வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி  
         
            
          
          
            
              1952  | 
              மாநில அரசு    வேளாண்மைத் துறை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது   | 
             
            
              1952-1958  | 
              நெல் உப ஆராய்ச்சி    நிலையம் அமைக்கப் பட்டது.  | 
             
            
              1958-1978  | 
              அரசு விதைப்    பண்ணை   | 
             
            
              1978-1981  | 
              பலபயிர் உப    பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டது.  | 
             
            
              1981  | 
              தமிழ்நாடு    வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.  | 
             
           
          
            - நிலையத்தின் நோக்கங்கள் 
 
            - இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்  மானாவாரி மற்றும் நேரடி விதைப்பு சாகுபடி செய்யும் பகுதிகளுக்கு ஏற்ற உயர்விளைச்சல்  தரக்கூடிய குண்டு மிளகாய் இரகங்களைத் தெரிவு செய்தல் 
 
            - மானாவாரிக்கு ஏற்ற உயர்விளைச்சல் தரக்கூடிய  குண்டு மிளகாய் இரகங்களைத் தெரிவு செய்தல் 
 
            - மானாவாரி நெல், மிளகாய் மற்றும் காய்கறி பயிர்களுக்கு ஏற்ற சீரிய உழவியல் தொழில்நுட்பங்களைக்  கண்டறிதல்
 
            - இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்  உள்ள தரிசு நிலங்களுக்கேற்ற மரப்பயிர்கள் மற்றும் பழமரப்பயிர்களைத் தெரிவு செய்தல் 
 
            - மானாவாரி நெற்பயிருக்கு மாற்றாக வருவாய்  தரக்கூடிய  மாற்றுப் பயிர்களைக்  கண்டறிதல்
 
            - நிலையத்தின் செயல்பாடுகள் 
 
           
          அ. ஆராய்ச்சி 
            பயிர்  மேம்பாடு – பயிர் மரபியல் 
          
            - இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு  ஏற்ற குறுகிய கால மத்திம சன்னமான நெல் இரகங்களைத் தெரிவு செய்தல் 
 
            - இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில்  மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற நெல் இரகங்களைத் தெரிவு செய்தல் 
 
            - பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின்  மூலம் வெளியிடப்பட்ட நெல் இரகங்களின்  வல்லுநர் விதை உற்பத்தி மற்றும் மரபியல் பராமரிப்பு
 
           
                  
            பயிர்  மேலாண்மை  
            உழவியல்  
            இராமநாதபுரம்  மாவட்டத்தில் பகுதி மானாவாரி நெல் சாகுபடிக்கு ஏற்ற வகையில் தழை மற்றும் மணிச்சத்துகளை  இடும் காலம் மற்றும் பிரித்து இடும் முறைகளை கண்டறிதல்  
  ஆ.வேளாண் விரிவாக்கம் 
          
            - புதிதாக வெளியிடப்படும் நெல் இரகத்தை  மானாவாரி நெல் விவசாயிகளிடத்தில் பரவலாக்கும் பொருட்டு செயல் விளக்கத்திடல்கள் அமைத்தல் 
 
           
          
            
              பரமக்குடி    அருகில் உள்ள கருங்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட அண்ணா 4 செயல் விளக்கத்திடல்களை கோவை வேளாண்பல்கலைக் கழக விஞ்ஞானிகள் மற்றும் மும்பை    சர்.ரத்தன் டாடா அறக்கட்டளை விஞ்ஞானிகள் நேரடி ஆய்வு செய்தல்  | 
             
           
           
          
          
            
              பரமக்குடி வேளாண் உதவி இயக்குநர், தானம் அறக்கட்டளை பிரதிநிதி ஆகியோர்  விஞ்ஞானிகள் மற்றும்  விவசாயிகளுடன் சிங்கராயபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட    அண்ணா 4 செயல் விளக்கத்திடல் பற்றி கலந்துரையாடல்  | 
             
           
            
            
          
          
            - இராமநாதபுரம் மாவட்டத்தில் மாதாந்திர  மண்டல பணிமனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் 
 
            - வயல்விழா கிராமக்கூட்டங்கள் நடத்துதல் 
 
            - உழவர்களின் வயல்வெளிப் பிரச்சினைகளுக்குத்  தீர்வு காணுதல் 
 
            - வேளாண்மைத் துறையுடன் இணைந்து விரிவாக்கப்  பணியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயிற்சி அளித்தல் 
 
            - பப்பாளி மாவுப்பூச்சியைக்  கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணியை உற்பத்தி செய்து தேவைப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக  வழங்குதல் 
 
            - ஆத்மா திட்டத்தின் கீழ் விஞ்ஞானிகள்  மற்றும்  விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டங்களை  நடத்துதல்
 
            - விவசாயிகள் பங்கேற்பில் மானாவாரிக்கு  ஏற்ற புதிய நெல் இரகங்களைத் தெரிவு செய்தல் 
 
           
          
            
          
            -  நிலையத்தின் சாதனைகள் - பயிர் மேம்பாடு
 
           
          இதுகாறும்  நான்கு நெல் இரகங்களும் ஒரு மிளகாய் இரகமும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுள்ளன. 
          
            
               
                பயிர் மற்றும் இரகம்  | 
              வயது(நாட்கள்)  | 
              வெளியிடப்ட்ட ஆண்டு   | 
              சிறப்பு அம்சங்கள்   | 
             
            
              நெல் – பரமக்குடி1  | 
              120 – 125 நாட்கள்  | 
              1985  | 
              
                - பெற்றோர் : கோ    25 x ஆடுதுறை 31
 
                - வெளியீடு - 1985 
 
                - வறட்சியைத்    தாங்கும் தன்மை மற்றும் சாயாத தன்மை 
 
                - இராமநாதபுரம்    மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நேரடி விதைப்பிற்கு ஏற்றது.
 
                - வயது 120 முதல்    125 நாட்கள்
 
                - விளைச்சல்    திறன் – எக்டருக்கு 2650 கிலோ
 
                | 
             
            
              நெல் – பரமக்குடி    2  | 
              110 – 115 நாட்கள்  | 
              1994  | 
              
                - பெற்றோர் : ஐஆர்ஐ    3564- 149- 3x அம்பாசமுத்திரம் 4
 
                - வெளியீடு – 1994
 
                - குறைந்த    வயது / வறட்சியைத் தாங்கும் திறன் மற்றும் சாயாத தன்மை
 
                - அதிக    மழைநீர் தேங்கும் காலங்களில் அதனைத் தாங்கி வளரும் திறன் 
 
                - மானாவாரி    மற்றும் நேரடி விதைப்பிற்கு ஏற்றது.
 
                - வயது 110 – 115 நாட்கள்
 
                - விளைச்சல்    திறன் –எக்டருக்கு 3200 கிலோ
 
                | 
             
            
              நெல் – பரமக்குடி 
                (ஆர்)3  | 
              105 – 110 நாட்கள்  | 
              2003  | 
              
                - பெற்றோர் : யுவிஎல் ஆர்    ஐ ஓ சுகா 43
 
                - வெளியீடு – 2003
 
                - குறைந்த    வயது / வறட்சியைத் தாங்கும் திறன்
 
                - பயிர்    சாயாத தன்மை 
 
                -  / தானியம் சிதறாத தன்மை    / நீண்ட திடமான வெள்ளை இரக அரிசி
 
                | 
             
            
              நெல்அண்ணா(ஆர்)4  | 
              100– 105 நாட்கள்  | 
              2009  | 
              
                - பெற்றோர் :பந்த் கான்    10 x ஐ.இடி 9911 – ல் இருந்து    தனிவழித்தேர்வு
 
                - விதை    அளவு : எக்டருக்கு 100 கிலோ -  நேரடி விதைப்பு
 
                - உயரம் : நடுத்தர குட்டை    உயரம்
 
                - மகசூல் : தானியம்    – எக்டருக்கு 3.7 டன்
 
                - மானாவாரி     சாகுபடிக்கு ஏற்றது.
 
                - குறைந்த    வயது(100 –    105 நாட்கள்)
 
                - வறட்சியைத்    தாங்கும் 
 
                - நீண்ட    சன்னமான வெள்ளை  அரிசி
 
                - அதிக    அறவைத் திறன்(66.1    சதவீதம்)
 
                - மானாவாரியில்    இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்  பயரிட ஏற்றது.
 
                | 
             
            
              மிளகாய் – பரமக்குடி1   | 
              200  நாட்கள்  | 
              1994  | 
              
                - பெற்றோர் : கோ    2 இராமநாதபுரம் குண்டு
 
                - வெளியீடு – 1994
 
                - மானாவாரி    சாகுபடிக்கு ஏற்றது.
 
                - கூம்பு    வடிவம் மற்றும் அடர்ந்த சிவப்பு நிறம் உடைய பழங்கள் 
 
                - வற்றல்    அதிக காரத்தன்மை உடையது(0.36    சதம்)
 
                - விளைச்சல் – எக்டருக்கு    2400 கிலோ வற்றல்(உள்ளூர்) 
 
                | 
             
           
          பயிர்  மேலாண்மை  
          
            - இராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல்  விதைப்பிற்கு  39 வது வாரம்(செப்டம்பர் மாத இறுதி வாரம்)  தகுந்த காலமாக கண்டறியப்பட்டுள்ளது.
 
            - மானாவாரி நெல் சாகுபடியில் மண் ஆய்வுக்கு  ஏற்ற உரப்பரிந்துரைகளை கடைபிடித்து எக்டருக்கு 750 கிலோ ஊட்டமேற்றிய  தொழு உரம் மற்றும் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ  பேக்டீரியா இடுவதால் உயர் விளைச்சல் கிடைத்துள்ளது.
 
            - மானாவாரி  நேரடி நெல் விதைப்பு சாகுபடியில்  எக்டருக்கு 12.5 டன் மக்கிய தென்னை நார்க்கழிவு இடுவது அங்கக  உரங்களுக்கு மாற்றாகக் கண்டறியப்பட்டுள்ளது.
 
            -  மானாவாரி நெல்லுக்கு நிகரான மாற்று  பயிரான மக்காச்சோளமும் குண்டு மிளகாயும் கண்டறியப்பட்டுள்ளன.
 
            - அண்ணா 4 நெல் இரகத்தை ஆண்டின் 37 வது வாரத்தில் புழுதி விதைப்பாக  விதைப்பது அதிக விளைச்சலைத் தந்துள்ளது.
 
            - அக்டோபா மாதம் 20 ஆம் நாள் 20 நாள் வயதுடைய அண்ணா 4 நெல் நாற்றுகளை பகுதி மானாவாரி சாகுபடியில் நடவு செய்வதால் அதிக விளைச்சல்  கிடைத்துள்ளது.
 
            - திருந்திய நெல் சாகுபடி முறையில் நெற்பழ  நோய் தாக்குதல் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
 
           
  
          தொடர்புக்கு 
          பேராசிரியர் மற்றும் தலைவர், 
            வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் 
            பரமக்குடி -642 101. 
            Phone number : 04564 – 222139 
            e-mail ID : arspmk@tnau.ac.in           
           |