தேசிய நிறுவனங்கள்

பன்னாட்டு சர்வதேச நிறுவனங்கள்

மாநில அளவிலான நிறுவனங்கள்

திட்டங்கள்

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), பெங்களூர்


இந்நிறுவனம் பழங்கள், காய்கறிகள், அலங்காரச் செடிகள். மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள், காளான் போன்ற பயிர் வகைகளில் நிலையான அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கென தொடங்கப்பட்ட ஒரு பழம்பெரும் நிறுவனமாகும். இது சுருக்கமாக ஐ.ஐ.ஹச்.ஆர் (IIHR) என அழைக்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் பெங்களூரில், 1976, செப்டம்பர் திங்கள் 5ம் நாள் தொடங்கப்பட்ட முதல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் இதுவாகும்.


ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய செயல்பாடுகள்:

  1. பழங்கள், காய்கறிகள், அலங்காரச் செடிகள், மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள், காளான் போன்ற வெப்ப, மிதவெப்ப மண்டலத் தோட்டக்கலைப் பயிர்களில் அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும், அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்தலும்.

  2. மேற்கண்ட நோக்கங்களுக்காக பிற தேசிய மற்றம் சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

  3. தோட்டக்கலை பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் நவீன தொழில்நுட்பம்களில் மனித ஆற்றலை அதிகரிக்க முறையான பயிற்சியளித்தல்.

  4. தோட்டக்கலை பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களின் களஞ்சியமாக இந்நிறுவனம் திகழ்கிறது.

தொடர்பு முகவரி
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்,
ஹெஸர்கட்டா லேக் போஸ்ட்
பெங்களூர் – 560 089
தொலைபேசி  : 28466353 , 28466471
இணையதளம் : http://www.iihr.ernet.in

 

தேசிய வாழை ஆராய்ச்சி மையம்,திருச்சிராப்பள்ளி


இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையின்படி 1993 ஆகஸ்ட் 21ல் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாட்டில் திருச்சியில் நிறுவப்பட்டது.


ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய வேலைகள்

  1. வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரிக்கத் தக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்த அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்.

  2. பழங்கால மற்றும் உயிர்த் தொழில்நுட்ப முறைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட இரகங்களை உருவாக்குதல் மற்றும் வேறுபாடுகளைப் பராமரித்தல்.

  3. வாழை பற்றிய அனைத்துத் தகவல்களுக்கும் களஞ்சியமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் மகசூல் அளவை அதிகரிக்கும் தகவல்களைப் பரப்பவும்,தேசிய வாழை பண்பகப் பண்ணையாகவும் செயல்படுகிறது.

  4. வாழையில் இடம் சார்ந்த இரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் ஆராய்ச்சியினை ஒருங்கிணைத்து வழிநடத்துவதாகவும் இந்நிலையம் திகழ்கின்றது.
    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
    தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், தோகமலை ரோடு, தாயனூர் அஞ்சல்,திருச்சிராப்பள்ளி – 620 102, தமிழ்நாடு.
    தொலைபேசி : 91 – 431 – 2618104, 2618106,
    தொலைபிரதி : 91 – 431 – 2618115
    மின்னஞ்சல் : hrcbdirector@sancharnet.in, directornrch@gmail.com


 

மத்திய மிதவெப்பமண்டல தோட்டக்கலை நிறுவனம்,(CISH), லக்னோ


மத்திய மித வெப்ப மண்டல தோட்டக்கலைக்கான நிறுவனமானது செப்டம்பர் 4,1972 ஆம் ஆண்டில், மத்திய மாம்பழம் ஆராய்ச்சி நிலையமாக பெங்களூர், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் துவங்கப்பட்டது.


ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய குறிக்கோள்

  1. உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக பொதுவான மற்றும் பன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன், பெரு மற்றும் சிறு குறைவெப்பமண்டல பழங்களுக்கான மதிப்பு சங்கிலியை உருவாக்குதல்.
  2. மேற்கூறிய பழவகைப் பயிர்களின் தேசிய பொருட்பாதுகாப்பு இடமாகச் செயல்படுதல்.
  3. மனிதவள வளர்ச்சியின் மையமாக செயல்படுதல் மற்றும் பொருள் தேக்கிவைத்தவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குதல்.
  4. மேற்கூறிய செயல்பாடுகளை செயல்முறைப்படுத்துவதற்கு தேசிய மற்றும் பன்னாட்டு முகமைகளோடு இணைப்பு வைத்துக் கொள்ளுதல்.

    தொடர்புக்கான முகவரி:
    மத்திய மித வெப்பமண்டலத் தோட்டக்கலைக்கான நிறுவனம் (இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்), ரெஹ்மான்கெரா, பி.ஓ.கக்கோரி, லக்னோ, உத்திர பிரதேசம், இந்தியா, 227107
    தொலைபேசி எண் : 91 – 0522 – 2841025
    தொலைநகல் : 91 – 0522 – 2841022,23
    மின் அஞ்சல் : director@cish-ernet.in

மேலே செல்க

  • வெப்பமண்டல வேளாண்மை பன்னாட்டு நிறுவனம் (IITA), நைஜீரியா

  • தைவான் வாழை ஆராய்ச்சி நிறுவனம், (TBRI), தைவான்.

  • ஆசியா மற்றும் பசுபிக் வாழை வலையமைவு (BAPNET)

  • தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்.

  • வாழை மற்றும் தோட்டப்பயிர் மேம்பாட்டிற்கான பன்னாட்டு குழு அமைப்பு

  • பன்னாட்டு பயிர் மரபியல் வளங்கள் நிறுவனம் (IPGRI)

  • பன்னாட்டு மாவுப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம்.

  • பன்னாட்டு உயிர்துறை நிறுவனம், இத்தாலி


பன்னாட்டு  வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம் (IITA), நைஜீரியா


பன்னாட்டு வெப்பமண்டல வேளாண்மை நிறுவனமானது (IITA) ஆப்ரிக்காவின் முன்னோடி ஆராய்ச்சி நிறுவனமாகும்.இவை பசி, வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கான தீர்வினைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. வளர்ச்சிக்கான ஆராய்ச்சியானது, துணை சஹாரன் ஆப்ரிக்காவின் வளாச்சித் தேவைகளைக் குறிக்கிறது. இந்த நிறுவனமானது சக நிறுவனங்களுடன் கூட்டு செயல்முறை மேற்கொண்டு பயிர்த்தரம் மற்றும் உற்பத்தித் திறனை உறுதி செய்கிறது. மேலும் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் சிரமங்களைக் குறைத்து, வேளாண்மையிலிருந்து வருமானத்தை பெற உதவுகிறது. கீழ்வரும் பயிர்களில் ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. தட்டைப்பயிறு, சோயா மொச்சை, வாழை, தானி(தாவரம்),மரவள்ளி மற்றும் மக்காச்சோளம்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
பன்னாட்டு வெப்பமண்டல வேளாண்மை நிறுவனம்(IITA), தலைநகரங்கள்,பிஎம்பீ 5320, இபாடன், ஒயோ மாநிலம், நைஜீரியா.
போன் : +234 27517472, (0), 8039784000, (0), 8055055954, (0) 8034035281, (0)8034035282, (0) 8034035283,
வாய்ப் (VOIP) (வழி), அமெரிக்கா  - 1- 201 – 6336094.
தொலைநகல் : இன்மார்சாட் (INMARSAT) : 873761798636
மின்அஞ்சல் :iita@cgiar.org

தைவான் வாழை ஆராய்ச்சி நிறுவனம்(TBRI),தைவான்


தைவான் வாழை ஆராய்ச்சி நிறுவனம், 229 பண்பகத் தொகுதிகளைக் கொண்டது. இதில், மணிலா, இரு மய சந்ததிகள், மூன்று மய சந்ததிகள், நான்கு மய சந்ததிகள் ஆகியவை உள்ளடங்கும்.மேலும் இந்நிறுவனம் ஃப்சேரியம் ஆக்ஸிஸ்போரம் சிற்றினத்திற்கு எதிர்க்கும் திறன் கொண்ட கொடிக்கள்ளி மாற்றுருவங்களான குயூபென்ஸ் ரேஸ் 4, பார்மோசனா மற்றும் டைசியோ 1 போன்றவற்றை வாழை சாகுபடி செய்வர்களுக்கு, தைவானில் வாழைத் தொழிற்சாலையை நிலைப்பதற்காக வழங்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள முகவரி:
தைவான் வாழை ஆராய்ச்சி நிறுவனம் (TBRI), தபால் பெட்டி எண் : 18, சியுஜீ, பிங்கடங், தைவான், ஆர்.ஓ.சி.
  http://www.banana.org.tw/.
தொடர்பு கொள்ள வேண்டிய நபர் : ச்சி – ஹான் சென், சிஹ் – பிங்க் – ச்சோ
தொலைபேசி /தொலைநகல் : - + 886 (8) 739 2111/0595
மின்அஞ்சல் : tbri@ksts.seed.net.tw

பன்னாட்டு உயிர்துறை நிறுவனம், இத்தாலி


பன்னாட்டு உயிர்துறையானது உலகின் முன்னனி நிறுவனமாகும்.கீழ்வரும் செயல்முறைகளின் மூலம் வேளாண்மை உயிர்பல் வகைமை ஆராய்ச்சியினால் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நிறுவனமாக விளங்குகிறது.   

  1. சிறப்பான ஊட்டச்சத்து குறிப்பாக வளர்ச்சியடையும் நாடுகளில் நிலைக்கும் பண்ணை செயல்முறைகளின் மூலம் எதிர்கால உணவு வழங்குதலைப் பாதுகாத்தல்.

  2. ஒவ்வொருவரும் தங்களின் தேவைக்கேற்ப உணவுகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்ய பாதுகாப்பை தருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
உயிர்பல்வகைமை தலைநகரங்கள்,
வியா டீய் டிரீ டெனாரி 472/எ
00057 மக்காரீஸ் (ஃபியூமிசினோ), ரோம், இத்தாரி)
தொலைபேசி : (39 – 06) 61181, தொலைநகல் : (39 – 06) 61979661
மின்அஞ்சல் : bioversity (at) cigar.org

ஆசியா மற்றும் பசுபிக் வாழை வலையமைவு (BAPNET)


வாழையில் கூட்டு ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்கு, 1991 ஆம் ஆண்டு, வாழை ஆசியா – பசிஃபிக் வலையமைவை (ASPNET) செயல்படுத்தியுள்ளது. இதனை 2002  ஆம் ஆண்டு (BAPNET) ஆசியா மற்றும் பசுபிக் வாழை வலையமைவு எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்த வலையமைவில் 13 நாடுகளும், 2 ஆராய்ச்சி நிறுவனங்களும் உள்ளடங்கும்.வாழை ஆசியா - பசிஃபிக் வலையமைவு, வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆசியா பசிஃபிக் குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. மேலும் இவை வலையமைவில் பங்களிக்கும் அனைத்து தேசய நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களாலான சிறுகுழுக்களால் வழிகாட்டப்படுகிறது. மேலும் மண்டல ஆராய்ச்சி அஜெண்டாவின் முன்னேற்றத்தினை மறுசீராய்வு செய்யவும் வலையமைவுக்கான எதிர்கால முன்னுரிமைகள் மற்றும் செயல்களை கையாளும் சூழ்ச்சிகளைப் பற்றி ஆய்வுரை செய்யவும் வருடாவருடம் இக்குழு சந்திக்கிறது. பிலிப்பைன்ஸில் உள்ள உயிர் பல்வகைமை மண்டல அலுவலகமானது வலையமைவுக்கான நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்குகின்றது.

தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் :


  • 19 ஆராய்ச்சி மையங்களில்,ஒன்றான வேளாண்மை மற்றும் வேளாண் உணவு வலையமைவாக, கனடாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றம் வளர்ச்சி மையம் விளங்குகிறது.

  • கியூபக்கில் உள்ள செயின் ட் – ஜீன் – சர் – ரிச்செலியூவில் அமைந்துள்ளது. மேலும் நிலையான பயிர் உற்பத்தி, பூச்சி மேலாண்மை மற்றும் அறுவடைக்குப் பின் தோட்டக்கலை பயிர்களின் தரத்தினை பாதுகாத்தல் ஆகியவற்றில் ஆராய்ச்சியை நடத்துவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

  • தோட்டப்பயிர்கள்,மரப்பழங்கள், சிறுபழங்கள், அழகுச் செடிகள் மற்றும் புதிய பயிர்களின் விற்பனையில் ஆராய்ச்சியாளர்கள் சிறந்து விளங்கச் செய்கின்றனர்.

  • அறிவுத்திறனை வளர்ச்சியடையச் செய்து,பரிமாற்றம் செய்வதற்கும்,புதிய தொழிற்நுட்பங்களை உருவாக்குவதற்கும், புதுமையான பொருட்களை உற்பத்தி செய்யவும்,சுற்றுப்புறத்தை பாதுகாத்து, மனித உடல்நலத்தை பேணுவதற்கும், உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை குறைக்கவும் வழிவகுக்கிறது.

  • இம்மையத்தின் தகுதிவாய்ந்த மற்றும் அனுபவமிக்க ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அல்லது அரசு மையங்களில் பணிபுரிபவர்களுடன் இணைந்து கூட்டு செயல்முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

  • இம்மையமானது மூன்று துணை ஆராய்ச்சி நிலையங்களை மேலாண்மை செய்கிறது.இதில் எல் 1. அகடீ மற்றும் செயின்ட் – கிலோ டில்ட் என்னும் தாது மணல் மற்றும் பண்ணை மக்கு மண் தோட்டக்கலை ஆராய்ச்சியில் சிறப்பு பெற்ற இப்பழத்தோப்புகளை செயல்படுத்தும் ஃபிரிலைஸ்பர்க் ஆகிய நிலையங்களும் ஆகும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம், 430 குயின் (பெளலிவார்டு)
செயின்ட்(ஜீன் – சர் – ரிச்சிலியூ – கியூபக்)
J3B (30 000 00 0)
தொலைபேசி எண் : 450 – 515 – 2002
தொலைநகல் :450 – 346 – 7740

பன்னாட்டு வாழை மற்றும் தோட்டப்பயிர் மேம்பாட்டிற்கான குழு அமைப்பு


இந்த பணித்திட்டமானது, தங்களின் கூட்டு அமைப்புகளுடன் இணைந்து சிறிய அளவு வாழை உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

  • இதன் மூலம் மரபியல் வேறுபாட்டினை பாதுகாத்து, பண்பு விரித்துரை செய்து,பரப்புவதற்காக செயல்படுகிறது.

  • மேலமை பயிர்வகைகள் உருவாக்கி, அதனை விவசாயிகளின் வயல்களில் சோதனை செய்தல்(மூலக்கூற்று மற்றும் பாரம்பரிய முறைகள்)

  • நிலையான உற்பத்தி முறைகளை உருவாக்கி, அறுவடைக்குப்பின் மதிப்பினைக் கூட்டுவதற்கான வாய்ப்புகளை கண்டறிதல்

  • முக்கிய பதிப்புகளைப் பற்றி செய்திகளைப் பரப்பி, விழிப்புணர்வை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முயற்சிகளுக்கு உதவுதல்

  • மண்டல மற்றும தேசிய தேவைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் ஒருங்கிணைந்த பதிலுணர்வினை உருவாக்குதல் மற்றும் சரியான தீர்வினை செயல்படுத்துவதை ஊக்குவித்தல்.

  • இந்நிறுவனத்தின் இணையதளத்தில் பல்வேறுபட்ட மூசா இனங்கள்,சர்வதேச அளவில் வாழை ஆராயச்சி நிலையங்கள்,அறுவடைப் பின்சார் பயன்பாடுகள், விற்பனை மற்றும் வெளியீடுகள் போன்ற வாழை பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

  • 1980களில் கருப்பு சிகாடோகா எனும் பேரழிவு ஏற்படுத்தும் பூஞ்சாணத் தாக்குதலால் வாழையை நம்பி வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான சிறு விவசாயிகள்,  ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பேரிழப்பைச் சந்தித்த சமயத்தில் இக்குழு அமைப்பு உருவாக்கப்பட்டது.அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய உணவாக வாழை இருந்தது.எனவேதான் இதுபோன்ற பேரழிவை ஏற்படுத்தும் நோய்களிலிருந்து காத்துக் கொள்ள ஆங்காங்கு செயல்படும் ஆராய்ச்சி நிலையங்கள் போதாதென இக்குழு அமைப்பு தொடங்கப்பட்டது. 1985ல் தொடங்கப்பட்ட இப்பன்னாட்டுக் குழு,1994 மே லிருந்து பன்னாட்டுப் பயிர் மரபியல் ஆதார நிறுவனத்துடன் சேர்ந்து சர்வதேச (பன்னாட்டு) வேளாண் ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவின் உதவியுடன் செயல்படத் தொடங்கியது.

1990, பி.டி, டி லா லிரோன்டி, பார்க் சயின்டிபிக் அக்சோபோலிஸ் II, 34397 மான்ட்பெல்லியர், பிரான்ஸ்
தொலைபேசி : (33) 467611302
தொலைபிரதி : (33) 467610334
மின்னஞ்சல்: bioversity –france@cgiar.org
இணையதளம் : http://bananas.bioversityinternational.org


பன்னாட்டு பயிர் மரபியல் வள நிலையம் : (IPGRI)


இது பயிர் மரபியல் ஆதாரங்களுக்கான பன்னாட்டு வாரியம் எனவும் அழைக்கப்படுகிறது (IBPGR) இதன் குறிக்கோள் தற்போதைய மற்றும் எதிர்கால பயன்பாட்டிற்காக பயிர் மரபயில் ஆதாரங்களை சேமித்து வைப்பதாகும்.இது பல நாடுகளில் பயிர் மரபயில் ஆதாரங்களின் சேகரிப்பை ஊக்குவிக்கின்றது.அதோடு அதைப்பற்றிய விழிப்புணர்வையும்,மரபியல் ஆதாரங்கள் பற்றிய தொழிலநுட்ப வெளியீடுகளுக்கான பயிற்சியும், தேசிய பயிர் மரபியல் ஆதார திட்டங்களுக்கு உதவியும் வழங்கி வருகிறது.


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பன்னாட்டு பயிர் மரபயில் ஆதார நிலையம்.
வயா டெல்லீ செட்டி சையீஸ், 142,00145, ரோம். இத்தாலி.
தொலைபேசி (39) 06518922691,
தொலைபிரதி (39) 665750309
இணையதளம் : http://www.cgiar.org/ipgri

 

பன்னாட்டு மாவுப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம்


இது டென்மார்க் பல்கலைக் கழக வளாகத்தில்,ஆர்ஹஸ்டேனிஷ் மாவுச்சத்து தொழிற்சாலையின் அருகில் அமைந்துள்ளது.இந்நிறுவனம் டேனிஷ் சுற்றுச்சூழலியல் துறையுடன் இணைந்து பழச்சாற்றினை மறுசுழற்ச்சி செய்யும் ஆய்வை 3 ஆண்டு நடத்திய போது,அது ஒரு செயற்கை உரமாகப் பயன்படக் கூடியதாக இருந்தது.நிலப்பகுதிகளில் எல்லாம் இவ்வாய்வினை செய்தபோது நிலப்பகுதிகள் சாற்றின் சத்துக்களை எடுத்துக் கொண்டது.வாழை மாவுப்பொருள் என்பது பன்னாட்டச் சந்தையில் ஒரு புது வரவாகும்.இவை காகிதம் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளிலும், உணவுப் பதப்படுத்துதலில் ஒட்டுவிப்பானாகவும், தன்மைப்படுத்துவானாகவும் செயல்படுகிறது.உயிர்வேதி தொழிற்சாலைகளுக்கான ஆதாரமான கார்போஹைட்ரேட் போலவே வாழை மாவுச்சத்தும் உள்ளது. மேலும் ஆல்கஹால்,இனிப்பு பொருளாகவும் பயன்படுகிறது.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
பன்னாட்டு மாவுப் பொருள் நிறுவனம்.
அறிவியல் பூங்கா, குஸ்டவ் வீட்ஸ் வேஜ் 10,
டி.கே – 8000,ஆர்ஹஸ் சி. டென்மார்க்
தொலைபேசி :  +45 8620 2000
தொலைபிரதி : +45 87306223
மின்னஞ்சல் : kd.hcrats@lanoitarretni.
இணையதளம் : www.starch.kd


மேலே செல்க

தமிழ்நாடு

  • தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் – கோயம்புத்தூர்

  • தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் – பெரியகுளம்.

  • தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் – தடியன் குடிசை.

  • தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் – பேச்சிப்பாறை

  • நகர்ப்புற தோட்டக்கலை மேம்பாட்டு மையம்

  • பழப்பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்


தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்

இக்கல்லூரி 1935 – ஆம் ஆண்டுக்கு முன்பே இம்பெரியல் வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால்(கொடூரில் அமைந்துள்ள (தற்போதைய ஆந்திரபிததேசத்தில்)) பழப்பயிர் ஆராய்ச்சி நிலையத்துடன் சேர்த்துத் தொடங்கப்பட்டது.
கோயம்புத்தூரில் 1950-ல் தொடங்கப்பட்ட பழப்பயிர் பிரிவின் கீழ் பழ ஆராய்ச்சி துரிதப்படுத்தப்பட்டது.
இத்துறை திசு வளர்ப்பு அறைகள்,இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வகங்கள் கணினி வசதியுடன் கூடியவை. இனப்பெருக்கம், மேலாண்மை, பயிர்பாதுகாப்பு மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பம் போன்ற பழப்பயிர் சாகுபடி முறைகள் முக்கிய ஆராய்ச்சிப் பிரிவுகளாகும். இத்துறையின் சில பிரிவுகள் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களில் தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும் இங்கு நன்கு நிறுவப்பட்ட பல இரகங்களுடன் கூடிய பழப்பண்ணை, பயிர் வளர்ச்சி மற்றும் சோதனை வயல்வெளிகள் அமைந்துள்ளன.
உலக அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வாழை மற்றும் பப்பாளி இனப்பெருக்கத்தில் பழம்பெரும் நிறுவனமாகும்.
இது டிப்பளாய்டு, டிரிப்ளாய்டு (AAA, AAB & ABB) மற்றும் டெட்ரா பிளாய்டு போன்ற வாழையின் மேம்பாட்டுக்குத் தேவையான ஆதாரங்களை சேகரித்து வைத்துள்ளது. சரியான ஆராய்ச்சித் திட்டம் பயிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படுகிறது.(வாழை இரகம் மற்றும் 7 பப்பாளி இரகங்களை வெளியிட்டள்ளது)


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்,

பழப்பயிர் துறை,
தோட்டக்கலைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயம்புத்தூர் ( 641 003) இந்தியா
கைபேசி : 0422 – 3335030
தொலைபேசி : 91- 422 – 5511269
தொலைபிரதி : 91 – 422 – 2430781
மின்னஞ்சல் : fruits@tnau.ac.in

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் இக்கல்லூரி, தமிழ்நாட்டில் தேனி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளத்தில் அமைந்துள்ளது. மேல் பழனி மலையின் அருகில் அமைந்துள்ளதே இக்கல்லூரியின் தனித்தன்மையாகும். மேலும் இக்கல்லூரி கல்வியுடன் சேர்த்து ஆராய்ச்சியும் மேற்கொள்கிறது. தென்னிந்திய கடலோர பகுதியில் தோட்டக்கலைக் கல்வியை முழுமையாக வழங்கும் ஒரே கல்லூரி இதுவே ஆகும்.
1957 ஆம் ஆண்டு இங்கு பழ ஆராய்ச்சி நிலையம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழப்பயிர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. பின்பு 1971 ல் பழப்பயிர் ஆராய்ச்சி நிலையமாக,பெரும்பாலான பழப்பயிர் ஆராய்ச்சிக்காக மேம்படுத்தப்பட்டது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
முதல்வர்
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.
பெரியகுளம் – 625 604.
தொலைபேசி : 91 – 4546 – 234661, 231319 (அலுவலகம்)
இருப்பிடம் : 231 422
தொலைப்பிரதி : 91 – 04546 – 231726

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் – தடியன் குடிசை


இது 1957 ல் மலை வாழை ஆராய்ச்சி நிலையமாக தமிழக அரசால் நிறுவப்பட்டது.பின்பு,1972ல் தேசிய வேளாண் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமாக மாற்றப்பட்டு,பின் மண்டல ஆராய்ச்சி நிலையமாக மலைப் பகுதி மண்டலங்களுக்காக மாற்றப்பட்டது. இது கீழ் பழனி மலைப் பிரதேசத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.

முக்கியப் பயிர்கள்:
மிளகு,ஆரஞ்சு (கொடி),மேராக்காய் செளசெள, வெண்ணிலா, மலை வாழை, ஆணைக்கொய்யா (Avacado), இலவங்கம்
நோக்கங்கள் :

  • நறுமணம் மற்றும் வாசனைப் பயிர்,மலைத் தோட்டப் பயிர் போன்ற இப்பகுதி மக்களின் சாகுபடி பயிர் முறைகளுக்கு உரிய தேவையைப் பூர்த்தி செய்தல்

  • வெண்ணிலா, மலை வாழை, மிளகு, ஆணக்கொய்யா மற்றும் மேரக்காய் போன்ற பயிர்களின் சாகுபடிக்கேற்ற புதிய நுட்பங்களைக் கண்டறிதல்

  • குறு விவசாயிகள், மலை சாதியினரின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்துதல்

  • குறு விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேளாண் சாகுபடி முறை பற்றிய பயிற்சியளித்தல். வெண்ணிலாவிற்கு சிறந்த உற்பத்தித் தன்மையுடைய நடவுக் கன்றுகளை வழங்குதல்

  • டிரைக்கோடெர்மா விரிடி,சூடோமோனஸ் புளூராஸன்ஸ் போன்ற உயிர்க் கட்டுப்பாடு மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகித்தல்

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,பேச்சிப்பாறை


இது மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் குலசேகரத்திலிருந்து 10கி.மீ தொலைவிலும்,மார்த்தாண்டத்திலிருந்து 23கி.மீ தொலைவிலும்,நாகர்கோவிலிருந்து 45கி.மீ தொலைவிலும் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 75கி.மீ தொலைவிலும் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது. பேச்சிப்பாறைக் கணுவாயின் ஒரு கரையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து 1.5கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.


குறிக்கோள்கள்:

  • அதிக மழை பெறும்பகுதியில் பழங்கள், காய்கறிகள், நறுமணப் பயிர்,மலைத் தோட்டம் மற்றும் மலர் பயிர்களின் பயிர் வளர்ச்சி,மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு சார்ந்த ஆராய்ச்சிகள்.மண்டல வேளாண் அறிவியல் நிலையம் மூலம் உள்ளூர் விவசாயிகள், மலைசாதியினர், அலுவலர்கள் போன்றோருக்கு கூட்டங்கள், கலந்தாய்வு, சோதனை வயல், செயல்முறை விளக்கம் மற்றும் வயல் நாள் போன்றவற்றின் மூலம் பயிற்சி வழங்குதல்.

  • வேளாண் வானிலையில் அறிவுரைச் சேவை – தட்பவெட்ப நிலை பற்று அறிந்து அதற்கேற்ப சாகுபடி செயல்முறைகளை மேற்கொள்ளவென விவசாயிகளுக்காக வேளாண் வானிலை பற்றிய பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

  • இளம் இரப்பர் மரக்கன்றுகளிடையே மூலிகைப் பயிர்களை ஊடுபயிராக இடுவது பற்றி அறிவுறுத்துதல்.

  • பலாப்பழம் மற்றும் எல்லாப் பருவங்களிலும் காய்க்கும் மா வகைகளில் சுற்றாய்வு செய்து அதிக மகசூல் தரும் இரகங்களைக் கண்டறிதல்.


முக்கிய பயிர்கள்

பழ வகைகள் - வாழை,அன்னாசி,மா,பலா,கொய்யா,சப்போட்டா,மற்றும் சிறு பழங்கள்.

உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள்

  1. வாழை

  2. செவ்வாழையில் துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க 25 கி.கி தொழுஉரம், 25 கி ஜிங்க்சல்பேட், 500 வேப்பம் பிண்ணாக்குக் கலந்து இடுதல்.

  3. வாழைத் தண்டில் மோனோகுரோட்டாபாஸ் அல்லது நீருடன் கலந்த டை மெத்தொயேட் (5 மி.லி நீரில் 1 மி.லிருந்து)கலவையை ஊசி மூலம் தண்டுத்துளைப்பான் கட்டுப்படுத்துதல். இவ்வாறு மோனோகுரோட்டாபாஸ் மற்றும் டைமெத்தொயேட் மருந்துகளின் பயன்பாட்டு செலவு வரவு விகிதம் முறையே1:2.85 மற்றும் 1:2.79 ஆகும்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்
பேச்சிப்பாறை – 629 161
கன்னியாகுமரி மவாட்டம்
தொலைபேசி : 04651 – 281192, 281191
மின்னஞ்சல் : hrsppi@tnau.ac.in

 

நகர்ப்புற தோட்டக்கலை மேம்பாட்டு மையம்


அதி நவீன தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல் மையமாகவும் சென்னை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் பயிற்சித் திட்டங்கள்  அளிப்பதற்காகவும் இம்மையம் சென்னையில் 2000 ம் ஆண்டு துவங்கப்பட்டது.

    
குறிக்கோள்கள்:

  1. தோட்டக்கலையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல் மையமாக செயல்படுகிறது.

  2. நவீன தோட்டக்கலை நாற்றங்கால், மலர் மற்றும் மூலிகைப் பயிர், அலங்காரச் செடிகள், மரக்கன்றுகள் திசு வளர்ப்புக் கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள்) போன்ற பல்வேறு வகைக் கன்றுகளுக்கான நாற்றங்கால் அமைத்தல் .

  3. நகர்ப்புற சுயதொழிலாளர்கள், வேலையற்ற பட்டதாரிகள்,மாணவர்கள் அரசு சாரா நிறுவனங்களுக்கு, இல்லத்தரசிகள் போன்றோருக்கு நவீன தோட்டக் கலைத் தொழில்நுட்பங்கள் பற்றிப் பயிற்சியளித்தல்.

  4. தோட்டக்கலைப் பூங்கா, அவென்யூ, தீம் பார்க், தாவரவியல் பூங்கா, மூலிகைத் தோட்டம், நில எழிலூட்டுதல்  போன்றவற்றை மேம்படுத்தி மாசுபாட்டைக் குறைக்கவும், நகரத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் தேவையான தகவல்களைத் தருகின்றது.

  5. புதிய நவீன தோட்டக்கலைத் திட்டங்களை உருவாக்குதல், தோட்டக்கலை சார்ந்த தொழிற்சாலைகளை தொழில்முனைவோருக்கு உதவுவதன் மூலம் மேம்படுத்தலாம்.

  6. நிழ எழிலூட்டுதல், மொட்டைமாடித் தோட்டம், மூலிகை மற்றும் நறுமணப் பயிர் தோட்டம், உணவாகப் பயன்படுத்தும் காளான் உற்பத்தி, மலர்க்கொத்து தயாரிக்க உதவும் உலர் பூ உற்பத்தி, பழங்கள் பதப்படுத்துதல், காய்கறி நீர்மவியல் அமைப்பு, பூக்களிலிருந்து முக்கிய எண்ணெய் பிரித்தெடுக்கும் அமைப்பு, சுற்றப்புறத்தை பாதிக்காத நன்கு மட்கச் செய்த உயிர் உரங்கள், கட்டப்படுத்தப்பட்ட சூழ்நிலையிலில் அதிநவீன மலர்பயிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குதல்.

  7. தோட்டக்கலை சந்தைத் தகவல் முறைக்கென ஒரு தகவல் தொகுப்பினை உருவாக்குதல்


தற்போதைய பணிகள்:

நவீன நாற்றங்கால்:

  • இந்நாற்றங்கால் மூலம் நல்ல தரமான நடவுக் கன்றுகள் தோட்டக்கலைப் பயிர்களுக்கென உருவாக்கப்படும். இத்தகு இடங்களில் மேம்படுத்தப்பட்ட காய்கறி, மலர்ப்பயிர், வாசனை, மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களுக்கான விதைகள் கிடைக்கும்.

  • பயிர் ஆலோசனை மையம்: தோட்டக்கலை பயிர் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இங்கு தீர்வுகள் வழங்கப்படும்.

  • பயிற்சி: பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கவென மாதாந்திர அட்டவணை பின்பற்றப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
நகர்ப்புற தோட்டக்கலை மேம்பாட்டு மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்
புதிய எண் P44 (பழைய எண்.37), 6 வது அவென்யூ,
அண்ணாநகர், சென்னை – 600 040
தொலைபேசி : 044 – 26263484
தொலைபிரதி : 044 – 26263481
மின்னஞ்சல் : Chennai@tnau.ac.in

 

 

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்


  • இக்கல்லூரி 1935 – ஆம் ஆண்டுக்கு முன்பே இம்பெரியல் வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால்  (கொடூரில் அமைந்துள்ள (தற்போதைய ஆந்திரபிததேசத்தில்)) பழப்பயிர் ஆராய்ச்சி நிலையத்துடன் சேர்த்துத் தொடங்கப்பட்டது.

  • கோயம்புத்தூரில் 1950 ல் தொடங்கப்பட்ட பழப்பயிர் பிரிவின் கீழ் பழ ஆராய்ச்சி துரிதப்படுத்தப்பட்டது.

  • இத்துறை திசு வளர்ப்பு அறைகள், இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வகங்கள் கணினி வசதியுடன் கூடியவை. இனப்பெருக்கம், மேலாண்மை, பயிர்பாதுகாப்பு மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பம் போன்ற பழப்பயிர் சாகுபடி முறைகள் முக்கிய ஆராய்ச்சிப் பிரிவுகளாகும். இத்துறையின் சில பிரிவுகள் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களில் தேர்ச்சி பெற்றுள்ளன.

  • மேலும் இங்கு நன்கு நிறுவப்பட்ட பல இரகங்களுடன் கூடிய பழப்பண்ணை, பயிர் வளர்ச்சி மற்றும் சோதனை வயல்வெளிகள் அமைந்துள்ளன.

  • உலக அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வாழை மற்றும் பப்பாளி இனப்பெருக்கத்தில் பழம்பெரும் நிறுவனமாகும்.

  • இது டிப்பளாய்டு, டிரிப்ளாய்டு (AAA, AAB & ABB) மற்றும் டெட்ரா பிளாய்டு போன்ற வாழையின் மேம்பாட்டுக்குத் தேவையான ஆதாரங்களை சேகரித்து வைத்துள்ளது. சரியான ஆராய்ச்சித் திட்டம் பயிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படுகிறது. (வாழை இரகம் மற்றும் 7 பப்பாளி இரகங்களை வெளியிட்டள்ளது)

  • தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

    பேராசிரியர் மற்றும் தலைவர், பழப்பயிர் துறை,
    தோட்டக்கலைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்
    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
    கோயம்புத்தூர் ( 641 003) இந்தியா
    கைபேசி : 0422 – 3335030
    தொலைபேசி : 91- 422 – 5511269
    தொலைபிரதி : 91 – 422 – 2430781

    மின்னஞ்சல் : fruits@tnau.ac.in

மேலே செல்க

கர்நாடகா


வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம்,பெங்களூர்

வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம், மைசூர் அரசால் 1963 ஆம் ஆண்டு ஒரு சட்டத்தின் (நம்பர் 22)கீழ் உருவாக்கப்பட்டது. இது ஆகஸ்ட் 21, 1964ல் மட்டுமே முழுமையாக இயங்கத் தொடங்கினால் இந்திய வரலாற்றுப் பாதையில் இது ஒரு பழம்பெரும் நிறுவனம் ஆகும். இதன் தொடக்கம் 1899 ஆம் ஆண்டிலேயே 30 ஏக்கர் பரப்பளவல் இருந்திருப்பதாக அறியப்படுகிறது.


நோக்கங்கள்


கல்வி :
  • மாறிவரும் சமுதாயத்தின் பொதுவான தேவைக்கும்,வேளாண் துறையின் அதிகரித்து வரும் தேவைகளுக்கும் ஏற்றவாறு வேளாண் கல்வியை சரியான முறையில் வழங்குதல்.

  • ஆராய்ச்சி,விரிவாக்கம் மற்றும் தொழிற்துறை போன்ற வளர்ந்து வரும் புதிய துறைகளில் சவால்களைச் சமாளிக்கும் அளவில் மனித ஆற்றலை மேம்படுத்த வேளாண் கல்வி முறையில் மாற்றங்களக் கொண்டு வருதல்.

 
ஆராய்ச்சி:
  • பயிர் சாகுபடி, கால்நடைத்துறை,மீன்வளம், தீவனப்பயிர் போன்ற துறைகளில் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிதல். இவ்வனைத்துத் துறைகளிலும் நீண்டகாலப் பயன்பாட்டிற்கான அடிப்படை கொண்ட நுட்பங்களை மேம்படுத்துதல்.

  • ஆராய்ச்சித் திட்டங்களை விரைவாக, குறைந்த செலவில், திறம்பட செயல்படுத்த ஏற்றவகையில் விவசாயப் பண்ணைகளை விரிவாக்குதல், சிறந்த செயல்பாட்டு மேலாண்மை முறையை நிர்வகித்தல் மற்றும் அனைத்து ஆவனங்களுடன் கூடிய ஆய்வுக் கூடத்தினை அமைத்தல் போன்ற வசதிகள் அமைக்கப்பட வேண்டும்.

  • பல்கலைக் கழகங்களில் தகுதியான, திறமையான நபர்களை ஆராய்ச்சிகளுக்குத் தேர்ந்தெடுத்தல்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம்
ஜி.கே.வி.கே. பெங்களூர் – 560 065
தொலைபேசி : 080 – 23330984

வேளாண்மை (அறிவியல்) பல்கலைக் கழகம், தார்வாடு.


இது 1986 ஆம் ஆண்டு அக்டோபர் – 1 ல் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் கீழ், 4 கல்லூரிகள், 25 ஆராய்ச்சி நிலையங்கள், 6 விரிவாக்கக் கல்வி மையங்கள், 5 வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம் போன்றவை செயல்படுகின்றன. பாகல்கோட், பெல்காம், பீஜாபூர், தார்வாடு, கடக், வரவேரி மற்றும் வடக்கு கர்நாடகத்தின் வத்தர் கன்னடா போன்ற 7 மாவட்டங்களில் இது செயல்படுகின்றது.ஏனெனில் இம்மாவட்டங்களில் வெவ்வேறு வகை மன்வதை, தட்பவெப்பநிலை, நில அமைப்பு, பயிர்முறை மற்றும் வயல்வெளிகள் காணப்படுகின்றன.
இப்பல்கலைக் கழகமானது 43 தானிய வகைகள்.26 பயறுவகைகள், 21 எண்ணெய் வித்துக்கள், 32வணிகப்பயிரிகள், 12 தீவனப்பயிர்கள் மற்றும் 20 வகை தோட்டக்கலை மலைத்தோட்டப் பயிர்கள் உட்பட 154 பயிர் இரகங்களை வெளியிட்டுள்ளது.

முக்கியச் செயல்பாடுகள்

  • வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் போன்ற செயல்களைப் செய்கின்றது.

  • இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பணிகளைச் செய்து வருகின்றது. இந்தியாவில் உள்ள பல்வேறு வேளாண் பல்கலைக் கழகங்களில் தார்வாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கல்வித் தரம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை விவசாயிகளுக்குப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றுவதால், சிறந்த இடம் பெறுகிறது.

  • மேலும் இப்பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய அளவில் பல்வேறு கலை மற்றும் கல்விப் பயிற்சிகளில், போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளனர்.

  
தொடர்பு முகவரி
வேளாண்மை பல்கலைக் கழகம், தார்வாடு, தார்வாடு – 580 005
கர்நாடகா மாநில், இந்தியா.
தொலைபேசி: 0091 – 836 – 2747958
தொலைபிரதி : 0091 – 836 – 2745276
இணையதளம் : http://www.wasd.edu

தோட்டக்கலை பல்கலைக்கழகம் , பஹல்கோட்


தோட்டக்கலை பல்கலைக்கழகமானது பஹல்கோட்டில் 22.11.2008-ல் தொடங்கப்பட்டது.

நோக்கம் :

  • தோட்டக்கலை மற்றும் தொட்டக்கலை சார்ந்த தறையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளை ஏற்படுத்தி தோட்டக்கலைத் துறையில் வளர்ச்சியை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆராய்ச்சி, கல்வி, உற்பத்தி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் பொன்ற விரிவாக்கப் பணிகளுக்காக பல்முனை சீர்திருத்தங்களை மேம்படச் செய்கிறது.

செயல்பாடுகள் :

  • தோட்டக்கலை மற்றும் அது சார்ந்த அனைத்து துறைகளிலும் தரமான கல்வியை தரவும்.
  • தோட்டக்கலைச் சார்ந்த அனைத்து துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும்
  • விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை விரிவாக்க பணியாளர்கள் மூலம் வழங்குகிறது.

தொடர்பு முகவரி
தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்
எண்:60, நவ நகர்,
பஹல்கோட் – 587 102.
கர்நாடகா, இந்தியா
தொலைபேசி : 08354-201234, 201342, 201354
தொலைபிரதி : 08354 – 235152
மின்னஞ்சல் : registrar@uhsbagalkot@edu.in

வேளாண் அறிவியல் நிலையம் (KVK), கோனி கோப்பல்


இது கர்நாடக அரசால் 1954ஆம் ஆண்டு குடகு மாவட்டத்தில் துவங்கப்பட்டது. பின் 1972, பிப்ரவரி 1 ல் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்திற்க்கு மாற்றப்பட்டது. இந்நிலையம் 17.5 எக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. குடகு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எலுமிச்சை வேரழுகல் நோயின் காரணம் மற்றும் தன்மையைக் கண்டறிய அமைக்கப்பட்டது.


முக்கிய செயல்பாடுகள்:

  • தொழில்நுட்ப அளவைகள், சரிசெய்தல் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தல்

  • இடம் சார்ந்த வேளாண் தொழில்நுட்பங்களை உரிய இடங்களில் சோதனை செய்து பார்த்தல்.

  • விவசாயிகளின்  வயல்களில் உற்பத்தித் திறன் சோதனைகளின் முன்னிலை செயல்முறை (நேரடி) விளக்கமளித்தல்

  • விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய அவர்களின் அறிவை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு தொழிலநுட்ப வளர்ச்சி குறித்து பயிற்சியளித்தல்.

  • அம்மாவட்டத்தைச் சுற்றிலுமுள்ள தனியார், பொது மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆதாரம் மற்றும் தகவல் மையங்களாகவும் தொழில்நுட்ப உதவியாளராகவும் செயல்படுதல்.

  • மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதிக எண்ணிக்கையிலான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளுதல்

  • இவ்வேளாண் அறிவியல் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் மற்றும் நடவு நாற்றுகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

தொடர்பு முகவரி:

திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் நிலையம் (KVK)
கோனிகோப்பல் (கர்நாடகா) – 571213
மின்னஞ்சல் : progckvkg@iihr.ernet.in
தொலைபேசி : 08274 – 2247274

வேளாண் அறிவியல் நிலையம் (KVK) ஹிரேஹல்லி


இது 2009, மார்ச் 24ம் தேதியன்று பெங்களூரில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இந்நிலையம் பெங்களூர் – புனே தேசிய நெடுஞ்சாலையின் (NH4) கும்கூர் மாவட்ட (பெங்களூரிலிருந்து 58 கி.மீ ஹிரேஹல்லி) இரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ளது. இது 130 வடக்கிலும் 770 கிழக்கு துருவத்திலும் கடல் மட்டத்திலிருந்து 845 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

முக்கிய செயல்பாடுகள்

  • தொழில்நுட்ப அளவைகள், சரிசெய்தல் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தல்

  • இடம் சார்ந்த வேளாண் தொழில்நுட்பங்களை உரிய இடங்களில் சோதனை செய்து பார்த்தல்.

  • விவசாயிகளின்  வயல்களில் உற்பத்தித் திறன் சோதனைகளின் முன்னிலை செயல்முறை (நேரடி) விளக்கமளித்தல்.

  • விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய அவர்களின் அறிவை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு தொழிலநுட்ப வளர்ச்சி குறித்து பயிற்சியளித்தல்.

  • அம்மாவட்டத்தைச் சுற்றிலுமுள்ள தனியார், பொது மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆதாரம் மற்றும் தகவல் மையங்களாகவும் தொழில்நுட்ப உதவியாளராகவும் செயல்படுதல்.
    மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதிக எண்ணிக்கையிலான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளுதல்

  • இவ்வேளாண் அறிவியல் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் மற்றும் நடவு நாற்றுகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

  • குறுகிய மற்றும் நீண்ட கால வேளாண் பயிற்சி படிப்புகளை விவசாயிகளுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் வழங்கிவருகின்றது. இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறவும், இளைஞர்கள் சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக்  கொள்ளவும் உதவி செய்கின்றது. அதோடு புள்ளிவிவரங்கள் மற்றும் கருத்துக்களை அறிய (பல்வேறு பயிர் பற்றிய) கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தொடர்பு முகவரி:

திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் நிலையம்
ஹிரேஹல்லி, கர்நாடகா – 572 168
மின்னஞ்சல் : progckvk@iihr.ernet.in

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தீாத்தஹல்லி


தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தீாத்தஹல்லி 10.01.2008 –ல் தொடங்கப்பட்டது.

முக்கியப் பயிர்கள் : பாக்கு, மிளகு, கோகோ, வாழை


நோக்கங்கள்

  • பாக்கில் இலை புள்ளிநோய், முள் இலை நோய் பிரச்சனைகளை களைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.
  • அந்தந்த மண்டலத்திற்கேற்ற பாக்கு இரகங்களை மதிப்பீடு செய்கிறது.
  • பாக்கு சார்ந்த பண்ணை முறை/ பயிர் முறை உருவாக்குகிறது.
  • பாக்கு வளர்க்கும் பயிர் அமைப்பில், ஒருங்கிணைந்த நுண்ணூட்டச் சத்து மற்றுளும் பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம்
ஜி.கே.வி.கே. பெங்களூர் – 560 065
தொலைபேசி : 080 – 23330984

 

வேளாண் அறிவியல் நிலையம் (KVK) பாகல்கோட்


புது தில்லியல் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தார்வாடு வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அறிவியல் வேளாண் கண்டுபிடிப்புகளை விவசாயிகளுக்கு எடுத்துச் செல்ல பாகல்கோட்டில் ஒரு வேளாண் அறிவியல் நிலையத்தை துவங்கினர்.


முக்கியச் செயல்பாடுகள்

  1. விவசாயிகள், விவசாய வேலை செய்யும் பெண்கள் மற்றும் கிராம இளைஞர்களுக்கென பயிற்சிகளை நடத்துதல்.

  2. விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துதல்

  3. விவசாயிகளின் நிலங்களில் சோதனைகளைச் செய்து காட்டுதல்

  4. செயல்முறை விளக்கமளித்தல்

தொடர்பு முகவரி:

வேளாண் அறிவியல் நிலையம்
இரயில் நிலையம் அருகில்
பதாமி ரோடு,
பாகல்கோட் – 587 101
கர்நாடகா
தொலைபேசி : அலுவலகம் : 08354 – 200003
கைபேசி : 9448495347
மின்னஞ்சல் : kvkbgk@rediffmail.com
இணையதளம் : www.kvkvbagalkot.org

 

வேளாண் அறிவியல் நிலையம் (KVK), தார்வாடு


இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்துடன் இணைந்து 1976ல் துவங்கியது. இதுவே கர்நாடகாவில் முதன் முதலிலும் தென்னிந்தியாவில் இரண்டாவது முறையாகவும் தொடங்கப்பட்ட வேளாண் அறிவியல் நிலையமாகும் பின் தார்வாடு வேளாண் அறிவியல் நிலையம் 2004, ஏப்ரலில் தார்வாடு பகுதியில் சைதாபூர் பண்ணையில் துவங்கப்பட்டது.

       
முக்கியச் செயல்பாடுகள்:

  1. தொழில்நுட்ப அளவைகள், சரிசெய்தல் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தல்.

  2. இடம் சார்ந்த வேளாண் தொழில்நுட்பங்களை உரிய இடங்களில் சோதனை செய்து பார்த்தல்.

  3. விவசாயிகளின்  வயல்களில் உற்பத்தித் திறன் சோதனைகளின் முன்னிலை செயல்முறை (நேரடி) விளக்கமளித்தல்.

  4. விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய அவர்களின் அறிவை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு தொழிலநுட்ப வளர்ச்சி குறித்து பயிற்சியளித்தல்.

  5. அம்மாவட்டத்தைச் சுற்றிலுமுள்ள தனியார், பொது மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆதாரம் மற்றும் தகவல் மையங்களாகவும் தொழில்நுட்ப உதவியாளராகவும் செயல்படுதல்

  6. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதிக எண்ணிக்கையிலான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளுதல்.

  7. இவ்வேளாண் அறிவியல் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் மற்றும் நடவு நாற்றுகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

  8. குறுகிய மற்றும் நீண்ட கால வேளாண் பயிற்சி படிப்புகளை விவசாயிகளுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் வழங்கிவருகின்றது. இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறவும், இளைஞர்கள் சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக்  கொள்ளவும் உதவி செய்கின்றது. அதோடு புள்ளிவிவரங்கள் மற்றும் கருத்துக்களை அறிய (பல்வேறு பயிர் பற்றிய) கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.         

தொடர்பு முகவரி
திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் நிலையம்
சைதாப்பூர் பண்ணை
வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம்
தார்வாடு – 580 005
கர்நாடகா
இந்தியா
தொலைபேசி : 0091 – 836 – 2444272
தொலைபிரதி : 0091 – 836 – 2444272

 

வேளாண் அறிவியல் நிலையம் (KVK), ஹனுமனமட்டி


முக்கியச் செயல்பாடுகள்:

  • தொழில்நுட்ப அளவைகள், சரிசெய்தல் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தல்

  • இடம் சார்ந்த வேளாண் தொழில்நுட்பங்களை உரிய இடங்களில் சோதனை செய்து பார்த்தல்.

  • விவசாயிகளின்  வயல்களில் உற்பத்தித் திறன் சோதனைகளின் முன்னிலை செயல்முறை (நேரடி) விளக்கமளித்தல்

  • விவசாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய அவர்களின் அறிவை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு தொழிலநுட்ப வளர்ச்சி குறித்து பயிற்சியளித்தல்.

  • அம்மாவட்டத்தைச் சுற்றிலுமுள்ள தனியார், பொது மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆதாரம் மற்றும் தகவல் மையங்களாகவும் தொழில்நுட்ப உதவியாளராகவும் செயல்படுதல்.

  • மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அதிக எண்ணிக்கையிலான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளுதல்

  • இவ்வேளாண் அறிவியல் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் மற்றும் நடவு நாற்றுகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

  • குறுகிய மற்றும் நீண்ட கால வேளாண் பயிற்சி படிப்புகளை விவசாயிகளுக்கும், கிராமப்புற இளைஞர்களுக்கும் வழங்கி வருகின்றது. இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறவும், இளைஞர்கள் சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக்  கொள்ளவும் உதவி செய்கின்றது. அதோடு புள்ளிவிவரங்கள் மற்றும் கருத்துக்களை அறிய (பல்வேறு பயிர் பற்றிய) கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தொடர்பு முகவரி:
திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் நிலையம்
ஹனுமனமட்டி – 581 135
டி.க்யூ.ரனபென்னூர், ஹவேரி மாவட்டம், கர்நாடகா, இந்தியா

வேளாண் அறிவியல் நிலையம் (KVK), பீஜாப்பூர்


புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் பீஜாப்பூரில் உள்ள மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தை, வேளாண் அறிவியல் நிலையமாக ((KVK), தேசிய வேளாண் தொழிலநுட்பத் திட்டத்தின் கீழ் 2,000 ஆம்ஆண்டு ஆகஸ்டில் செயல்பட வைத்தது.


முக்கியச் செயல்பாடுகள்

  1. விவசாயிகள், விவசாய வேலை செய்யும் பெண்கள் மற்றும் கிராம இளைஞர்களுக்கென பயிற்சிகளை நடத்துதல்.

  2. விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டங்களை செயல்படுத்துதல்

  3. விவசாயிகளின் நிலங்களில் சோதனைகளைச் செய்து காட்டுதல்

  4. செயல்முறை விளக்கமளித்தல்

தொடர்பு முகவரி:
திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் நிலையம்
தபால் பெட்டி எண் – 18.
ஹிட்டினஹல்லி பண்ணை
பீஜாப்பூர்  - 586 101
தொலைப்பேசி : 08325 – 230758
தொலைபிரதி : 08325 – 230758

 

மேலே செல்க

கேரளா


கேரள வேளாண்மைப் பல்கலைக் கழகம் (KAU)

 

இது  1971, பிப்பரவரி 1 ம் நாள் துவங்கப்பட்டது. கேரள அரசின் வேளாண் மற்றும் கால்நடைத் துறையின் இரு பிரிவுகளாக இயங்கிவந்த கல்வி மற்றும் 21 ஆராய்ச்சி நிறுவனங்கள் இப்பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.      

செயல்பாடுகள்

  1. கல்வியை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடையுடன் கூட்டுறவு, மீன்வளம், வனவியல், வேளாண் பொறியியல், மனையியல் போன்ற பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துத் திறம்பட வழங்குதல் மற்றும் உதவித்தொகை அளித்தல்

  2. வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த பிற துறைகளிலும் ஆராய்ச்சியில் முன்னிலை வகித்தல், நவீன முறைகளை உட்புகுத்தல்.

  3. விரிவாக்கக் கல்வித் திட்டம்

  4. பிற செயல்பாடுகள் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் மாற்றப்படும், நெல், காய்கறிகள், வாழை, அன்னாசி, மிளகு, தென்னை, பாதாம், ஏலக்காய் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் மற்றும் கால்நடைகள் (ஆடு, மாடு, பன்றி, கோழி, வாத்து & யானை உட்பட), மீன்வளங்கள், பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள், பயிர் & கால்நடை உற்பத்தி மற்றும் அதன் மேலாண்மை போன்ற அனைத்து வகை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய பயிர் இனங்கள், கால்நடை இரகங்கள், சாகுபடி முறை அதிலும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை, பயிர் மற்றும் கால்நடைகளின் உயிர் அணுக்களைப் பாதுகாத்துச் சேமித்து வைத்தல், மாமிசத் தொழில்நுட்பம், பண்ணைப் பொருட்களை பதப்படுத்துதல், விற்பனை மற்றும் அவற்றின் பொருளாதார நிலை போன்றவற்றிலும் பல்பலைக் கழகம் கவனம் செலுத்துகின்றது.   

       
தொடர்பு முகவரி
கேரள வேளாண்மைப் பல்கலைக் கழகம்,
மன்னுத்தி – 680 651
திருச்சூர், கேரளா, இந்தியா

 

மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், அம்பலவயல்


தென் மண்டலத்திற்கான வேளாண் ஆராய்ச்சி நிலையம், 1972 பிப்ரவரியில் வெல்லயானியில் செயல்படத் துவங்கியது. தேசிய வேளாண் ஆராய்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் மட்டுமின்றி, 5 அகில இந்திய (AICRP) ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டங்கள். 8 எஸ்.டி.ஈ.டி திட்டங்கள், 1 சி.டி.எஸ் திட்டம், 1 நவாப்ரா திட்டம், 1 உணவுப் பொருள் பதப்படுத்தும் திட்டம் (உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தின் நிதிஉதவியுடன்) 3 டி.எஸ்.டி, 2 டி.பி.டி ( உயிர்த் தொழில்நுட்பவியல்), 2 பிபிஐசி, 1 கேரயூ – ஆர் ஆர்11, 1 ஆர்.எஸ்.எம்.எம் திட்டம் உட்பட 30 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


செயல்பாடுகள்:
ஏற்றுமதி தர காய்கறிகள், உதிரிப் பூக்கள், பகுதி நிழலமைப்பகள் (குடில்கள்) போன்ற ஆராய்ச்சிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையம். அரிசி, பழங்கள், வீட்டுத் தோட்டம், தென்னை, கிழங்கு, காய்கறி வகைகள், பண்ணை இயந்திரவியல் ( தோட்டங்களுக்காக), அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித்திட்டத்தின் தீவனப் பயிர்கள், நூற்புழுக்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பூச்சிக் கொல்லியின் எஞ்சிய தன்மை போன்ற செயல்பாடுகளையும் இது கண்காணிக்கிறது.

 

உழவியல் ஆராய்ச்சி நிலையம், சாலக்குடி


கேரள அரசின் வேளாண்மைத் துறையினால் 1972, பிப்ரவரி 14 அன்று நிறுவப்பட்டது. இந்நிலையத்தை 1973 ம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் நிதியளிக்கப்படும் நீர் நிர்வாக ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த கேரள வேளாண் பல்கலைக் கழகம் அதன் கீழ் எடுத்துக் கொண்டது. அத்திட்டம் 1974, ஜீலை முதல் செயல்படத் தொடங்கியது.

        
செயல்பாடுகள்:

நெல் மற்றும் நெல் சார்ந்த பயிர் முறைகள் மற்றும் ஓராண்டுப் பயிர்களில் நிர் மேலாண்மைப் பணிகளைச் செயல்படுத்துதல்
அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்ட நீர் மேலாண்மை இந்நிலையம் 1974லிருந்து செயல்படுத்தி வருகிறது.           

சாதனைகள்:
கருணைக்கிழங்கு, உளுந்து, அன்னாசி, நிலக்கடலை, சேனைக் கிழங்கு, தென்னை, வாழை. பாகற்காய், எள், குச்சிக் கிழங்கு, நீர்ப் பூசணி, மற்றும் இஞ்சி போன்ற பயிர்களுக்கு சிக்கனமாக, சரியான நீர் நிர்வாக முறைகளை உருவாக்கியுள்ளது.


வாழை ஆராய்ச்சி நிலையம்


இது 1963 ம் ஆண்டு 17.3 எக்டர் பரப்பளவில் மரக்கால் எனும் பகுதியில் வேளாண்மைத் துறையினால் வாழை மற்றும் அன்னாசி ஆராய்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டது. 1970 ல் இந்நிலையம் அகில இந்திய ஒருங்கிணைந்த பழப்பயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாழை, அன்னாசி ஆராய்ச்சிக்காக கொண்டுவரப்பட்டது.

ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள்

வாழை மற்றும் வாழை சார்ந்த சாகுபடி முறைகளில் முன்னிலையும் காய்கறி பயிர்க்கடன் கண்காணிப்பையும் மேற்கொள்கிறது. அகில இந்திய பழ மேம்பாட்டுத் திட்டம் வாழையில் இங்கு செயல்படுகிறது.

சாதனைகள்

  1. கன்னரா நிலையத்தில் 212 வித வாழைகள் பராமரிக்கப்படுகின்றன். H -1, H -2 என இருவகை கலப்பினங்கள் கேரளாவில் பயிரிட பரிந்துரைக்கப்படுகிறது. துத்சாகர், சுகந்தி, மைசூர் எத்தன் மற்றும் ஹைகேட் போன்ற 5 மேம்பட்ட இரகங்கள் மகசூல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

  2. வாழையைத் தாக்கும் பூச்சி மற்றும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் கண்டறியப்பட்டன. வாழையில் ஊட்டச்சத்து மற்றும் ஊடுபயிர் சாகுபடி முறைகளுக்கான பரிந்துரைகள் இந்நிலையத்தில் வழங்கப்படுகின்றன.

தொடர்பு முகவரி:
வாழை ஆராய்ச்சி நிலையம். கன்னரா, மரக்கால்,
திருச்சூர் – 680 652,கேரளா.
தொலைபேசி : 0487 – 2699087
மின்னஞ்சல் : brskannara@kau.in

மேலே செல்க

தமிழ்நாடு

திட்டத்திள்பெயர்

ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்

அளிக்கப்படும் நன்மைகள் 50 சதவிகித மானியத்தில் நடவுப் பொருட்களை வழங்குதல்
பயனடைபவர்கள் அனைத்து வகை விவசாயிகளும்
தகுதி அனைத்து வகை விவசாயிகளும்
அணுக வேண்டிய அதிகாரி தோட்டக்கலை துணை இயக்குநர் (வட்டார நிலை)

 

திட்டத்தின் பெயர் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம்
வழங்கப்படும் நன்மைகள் 50 சதவிகித மானியத்தில் நடவுப் பொருட்களை வழங்குதல்
நன்மையடைபவர்கள்

தாழ்த்தப்பட்டோர் மற்றும்

பழங்குடியின் விவசாயிகள் மட்டும்
தகுதி

தாழ்த்தப்பட்டோர் மற்றும்

பழங்குடியின விவசாயிகள் மட்டும்

அணுக வேண்டிய அதிகாரி

தோட்டக்கலை துணை

இயக்குநர் (வட்டார நிலை)

 

 

திட்டத்தின் பெயர் ஒருங்கிணைந்த சிற்றின மக்களின் மேம்பாட்டுத் திட்டம்
ஒருங்கிணைந்த சிற்றின மக்களின் மேம்பாட்டுத் திட்டம்

தோட்டக்கலைச் செடிகளை வழங்குதல், தனி பழத்தோப்புகளை நிறுவுதல், நுண்பாசனத்தை நிறுவுதல் (90% மானியம் ரூ.12,000/0.40 எக்டர்)
தோட்டக்கலை பயிற்சி (ரூ.200/விவசாயிகளுக்கு2 நாட்கள்)

தோட்டக்கலை சுற்றுலா (ரூ.1500 / விவசாயி)
பயனடைபவர்கள்

மலைவாழ் இன விவசாயிகள் மட்டும்

தகுதி மலைவாழ் இன விவசாயிகள் மட்டும்
அணுக வேண்டிய அதிகாரி தோட்டக்கலை துணை இயக்குநர் (வட்டர நிலை) சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்

 

திட்டத்தின் பெயர் மேற்கு மலைத் தொடர் மேம்பாட்டுத் திட்டம்
அளிக்கப்படும் நன்மைகள்

    பல்லாண்டு கால தோட்டக்கலைப் பயிர்களை வழங்குதல் (தேனி மாவட்டத்தில் மட்டும் 50% மானியத்தல் திசு வளர்ப்பு வாழை மற்றும் பயிற்சியை வழங்குதல் மாநிலத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தல் (ரூ.2500/ விவசாயி)

நன்மையடைபவர்கள் அனைத்து இன வகை விவசாயிகளும்
தகுதி அனைத்து இன வகை விவசாயிகளும்
அணுக வேண்டிய அதிகாரி தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள (வட்டார நிலை) தோட்டக்கலை துணை இயக்குநர்

 

திட்டத்தின் பெயர் ஆற்றுப் பள்ளத்தாக்கு நீர் பிடிப்பு நிலங்களில் மண் மற்றும் நீர் பாதுகாப்புத் திட்டம்
வேலைகளின் விவரங்கள்
  • சம உயர வரப்பு
  • தோட்டக்லைப் பயிர்கள்
  • வடிகால் அமைக்கும் சோதனை
  • பண்ணைக் குட்டைகள்
  • வேளாண் காடுகள் மற்றும் காடாக்குதல்
  • வண்டல் அமைப்பு
அளிக்கப்படும் நன்மைகள் பட்டா நில வேலைச் செலவுகளில் 25% மானியமாகவும், மீதமுள்ள 75% கடன் தொகையாகவும் கருதப்படுகிறது. 2 வருட கடன் வசூல் தடைக்குப் பிறகு, 10 சம தவணைகளில் மொத்த கடன் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும்.
தகுதி குறிப்பிட்ட நீர்ப்பிடிப்புத் திட்ட நிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்க் கொள்ளும் முன்னுரிமை நீர்ப்பரப்புகளில் நிலங்களைக் கொண்ட அனைத்து விவசாயிகளும்
அணுக வேண்டிய அதிகாரி துணை செயலாட்சித் துறை பொறியாளர் (கிருஷ்ணகிரி, ஹரூர், தருமபுரி, மேட்டூர், செங்கம்)

 

திட்டத்தின் பெயர் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்
திட்டம் செயல்படும் பரப்பு அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரங்கள் டிராக்டர், பலர் டில்லர், தானியங்கும் நெல் நடவு செய்யும் இயந்திரம், சுழல் கலப்பை, கொத்துக் கலப்பை, சட்டிக் கலப்பை, உளிக் கலப்பை போன்ற கருவிகளும் வேளாண்மை இயந்திரங்களைப் பெறுவதற்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
அளிக்கப்படும் நன்மைகள் இயந்திரம்/கருவிகளின் மொத்த விலையில் 25% வழங்குதல் அல்லது ஒவ்வொரு இயந்திரத்திற்கும் அரசு நிர்ணயித்த உச்ச வரம்பு விலை
தகுதி அனைத்து விவசாயிகளும்
அணுக வேண்டிய அதிகாரி
  • வருவாய் பிரிவு துணை செயலாட்சித் துறை பொறியாளர்
  • மாவட்ட நிலை, செயலாட்சித் துறை பொறியாளர்
  • மண்டல நிலை உயர் தலைமை பொறியாளர்

 

திட்டத்தின் பெயர் வேளாண்மை இயந்திரம் மற்றும் கருவிகளின் செயல் முறை விளக்கம் அளிக்கும் திட்டம்
திட்டம் செயல்படும் பரப்பு அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரங்கள் விவசாயிகளின் வயலில் வேளாண்மை இயந்திரங்கள் / கருவிகளின் செயல்முறை விளக்கம்
தகுதி அனைத்து விவசாயிகளும்
அணுக வேண்டிய அதிகாரி வருவாய்ப் பிரிவிலுள்ள துணை செயலாட்சித் துறை பொறியாளர், மாவட்ட நிலை துணை செயலாட்சித் துறை பொறியாளர், மண்டல நிலையிலுள்ள உயர் தலைமை பொறியாளர்

 

திட்டத்தின் பெயர் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்துதல் மற்றும் பராமரித்தல் பற்றி பயிற்சி அளிக்கும் திட்டம்
திட்டம் செயல்படும் பரப்பு அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரங்கள் புதிதாக உருவாகியுள்ள வேளாண் இயந்திரம் பற்றியும் அதன் செயல்படுத்தும் முறை மற்றும் பராமரிப்பைப் பற்றியும் விவசாயிகள், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சித் திட்டத்தை வழங்குதல்
தகுதி 18-40 வயதிற்குட்பட்ட அனைத்து விவசாயிகளும், வேலையில்லா கிராமப்புற இளைஞர்களும்
அணுக வேண்டிய அதிகாரி
  • வருவாய் பிரிவிலுள்ள துணை செயலாட்சித்துறை பொறியாளர்
  • மாவட்ட நிலை செயலாட்சித் துறை பொறியாளர்
  • மண்டல நிலையிலுள்ள உயர் தலைமை பொறியாளர்

 

திட்டத்தின் பெயர் என்.ஏ.டி.பி (தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம்) - துல்லிய பண்ணையம்
வழங்குபவர்

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்குகின்றது.(11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 100% மத்திய அரசால் வழங்கப்படும்)

வேலைகளின் விவரங்கள்

உற்பத்தித் திறனை 30 முதல் 50% வரை அதிகரித்தல், ஒரே சீராக நல்ல தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும்  அறுவடைக் காலத்தினை நீட்டித்தல்.
விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும்/வீரிய கலப்பு இரக விதை பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்குதல்.
சொட்டு மற்றும் உரப்பாசனத்திற்கும், கூட்டு நாற்றங்கால், இடுபொருள் செலவு ஆகியவற்றிற்கு மானியம் அளித்தல்.

தகுதி 40 தொகுதிகளில் (நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், பெரம்பலுார், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் 5 முக்கிய தொகுதிகளுக்கும், சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கும்) உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள்
அணுக வேண்டிய அதிகாரி கிராம அளவில் உதவி வேளாண் அலுவலர், வட்டார அளவில் வேளாண்  அலுவலர்/துணை வேளாண் அலுவலர்.  மேலும் தொகுதி    அளவில் வேளாண் உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட  அளவில் இணை வேளாண் இயக்குநர்

 


திட்டத்தின் பெயர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
வழங்குபவர்  மாநில அரசு
வேலைகளின் விவரங்கள் குறுகிய கால கடன் திட்டங்களைப் போல  சாகுபடி  செலவிற்காக வழங்கப்படுகின்றது.
வழங்கும் முறை            

100 சதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது

பயன் பெறுவோர்         

இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள்

தகுதி  அனைத்து விவசாயிகளும்
அணுக வேண்டிய நிறுவனம் தோட்டக் கலைத்துறை, மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்கள்

கர்நாடகா

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேம்படுத்தும் திட்டம்

கிராமின் பன்தரன் யோஜ்னா

 

திட்டத்தின் பெயர் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையைத் துவங்குதல் திட்டம்
தகுதி விவசாயிகள், விரிவாக்கத்துறை வேலையாட்கள், கைதேர்ந்த பயிற்சியாளர்கள் ஆகியவர்களுக்கு உயிர் பூச்சிகளைப் பயன்படுத்துதலைப் பற்றி பயிற்சி அளித்து விவசாய சமுதாயத் திட்டம் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை பிரபலப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம், 21 மாநிலங்கள் மற்றும் 26 மையங்களையுடைய ஒரு ஒன்றிய வாழ்விடத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அணுக வேண்டிய அதிகாரி்

பயிர் பாதுகாப்பு ஆலோசனை இயக்குநர் , பயிர் பாதுகாப்புத் துறை, இந்திய அரசு நோய் தடுப்பு முறை பாதுகாப்பு, தேசிய நெடுஞ்சாலை, ஃபாரிடாபட் – 121001, ஹரியானா
தொலை நகல் எண்: 0129-5412125
தொலைபேசி எண் : 012954139850, 1295413985

இணையதளம் : http://agricoop.nic.in/ducdirision/ppl.html

 

திட்டத்தின் பெயர் கிராமின் பந்தரன் யோஜ்னா
வேலைகளின் விவரங்கள் விவசாயிகள் தங்களின் பண்ணை உற்பத்தி, பதனிடப்பட்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் வேளாண்மை இடுபொருட்கள் ஆகியவற்றினை சேமித்து வைப்பதற்காக கிராமப்புற பரப்புகளில் அனைத்து வசதிகளைக் கொண்ட நவீன அறிவியல் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் வேளாண் உற்பத்திகளின் விற்பனைத் தரத்தினை உயர்த்துவதற்காக தரம் பிரித்தல், தர நிர்ணயம் மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகியவற்றை உயர்த்துதல். அறுவடை செய்த உடனே இடர்பாடு விற்பனையைத் தடுக்க நாட்டில் வேளாண்மை விற்பனை உள்ளமைப்புகளை வலிமைப்படுத்தி நிதியுதவி மற்றும் விற்பனைக் கடன் வசதிகளை வழங்கி உதவுதலும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அணுக வேண்டிய அதிகாரி

இத்திட்டத்தின் கீழ் வரிசைப்படுத்தப்பட்டுள்ள நிதியுதவி நிறுவனங்கள் / வங்கிகளின் அமைப்பு

http://agmarknet.nic.in/amr.scheme/ruralhead.html

 

திட்டத்தின் பெயர் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் (RKVY)
வழங்குபவர்   மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்குகிறது
வேலைகளின் விவரங்கள்

வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளில், 4% ஆண்டு வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டு  இத்திட்டம் தொடங்கப்பட்டது

பயன் பெறுவோர்                    தனி நபர், குடும்பம், சமூகம், பெண்கள், குழந்தைகள்
தகுதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச விவசாயிகள்
அணுக வேண்டிய அதிகாரி

வேளாண் அமைச்சகம் அல்லது அந்தந்த மாநில  வேளாண் துறை

http://agricoop.nic.in/Rkvy/Rkvyfinal-1.pdf (138 KB)

 

திட்டத்தின் பெயர் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் (RKBY)  
வழங்குபவர்   மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்குகிறது
வேலைகளின் விவரங்கள்

அ. உணவுப் பயிர்கள் (தானியங்கள்,சிறு தானிய வகைகள்  (கீழ்வரும்)  பயிர்கள் - பயறு வகைகள்)
ஆ.எண்ணெய் வித்துக்கள்
இ.கரும்பு, பருத்தி - உருளைக்கிழங்கு                       (ஓராண்டு வணிகப் பயன்பாடு/ ஓராண்டு தோட்டக்கலைப் பயிர்கள்)                      

திட்டம் செயல்படும் பரப்பு                 

அனைத்து மாநிலங்கள் மற்றும் பகுதிகள் மற்றும் மாநிலங்கள் யூனியன்  பிரதேசங்கள்                                   

பயன் பெறுவோர்                    தனி நபர், குடும்பம், சமூகம், பெண்கள், குழந்தைகள்
தகுதி

குறிப்பிட்டுள்ள பயிர்கள் வளர்க்கும் சிறு, குறு மற்றும் பங்கீட்டுப் பயிர் வளர்ப்பாளர்  அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடங்குவர்                                   

அணுக வேண்டிய அதிகாரி

வேளாண் அமைச்சகம் அல்லது குறிப்பிட்ட மாநில
வேளாண் துறையினைத் தொடர்பு கொள்ளவும்
http://agricoop.nic.in/Rkvy/Rkvyfinal- 1.pdf      

 

திட்டத்தின் பெயர் நுண் பாசனத் திட்டம் 
வழங்குபவர்   மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து வழங்குகிறது
வேலைகளின் விவரங்கள்

பயன்பெறும் குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை நிதி உதவி அளிக்கப்படுகின்றது.
சொட்டு மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன செயல்பாட்டுக்கு ஆகும் செலவில் 0.5 எக்டருக்கு 75 சதம் வரை நபர் ஒருவருக்கு மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.
இதன் முக்கிய நோக்கம் தேசிய தோட்டக்கலை (குழு) மையத்தின் கீழ்வரும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு உதவி செய்வது. 
இத்திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் என இருவகைப் பாசனங்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.  எனினும் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க இயலாத பயிர்களுக்கு மட்டுமே தெளிப்பு நீர்ப் பாசனத்திற்கான உதவி அளிக்கப்படுகின்றது.

களப் பணியாளர்கள் மற்றும் பிற அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நிலைகளில்,  சிறந்த மனித வள மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.   இது தவிர பொதுக் கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள், சிறப்புப் பயிற்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தண்ணீரினை சிக்கனமாகப் பயன்படுத்தவும் நீர் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும் நடத்தப்பட்டு வருகின்றன.

             

நிதி வழங்கும் முறை 

40% நிதி மத்திய அரசாலும், 35% மாநில அரசாலும் மீதம் 25% பயன்பாட்டாளர்கள் தங்கள் சொந்த தொகையோ அல்லது கடனளிக்கும் நிதி நிறுவனங்களிடமிருந்து (பீஜாப்பூர் மற்றும் கோலார் மாவட்டங்களில் சொட்டு நீர்ப் பாசனத்திற்காக 100% மானியம்  அளிக்கப்படுகிறது) பெற்று இத்திட்டத்தில் பயன் பெறலாம்                                  

தகுதி                   அனைத்து வகை விவசாயிகளும்
அணுக வேண்டிய அதிகாரி

மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் / தாலுக்கா மூத்த உதவியாளர், தோட்டக்கலை இயக்குநர்/தோட்டக்கலை உதவி இயக்குநர்                                 

 

திட்டத்தின் பெயர் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத்  திட்டம்
வழங்குபவர்   மாநில அரசு
தொடங்கிய ஆண்டு      

2001-2002                   

வேலைகளின் விவரங்கள்            

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, அவர்களுக்கு தோட்டக்கலைப் பயிர்களுக்கான இடுபொருள் கருவிகள் வழங்கப்படுகின்றது.  ஒரு கிராமத்தில் 5 நபர்கள் என்ற வீதத்தில் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 மதிப்புக்குச் சமமான இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன.                                 

தகுதி                 வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள விவசாயிகள்
அணுக வேண்டிய அதிகாரி

தோட்டக் கலைத்துறை, மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்கள் 

 

திட்டத்தின் பெயர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
வழங்குபவர்   மாநில அரசு
வேலைகளின் விவரங்கள்

குறுகிய கால கடன் திட்டங்களைப்போல சாகுபடி செலவிற்காக வழங்கப்படுகின்றது                  

வழங்கும் முறை          

100 சதம் மாநில அரசால்    வழங்கப்படுகிறது                           

 பயன் பெறுவோர்                               இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள்
தகுதி    

அனைத்து வகை விவசாயிகளும்

அணுக வேண்டிய அதிகாரி தோட்டக் கலைத்துறை, மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்கள் 

 

கேரளா

  • பயிர் காப்பீட்டுத் திட்டம்
  • ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் திட்டத்திற்கான திட்டங்கள்
  • ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (RKVY)
  • தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
திட்டத்தின் பெயர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
வழங்குபவர்   மாநில அரசு
வேலைகளின் விவரங்கள்

குறுகிய கால கடன் திட்டங்களைப்போல சாகுபடி செலவிற்காக வழங்கப்படுகின்றது                  

நிதி அமைப்பு         

100% மாநில அரசு                          

 அமைச்சகம் /  துறை                            வேளாண்மைத் துறை
விளக்கவுரை

மாநிலத்திலுள்ள விவசாயிகள் வறட்சி, வெள்ளப்பெருக்கு ஆகிய பிரச்சனைகளுக்கு உற்பத்திக் குறைவை சந்திக்கின்றனர். எனவே பங்கேற்கும் விவசாயிகளின் பங்களிப்புடன் 1995 ஆண்டிலிருந்து மாநிலத்தில் விளையும் 25 முக்கிய பயிர்களுக்கான பயிர் காப்புறுதித் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தற்போதைய திட்டமானது, பயிர் காப்புறுதித் திட்டத்தினை சற்று மாற்றியமைத்து, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் பிரச்சனைகளை சரிசெய்வதற்காகவும் இத்திட்டத்தின் வாழ்வுத்திறனை மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும். திட்டத்தின் மொத்த முதலீடு ரூ.100.00 லட்சமாகும்.

நன்மையடைபவர்கள் குடும்பம், சமுதாயம், மற்றவர்கள்
மற்ற நலன் பெறுபவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகள்
மேற்கோள் இணையதனம்

http://keralaagriculture.gov.in

 

திட்டத்தின் பெயர் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் திட்டத்திற்கான திட்டங்கள்
வழங்குபவர்   மாநில அரசு
அமைச்சகம் /  துறை்

வேளாண்மைத் துறை           

விளக்கவுரை     

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்தி, பயிர்களின் பூச்சி மற்றும் நோய் அளவினை பொருளாதார மாறுநிலை அளவிற்கு கீழ் வைத்தல்


பூச்சி உயிர்த்தொகையை கட்டுபடுத்துவதற்காக நிலையான பூச்சி கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையிடுதலை மேற்கொள்ளுதல்

பயிர்களுக்கு தீவிர சேத்தினை ஏற்படுத்தும் நிலையான பூச்சிகள் மற்றும் நோய்களை பற்றிய விழிப்புணர்வுகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்த கட்டுப்பாட்டு முறைகளையும் வலியுறுத்தல்  

                        

 பயனடைபவர்கள்               விவசாயிகள்
தகுதி

அனைத்து விவசாயிகளும்

எவ்வாறு நன்மையை பெறுவது? வேளாண்மைத் துறை மற்றும் அதனைச் சார்ந்த உரிய ஊராட்சியினைத் தொடர்பு கொள்ளுதல்
மேற்கோள் இணையதனம்

http://keralaagriculture.gov.in

 

திட்டத்தின் பெயர் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா
வழங்குபவர்   மத்திய அரசு
நிதி அமைப்பு

100% மாநில அரசு           

குறிக்கோள்கள்     

வேளாண் வானிலை நிலையங்கள், தொழிற்நுட்ப தேவை மற்றும் இயற்கை வளங்களைப் பொருத்து, வேளாண்மை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்வது.

பொது தேவைகள் / பயிர்கள் / முன்னுரிமைகள் ஆகியவை மாநிலத்தின் வேளாண்மைத் திட்டத்தில் சிறப்பாக பிரதிபலிக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்

முக்கிய பயிர்களில் ஏற்படும் மகசூல் இடைவெளியைக் குறைத்தல்

வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் மகசூலை விவசாயிகள் அதிகரித்தல்.

புதிய முறையில் செயல்படுத்தி வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் பல்வேறு கூறுகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் அளவு மாற்றத்தை ஏற்படுத்துதல்.

இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.6011.10 இலட்சங்கள்
பயனடைபவர்கள்               தனிநபர், குடும்பம், சமுதாயம், பெண்கள்
நன்மையின் வகை

பொருள், கடன், மானியம்

தகுதி மாநில திட்டமிடும் கழகத்தின் மூலம், திட்டமிடும் வாரியத்தின் வழிகாட்டலைப் பொருத்து வேளாண்மைத் திட்டங்கள் மற்றும் மாநில வேளாண்மைத திட்டங்களை வேளாண்மைத் துறை தயாரித்தல்
எவ்வாறு நலனைப் பொறுவது?

வேளாண்மைத் துறை மற்றும் உள்ளாட்சி தனி அரசுகளைத் தொடர்பு கொள்ளுதல்

மேற்கோள் இணையதளம்

http://agricoop.nic.in/RKVY/RKVYfinal-1 pdf(138KB)

http://agricoop.nic.in/RKVY/RKVYfinal-1pdf>

 

திட்டத்தின் பெயர் தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
வழங்குபவர்  

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து

வேலைகளின் விவரங்கள்

வேளாண் மற்றும் அதைச் சார்ந்த  துறைகளில், 4%  ஆண்டு வளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டு                             இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

பயன் பெறுவோர்                        

தனி நபர், குடும்பம், சமூகம், பெண்கள், குழந்தைகள்

 பயனடைபவர்கள்               விவசாயிகள்
தகுதி

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச  விவசாயிகள்

அணுக வேண்டிய அதிகாரி

வேளாண் அமைச்சகம் அல்லது அந்தந்த மாநில வேளாண் துறையினைத் தொடர்பு கொள்ளவும்.

மேற்கோள் இணையதனம்

http://agricoop.nic.in/Rkvy/Rkvyfinal-1.pdf (138 KB)

 

திட்டத்தின் பெயர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
வழங்குபவர்   மாநில அரசு
வேலைகளின் விவரங்கள்

குறுகிய கால கடன் திட்டங்களைப்போல சாகுபடி செலவிற்காக வழங்கப்படுகின்றது        

வழங்கும் முறை      

100 சதம் மாநில அரசால்    வழங்கப்படுகிறது

                        

பயன் பெறுவோர்             இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள்
தகுதி

அனைத்து விவசாயிகளும்

அணுக வேண்டிய அதிகாரி தோட்டக் கலைத்துறை, மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்கள்

 

திட்டத்தின் பெயர் தேசிய தோட்டக்கலை பணித் திட்டம் (மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுத் திட்டம்)
வழங்கப்படும் நன்மைகள்  புதிய தோட்டங்கள் நிறுவுதல்,பழைய தோட்டத்தினை புதுப்பித்தல் (அ) மாற்றி அமைத்தல், நீர் வளங்களை உருவாக்குதல், பாதுகாப்பான சாகுபடி, ஒருங்கிணைந்த பூச்சி / ஊட்டச்சத்து மேலாண்மையை செயல்படுத்துதல், இயற்கை வேளாண்மை, அறுவடைக்குப் பின் மேலாண்மை ஆகியவற்றிற்கு 50-75 சதவிகிதம் மானியம் வழங்குதல்
மாவட்டங்கள்

20 மாவட்டங்களிலுள்ள தேசிய தோட்டக்கலைக் கழகம், அதாவது கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கூடலூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை திருநெல்வேலி, இராமநாதபுரம், விழுப்புரம், பெரம்பலூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் வேலூர் மாவட்டங்கள்      

தகுதி     

அனைத்து விவசாயிகளும்

                        

அணுக வேண்டிய அதிகாரி            நபர் செயலாளர், தோட்டக்கலை துணை இயக்குநர் (குறிப்பிட்ட மாவட்டக் கழகக் குழு)

 

திட்டத்தின் பெயர் நுண்பாசனம் வழியாக நீர்வழி உரம் அளித்தல், நுண்துளித் தெளிப்பு திட்டம் மற்றும் தென்னை உட்பட அனைத்து தோட்டக்கலைப் பயிர்களுக்கும் விவசாயிகளின் இருப்பிடத்தில் 50 சதவிகிதம் மானியத்தில் இதனை அமைத்துத் தருதல்
மாவட்டங்கள் அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
மாவட்டங்கள்

20 மாவட்டங்களிலுள்ள தேசிய தோட்டக்கலைக் கழகம், அதாவது கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கூடலூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை திருநெல்வேலி, இராமநாதபுரம், விழுப்புரம், பெரம்பலூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் வேலூர் மாவட்டங்கள்      

தகுதி     

அனைத்து இன வகை விவசாயிகளும்.                      

அணுக வேண்டிய அதிகாரி            நபர் செயலாளர் / தோட்டக்கலை துணை இயக்குநர், (குறிப்பிட்ட மாவட்டத்தின் நுண்பாசனக் குழு)

 

 

திட்டத்தின் பெயர் நீர்வள நிலவளத் திட்டம் (உலக வங்கியால் நிதியளிக்கப்படும் திட்டம்)
வழங்கப்படும் நன்மைகள்  அதிக நீர் உபயோகிக்கும் பயிர்களை, குறைந்த நீர் பயன்படுத்திக் கொண்டு அதிக மகசூல் ஈட்டும் கலப்பின வகை மற்றும் சந்தை ஓட்டம் கொண்ட தோட்டக்கலைப் பயிர்களை தமிழ்நாட்டிலுள்ள 63 ஆற்றுத் துணைப் பெருநிலத்தில் மாற்றப்படுகிறது. இதனால் பரப்பு விரிவுப்படுத்தி உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவும், மண்ணின் இயற்கை வளத்தை உயர்த்துவதற்கும், “ஆயக்கட்டு“ விவசாயிகளின் வாழ்க்கை நிலையில் குறிப்பிட்ட உயர்வை ஏற்ற இம்மாற்றம் பயன்படுகிறது.
தகுதி்

63 ஆற்றுப் பெருநிலத்தில் உள்ள ஆயக்கட்டு பரப்புகளில் உள்ள அனைத்து விவசாயிகளும்      

அணுக வேண்டிய அதிகாரி     

மாவட்ட நிலை, அதிகாரி தோட்டக்கலை துணை இயக்குநர், வட்டார நிலை செயல்படுத்தும் அதிகாரி, தோட்டக்கலை துணை இயக்குநர்.                       

 

நிறுவனங்களின் திட்டங்கள்

திட்டத்தின் பெயர் பயிர்க்கடன் திட்டம் 
நோக்கம்     

குறுகிய கால கடனாக பல்வேறு பயிர்களுக்கான சாகுபடி செலவுத் தொகையை வழங்குதல்.                        

தகுதி அனைத்து இன வகை விவசாயிகளும்
தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரி வேளாண்மைத்துறை, உள்ளாட்சி தனி அரசு நிறுவனங்கள்

 

திட்டத்தின் பெயர் விற்பனைக் கடன் திட்டம்
நோக்கம்

குறுகிய காலக் கடனாக பல்வேறு பயிர்களுக்கான சாகுபடி செலவுத் தொகையை வழங்குதல்

தகுதி 

அனைத்து இனவகை விவசாயிகளும்

அணுக வேண்டிய அதிகாரி வோண்மைத் துறை, உள்ளாட்சி தனி அரசு நிறுவனங்கள்.

 

திட்டத்தின் பெயர் தேசிய வேளாண்மை காப்புறுதித் திட்டம்(NAIS) (மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து வழங்கும் திட்டம்)
வழங்கப்படும் நன்மைகள்

வேளாண்துறையில் சந்திக்கப்படும் உற்பத்தி பிரச்சினைகளை சரி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். சில பயிர்களான  நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற பயிர்களுக்காக வேளாண் காப்புறுதிக் கழகமானது தேசிய வேளாண்மை காப்புறுதித் திட்டத்தினை துவக்கியுள்ளது. இத்திட்டத்திற்காக 1.50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதில் 50 சதவிகிதம் மாநிலத்தின் பங்களிப்பாக பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் தென்னைப் பயிர் காப்புறுதிக்காக மாதிரித் திட்டத்தினை, தேசிய வேளாண்மை காப்புறுதி நிறுவனமானது துவங்குவதற்காக திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 25 சதவிகிதம் பங்கு, தென்னை பயிர் காப்புறுதித் திட்டத்தினை துவங்குவதற்காக அளிக்கப்படுகிறது.

தகுதி நெல், வாழை, மரவள்ளிக் கிழங்கு, இஞ்சி, மஞ்சள் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும்
அணுக வேண்டிய முகவரி வேளாண்துறை, உள்ளாட்சி தனி அரசு நிறுவனங்கள்

 

திட்டத்தின் பெயர் கிசான் கடன் அட்டை திட்டம்
தகுதி

இறுதி 2 வருடங்களாக சிறந்த பதிவேடுடைய அனைத்து விவசாய வாடிக்கையாளர்களும்.

வழங்கப்படும் நன்மைகள்

விவசாயிகள் தங்களின் உற்பத்திக் கடன் மற்றும் எதிர்பாரா செலவுகளை சந்திப்பதற்காக இந்த அட்டையானது கணக்கீடு வசதிகளை வழங்குகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் பயிர்க்கடன்களை அளிப்பதற்காக எளிமையான வழிமுறைகளை இத்திட்டம் பின்பற்றுகிறது.
குறைந்த கடன் அளவு ரூ.3,000/- செயல்படும் நில இருப்பு, பயிர் சாகுபடி அமைப்ப, நிதி அளவீடு ஆகியவற்றைப் பொருத்து கடன் அளவு அமையும்

எளிமையாக திரும்பப் பெறும் சீட்டுகளைக் கொண்டு பணத்தை எடுத்துக்கொள்ளல். வருட நோக்கத்தைப் பொறுத்து கிசான் கடன் அட்டை 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இத்திட்டமானது, இறப்பு அல்லது சுய இயலாமை ஆகியவற்றிற்கெதிராக சுயகாப்புறுதித் திட்டத்தையும் செயல்படுத்துகிறது. இது இறப்புக்கு ரூ.50,000/- மற்றும் இயலாமைக்கு ரூ.25,000/- என்ற அதிகபட்சத் தொகைக்காக காப்புறுதித் திட்டம் செயல்படுத்துகிறது.
தகுதி நெல், வாழை, மரவள்ளிக் கிழங்கு, இஞ்சி, மஞ்சள் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும்
அணுக வேண்டிய முகவரி வேளாண்துறை, உள்ளாட்சி தனி அரசு நிறுவனங்கள்

 

1.உற்பத்தி மற்றும் அறுவடை பின்-சார் (தொழில் நுட்ப) மேலாண்மை மூலம் வணிக தோட்டக்கலையை மேம்படுத்துதல்:

 (அ) கூறுகள்:

நல்ல தரமான வணிக (வியாபார) தோட்டக்கலைப் பயிர்கள்.  
உள்நாட்டுப் பயிர்கள்/மூலிகை உற்பத்தி
நறுமணப் பயிர்கள்
விதை – நாற்றுப்பண்ணை
உயிர்த்தொழில் நுட்பவியல், திசு வளர்ப்பு
உயிர்- பூச்சிக்கொல்லிகள்
இயற்கை உணவுகள்
படித்த வேலையற்ற வேளாண்/தோட்டக்கலை பட்டதாரிகளுக்கான ஆய்வகம்/சுகாதார நிலையம், தோட்டக்கலை நிறுவனம்.
ஆலோசனை மையம்.
தேனீ வளர்ப்பு.

பி.ஹெச்.எம்/முதல்நிலை பதப்படுத்துதல் தொடர்பானது

தரம்பிரித்தல்/சுத்தப்படுத்துதல்/பிரித்து வைத்தல்/உலர்த்தி பார்சல் அல்லது பொதி கட்டும் மையம் முன்-குளிர்விக்கும் அமைப்புகள்/குளிர்பதன சேமிப்பு

பயன்படுத்தும் வாகனம் (வேன்)/பெட்டிகள்
சிறப்பு விளைபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள்       
சில்லறை விற்பனை நிலையங்கள்
ஏலமிடும் மேடை
பழுக்க வைக்கும், சுத்தப்படுத்தும் அமைப்பு
சந்தை மேடை/கயிறு தள வழி
கதிரியக்க அமைப்பு
சூடான நீராவிச் சுத்திகரிப்பு அமைப்பு, ஹைட்ரஜன் ஒடுக்க அமைப்பு
புளிக்க வைத்தல், சாறு பிழிதல், வடி கட்டுதல், சதைப்பகுதியை பிரித்தெடுத்தல், வெட்டுதல், நறுக்குதல், காய்ச்சி வடித்தல், வருவித்தல், போன்றவை.
தோட்டக்கலைச் சார்ந்த பிற தொழில்கள் எ.கா. பிளாஸ்டிக்குள், கருவிகள், பார்சல் (பொட்டலம்) செய்தல் போன்றவை.     
கார்ட்டூன்கள், அழுகலைத் தடுக்கும் வகையில் பார்சல் செய்தல் - வகைகள் (50% மானியம்).

உதவி அளிக்கப்படும் முறை:

திட்ட செலவில் 20 சதத்துக்கு மிகாமல் முதலீட்டிற்குத் தேவையான நிதியில் அதிகபட்சமாக 25 இலட்சம் வரை அளிக்கப்படுகிறது.  உற்பத்தி, அறுவடைப் பின்சார் மேலாண்மை மற்றும் முதல்நிலை பதப்படுத்துதலில் தோட்டப்பயிர்களுக்கு ரூ.30 லட்சம் வரை வடகிழக்கு/ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் வழங்கப்படுகின்றது.

செயல்படுத்துவதற்கான கட்டணம்

1. ரூ.10 இலட்சம் வரை முதலீடு கொண்ட திட்டங்கள் 0.1% திட்ட செலவு
2. ரூ.10 முதல் 20 இலட்சம் வரை முதலீடு கொண்ட திட்டங்கள்

திட்ட செலவில் 0.25%

 
3. ரூ.20.00 இலட்சத்திற்கும் அதிகமான முதலீடு கொண்ட திட்டங்கள்

0.5% திட்ட செலவு

 

தோட்டக்கலைப் பயிர்களுக்கான குளிர் பதன சேமிப்புக் கிடங்குகள் கட்டுதல்/விரிவாக்கம்/நவீன மயமாக்குதலுக்கான நிதி முதலீட்டு மானியத் திட்டம்:

அ) கூறுகள்:

  • குளிர்பதன சேமிப்புக் கிடங்கு

  • கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை (CA)/மாற்றி அமைக்கப்பட்ட சேமிப்புச் சூழல் (MA)

  • வெங்காயம் சேமித்தல்

ஆ) உதவி அளிக்கப்படும் முறை:

  • திட்ட செலவில் 25% சதவீதத்திற்கு மிகாமல் அதிகபட்சம் ரூ.50 இலட்சம் வரை திட்டமொன்றுக்கு (வடகிழக்குப் பகுதிகளில் 33%அதாவது ரூ.60 இலட்சம்) வரை வழங்கப்படுகிறது.

இ) விண்ணப்பிக்கும் முறை

  • கடனுதவி பெற்ற திட்டங்கள் வங்கி/நிதி நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  என்.சி.டி.சி (NCDC) முறையில் என்.ஹெச்.பி (NHB) மானியங்கள் அளித்தல் மற்றும் கடனுதவி அளித்தல்.

  • சுய முதலீடு கொண்ட திட்டங்கள் எல்.ஓ.ஐ (லிளிமி) குறிப்பிட்ட வடிவில் சமர்ப்பிக்கப்படுதல் அவசியம்.

ஈ) செயல்படுத்தும்  கட்டணம்

 

1. ரூ.10 இலட்சம் வரை முதலீடு கொண்ட திட்டங்கள் 0.1% திட்ட செலவு
2. ரூ.10 இலட்சத்திற்கு மேல் ரூ.20 இலட்சத்திற்குள் அடங்கும் முதலீடு கொண்ட திட்டங்கள்

0.25% திட்ட செலவு

   
3. ரூ.20.00 இலட்சத்திற்கும் அதிகமான முதலீடு கொண்ட திட்டங்கள்

0.5% திட்ட செலவு

 

 

3) தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் அதை விரிவுபடுத்துதல்

  • புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துதல்

  • விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தல்

  • தொழில்நுட்ப விழிப்புணர்வு

100 சதவீத நிதி உதவியின் கீழ்

  • ரூ.25 இலட்சம் வரை

  • உண்மையான நியதிகளின்படி

  • ரூ.50,000 வரை/கருத்தரங்கு

4) தோட்டக்கலைப் பயிர்களுக்கு சந்தை தகவல் சேவை:

  • தோட்டக்கலைப் பற்றிய மொத்த விலை, வரவு, பல்வேறு சந்தை நிலவரங்களைப் பற்றிய பொதுவான தகவல்கள்

  • ஊடகங்கள் மற்றும் வெளியீடுகள் மூலமாக தகவல்களை விவசாயிகளைக் கொண்டு சேர்த்தல்

  • விவசாயிகள், ஏற்றுமதியாளர், முகவர், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவர்களுக்கு உதவுதல்.

5. தோட்டக்கலை மேம்பாட்டுச் சேவை:

  • குறிப்பிட்ட பகுதி/மாநிலத்தில் தோட்டக்கலை மேம்பாட்டின் தற்போதைய நிலையை அறிய தொழில் நுட்ப பொருளாதாரக் கல்வி மூலம் சரிபார்த்தல்.

  • மேம்பாட்டின் குறைகளைக் கண்டறிந்து அவற்றிற்கான சீர்படுத்தும் முறைகளை அறிவுறுத்தல்.

  • குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்களை உருவாக்குதல்.

  • ஆலோசனை மற்றும் வல்லுநர் சேவைகள் அளித்தல்.

  • தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் மேம்படுத்துதல்.

  • 100 சதவீத நிதி உதவி.    

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகம்: 
  • காய்கறி மற்றும் பழக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்குகளை (முதலீட்டினை) உறுதிப்படுத்துதல்.

  • இச்சங்கங்களின் தினசரி நடவடிக்கைகளுக்கான நிதி உதவி அளித்தல்.

  • விளைபொருட்களை எடுத்துச் செல்ல வாகனம் வாங்க உதவி செய்தல்.

  • பார்சல் மற்றும் தரப்பிரிப்பு கிடங்குகள் சேமிப்புக் கிடங்குகள் கட்டுதல்.

  • குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் பனிக்கட்டி அறைகள் அமைத்தல்.

  • சில்லறைச் சந்தை உட்பட விளைபொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுதல்.

  • பதப்படுத்தும் தொழிற்சாலைகள் (யூனிட்டுகள்) அமைத்துக் கொடுத்தல் போன்றவை, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தால் செய்யப்படும் உதவிகள் ஆகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்:

இக்கழகமானது நம் நாட்டில் இதுவரை 446 திட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான கூட்டுறவுச் சங்கங்களுக்கு உதவி செய்துள்ளது.  இதில் 32 திட்டங்கள் சந்தைப் பொருட்களுக்கு குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் முன் குளிர்விக்கும் அமைப்புகள் அமைத்தல், திராட்சை மற்றும் பிற பழங்களின் ஏற்றுமதிக்கானவை.  மேலும் இக்கழகம் காய்கறி மற்றும் பழப்பயிர்களுக்கென பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்கவும் உதவுகின்றது.

குளிர்பதன சேமிப்புக் கிடங்கு:

இத்தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகமானது 9.22 இலட்சம் டன்கள் கொள்ளளவு (மேலும் கொள்ளளவினை விரிவுபடுத்தவும் கூடிய கிடங்குகளும் அடங்கும்) கொண்ட 312 குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளுக்கு உதவி செய்துள்ளது.  இக்கிடங்குகளில் குறிப்பாக உருளைக்கிழங்கு, மற்றும் பழப்பொருட்கள் புளி, வாசனைப் பொருட்கள், பால் பொருட்கள் போன்றவையும் சேமித்து வைக்கப்படுகின்றது.

நிதி உதவிப்பெறத் தேவையான அடிப்படைகள்:

இக்கழகத்தின் உதவி பெற, அத்திட்டம் தொழில்நுட்ப ரீதியாக பயன்படுத்தக் கூடியதாகவும், பொருளாதார ரீதியாக செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
கூட்டுறவுக் கழகத்தின் பண்புகள் பின்பற்றப்பட வேண்டும்.
பெரும்பாலான இடுபொருள்கள் சங்கத்தின் பயன்பாட்டுப் பகுதிக்குள் பெறக் கூடியதாக  இருத்தல் வேண்டும்.
பழம் மற்றும் காய்கறிப் பொருட்களை சந்தைப்படுத்தத் தேவையான கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சங்கத்தினுள் இருக்க வேண்டும்.

உணவு பதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம்:

உணவு பதப்படுத்தும் தொழில்சாலைகளை நிறுவுதல்/புதுப்பித்தல்
/நவீனமயமாக்குதல் போன்றவற்றிற்கான திட்டம்

 

        இத்திட்ட உதவி 25% தொழிற்சாலை, இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கட்டிட வேலைகள் போன்றவற்றிற்கு சாதாரண பகுதிகளில் அதிகபட்சம் ரூ.50 இலட்சமும், அமைப்பதற்குக் கடினமான பகுதிகளில் 33.33% அதாவது ரூ 75 இலட்சமும் ஆகும் செலவில் வழங்கப்படுகின்றது.

உணவுப் பூங்கா:

சாதாரணப் பகுதிகளில் 25%, சற்று சிக்கல் மிகுந்த பகுதிகளில் 33.33% அதிகபட்சமாக ரூ.4 கோடி வரை பொது வசதிகளான குளிர் சாதன சேமிப்பு அறை, உணவு சோதனை மற்றும் ஆராய்ச்சிக் கூடம் தொழிற்சாலைக் கழிவு சுத்திகரிப்பு, பொது பதப்படுத்தும் அமைப்புகள், மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குதல் போன்றவற்றிற்கு அளிக்கப்படுகின்றது.

ஒருங்கிணைந்த குளிர் தொடர் (சங்கிலி/இணைப்பு) வசதிகள் /அமைப்புகள்:

தொழிற்சாலை, இயந்திரம், தொழில்நுட்பப் பணிகளுக்கென சாதாரண பகுதிகளில் ஆகும் செலவில் 25%, அமைப்பதற்கு சிக்கல் நிறைந்த (பொது கூரை/உச்ச வரம்பு) உள்ள பகுதிகளில் 33.33% அதாவது ரூ.75 லட்சம் வரை அளிக்கப்படுகின்றது.

மதிப்புக் கூட்டும் மையம்/நிலையம்:

இத்திட்ட உதவி 25% தொழிற்சாலை, இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கட்டிட வேலைகள் போன்றவற்றிற்கு சாதாரண பகுதிகளில் அதிகபட்சம் ரூ.50 லட்சமும், அமைப்பதற்குக் கடினமான பகுதிகளில் 33.33% அதாவது ரூ75 லட்சமும் ஆகும் செலவில் வழங்கப்படுகின்றது.

கதிர்வீச்சுத் தடுப்பு அமைப்புகள்:

தொழிற்சாலை, இயந்திரம், தொழில்நுட்பப் பணிகளுக்கு ஆகும் செலவில் சாதாரண பகுதிகளுக்கு 25%, சற்று சிக்கல் நிறைந்த பகுதிகளில் 33.3% அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை நிதி உதவி அளிக்கப்படுகின்றது.

பொதி/பார்சல் கட்டும் பகுதி:

தொழிற்சாலை, இயந்திரம், தொழில்நுட்பப் பணிகளுக்கு ஆகும் செலவில் சாதாரண பகுதிகளுக்கு 25 சதமும், சற்று சிக்கல் நிறைந்த பகுதிகளில் 33.3% அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரை பார்சல் பகுதியை தனியாகவோ, உணவுப் பூங்காவிலோ (ஏற்கனவே பார்சல் வசதி / பகுதி இல்லாத பூங்காவில்) அமைப்பதற்கு நிதி உதவி அளிக்கப்படுகின்றது.
இத்திட்ட உதவி 25% தொழிற்சாலை, இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கட்டிட வேலைகள் போன்றவற்றிற்கு சாதாரண பகுதிகளில் அதிகபட்சம் ரூ.50 இலட்சமும், அமைப்பதற்குக் கடினமான பகுதிகளில் 33.33% அதாவது ரூ75 இலட்சமும் ஆகும் செலவில் வழங்கப்படுகின்றது.

 

மேலே செல்க