வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட்

தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட்


 


தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட் பொதுவாக “தாய்கோ” வங்கி என்று அழைக்கப்படும். இது நாட்டிலேயே முதன் முதலில் கூட்டுறவு துறையில் தொழிற்சாலை கூட்டுறவுகளின் தேவைகளுக்காகத் தொடங்கப்பட்டது. தனிப்பட்ட கூட்டுறவு வங்கியாகவும், மாநிலம் முழுவதும் சட்ட எல்லை கொண்டதாகவும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலை கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்தவும் இவ்வங்கி செயல்படுகிறது.

1953 ஆம் ஆண்டு “தொழிற்சாலை கூட்டுறவுகளில் வேலை செய்யும் குழு” இந்திய அரசு அமைத்து மாநில அளவில் தனிப்பட்ட வங்கி ஒன்றைத் தொடங்கி தொழிற்சாலை கூட்டுறவு சங்கங்களின் நிதித் தேவைகளை பார்த்துக் கொள்ள பரிந்துரை செய்தது. மெட்ராஸ் மாநில தொழிற்சாலை கூட்டுறவு வங்கி ஒருங்கிணைக்கப்பட்டு 13.9.1961 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் விதியின் கீழ் அப்போதைய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரும் பின்னாளில் இந்திய ஜனாதிபதியான திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களின் மூலை குழந்தையாக தொடங்கப்பட்டது.

இவ்வங்கி 1962 ஆம் ஆண்டு செயல் முறையில் வரத் தொடங்கியது மற்றும் இது தொழிற்சாலை கூட்டுறவு துறையின் நிதித் தேவைகளை ஈடுசெய்யும் அளவிலும் இருந்து வந்துள்ளது. இவ்வங்கி தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றது. வங்கியின் தலைமை அலுவலகம் அதன் சொந்த அடுக்குமாடியில் (கீழ்த்தளம்) 5000 சதுர அடியில் சி.எம்.டி.ஏ வளாகம், எக்மோர், சென்னை என்ற முகவரியில் இயங்கி வருகிறது.

ஆதாரம்: http://taicobank.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016