வங்கி மற்றும் கடன் ::நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
      நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு சங்கங்கள் விதியின் கீழ் அந்த மாநில அரசின் மூலம் பதிவு செய்யப்பட்டது. 1966 ஆம் ஆண்டுக்கு முன், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கியது.

இந்தியாவில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் வரலாறு
நகர்ப்புற கூட்டுறவு வங்கி, முறைப்படி வரையறுக்கப்பட்டுவிட்டாலும், இது நகர்ப்புறம் மற்றும் சிறு நகர பகுதிகளில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகளைக் குறிக்கும். 1966 ஆம் ஆண்டு வரை, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதிக்கப்பட்டது. அவர்கள் சிறு கடன் பெறுவோர் மற்றும் தொழில்களுக்கு கடன் வழங்குவர். இன்று, இதன் பயன்பாட்டின் எல்லை மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நகர்ப்புற கூட்டுறவு வங்கி இயக்கம் 19 ஆம் நூற்றாண்டில், பிரிட்டனில் கூட்டுறவு இயக்கத்தின் பரிசோதனை மூலம் வெற்றி பெற்றது மற்றும் ஜெர்மனில் கூட்டுறவு கடன் இயக்கத்தின் வெற்றி ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அது போன்றது தொடங்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் கூட்டுறவு, பரஸ்பர உதவி, ஜனநாயகமாக முடிவு எடுத்தல் மற்றும் வெளிப்படையான உறுப்பினர், ஆகியவற்றின் கொள்கைகள் மூலம் இயங்குகிறது. கூட்டுறவுகள் புதிய மாற்று அணுகுமுறையை அமைப்புகளுக்கு பின்பற்றும் அதே சமயம், தனிப்பட்ட நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், இணைந்த பங்கு நிறுவனங்கள் அதிகாரமுள்ள வணிக அமைப்புகளாக செயல்படுகின்றது.

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளைப் பற்றிய ஆய்வு பாரத ரிசர்வ் வங்கி 1958-59 ஆம் ஆண்டு மேற்கொண்டது. இதன் அறிக்கை 1961 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் நிதி மற்றும் இதரத் துறைகள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு புதிய நிலையங்களில் தொடக்க நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தொடங்கவும், மாநில அரசு ஆக்கப்பூர்வ மேம்பாட்டு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு, வர்தே குழு, இது போன்ற வங்கிகள் அனைத்து நகர்ப்புற மையங்களிலும் 1 லட்சம் அல்லது அதற்கு மேல் மக்கள் தொகை உள்ள இடத்தில், அது சமயம் அவ்விடத்தில் ஒரே சாதி அல்லது சமய மக்கள் இல்லாமல் இருப்பின், வங்கிகள் தொடங்க பரிந்தரை செய்துள்ளது. இந்தக் குழு குறைந்தபட்ச முதலீட்டுத் தேவைகள் மற்றும் மக்கள் தொகை குறிப்புகள் பற்றிய தொகுப்பை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.

சமீபகால மேம்பாடுகள்
சில ஆண்டுகளுக்குப் பிறகு, தொடக்க (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் அதன் எண்ணிக்கை, அளவு மற்றும் வணிக அளவு கையாள்வது ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2003, மார்ச் 31 ஆம் நாள் நிலவரப்படி, 2,104 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இதில் 56 வங்கிகள் தனிப்பட்டவை. இவற்றில் 79 சதவிகிதம் அளவிற்கு 5 மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது. ஆந்திர பிரதேசம், குஜராத், கர்நாடகம், மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு.

முக்கியத் துறைகளுக்கு பணம் வழங்குதல்
60 சதவிகிதம் மொத்த கடன்கள் மற்றும் முன் பணம், முக்கிய துறைகளுக்கு வழங்குவதை நடைமுறைப்படுத்த நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தேவைப்படுகிறது. மேலும், முக்கியத் துறைகளுக்குள், மொத்தக் கடன் மற்றும் முன்பணம் வழங்குவதில் 15 சதவிகிதம் அளவிற்கு நலிவடைந்த துறைக்கும் வழங்குதல் வேண்டும். தனிப்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் முக்கிய துறைகளுக்கு கடன் வழங்குதல், வங்கி கிளை விரிவாக்கம் செய்தல், வேலை செய்யும் பகுதிகள் விரிவாக்கம் செய்தல், தனிப்பட்ட அந்தஸ்து ஆகியவற்றை வழங்கும் போது பாரத ரிசர்வ் வங்கி கணக்கில் எடுத்துக் கொள்ளும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016