நீர் சொட்டுவான்கள் அமைத்தல்::


  1. குழாய் வழியே நீரினை பாயச் செய்யவேண்டும்.

  2. மஞ்சள் நிற பட்டை வரிகளின் பக்கவாட்டில் துளையிட வேண்டும்.

  3. சொட்டுவான்களை மண் வகை, நீரின் தன்மை, கோடையில் நீர் இருப்பு மற்றும் சொட்டு நீர் அமைப்பினைப் பொறுத்து அமைக்கவும்.

  4. இரு சொட்டுவான்கள் அமைக்கும்போது அனைத்து சொட்டுவான்களும் ஒரே வரிசையில் வருமாறு அமைக்கவும்.

  5. பக்கக்குழாய் வரிசைகள் முழுதும் துளையிடப்பட்ட பின்பே சொட்டுவான்களைப் பொருத்த வேண்டும். பொருத்தியபின் துளையிடும் அதிர்வினால் சொட்டுவான்களின் இணைப்பு மாறிவிடக் கூடும்.

  6. துளையிடுதலை துணைக்குழாயில் முடித்த பின்பே பக்கக்குழாயில் செய்ய வேண்டும்.

  7. சொட்டுவான்களை அமைக்கும்போது, பக்கக்குழாயினுள் நன்கு அழுத்தி விட்டுப் பின்பு இலேசாக வெளியே இழுக்கவும்.

  8. நுனியில் மூடியைப் பொருத்தி சொட்டுவான் நுனியை மூடிவிடவேண்டும்.

மேலே செல்க

மாதம்

நீர்த்தேவை லி/நாள்/பயிர்

மாதம்

நீர்த்தேவை லி/நாள்/பயிர்

ஜூன்

5-6

அக்டோபர்

4-6

ஜூலை

4-5

நவம்பர்

4-6

ஆகஸ்ட்

5-6

டிசம்பர்

4-6

செப்டம்பர்

6-8

ஜனவரி

8-10

அக்டோபர்

10-12

பிப்ரவரி

10-12

நவம்பர்

8-10

மார்ச்

16-18

டிசம்பர்

6-8

ஏப்ரல்

18-20

ஜனவரி

10-12

மே

20-22

பிப்ரவரி

12-14

ஜூன்

20-22

மார்ச்

16-18

ஜூலை

10-12

ஏப்ரல்

20-22

ஆகஸ்ட்

12-14

மே

25-30

செப்டம்பர்

14-16

மேலே செல்க

பரப்பு

1 எக்டர், அமைக்கும் இடைவெளி 2மீ X 2 மீ

சொட்டு நீர் அமைப்புக்கான நிரந்தர செலவு

ரூ.60,700

பரப்பு வட்டி வீதம்

10.5%

செயல்படும் காலம்

7.5 ஆண்டுகள்

ஒராண்டிற்கான செலவு (சொட்டு நீர் அமைப்பு)

ரூ.17,456

பயிரிட ஆகும் செலவு

ரூ.30,000

எதிர்பார்க்கும் மகசூல்

47 டன்கள்/எக்டர்

எதிர்பார்க்கும் வரவு செலவு விகிதம்

4.5

12 மி.மீ பக்கக்குழாய் - ரூ.3.75 மீ
16 மி.மீ பக்கக் குழாய் - ரூ.5.80/மீ
2 இன்ச் (அங்குல குழாய்) பைப் - ரூ 186.00/6 மீ
அங்குலக் குழாய் -ரூ.112.00/6 மீ
12 மி.மீ ஸ்டார்ட், வாஷர் மற்றும் என்ட் கேப்-ரூ 4.50/ 1 set.
16 மி.மீ ஸ்டார்ட், வாஷர் மற்றும் என்ட் கேப்-ரூ 6.80/ 1 set.
எமிட்டர் (உமிழ்வான்) 4 லி/மணி, 8 லி/மணி, 16 லி/மணி ஒவ்வொன்றும் ரூ 2.80
12 மி.மீ இணைப்பான் - ஒவ்வொன்றும் ரூ.1.00
16 மி.மீ இணைப்பான் -ஒவ்வொன்றும் ரூ.1.50

டம்மி - ஒவ்வொன்றும் ரூ.0.30
2 அங்குல வெஞ்சுரி மற்றும் உதிரிப் பொருட்கள் -ஒவ்வொன்றும் ரூ.2000
1 ¼ அங்குல பந்து வால்வு - ஒவ்வொன்றும் ரூ.120.
2 அங்குல பந்து வால்வு - ஒவ்வொன்றும் ரூ.180
2 ½ அங்குல பந்து வால்வு - ஒவ்வொன்றும் ரூ.250
5 குதிரைத்திறன் மோட்டார் பம்புசெட் ஒவ்வொன்றும் ரூ.10000
திரை வடிகட்டி - 2 அங்குல அளவு ஒவ்வொன்றும் ரூ.2500
அமைப்பதற்கு ஆகும் செலவு - வாழை ஒன்றுக்கு ரூ.0.50

மேலே செல்க


வ.எண்

பிரச்சினைகள்

காரணங்கள்

தீர்வுகள்

1.

துணைக்குழாய் மற்றும் பக்கக்குழாயின் இணைப்பில் நீர் கசிதல்.

இணைப்பு சேதமடைந்து இருத்தல்.

சேதத்தினை சரிப்படுத்துதல்.

2.

பாலித்தீன் குழாயில் கசிவு இருத்தல்.

எலி/சாகுபடி முறைகளால் குழாய் பாதிக்கப்படுதல்.

பாலித்தீன் குழாயின் ஓட்டையை அடைத்தல். பாலி இணைப்பானை வெட்டப்பட்ட இடங்களில் பயன்படுத்துதல்.

3.

பக்கக்குழாயின் முடிவு வரை நீர் செல்லாமல் இருத்தல்.

பக்கக்குழாயில் ஏதேனும் துளைகளோ, வெட்டுகளோ, வளைவோ இருக்கலாம்.

துளை மற்றும் வெட்டுபட்டிருப்பதை அடைத்தல். மடிப்பினை எடுத்துவிடுதல்.

4.

நுனி அடைப்பை எடுத்து விடும்போது வெள்ளை நிறக்கலவை வெளிவருதல்.

நீரில் காரத்தன்மை (உவர்) அதிகமிருத்தல். சுத்தம் செய்யப்படாத பக்கக்குழாய்.

நுனியில் திறந்துவிட்டு பக்கக்குழாய்களை 15 நாட்களுக்கொருமுறை சுத்தம் செய்தல்.

5.

பக்கக்குழாய்களிலிருந்து மிகக் குறைவாகவோ அல்லது அதிமாகவோ நீர் பாய்தல்.

சொட்டுவான்களில் அடைப்பு, ஏற்படுதல், குழாயின் நுனி மூடாமல் விடப்படுதல்.

மணல் திரைவடிகட்டியை சுத்தம் செய்தல், குழாய் நுனிக்கு மூடி இட்டு அடைத்தல்.

6.

பக்கக் குழாயின் நுனிமூடியைத் திறக்கும்போது எண்ணெய் கலந்த பிசின் போன்ற பொருள் வெளிவருதல்.

நீரில் அதிக ஆல்காக்கள் மற்றும் இரும்பு பொருட்கள் இருத்தல்.

பக்கக்குழாயினை நீர் கொண்டு சுத்தம் செய்தல் அல்லது இரசாயனம் கொண்டு நேர்த்தி செய்தல்.

7.

வடிகட்டிகளில் அதிக அழுத்தத் துளிகள் இருத்தல்.

வடிகட்டிகளில் அழுக்கு/துாசி படிதல்.

தினமும் 5 நிமிடம் பின்புறம் நீர் விட்டுக் கழுவுதல். வாரம் ஒரு முறைவடிகட்டியை சுத்தம் செய்தல்.

8.

அழுத்தமானி வேலை செய்யாமல் இருத்தல்.

மழைநீர் உள்ளே புகுந்திருக்கலாம். அழுத்தமானியில் தேய்மானம் ஏற்பட்டிருக்கலாம்.

பிளாஸ்டிக் கொண்டு மூடவும். அழுத்த மானியை சரியாகப் பொருத்தவும்.

9.

அழுத்தம் குறைதல்.

திறந்த பிரதானக் குழாயில் கசிவு இருத்தல். கிணற்றில் நீர் குறைவாக இருத்தல்.

திறப்பினை சரிசெய்து கசிவினைத் தடுத்தல். கிணறின் நீரளவுக்கு ஏற்றவாறு குழாயினை இறக்கி வைத்தல்.

10.

மணல் வடிகட்டியின் நுழைவில் அதிக அழுத்தம் இருத்தல்.

மாற்றுவழி இல்லாதிருத்தல் அல்லது அடைத்திருத்தல். வடிகட்டியை மாற்றி அமைத்தல். வடிகட்டியில் குறைந்தளவு மணல் இருத்தல்.

வடிகட்டியை சரியாகப் பொருத்துதல். போதுமான அளவு மணலை நிரப்பவும்.

11.

இரசாயன நேர்த்தி மற்றும் உரப்பாசனத்தின் போதும் வெஞ்சுரி சரியாக வேலை செய்யாதிருத்தல்.

வடிகட்டியில் அழுத்தம் அதிகமாக இருத்தல். வெஞ்சுரி அமைப்பு சரியாக பொருத்தப்படாமலிருத்தல்.

அழுத்தத்தைக் குறைக்க நீரினை வேறு மாற்று வழியே செலுத்திவிட்டு வெஞ்சுரி அமைப்பைச் சரிசெய்தல்.

12.

திரை வடிகட்டியில் மணல் மற்றும் கழிவுகள் சேர்ந்திருத்தல்.

மாற்றுவழி இல்லாதிருத்தல் அல்லது அடைத்திருத்தல். வடிகட்டியை மாற்றி அமைத்தல். வடிகட்டியில் குறைந்தளவு மணல் இருத்தல்.

வடிகட்டியை சரியாகப் பொருத்துதல். போதுமான அளவு மணலை நிரப்பவும்.

13.

காற்று வெளியேறும் வால்விலுருந்து நீர் கசிதல்.

காற்று வெளியேறும் வால்வு சேதமடைந்திருத்தல்.

சேதமடைந்த வால்வினை மாற்றிப் புதிய வால்வினைப் பொறுத்துதல்.

பயன்கள்:

  1. குறைந்தது 50-60% வரை மகசூல் அதிகரிப்பு

  2. விளைபொருள்களின் தரம் உயர்வு

  3. 45-50% வரை நீர் சேமிப்பு

  4. விரைவில் அறுவடைக்கு வரும்

  5. சீரான நீர் பாய்ச்சல்

  6. நீர் மற்றும் உரங்களைத் துல்லியமான அளவில் அளித்தல்

  7. 25-30% உரச்சேமிப்பு.

  8. நேரம், ஆட்கூலி, ஆற்றல் அனைத்தும் சேமிக்கப்படுகின்றன

  9. களை வளர்வது மிகக்குறைவு.

  10. இளக்கமான மண்வகையில் கூட சாகுபடி செய்ய இயலும்

  11. மண்ணின் உவர்தன்மை குறைக்கப்படுகிறது.

குறைபாடுகள்:

1.  சொட்டுவான்கள் அடைத்துக் கொள்ளுதல்
2.  இரசாயனம் (பொழிவு)
3.  குழாய்களில் உப்பு படிதல்

மேலே செல்க

உரப்பாசனம்

  • உரப்பாசனம் என்பது பாசன நீரின் வழியே உரங்களைக் கலந்து அளிப்பதாகும்.

  • பயிரின் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கு சரியான அளவில் உரமிட இம்முறை பயன்படுகிறது.

  • பயிருக்குத் தேவையான தழை, சாம்பல் சத்துக்களைப் பெற வாழை ஒன்றுக்கு 150 கி என்ற வீதம் தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை அளிப்பதே போதுமானது.

  • தழைச்சத்திற்கு யூரியாவும், சாம்பல் சத்திற்கு மியூரேட் ஆஃப் பொட்டாசியம் இடுவது நன்மையாகும்.

  • தொட்டியில் உரத்தினைக் கரைத்து உரக்கரைசல் தயாரித்த பின்பு அது சொட்டு நீர்ப்பாசன அமைப்பு வழியே செலுத்தப்படுகிறது.

  • தினசரி அல்லது வாரத்திற்கொருமுறை என தேவைக்கேற்றவாறு உரக்கரைசல் பாசனத்தில் கலக்கப்படுகிறது. வாழைக்குலை அறுவடைக்கு 10-15 நாட்களுக்கு முன்னரே நீர்ப்பாசனத்தை நிறுத்திவிட வேண்டும்.

  • நேரடி உரங்கள் தவிர, பல வித நீரில் கரையும் கலப்பு உரங்களும் தற்போது எளிதில் கிடைக்கின்றன.

  • வாழையின் தேவைக்கேற்ப அதன் ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளுக்கும் குறிப்பிட்ட கலவையை தேர்ந்தெடுத்து பாசனம் வழியே உரமளிக்கலாம்.

நீரில் கரையும் உரங்கள்:

இவை நீரில் நன்கு கரையக்கூடிய, குறைந்த உப்புத்தன்மையும், அதிக ஊட்டச்சத்துக்களும் கொண்ட திண்ம நிலை உரங்களாகும். இவை இரண்டாம் நிலை/நுண்ணுாட்டச் சத்துக்களைக் கொண்டோ, அல்லது அவை இன்றியோ இருக்கலாம். இவ்வுரங்கள் துல்லிய பண்ணைய முறையில் தெளிப்பு உரங்களாகவும், உரப்பாசனத்திற்கும் பயன்படுகின்றன.

உரங்களைத் தேர்ந்தெடுத்தல்:

ஊட்டச்சத்து

உரங்கள்

கவனிக்க வேண்டியவை

தழைச்சத்து

நீர்ம அம்மோனியம் நைட்ரேட்

ஏதுமில்லை

அம்மோனியம் சல்பேட்

70 பி.பி.எம்மிற்கு அதிகமான கால்சியம் உள்ள மண்ணில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

யூரியா

ஏதுமில்லை

மணிச்சத்து

சூப்பர் பாஸ்பேட்

நீரில் உள்ள திடப்பொருள்கள் நன்கு வடிக்கப்படவேண்டும். நீரின் அமில காரத் தன்மை சரியான அளவு இருப்பது அவசியம்.

பாஸ்போரிக் அமிலம்

நீர்மத் தன்மை மிகுந்தது. அமில காரத் தன்மை சரிசெய்யப்பட்டது. மண்ணில் நுண்ணுாட்டச் சத்துப் பற்றாக்குறையைப் போக்க உதவும்.

சாம்பல்சத்து

நீர்ம பொட்டாசியம் நைட்ரேட்

ஏதுமில்லை

 

நீர்ம பொட்டாசியம் குளோரைட்

அதிகமான 300 பி.பி.எம் குளோரைடு கொண்ட நீரில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

இரும்பு,துத்தநாகம்

கலவை

ஏதுமில்லை

 

  1. தழைச்சத்து உரமிடுதல்
  2. மணிச்சத்து உரமிடுதல்
  3. சாம்பல்சத்து உரமிடுதல்

தழைச்சத்து உரமிடுதல்

  • இது சராசரி பயிர் உற்பத்திக்கு மிக அதிகளவில் தேவைப்படும் மிக முக்கிய உரமாகும். பிற ஊட்டச்சத்துக்களைக் காட்டிலும் தழைச்சத்து மண்ணில் குறைந்த அளவே உள்ளது.

  • ஏனெனில் இச்சத்து மண் அரிப்பு, மண்ணில் அங்ககச் சத்துக்களை நிலைநிறுத்துதல், ஆவியாதல் போன்றவற்றினால் பல்வேறு நிலைகளில் வீணாகி விடுகிறது.

  • பாசன நீரின் வழியே இவ்வுரத்தினை இடும்போது நீரின் தரம் சரியாக இருக்க வேண்டும். எனினும் மணிச்சத்து போன்ற உரங்கள் அளவு இவை பிரச்சினைக்குரியவை அல்ல.

  • நீரற்ற அல்லது நீர்ம அம்மோனியாவை பாசன நீரில் செலுத்தும்போது கால்சியம், மக்னீசியம் பாஸ்பரஸினை வீழ்படிவாக்கும் அளவிற்கு அமில காரத்தன்மை அதிகரித்தல், அல்லது எளிதில் கரையாத கடின மூலக்கூறுகளான மக்னீசியம் அம்மோனியம் பாஸ்பேட் உருவாதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம். அந்த நீரில் பைகார்பனேட்டும் இருக்கும் பட்சத்தில் இவ்விளைவுகளின் தன்மை அதிகரிக்கும்.

  • அம்மோனியம் பாஸ்பேட் வடிவில் இருக்கும் தழைச்சத்தை பாசன நீரில் கலப்பது விபரீத அடைப்புகளை உருவாக்கும்.

  • நீரில் கால்சியம், மக்னீசியம் இருப்பின் அவை தழைச்சத்து உரத்துடன் கலந்து கடினமான பாஸ்பேட் கலவைகளை ஏற்படுத்தும்.

  • யுரேஸ் எனும் நீரின்/நைட்ரஜன் என்ஸைம் மூலக்கூறுகளுடன் சேர்ந்து இரும்புத் தாதினை உருவாக்கும். இந்த என்ஸைம் அற்ற யூரியா மட்டுமே பாசன நீருடன் கலந்து அளிக்கத் தகுந்த சிறந்த தழைச்சத்து உரமாகும்.

  •  எனினும் இந்த 'யுரேஸ்' என்ஸைம் அல்கே அல்லது பிற நுண் உயிரிகள் அதிகளவில் கொண்ட நீரில் காணப்படுகிறது. இவற்றை வடிகட்டி நீக்காவிடில் யூரியாவில் நைட்ரஜனின் நீரியக்க விசையால் அம்மோனியம் அயனிகளை உருவாக்கும்.  

மணிச்சத்து உரமிடுதல்


  • பொதுவாக மணிச்சத்து உரங்களை உரப்பாசனம் வழியே அளிக்க பரிந்துரைக்கப்படுவதில்லை.

  • பெரும்பாலான மணிச்சத்து உரங்கள் அதன் இயற்பியல் மற்றும் வேதித் தன்மையினால் வீழ்படிதலும், பாசனக் குழாய்களில் அடைப்பையும் உண்டாக்குகின்றன.

  • மேலும் மணிச்சத்திற்கு சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்தும் தன்மை அதிகம். ஆனால் இவை அதிகம் இடப்பெயர்வது இல்லை.

நீர் தரத்துடன் மணிச்சத்தின் தொடர்பு


  • நீரில் கால்சியம், மக்னீசியம் சத்துக்கள் இருப்பின் அவை கரைக்க இயலாத பாஸ்பேட் ஆக வீழ்படியும் தன்மை அதிகம்.

  • இக்கால்சியம் மற்றும் மக்னீசியம் பாஸ்பேட்டுகள் சொட்டுவான்கள், பக்கக்குழாய்களில் அடைப்பினை ஏற்படுத்துகின்றன.

  • எனினும் பாஸ்பரஸினை பாஸ்பாரிக் அல்லது சல்பியூரிக் அமிலமாக அளிப்பதன் மூலம் குழாய்ப் பாசனப் பிரச்சினைளைப் போக்கலாம்.

சாம்பல் சத்து உரமிடுதல்


  • சாம்பல் சத்து உரங்களைத் தனியே நீரில் கலந்து அளிக்கும்போது பிரச்சினை ஏதும் இல்லை.

  • எனினும் அதனுடன் பிற உரங்களைக் கலந்து அளிக்கும்போது, கரைதிறன் குறைவு போன்ற விளைவுகள் தோன்றுகின்றன.

  • எடுத்துக்காட்டாக கால்சியம் நைட்ரேட் மற்றும் பொட்டாசியம் சல்பேட் உரங்களைக் கலந்து அளிக்கும்போது அவை வினைபுரிந்து கரையாத கால்சியம் சல்பேட் உருவாகிறது.

வாழைக்கான வாராந்திர உரப்பாசன அட்டவணை: (கி/வாழை/ஒருமுறை இட)

 கன்று நட்ட பின்பு வாரங்கள்

 யூரியா

 மொத்தம் (கி/வாழை)

மியூரேட் ஆஃப் பொட்டாசியம்

மொத்தம் (கி/வாழை)

9-18 வது வாரம் வரை (10 வாரங்கள்)

15

150

8.0

80

19 முதல் 30 வது வாரம் வரை (12 வாரங்கள்)

10

120

10

120

31 முதல் 40 வது வாரம் வரை (10 வாரங்கள்)

7.0

70

12

120

41 முதல் 46 வது வாரம் வரை (5 வாரங்கள்)

---

---

10

50

 மொத்தம்

 ----

 340

 ----

 375

 
சொட்டு நீர்ப் பாசனம் வழியே வாழைக்கு உரமிடும் அட்டவணை

ஒரு ஏக்கருக்குத் தேவையான மொத்த உரங்கள்:

யூரியா

சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்

மியூரேட் ஆஃப் பொட்டாஷ்

431

375

415

625

545

602

 

 

 

திட உரங்களுக்கான அட்டவணை :

கன்று நட்ட நாட்கள்

ஆதாரம்

அளவு (கி/வாழை)

அடி உரம்

ஒற்றை சூப்பர் பாஸ்பேட்/மூரேட் ஆப் பொட்டாசியம்

125/105

30 நாட்கள்

யூரியா

62

75 நாட்கள்

யூரியா/ ஒற்றை சூப்பர் பாஸ்பேட்

62\125

125 நாட்கள்

யூரியா/ ஒற்றை சூப்பர் பாஸ்பேட்

62\125

165 நாட்கள்

யூரியா/ மூரேட் ஆப் பொட்டாசியம்

62\105

210 நாட்கள்

யூரியா

62

255 நாட்கள்

யூரியா/ மூரேட் ஆப் பொட்டாசியம்

62\105

300 நாட்கள்

யூரியா/ மூரேட் ஆப் பொட்டாசியம்

62\105

 

நீரில் கரையும் திட உரங்கள்:

உரங்கள்/கலவை

அளவு கி.கி/ஏக்கர்

19 : 19 : 19

192

00 : 52 : 34

59

13 : 00 : 46

458

யூரியா

337

 

நீரில் கரையும் திட உரங்களுக்கான அட்டவணை:
காலம் தரம்/கலவை மொத்த அளவு(கி.கி) கி.கி/நாள்/ஏக்கர்
1-90 நாட்கள்

19 : 19 : 19

192

2.13   

 

13 : 00 : 46

93

1.033

 

யூரியா

70

0.777

91-150 நாட்கள்

00 : 52 : 34

 59

0.983

 

13 : 00 : 46

82.5

1.376

 

யூரியா

117.5

1.958

151-300 நாட்கள்

13 : 00 : 46

282.5

1.884

 

யூரியா

150

1.000

 

கிராண்ட் நைன் இரக வாழைக்கான உரப்பாசன அட்டவணை:

பரிந்துரைக்கப்பட்ட அளவு: 200:35:300 கி தழை, மணி, சாம்பல்/வாழை
எக்டருக்கு 100 சதவீத மொத்த பரிந்துரை அளவையும், நீரில் கரையும் உரங்களாக 635:111.13:953 கி.கி தழை:மணி:சாம்பல் உரங்களையும் அளிக்கவும்.
இடைவெளி 1.5 X 2.1 மீ (3175 வாழைகள்/எக்டர்)

வ.எண்

பயிர் நிலை

காலம்

உரக்கலவை

மொத்த உரம்
(கி.கி/எக்டர்)

1

வேர்விடும் (துளிர்விடும்) பருவம்

9-18 வது வாரம்

(10 வாரங்கள்)

13-0-45
யூரியா

423.13
294.04

2

வளர்ச்சிப் பருவம்

19-30 வது வாரம் (12 வாரங்கள்)

13-0-45
யூரியா

846.26
450.50

3

குலை தள்ளும் பருவம்

31-42 வது வாரம் (12 வாரங்கள்)

யூரியா
0:0:50

275.60
609.92

4

காய் வளர்ச்சி மற்றும் அறுவடைப் பருவம்

43-45 வது வாரம்

(3 வாரங்கள்)

0:0:50

152.48

 

  கன்று நட்டு இரண்டாவது மாதத்தில் பாஸ்பரஸ்-எஸ்.எஸ்.பி யாக 111.13 x 6.25 = 695 கி.கி/எக்டர் இடப்படுகிறது.

பூவன், ரொபஸ்டா, குட்டை கேவண்டிஸ் இரகங்களுக்கான உரப்பாசன அட்டவணை:

பரிந்துரைக்கப்பட்ட அளவு: 100:35:330 கி தழை:மணி:சாம்பல்/வாழை   

100% பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் நீரில் கரையும் உரங்கள் 317.5:1047.75 கி.கி நைட்ரஜன்: பொட்டாஷ்/எக்டர் இடலாம்.

இடைவெளி 1.5 X 2.1 மீ (3175 வாழைகள்/எக்டர்)

வ.எண்

பயிர் நிலை

காலம்

உரக்கலவை

மொத்த உரம் (கி.கி/எக்டர்)

1

வேர்விடும் (துளிர்விடும்) பருவம்

9-18வது வாரம்

(10 வாரங்கள்)

13- 0- 45
யூரியா

  465.20
75.45

2

வளர்ச்சிப் பருவம்

19-30வது வாரம்

(12 வாரங்கள்)

13- 0- 45
யூரியா

  930.40
82.00

3

குலை தள்ளும் பருவம்

31-42வது வாரம்

(12 வாரங்கள்)

யூரியா
0:0:50

137.80
670.56

4

காய் வளர்ச்சி மற்றும் அறுவடைப் பருவம்

43-45வது வாரம்

(3 வாரங்கள்)

0:0:50

167.64

‘பாஸ்பரஸ் உரம் எஸ்.எஸ்.பியாக கன்று நட்ட 2 வது மாதத்தில் 111.13 x 6.25 = 695 கி.கி/எக்டர் என்ற அளவில் இடவேண்டும்.

நேந்திரன் இரக வாழைக்கான உரப்பாசன அட்டவணை:

பரிந்துரைக்கப்பட்ட அளவு: 150:90:300 கி தழை:மணி:சாம்பல்/வாழை   

100% பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் 476.25:953 கி நைட்ரஜன்:பொட்டாஷ் நீரில் கரையும் உரங்களை எக்டருக்கு இடலாம்.  

இடைவெளி:1.5 X 2.1 மீ (3175 வாழைகள்/எக்டர்)

வ.எண்

பயிர் நிலை

காலம்

உரக்கலவை

மொத்த உரம் (கி.கி/எக்டர்)

1

வேர்விடும் (துளிர்விடும்) பருவம்

9-18வது வாரம்

(10 வாரங்கள்)

13 -0- 45
யூரியா

 423.13
190.69

2

வளர்ச்சிப் பருவம்

19-30வது வாரம்

(12 வாரங்கள்)

13- 0- 45
யூரியா

846.26
278.02

3

குலை தள்ளும் பருவம்

31-42வது வாரம்

(12 வாரங்கள்)

யூரியா
0:0:50

609.92
206.69

4

காய் வளர்ச்சி மற்றும் அறுவடைப் பருவம்

43-45வது வாரம்

(3 வாரங்கள்)

0:0:50

152.48

‘பாஸ்பரஸினை எஸ்.எஸ்.பி உரமாக கன்று நட்ட இரண்டாவது மாதத்தில் 90 X3.17 X 6.25 = 1785.94 கி.கி/எக்டர் என்ற அளவில் இடவும்.

உரப்பாசன முறைகள்:

உரங்கள், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்ற வேளாண் இரசாயனங்களை சொட்டு நீர்ப் பாசன அமைப்பினுள் கீழ்க்கண்ட வழிகளில் செலுத்தலாம்.

  1. புறவழி அழுத்தத் தொட்டி
  2. வெஞ்சுரி அமைப்பு மற்றும்
  3. நேரடியாகச் செலுத்தும் முறை

(i) புறவழி அழுத்தத் தொட்டி:

  • இத்தொட்டியினுள் திட அல்லது திரவ நிலை உரங்கள் வைக்கப்பட்டிருக்கும். தொட்டியிலிருந்து பிரதான பாசனக் குழாய்க்கு ஒருபுற வழி அமைக்கப்பட்டிருக்கும். நீரானது இத்தொட்டியினுள் பாய்ந்து செல்லும்போது உள்ளே வைக்கப்பட்டுள்ள உரங்களைக் கரைத்து எடுத்துச் செல்கிறது.

  • தொட்டியின் திறப்பிற்கும், நீர் வெளிச் செல்லும் அமைப்பிற்கும் இடையே ஒரு அழுத்தமானி நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் நீர் செல்லும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வால்வாக செயல்படுகிறது.


(ii) வெஞ்சுரி அமைப்பு/செலுத்துவான்:

  • நீர் பாயும் பிரதானக் குழாயிலிருந்து நீரின் வேகத்தை அதன் அமைப்பின் மூலம் அதிகரிப்பதால் அழுத்தத்தின் மூலம் (வெற்றிடத்தில்) திறந்த வெளித் தொட்டியில் உள்ள உரங்கள் நீர் வழியே உள்ளிழுத்துச் செல்லப்படுகிறது.

  • வால்வுகளின் மூலம் நீர் உட்புகும் வீதம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு சிக்கனமாக எளிய முறையாகும்.


(iii) நேரடியாகச் செலுத்தும் முறை:

  • இம்முறையில் பாசன நீருடன் உரமானது ஒரு பம்ப்பின் வழியே செலுத்தப்படுகிறது. இப்பம்ப்பின் அளவு ஆற்றலுக்குப் பயன்படுத்தும் ஆதாரத்தைப் பொறுத்தது.

  • இந்த பம்ப் ஆனது உள்ளெரி பொறி, மின்சார மோட்டார் அல்லது நீர்ம அழுத்தத்தால் இயங்கக் கூடியது.

  • மின்சார பம்ப் தன்னிச்சியாக கட்டுப்படுத்தக் கூடியது. எனேவ தான் பயன்படுத்த எளிதானது. எனினும் மின்சார ஆற்றலைப் பொறுத்தே இதன் செயல்பாடு இருக்கும்.

  • நீர் பாயும் அளவிற்குத் தகுந்தாற்போல் சீரான அளவில் உரமானது உட்செலுத்தப்படவேண்டும்.

  • உட்செலுத்தும் உரத்தின் அளவினை கூடுமான வரை கட்டுப்படுத்த இயலும். இதில் அதிக இழப்பொன்றும் இல்லை. மேலும் செலவு குறைவே.

  • இந்நீர்ம அழுத்த பம்பின் மற்றொரு இன்றியமையாத அம்சம் என்னவெனில் பாசனக் குழாயில் நீர் பாய்வது நின்றுவிட்டால், செலுத்தப்படும் உரமும் நிறுத்தப்பட்டு விடும். எனேவ தான் உரப் பாசனத்திற்கு இது சிறந்த முறையாகும்.

  • உரப்பாசனத்தில் வடிகட்டிக்கு முன்பும் அதை அடுத்தும் இரு உட்செலுத்தும் பகுதிகள் தரப்பட்டுள்ளன.

  • இவ்வமைப்பின் மூலம் வடிகட்டத் தேவையில்லாத உரங்களை நேடியாகவும், மணல் போன்ற பொருள்கள் கலந்த உரங்களை வடிகட்டிப் பின்பு அளிக்கவும் முடியும். இதனால் உராய்வுகள் தடுக்கப்பட்டு, சேதம் குறைக்கப்படுகின்றது.

  • இந்த உட்செலுத்தும் அமைப்பின் கொள்ளளவு இடும் உரக்கரைசலின் செறிவு, விகிதம் மற்றும் காலத்தைப் பொறுத்து வேறுபடுகிறது.

மேலே செல்க


நீரில் கரையும் உரங்களைக் கீழ்கண்ட அமைப்புகளின் மூலம் செலுத்தலாம். அவை

  • வெஞ்சுரி உட்செலுத்தி
  • உரத்தொட்டி
  • உட்செலுத்தும் பம்பு
  • தானியங்கி உரப்பாசன கட்டுப்படுத்துவான்
  • வெளிப்புற விசை மூலம் உட்செலுத்தும் பம்பு

வெஞ்சுரி உட்செலுத்துவான்


இது ஒரு விலை மலிவான, எளிய கருவி. உரமானது இக்கருவியில் உருவாகும் பகுதி வெற்றிடத்தினுள் உறிஞ்சப்பட்டுப் பின் சுருங்கும்போது வெளிப்படும் அதிக அழுத்தத்தினால் பாசன நீரில் சொட்டு சொட்டாக விடப்படுகின்றது. இவ்வாறு வெண்சுரியின் வெற்றிடக் குழாயினால் உறிஞ்சப்பட்ட உரமானது பாசன நீரினுள் சொட்டு சொட்டாக வெளியிடப்படுகின்றது. இவ்வாறு வெண்சுரி அமைப்பு உரத்தொட்டியைக் காட்டிலும் சீராகச் செயல்பட்டாலும், அழுத்தம் அதிகரிக்கும்போதும், பாசன நீர் மற்றும் உரத்தின் கலப்பு விகிதம் வயலில் மாறுபடலாம். வெண்சுரியின் உறிஞ்சும் வீதம் மணிக்கு 30 முதல் 120 லிட்டர் உரக்கரைசல் ஆகும்.

உரத்தொட்டி


இம்முறையில் பாசன நீரானது பிரதானக் குழாயினை அடையும் முன்பே நீர்ம அல்லது கரையும் திட உரங்களைக் கொண்ட தொட்டியினுன் அனுப்பப்பட்டுப் பின்பு மீண்டும் பிரதானக் குழாயின் வழியே செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியிலும் பிரதானக் குழாயிலும் பொதுவாக அழுத்தம் ஒரே அளவு இருந்தாலும் தொட்டியின் உட்செல்லும் மற்றும் வெளிவரும் குழாய்களில் அழுத்தம் குறைக்கும் வால்வுகள் மூலம் அழுத்தமானது குறைக்கப்படுகிறது. இதனால் பிரதானக் குழாயிற்கு செல்லும் நீர் உரத்தொட்டியில் விழுமாறு செய்து, கரைக்கப்பட்ட உரக்கலவையை பாசன நீருடன் எடுத்துச் செல்லுமாறு செய்யப்பட்டுள்ளது. இம்முறையில் ஆரம்பத்தில் பாசன நீரில் உரக்கலவையின் செறிவு அதிகமாக இருக்கும். நேரம் செல்லச் செல்ல செறிவு குறையும். இதனால் வயலில் இடப்படும் உர அளவு சீராக இருப்பதில்லை. இவ்வுரத்தொட்டிகள் 90, 120 மற்றும் 160 லிட்டர் கொள்ளளவில் கிடைக்கின்றன.

உரம் உட்செலுத்தும் பம்ப்


இவை பாசன நீரின் அழுத்தத்தினால் இயங்கும் பிஸ்டன் அல்லது டயப்ரம் பம்ப்புகள் இதன் உட்செலுத்தும் வீதம் பாசன நீரின் வேகத்திற்கு ஏற்றாற்போல் அமையும். உட்செலுத்தும் உரத்தின் அளவினை கூடுமானவரை கட்டுப்படுத்த இயலும். இதில் செலவு குறைவதோடு, அதிக இழப்பொன்றும் இல்லை. இதன் முக்கிய அம்சம் பாசனக் குழாயில் நீர் பாய்வது நின்றுவிட்டால் செலுத்தப்படும் உரமும் நின்றுவிடும். உரப்பாசனத்திற்கு இது ஒரு சிறந்த முறை. வெற்றுக்குழாயில் உறிஞ்சப்படும் உரக்கரைசலின் அளவு மணிக்கு 40 முதல் 160 லிட்டர் வரை ஆகும்.

தானியங்கி உரப்பாசனக் கட்டுப்படுத்தும் கருவி


இது சரியான உரப்பாசன அளவிற்காகப் பொருத்தப்பட்டுள்ளது. கீழ்கண்டவை இவ்வமைப்பின் பயன்பாடுகள் ஆகும்.

  • இது பயிர்களுக்கு சரியான அளவில் உரிய நேரத்தில் உரமிட உதவுகிறது.

  • இது 20% உரத்தினை மிச்சப்படுத்துகிறது.

  • 10-15% மகசூல் அதிகரிக்கப்படுகிறது.

  • இதனை அமைப்பது எளிது. (பொருத்துவது)

  • அமில காரத் தன்மை, மின் கடத்துத்திறன், மொத்த கரையும் திண்மங்களை கட்டுப்படுத்துகிறது.

  • பெரிஸ்டால்டிக் பம்ப்புகள் இல்லை.

  • தொழிற்சாலைகளில் தர நிர்ணயம் பெற்றது

  • குறைந்தளவு பராமரிப்பின் மூலம் நீண்ட நாள் பயன்பாடு.

  • மண்ணில்லாத செடி வளர்ப்புக்கும் கூட ஏற்றது.

உரப்பாசனத்தில் பயன்படுத்தும் உரங்களின் தன்மைகள்

  • பாசன நீரில் கலந்து அளிக்கும் எந்த ஒரு இரசாயனமும் கீழ்கண்ட பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். அவை

  •  (i) அரிப்பினை ஏற்படுத்துவதாக இருத்தல் கூடாது, பிளாஸ்டிக் குழாய்களை பாதிக்கும், அடைப்பினை ஏற்படுத்தும் வகையில் இருத்தல் கூடாது.

  • (ii) வயலில் உபயோகிக்கத் தகுந்ததாக இருத்தல் வேண்டும்.

  • (iii) மகசூலை அதிகரிக்காவிடிலும், குறைப்பதாக இருத்தல் கூடாது.

  • (iv) நீரில் கரையக்கூடியதாக, வினைபுரியாததாக இருத்தல் வேண்டும்.

  •  (v) பாசன நீரில் உள்ள உப்பு அல்லது பிற மூலக்கூறுகளுடன் இரசாயனங்கள் வினைபுரிவதாக இருத்தல் கூடாது.

  • அதோடு இரசாயனம் அல்லது உரங்கள் வயல் முழுவதும் சீராகப் பரவி இருத்தல் வேண்டும். இதற்கு சரியான அளவு உரங்களை நீருடன் கலந்து, சீரான நீர் பாய்ச்சல், நீர் பாயும் வேகத்தை கவனித்தல் மற்றும் உரங்களின் தன்மை பற்றிய அடிப்படை அறிவு அவசியம்.

  • குழாய் அடைப்பினைத் தவிர்க்க சொட்டு நீர்ப் பாசனம் வழியே செலுத்தப்படும் உரங்கள் சில குறிப்பிட்ட தன்மையினைப் பெற்றிருக்க வேண்டும்.

  • உரங்கள் முற்றிலும் கரையக்கூடியதாக இருத்தல் அவசியம். ஒன்றிற்கு மேற்பட்ட உரங்கள் அல்லது அதிக செறிவு கொண்ட கலவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பின் அவை ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து சொட்டு நீர்க் குழாய்களில் வீழ்படிவை ஏற்படுத்துவதாக இருத்தல் கூடாது.

  • உரம் உட்செலுத்தும் திறப்புகள் வடிகட்டிக்கு முன்பும், பின்பும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • வடிகட்டத் தேவையற்ற உரங்கள் புற வழி குழாய்கள் மூலம் அனுப்பலாம்.

  • குழாய்களில் அரிப்பு மற்றும் வால்வுகள் சேதமடையாமல் இருக்க திரை மற்றும் மணல் வடிகட்டிகளைப் பயன்படுத்தலாம்.

  • உரத்தொட்டியிலிருந்து உரக்கரைசல் பிரதானக் குழாய்க்கு அனுப்பப்படும் இடத்திலும், உட்செலுத்தும் குழாயிலும் திரை அல்லது வலை வடிகட்டிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • உரத்தினை உறிஞ்சும் குழாயின் பக்கங்கள் டைல் உட்செலுத்தியில் வடிகட்டி அல்லது அழுத்தம் குறைக்கும் கருவிகள் பொருத்துதல் வேண்டும்.

  • பிரதானக் குழாயிலேயே உட்செலுத்தும் திறப்புகள் அமைக்கப்படவேண்டும். துணைக்குழாய் பிரியும் முன்பே உரங்கள் நன்கு நீருடன் கலக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • உட்செலுத்தும் அமைப்பின் கொள்ளளவு உரக்கலவையின் செறிவு, வீதம் மற்றும் உரமிடும் இடைவெளியைப் பொருத்தது.

  • பொதுவாக குறைந்த அளவு உரக்கரைசல் அடிக்கடி இடுவதற்கு விலை மலிவான, சிறிய அளவிலான அமைப்புகள் போதுமானது.

  • பயிர் மற்றும் சொட்டுவான்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடைவெளியைப் பொருத்து உரமிடும் அளவும், இடும் காலமும் வேறுபடும்.

நன்மைகள்

  1. மகசூல் 25-30 சதவீத அளவிற்கு அதிகரிக்கும்

  2. ஏற்றுமதி தரம் வாய்ந்த உற்பத்தி செய்ய முடியும்

  3. 25-30 சதவீத அளவிற்கு உரங்களின் பயனபாடு குறையும்

  4. உரங்களை துல்லியமாக வேண்டிய அளவு அளிக்கலாம்

  5. உரங்களை சரியான அளவில் ஒரே மாதிரி பரவச் செய்யலாம்

  6. பயிர் வினையியல் நிலைகளைப் பொருத்து ஊட்டச்சத்துகளின் தேவையை பூர்த்தி செய்யலாம்

  7. அமிலத் தன்மையால் மண் மற்றும் நீரில் உள்ள உப்புக்களை நடுநிலைப்படுத்த உதவுகிறது.

  8. அமிலத் தன்மையால் சொட்டுவான்களில் அடைப்பு ஏற்படுதலை தவிர்த்து, சொட்டு நீர் அமைப்பை சுத்தப்படுத்த உதவுகிறது.

  9. நீரில் கரைந்து வழிந்தோடுதல், ஆவியாதல், மண்ணில் மரையாமல் அப்படியே இருத்தல் போன்றவைகளால் எந்த ஊட்டச்சத்து இழப்பு ஏற்படாது

  10. ஒரே கரைசலில் பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை கலந்து அளிக்கமுடியும்

  11. தேவைப்பட்ட அடர்த்தியில் உரங்களை கரைத்து அளிக்கமுடியும்

  12. உரம் மற்றும் நீரின் பயன்படுத்துவது மேம்படுகிறது.

  13. நேரம், வேலையாட்கள், அதற்கான உழைப்பு குறைகிறது.

  14. இலகுவான மண்ணும் சாகுபடி செய்ய ஏற்றதாக இந்த உரப்பாசனத்தால் மாற்றமுடியும்

குறைபாடுகள்

  1. வயலில் வேலை செய்பவர்களுக்கு தீங்கு விளையும்

  2. நீர்த் தொட்டிக்கே திரும்பி நீர் வந்து விடும், அதனால் வெற்றிட வால்வுகள் பொருத்தப்படவேண்டும்

  3. நீரில் கரையாத உரங்கள் இந்த உரப்பாசன முறைக்கு ஏற்றதல்ல.(சூப்பர் பாஸ்பேட்)

  4. உரங்களின் அரிப்புத் தன்மையால் குழாய்கள் நாளடைவில் அரித்துவிடும்

  5. அமில காரத் தன்மை விளைவால் குழாய்கள் மற்றும் சொட்டுவான்களில் பாஸ்பேட் படிவு ஏற்படும்

  6. உரப்பாசன அமைப்பு ஏற்படுத்துவதற்கு அதிக செலவாகும்

 

மேலே செல்க