வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TCMPF) -ஆவின்


பால் வள மேம்பாட்டுத்துறை 1958 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. நிர்வாகம் மற்றும் சட்ட ரீதியான கட்டுப்பாடு மாநிலத்தில் உள்ள பால் கூட்டுறவுகள் அனைத்தும் 1.8.1965 ஆம் ஆண்டு பால் வள மேம்பாட்டுத் துறையின் கீழ் மாற்றம் செய்யப்பட்டது.  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் விதியின் கீழ் பால் உற்பத்தி மற்றும் பால் வள மேம்பாட்டிற்காக ஆணையரை செயல்பாட்டு பதிவாளராக ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆனந்த் நடைமுறைப்   படுத்தியவரின் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட், 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. இத்துறையின் வணிக ரீதியிலான செயல்களான பால் கொள்முதல், பதனிடுதல், குளிர்வித்தல், அட்டை பெட்டியில் அடைத்தல் மற்றும் நுகர்வோர்க்கு பால் விற்பனை செய்தல் ஆகியவை தமிழ்நாடு பால் வள மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் மூலம் இருந்த நிர்வகிப்பை “தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்” பொதுவாக ஆவின் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் பிப்ரவரி 1 ஆம் தேதி 1981 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. கூட்டமைப்பு பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவற்றைச் செய்து வருகிறது. கட்டமைப்பு பால் மேம்பாட்டுச் செயல்களை செய்பணிச் செயல் வெள்ளம் திட்டத்தின் மூலம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பெற்று நடைமுறைப்படுத்தி வருகிறது. சென்னை மாநகரத்தில் 4 பால் பண்ணைகள் உள்ளது. பால் கொள்முதல் பதனிடுதல் மற்றும் வினியோகம் ஆகியவை மாவட்ட ஒன்றியத்தின் மூலம் அந்தந்த குறிப்பிட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

தாராளமயமாக்கல் செய்த தருணத்தில், பால் பண்ணைத் துறையில் தனியார் பால் பண்ணைகளும் இறங்கியது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி, பால் கூட்டுறவுகளின் செயல்பாடுகளை மேம்படுத்த வரைமுறை நோக்கத்துடன் அணுகி சரியான திட்டம் ஏற்படுத்தி செயலாற்ற உத்தரவிட்டுள்ளார். 
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சாதனைகளை பால் உற்பத்தியாளர் சங்கங்கள், சங்கங்கள் மற்றும் பேரவைகள் ஆகியவை செய்துள்ளது.

இந்தியாவில் கால்நடை தொகை உலகத்தில் உள்ள மொத்த கால்நடை தொகையில் 15 சதவிகிதம் உள்ளது. பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியில் முண்ணனி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 145.88 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது.

ஆதாரம்: http://www.aavinmilk.com
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016