வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்

பால் பண்ணை மேம்பாட்டுத் துறையின் குறிக்கோள்

  1. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிரந்திரான கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்து சீராக மற்றும் முறையான சந்தை உதவியுடன் கிடைக்க உறுதி செய்தல்.
  2. தரமான பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வோருக்கு கட்டுப்படியான விலையில் கிடைக்கும்படி செய்தல்.

இந்த குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டு பால் மேம்பாட்டுத் துறையின் மூலம் நிறைய செயல்களை செய்து வந்துள்ளது. பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் வைத்திருக்கும் அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக மருத்துவ காப்பீடுகள் மற்றும் செயற்கை கருவூட்டல் முறையை நடைமுறைப்படுத்துதல், சரிவிகித கால்நடை தீவனம் அளித்தல், விவசாயிகளுக்கு நவீன கால்நடை வளர்ப்பு முறைகள் மற்றும் உத்திகளை வழங்குதல்.

  • கறவை மாடுகள் மற்றும் அதன் உற்பத்தித் திறனை நீண்ட காலத்திற்கும் மற்றும் அதற்குத் தேவையான அனைத்துச் செயல்களும் எடுக்கப்படுகிறது.
  • பால் மற்றும் பால் பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்குத் தேவையான உள்கட்டமைப்பு நுகர்வோரை சென்றடைவதற்குத் தேவையான புதிய குளிர்வூட்டும் நிலையங்கள் அமைத்தல், பால் பதப்படுத்தும் நிலையங்கள், நவீன செயலக முறைகளை அமைத்தல் ஆகியவை இதன் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.
  • பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையாளர் பால் பண்ணை மேம்பாட்டுத் துறையின் தலைவர் ஆவார். அவர் மாநிலத்தின் பால் பண்ணைக் கூட்டுறவுகளின் செயல் முறை பதிவாளர் ஆவார். இதன் காரணமாக தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TCMPF) அதாவது ஆவின் துறையின் மேலாண் இயக்குநர் ஆவார்.

பால் பண்ணை மேம்பாட்டுத் துறையின் செயற்கூறுகள்
சங்கங்களை ஒருங்கிணைத்தல், சங்கங்களை பதிவு செய்தல், ஆரம்ப பால் கூட்டுறவு, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை கண்காணித்தல், கட்டுப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய செயற்கூறுகள் ஆகும்.
பால் பண்ணை மேம்பாட்டுத் துறை மேலும் தனிப்பட்ட செயற்கூறுகளை விசாரணை, கண்காணித்தல், அபராதம் மற்றும் நீதிமன்றங்கள், சிறப்பு அதிகாரிகளை நியமித்தல், செயல்படாமல் இருக்கும் சங்கங்களின் சொத்துக்களை முடிவுக்குக் கொண்டு வருதல், ஆகியவற்றைச் செய்து வருகிறது. பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டின் ஆணையர், துணை பால் ஆணையர் (கூட்டுறவு), வட்ட துணை பதிவாளர்கள் (பால் பண்ணை) ஆகியோர் நீதித்துறையில் போன்ற அதிகாரங்கள் பிரச்சனைகள் முடிப்பது, §மல் முறையீடு, திருப்புதல், மறுஆய்வு ஆகிய பல்வேறு வேலைகளை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதி, 1985 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதி, 1988 - ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆரம்ப பால் பண்ணை கூட்டுறவு சங்கங்கள்
குறைந்தபட்சம் 25 அல்லது அதற்கு மேலான தனிநபர்கள் துறை 11 - ன் இந்திய ஒப்பந்த விதி 1872 - ன் கீழ் கறவை மாடுகள் வைத்திருப்போர் ஒன்றாகச்  சேர்ந்து ஆரம்ப பால் பண்ணை கூட்டுறவு சங்கம், ஒன்று அல்லது பல கிராமத்தில் அதன் செயல்பாடுகள் உள்ளது போன்று தொடங்கலாம். இந்த நபர்கள் மாவட்டத்தில் இயங்கும் வட்ட துணை பதிவாளர் (பால் பண்ணை) அலுவலகத்தை மேலும் உதவிகள் பெற தொடர்பு கொள்ள வேண்டும். ஆரம்ப கூட்டுறவு பால் சங்கத்தின் உறுப்பினர்கள் சங்கத்திற்கு பால் வழங்கி அவை அதன் தரத்திற்கேற்ப கொள்முதல் செய்து கொள்ளும். இதன் பண பட்டுவாடா 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை சங்கத்திடம் இருந்து பால் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பால் மாடுகள், இலவச கால்நடை உடல்நலக் காப்பீடு, செயற்கை கருவூட்டல் மற்றும் சரிவிகித கால்நடை தீவன விநியோகம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நவீன கால்நடை பயிற்சிகள் அளித்து கறவை மாடுகளை தரம் உயர்த்துதல் மற்றும் இதன் மூலம் அதன் உற்பத்தித் திறனை நீண்ட நாட்களுக்குப் பெருக்கி அதன் உறுப்பினர்களுக்கு பயன்பெறும் வகையில் வழங்கப்படுகிறது.

மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள்
மகளிரை பால் துறைக்கு அதிக அளவில் பங்களிப்பை ஊக்கப்படுத்த, மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை அந்தந்த குறிப்பிட்டப் பகுதிகளில் ஏற்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1210 மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது.

ஆதாரம்: http://www.aavinmilk.com
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு |தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016