வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட்
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட்
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் 1905 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் நாள் பதிவு செய்யப்பட்டு 26, நவம்பர் 1905 முதல் செயல்பட்டு வருகிறது. வங்கி 102 ஆண்டுகளை நிறைவு செய்து, அதன் 103 வது ஆண்டு எடுத்து வைக்கும் §வலையில் பயனுள்ள சேவைகளை தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்குத் தேவையான கடன்களை பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. இவ்வங்கி பாரத ரிசர்வ் வங்கியின் இரண்டாவது பட்டியலில் ஜீலை 1966 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டு, ஆகஸ்ட் 1972 - ல் உரிமம் பெறப்பட்டது.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பேரவை. இவ்வங்கி நபார்டு வங்கி வழங்கும் மறுநிதியளிப்புகளை சிறு தவணை மற்றும் நடுத்தர தவணைகளை வேளாண்மை மற்றும் இதர துறை கடன்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் தொடக்க கூட்டுறவு மேம்பாட்டு நிதியத்தை நிர்வகித்து வருகிறது. இவை மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் லாபத்தின் மீது வழங்கப்பட்ட நிதியாகும். தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட், கடன் திட்டங்கள் மற்றும் கடன் கொள்கைகளை தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு முன் வரைவு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.தலைமை வங்கி மாநிலத்தில் வெற்றிகரமாக பொது விநியோக முறையின் கீழ் மறுநிதியளிப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் - ன் செயற்கூறுகள்

  • மாநில கூட்டுறவு வங்கிகள் சிறு தவணை கடன், நடுத்தர தவணை கடன்கள் மற்றும் முன்பணம் ஆகியவற்றை விவசாயம் மற்றும் அதன் சார்ந்த வேலைகளுக்கு வழங்கி வருகிறது. அதே போல், இவ்வங்கி கடன்களை பல்வேறு கிராம மேம்பாட்டு திட்டங்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தலைமை கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டு அமைப்புகள் மற்றும் நேரடியாக அதன் தலைமை அலுவலகம் மற்றும் கிளைகள் மூலமாக வழங்குகிறது.
  • கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல் ஆகியவற்றுடன், இவ்வங்கி மற்ற இதர வங்கியியல் வசதிகளான பாதுகாப்பு வைப்பு நிதி பெட்டகம் வாடகைக்கு எடுத்தல், முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பு வளையத்தில் வைத்தல், நிதி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
  • இவ்வங்கி கீழ்க்கண்ட செயல்களை மேம்பாட்டு வசதிகளுக்கு ஏற்படுத்துகின்றது. மாநிலத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு நிதி வழங்குவதற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் முதலீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டப்படியான மற்றும் அல்லாத தேவைகளுக்கு - இவ்வங்கி உதவுகிறது. இது சொத்துக்களை வர்த்தகம் செய்வது, விற்பனை மற்றும் வாங்குதல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
  • வங்கி தொடக்க கூட்டுறவு மேம்பாட்டு நிதியத்தை ஏற்படுத்தி மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அறைகள் கட்டமைப்பு, நகை பாதுகாப்புக்கு பெட்டக வசதிகளை வாங்குதல், நவீனமய வங்கி சேவை முகப்பகள், பாதுகாப்பு கதவுகள் நிறுவுதல் ஆகியவற்றை செய்து வருகிறது.
  • தலைமை வங்கி, மாநிலத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வங்கிகள் நல்ல முறையில் இயங்குவதற்கு உதவுகிறது.
  • வங்கிகள் வைப்பு நிதி உத்திரவாதத் திட்டத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய அரசு / தமிழ்நாடு அரசின் உதவியுடன் ஏற்படுத்தி வைப்பு நிதிகளுக்கு காப்பீடு வழங்குதல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஏற்றுக் கொண்டதுடன் வழங்கப்படுகிறது.
  • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டைக் கண்காணிக்க, வங்கி தனிப்பட்டத் துறையை ஏற்படுத்தி மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  • வங்கி, திட்ட மதிப்பீடுகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தொழில்நுட்பப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கான அறிவுரைகளை வழங்கி வருகிறது. இது நபார்டு வங்கியின் பண்ணை சாரா திட்டங்களை முடிக்க உதவுகிறது.
  • வங்கி மாநில அளவிலான தொழில்நுட்பக் குழுவை ஒவ்வொரு வருடமும் கூட்டி, அனைத்து பயிர்களுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியான நிதிகளை பருவகால விவசாய வேலைகளுக்கு வழங்குகிறது.
ஆதாரம்
http://www.tnscbank.com/sf2008.pdf
http://www.tn.gov.in/policynotes/archives/policy2004-05/pdf2004/cfcp2004_05.pdf
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016