வேளாண்    ஆராய்ச்சி நிலையம், ஆழியார்  
            
           
          1.ஆராய்ச்சி பரிந்துரைகள்  
            வரலாறு  
            பரம்பிக்குளம் ஆழியார்  நீர்  பாசன  இடங்களுக்கு  ஏற்ற  பயிர்களை  கண்டறியவும்  மற்றும்  பயிர்  சாகுபடி  செய்யும்  போது  ஏற்படும்  பிரச்சினைகளை  அறியவும்  இந்த  வேளாண்மை  ஆராய்ச்சி  நிலையமானது  1963 ஆம்  வருடம்  ஆரம்பிக்கப்பட்டது.  தற்பொழுது  இந்த  வேளாண்மை  ஆராய்ச்சி  நிலையம்,  மாநில  மற்றும்  தேசீய  அளவில்  நிலக்  கடலை  மற்றும்   தென்னைப் பயிர்களின்  மேம்பாட்டிற்காக செயல்பட்டு  வருகிறது. 
          இருப்பிடம்  
            இந்த  வேளாண்மை  ஆராய்ச்சி  நிலையம்  பொள்ளாச்சியில் இருந்து  20 கி.மீ. தொலைவில்  வால்பாறை  செல்லும்  சாலையில்  மேற்குத்  தொடர்ச்சி  மலையின்  அடிவாரத்தில்  உள்ளது.  இப்பகுதியின்  சராசரி  மழையளவு  வருடத்திற்மகு  802 மி.மீ. ஆகும். இந்த  மழையளவில்  தென்மேற்கு  பருவம்  மூலமாக  300 மி.மீ. வடகிழக்கு  பருவம்  மூலமாக  333மி.மீ. மற்றும்  கோடைகாலத்தில்  169 மி.மீ. மழையும்  கிடைக்கிறது. 
            இவ்வாராய்ச்சி நிலையத்தின் மொத்தப் பரப்பளவு 22.00 எக்டர் ஆகும். இதில்       17.22  எக்டரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பாசனக் கால்வாய்    மூலமாக நீர்ப் பாசனம் கிடைக்கிறது. 
  நோக்கம்  
          
            - பொள்ளாச்சி மற்றும்  தமிழ்நாட்டிற்கு தகுந்த  புதிய  தென்னை  மற்றும்  நிலக்கடலை  இரகங்களை  கண்டறிதல் 
 
            - பரம்பிக்குளம் ஆழியார்  பாசனத்  திட்டத்தின்  கீழ்  உள்ள  பகுதிக்கு  ஏற்ற  பயிர்  இரகங்கள்  மற்றும்  பயிர்சுழற்சி  முறைகளைக்  கண்டறிதல் 
 
            - பொள்ளாச்சி பகுதிகளுக்கேற்ற  இரகங்களை  கண்டறிந்து  ஒருங்கிணைந்த  g{ச்சி மற்றும் நோய்  மேலாண்மை  முறைகளைக்  கண்டறிதல் 
 
            - தரமான  தென்னை  நெட்டை,குட்டை  மற்றும்  கலப்பின  இரகங்களை  உற்பத்தி  செய்து  வழங்குதல் 
 
           
          ஆராய்ச்சி செய்யப்படும் பயிர்கள் 
          
            - நிலக்கடலை 
 
            - தென்னை 
 
           
          நடைமுறையில் உள்ள ஆராய்ச்சி திட்டங்கள்  
            1.அகில  இந்திய  ஒருங்கிணைந்த  எண்ணெய்  வித்து  ஆராய்ச்சித்  திட்டம்(நிலக்கடலை) 
            2. அகில  இந்திய  ஒருங்கிணைந்த  எண்ணெய்  வித்து  ஆராய்ச்சித்  திட்டம்(தென்னை) 
            
          நடைமுறையில் உள்ள  திட்டங்கள்  
          
            
               
                வ.எண். | 
              திட்டங்கள்   | 
              காலம்   | 
              நடவடிக்கை   | 
             
            
                 | 
              Non-Plan   | 
                 | 
                 | 
             
            
              1.  | 
              தெ.ஆ.நி.-திட்டமிடப்படாத வழக்கமான பணிகளுக்கான செலவினங்கள்-மெய்ன்   | 
              நடைமுறை   | 
              நிலக்கடலையில்  பயிர்    பாதுகாப்பு பற்றிய ஆராய்ச்சி   | 
             
            
                 | 
              ICAR Schemes  | 
                 | 
                 | 
             
            
              2.  | 
              இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்-பகுதி- அகில இந்திய    ஒருங்கிணைந்த எண்ணெய் வித்து    ஆராய்ச்சித் திட்டம்(நிலக்கடலை)   | 
              நடைமுறை  | 
              நிலக்கடலையில்  பயிர்    மேம்பாடு பயிர் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு பற்றிய ஆராய்ச்சி   | 
             
            
              3.  | 
              இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்-பகுதி- அகில இந்திய    ஒருங்கிணைந்த எண்ணெய் வித்து    ஆராய்ச்சித் திட்டம்(தென்னை)   | 
              நடைமுறை  | 
              தென்னையில் பயிர் மேம்பாடு பயிர் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு    பற்றிய ஆராய்ச்சி  | 
             
            
              4.  | 
              இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்-முழுமையாக-முன்னிலை செயல்    விளக்கத்திடல்   | 
              நடைமுறை  | 
              நிலக்கடலையில் முன்னிலை செயல் விளக்கத்திடல்   | 
             
            
              5.  | 
              இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்- முழுமையாக- பிணையத்    திட்டம் (தென்னை)   | 
                 | 
              புதிதாக வெளியிடப் பட்ட இரகங்களின் தரமான கன்றுகளை உற்பத்தி    செய்வதற்கான ஆதார விதை தேங்காய்களை உற்பத்தி செய்யும் தோப்புகளை உண்டாக்குதல்  | 
             
            
              6.  | 
              இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்- முழுமையாக- தென்னை நலவாரியம்    – வீரிய தென்னை   | 
                 | 
              விவசாயிகளின் தோப்புகளில் தென்னை கலப்பினக் கன்றுகளை மதிப்பீடு    செய்தல்   | 
             
            
                 | 
              GOI schemes  | 
                 | 
                 | 
             
            
              7.  | 
              இந்திய அரசாங்கத் திட்டம் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை –மலைவாழ் மக்கள்   | 
              2012-2015   | 
              தமிழ் நாட்டில், கோவை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைச் சரல்    பழங்குடி சமூகத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான நவீன விவசாய கருவிகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி- பகுதி-2”   | 
             
            
              8.  | 
              இந்திய அரசாங்கத் திட்டம் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை- தென்னை   | 
              2012-2015  | 
              தென்னையில் மரபியல் பரவல், எண்ணிக்கை    மற்றும் தொடர்பு சமச்சீரின்மை குறித்த ஆய்வு மேற்கொள்ளுதல்  | 
             
            
                 | 
              என்ஏடிபி திட்டம்  | 
                 | 
                 | 
             
            
              9.  | 
              என்ஏடிபி – ஆர்கேவிவொய்- பயறு வகை பயிர்கள்  உற்பத்தி   | 
                 | 
              பயறு வகையில் வல்லுநர் விதை உற்பத்தி   | 
             
            
              10.  | 
              என்ஏடிபி – ஆர்கேவிவொய்- பப்பாளி மாவுப் பூச்சி   | 
                 | 
              பப்பாளி மாவுப் பூச்சிக்கு எதிரான உயரியல் முறையில் கட்டுப் படுத்தக் கூடிய காரணியான அசிரோ பேக்கஸ் பப்பாயே உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல்    | 
             
            
                 | 
              தனியார் நிதி உதவித் திட்டம்    | 
                 | 
                 | 
             
            
              11.  | 
              தனியார் நிதித் திட்டம்- கேட்பரி- கோ கோ திட்டம்   | 
                 | 
                 | 
             
            
                 | 
              சுழல் நிதித் திட்டம்   | 
                 | 
                 | 
             
            
              12.  | 
              சுழல் நிதித் திட்டம்- தென்னங் கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்தல்    | 
                 | 
              நெட்டைxகுட்டை, குட்டைxநெட்டை கன்றுகளை உருவாக்குதல்.சீரியநெட்டை மற்றும் குட்டை இரகக் கன்றுகளை    வளர்த்து விவசாயிகளுக்கு வழங்குதல்   | 
             
            
                 | 
              Venture Capital Scheme  | 
                 | 
                 | 
             
            
              13.  | 
              விசிஎஸ்- தென்னை- தென்னங் கன்றுகளை உற்பத்தி செய்தல்   | 
                 | 
              தென்னங் கன்றுகளை உற்பத்தி செய்தல்  | 
             
            
              14.  | 
              விசிஎஸ்- பிஏ- உயரியல் முறையில் கட்டுப் படுத்தக் கூடிய காரணிகளான டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ்விரிடி களின் ஒட்டுமொத்த உற்பத்தி   | 
                 | 
              உயிரியல் முறையில் கட்டுப் படுத்தக் கூடிய காரணிகளான டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் விரிடி களின் ஒட்டுமொத்த உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல்   | 
             
            
              15.  | 
              விசிஎஸ்- விசிசி – தென்னை    இலை மட்டைகள் மற்றும் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரமாக்குதல்   | 
                 | 
              பண்ணைக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரமாக்குதல்   | 
             
            
              16.  | 
              விசிஎஸ்- பிரக்கான் பிரேவிகார்னியஸ் ஒட்டுண்ணி உற்பத்தி செய்தல்   | 
                 | 
              கருந்தலைப் புழுவை கட்டுப் படுத்தக் கூடிய    பிரக்கான் பிரேவிகார்னியஸ் ஒட்டுண்ணியைத் தொடர்ந்து அதிகளவு    உற்பத்தி செய்து வழங்குதல் மற்றும் விற்பனை செய்தல்   | 
             
            
              17.  | 
              விசிஎஸ்- ஒபிஜி- அலங்கார செடிகள் மற்றும் பழச் செடிகள் உற்பத்தி   | 
                 | 
              அலங்கார செடிகள் மற்றும் பழச் செடிகள் உற்பத்தி செய்தல்   | 
             
           
           
           
          
          2.ஆராய்ச்சி பணிகள் 
            அ) ஆராய்ச்சி தென்னை  
            பயிர் பெருக்கம்  
          
            - சேகரிப்பு, மதிப்பீடு மற்றும் தென்னை மூலவுயிர்  பராமரிப்பு
 
            - தென்னை இரகங்கள் மற்றும் தெரிவு செய்யப் பட்ட கலப்பினங்களின் திறனாய்வு மதிப்பீடு செய்தல் 
 
            - தென்னையில் மீளாக்க ஆய்வுகள் 
 
            - தென்னையில் அதிக கொப்பரை மற்றும் எண்ணெய் சத்து கொண்ட கலப்பினங்களை உருவாக்குதல் 
 
           
          பயிர் சாகுபடி  
          
            - பொள்ளாச்சி பகுதிக்கேற்ற தென்னை சார் ஊடு பயிர் மற்றும் பல பயிர் சாகுபடி முறைகள் பற்றிய ஆராய்ச்சி 
 
            - தென்னையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் 
 
            - தென்னையில் கலப்பின இரகங்களுக்கு தேவையான உரப் பரிந்துரையில் 50 விழுக்காடு தழைச் சத்தை மண்புழு உரம் மூலம் பகிர்ந்தளித்தல்
 
           
          பயிர் பாதுகாப்பு  
          
            - தென்னையில் முக்கிய பூச்சிகளை கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்பு செய்தல் 
 
            - தென்னையில் கருந்தலைப் புழு மேலாண்மை மற்றும் அவற்றின் இயற்கை எதிர் உயரிகளை மேலாண்மை ஆய்வு செய்தல் 
 
            - தென்னையில் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு  மற்றும் ஈரியோவையிட் சிலந்தி மேலாண்மை ஆய்வு செய்தல் 
 
            - தென்னை கருந்தலைப் புழுவை உயரியல் முறையில் கட்டுப் படுத்தக் கூடிய பிரக்கான் பிரேவிகார்னியஸ்ஸை அதிகளவில் உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல் 
 
            - தென்னையில் வேர் வாடல் நோய் பரவுதலைக் கட்டுப்படுத்துதல் 
 
            - உயிரியல் முறையில் கட்டுப் படுத்தக் கூடிய  காரணிகளான டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் விரிடி களின் ஒட்டுமொத்த உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல் 
 
           
          நிலக்கடலை  
            பயிர் பெருக்கம்  
          
            - உயர் விளைச்சல் மற்றும் துரு, இலைப்புள்ளி நோயை தாங்கி வளரக்கூடிய புதிய நிலக்கடலை இரகங்களை உருவாக்குதல் 
 
           
          பயிர் சாகுபடி  
          
            - நிலக்கடலையில் ஒருங்கிணைந்த உர நிர்வாக முறைகள் மற்றும் களைக் கட்டுப்பாட்டு முறைகளை உருவாக்குதல் 
 
            - நிலக்கடலையில்  இயற்கை வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்களை உருவாக்குதல் 
 
            - நிலக்கடலையில் மகசூல் மற்றும் வளர்ச்சியில் நன்மை தரும் நுண்ணுயரிகளின் குழுமங்களின் திறனை கண்டறிதல்  
 
           
          பயிர் பாதுகாப்பு  
          
            - இயற்கையான வயல்வெளி சூழ்நிலையில்  நிலக்கடலை வளர்ப்பினங்களின் முக்கிய நோய்களின் எதிர்ப்புத் திறன்களைக் கண்டறிதல் 
 
            - நிலக்கடலையில் துரு மற்றும் இலைப்புள்ளி நோய்களின் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை ஆய்வு செய்தல் 
 
           
          ஆ)விரிவாக்கம் 
          
            - தென்னை உற்பத்தி பற்றிய தொழில்நுட்ப சான்றிதழ் படிப்பு  2006-2007 முதல் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்படுகிறது.
 
            - விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விவசாயிகளுக்கு  தென்னை இலைக்கருகல் மேலாண்மை கருந்தலைப் புழு, வேரழுகல் நோய் பற்றிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
 
            - பயிற்சித் திட்டங்கள், கோகோ சாகுபடித் தொழில் நுட்பங்கள் நடத்தப்பட்டன.
 
            - நிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட வகைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், 
 
            - ஒருங்கிணைந்த களை மேலாண்மை மற்றும் நிலக்கடலையில்  உள்ள பூச்சி மற்றும் நோய் 
 
            - மேலாண்மை முண்ணணி செயல் விளக்கத்திடல்கள் மூலமாக விவசாயிகளுக்கு  நடத்தப்பட்டன          
 
           
          3.சாதனைகள்  
             தென்னையில் வெளியிடப்பட்டுள்ள இரகங்கள்  
            தென்னை ஏ.எல்.ஆர்.(சி.என்)1 
            தோற்றம் – இன வங்கியிலிருந்து தேர்வு 
            வயது- 100 வருடம் வளரும் நெட்டை 
            பருவம்- கன்றுகள் நடவு செய்ய  
            1.ஆடிப் பட்டம் 2.மார்கழிப் பட்டம் 
            மகசூல் – ஓர் ஆண்டில் மரம் ஒன்று- 126 காய்கள் 
            கூடுதல் மகசூல் – 46 சதம் டபிள்யு சிடி, 
            88 சதம்  இசிடிஇ 
            66 சதம்  வேப்பங்குளம்-1 
            சிறப்பியல்புகள்  
          
            - அதிக மகசூல், குறுகிய காலத்தில் அறுவடை 
 
            - எக்டருக்கு அதிக கொப்பரை மகசூல் 
 
            -  எக்டருக்கு  அதிக எண்ணெய் மகசூல் 
 
            - எண்ணெய் அளவு 66.5 சதம்
 
           
          தென்னை ஏ.எல்.ஆர்.(சி.என்)2 
          ஐந்து வருடங்களில் காய்ப்புக்கு வரும்  
            ஒரு வருடத்திற்கு 12 பாளைகள் 
          
            - சராசரி மகசூல் – 109 காய்கள், மரம்,  வருடம்
 
            - அதிகபட்ச மகசூல் – 140 காய்கள், மரம்,  வருடம் கொப்பரை, காய்- 135 கிராம்
 
            - கொப்பரை அளவு, எக்டர்- 2.57 டன்கள்
 
            - எண்ணெய் சத்து – 66.7 சதவிகிதம்
 
            - 1 டன் கொப்பரைக்கு, 7400 காய்கள் மட்டும் போதுமானது.
 
            - வறட்சியை நன்றாக தாங்கி வளரும் 
 
            -  காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு  மற்றும் இலைக்கருகல் நோய்க்கு ஓரளவு எதிர்ப்புத்  திறன் கொண்டது.
 
           
          தென்னை 
          த.ந.வே.ப. தென்னை ஏ.எல்.ஆர்.3 
          சிறப்பியல்புகள்  
          
            - இந்த இரகம் கர்நாடகா மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு குட்டை  இரகமாகும் 
 
            - முந்திப் பூக்கும் தன்மை கொண்டது.நடவு செய்த மூன்றாம் ஆண்டிலிருந்து காய்க்கத் துவங்கும். 
 
            - தமிழகத்தின் பாசன வசதி கொண்ட தென்னை சாகுபடி பகுதிகளுக்கு ஏற்றது. 
 
            - இளநீர் உபயோகத்திற்கு மிகவும் உகந்த்து. 
 
            - நிலையான மகசூல் கிடைத்த பின்னர் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மரத்திலிருந்து 86 காய்கள் சராசரியாக்க் கிடைக்கும். 
 
            - அதிகபட்ச சராசரி மகசூல் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மரத்திற்கு 121 காய்கள் ஆகும். 
 
            - சவுகாட் ஆரஞ்சு குட்டையைக் காட்டிலும் 34.1 சதம் அதிக மகசூல்
 
            - மலேசியன் மஞ்சள் குட்டையைக் காட்டிலும் 37.9 சதம் அதிக மகசூல்
 
            - பளிச்சென்ற ஆரஞ்சு நிறத்தடன் காணப்படும் கெந்தாளி இனிய இளநீர்  உடையது.
 
            - இளநீரின் அளவு (ஒரு காய்)- 420 மி.லி.
 
            - நீரில; கரையும் மொத்த சர்க்கரையின் அளவு –  5.2 சதவீதம்
 
            - அதிக பொட்டாசிய சத்து-190.21 மி.கி.,  100 கிராம்
 
            - கொப்பரை மகசூல் – எக்டருக்கு 2156 கிலோ
 
            - ஒரு டன் கொப்பரைக்கு தேவையான  காய்கள் – 5195
 
            - எண்ணெயின் அளவு – 56 சதவீதம்
 
            - ஈரியோபையிட் சிலந்தியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.          
 
           
          தேசீய வெளியீடு   
            கல்ப பிரதீபா  
          
            - தோற்றம் – கொச்சின் சைனா
 
            - அதிகபட்ச மகசூல் – ஓர் ஆண்டில் மரம் ஒன்று – 136 காய்கள்,
 
            - கொப்பரை அளவு 16 கிலோ, மரம்,  ஆண்டு
 
            - 2007 ல்  கல்ப பிரதீபா தேசீய அங்கீகாரம் பெற்றது.
 
           
          உழவியல் தொழில்நுட்பங்கள்  
            நாற்றங்கால் மேலாண்மை  
            தென்னை  நாற்றங்காலில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை என்ற அளவில் விதைத்த 6 மற்றும் 9வது மாதங்களில் பாதியாகப் பிரித்து இடுவதன்  மூலம் தரமான கன்றுகளைப் பெற முடியும். 
          நீர் மேலாண்மை  
            தண்ணீர்ப்  பற்றாக்குறை அதிகரித்து வரும் இக்காலத்தில் தென்னையில் சீரான மகசூல் பெறுவதற்கு முறையான  நீர்ப்பாசனம் இன்றியமையாதது. ஆழியார் நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில்  இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சொட்டு நீர்ப் பாசனம், நீரினை  சேமித்து  செலவினைக் குறைக்கும் சிறந்த முறை என்று கண்டறியப் பட்டது. சொட்டு  நீர்ப் பாசனம் முலம் மரம் ஒன்றிற்கு ஒரு நாளைக்குத் தேவைப் படும் நீரின் அளவு நிர்ணயிக்கப்  பட்டுள்ளது.(அட்டவணை 1). 
          அட்டவணை 1. தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னை மரங்களுக்குத் தேவையான  ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்) 
          
            
              மாதங்கள்   | 
              நீர்    நிறைந்த பகுதிகள்   | 
              நீர்    ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள்   | 
              வறட்சியான    பகுதிகள்   | 
             
            
              அ. சொட்டு நீர்ப் பாசனம்  | 
                 | 
                 | 
                 | 
             
            
              பிப்ரவரி - மே  | 
              65  | 
              45  | 
              22  | 
             
            
              ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர்  | 
              55  | 
              35  | 
              18  | 
             
            
              பிப்ரவரி - மே  | 
              45  | 
              30  | 
              15  | 
             
            
              ஆ.வட்டப் பாத்தி நீர்ப் பாசனம்  | 
                 | 
                 | 
                 | 
             
            
              பிப்ரவரி - மே  | 
              410 லிட்டர் / 6 நாள்  | 
                 | 
                 | 
             
            
              ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர்  | 
              410 லிட்டர் / 7 நாள்  | 
                 | 
                 | 
             
            
              ஜுன்    மற்றும் ஜுலை, அக்டோபர் - டிசம்பர்   | 
              410 லிட்டர் / 9 நாள்  | 
                 | 
                 | 
             
           
           (வட்டப் பாத்திகளின் மூலம் நீரினை  அளிக்கும் போது கூடுதலாக 30 – 40 சதவிகித நீரினை அதாவது மரம்  ஒன்றுக்கு 135 – 165 லிட்டது பாசன நீரினை இதர வழிகளில் வீணாகும்  பாசன நீருக்கு ஈடாக அளிக்க வேண்டும்) 
          தென்னையில் ஊடு பயிர்கள்  
          
            - தென்னைக்கு ஏற்ற பல்வேறு வகையான ஊடுபயிர்த் திட்டங்களை ஆராய்ந்ததில்  
 
           
          தென்னை (175 / எக்)  ரூ கோகோ (500 / எக்)  மற்றும் தென்னை  (175 / எக்)  + வாழை(750  / எக்)  ஊடு பயிர்த் திட்டங்கள் அதிக இலாபம் ஈட்டுவனவாக உள்ளன. 
          
            - மருந்து மற்றும் வாசனைப் பயிர்களுக்கான முக்கியத்துவம் மற்றும்  தேவை அதிகரித்து வரும் நிலையில் சித்தரத்தை மற்றும் எலுமிச்சைப் புல் ஆகியவையும் தென்னையில் ஊடு பயிராக சிறந்து வளர்கின்றன.
 
           
          உரமிடல்  
          
            - தென்னைக்கு  அங்கக  உரப்பரிந்துரை தென்னைக்கு  ஒரு  மரத்திற்கு  ஒரு  வருடத்திற்கு  பரிந்துரைக்கப்பட்ட உர  அளவில்(தழை, மணி மற்றும் சாம்பல் சத்து @ 560:  320:1200கி / மரம் / ஆண்டு) தழைச் சத்தை 100 சதவீத அங்கக  உரமாகவும்  இதனுடன்  மணி  மற்றும்  சாம்பல்  சத்துகளை  இரசாயன  உரமாகவும்  இடலாம் 
 
            - டி  x டீ  தென்னைக்கு  பரிந்துரைக்கப் பட்ட  உர  அளவில்  (தழை, மணி மற்றும் சாம்பல் சத்து @ 1000:  250:1000கி / மரம் / ஆண்டு) தழைச் சத்தை 50 சதவீதம் மண்புழு உரமாகவும் மீதமுள்ள  தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இரசாயன உரமாகவும்  இடலாம் 
 
           
          பயிர் பாதுகாப்பு  
            அ) பூச்சியியல்     
          
            - தென்னையை  தாக்கும்  காண்டாமிருக வண்டுகளில் இயற்கையாகவே பேக்குளோவைரஸ் என்ற நோய் தாக்கியிருப்பது  தமிழ்நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. 
 
            - தென்னையில்  காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டுகளை கவர்ந்து அழிப்பதற்குண்டான குறைந்த செலவில் சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்தாத  கவர்ச்சிப் பொறிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 
 
            - மண்பானை கவர்ச்சிப் பொறி(பானை ஒன்றுக்கு ஆமணக்கு பிண்ணாக்கு 2.5 கிலோ  + 5 கிராம் அசிட்டிக் அமிலம் + ஈஸட் 5 கிராம் + நீள்வாக்கில் வெட்டப்பட்ட நான்கு இலை மட்டைத்  துண்டுகள்) ஏக்கர் ஒன்றுக்கு 30 வீதம் வைத்ததில்  அதிக அளவில் சிவப்பு கூன் வண்டுகள் கவர்ந்து அளிக்கப் படுவதாக கண்டறியப் பட்டுள்ளது. 
 
            - தென்னையை  தாக்கக்  கூடிய  நத்தைப்  புழுவைக்  கட்டுப்படுத்த கார்பரில்  2 கிராம்  மருந்து  + 1 மிலி  சாண்டோவிட்+  ஒரு  லிட்டர்  தண்ணீரில்  கலந்து  தெளிக்கும்போது அதிகளவில்  கட்டுப்படுத்துவதாக கண்டறியப் பட்டுள்ளது. 
 
            -  பேக்குளோவைரஸ்  என்ற நச்சுயரி நோய் தாக்கப்பட்ட காண்டாமிருக வண்டுகளை ஹெக்டருக்கு 15 என்ற அளவில் தொடர்ந்து விடும் பட்சத்தில் தென்னை குருத்தோலை, இலை மற்றும் பாளைகளில் ஏற்படக்கூடிய சேதாரம் குறைவாக இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
 
            - சைம் ஆர்.பி. ரைனோலியூர் என்ற  செயற்கை ஒன்று சேர்க்கும் கவர்ச்சி ஊக்கிப் பொறி எக்டருக்கு ஒன்று மற்றும் பெர்ரோலியூர் செயற்கை கவர்ச்சி ஊக்கிப் பொறி  (கரும்புக்கோழை 2.5 கிலோ + 5 கிராம் அசிட்டிக் அமிலம் + ஈஸட் 5 கிராம்) எக்டருக்கு ஒன்று வீதம் வைத்ததில்  அதிகளவில் ஆண் மற்றும் பெண் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டுகள் கவர்ந்து அழிக்கப்படுவதாகக் கண்டறியப்  பட்டுள்ளது. 
 
            - தாயகம் சார்ந்த தொழில் நுட்ப மேம்பாட்டு விஞ்ஞான பூர்வமான மேம்பாட்டின் கீழ் ஆராய்ச்சி செய்ததில்  தென்னந்தோப்புகளில் வாய் அகலமான மண்பானைகளில் (வாய் அகலம்  24 செ.மீ. x உயரம்  20 செ.மீ. x அடிப்பாக அகலம்  25 செ.மீ ) மாட்டுச்சாண கரைசல்  5 கிலோ + 100 கிராம் கருவாட்டுதூள் கலந்து தென்னந்தோப்பு நிலப்பரப்பில் பதித்து வைத்ததில்  அதிக எண்ணிக்கையில் (29) காண்டாமிருக வண்டுகள் கவர்ந்து இழுக்கப் பட்டதாக கண்டறியப் பட்டுள்ளது. மேலும் ஆமணக்கு பிண்ணாக்கிலும் அதிகளவு கவர்ந்து இழுக்கப் பட்டதாகக்  கண்டறியப் பட்டுள்ளது. 
 
            - தென்னையில் அசாடிரக்டின் டி.எஸ்.1  சதவீதம்(10000 பிபிஎம்) 5 மிலி  + சாண்டோவிட்+  1 மிலி + ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிப்பது செய்த பிறகு 21 நாட்கள்  இடைவெளியில் லார்வா ஒட்டுண்ணிகளான  பிரக்கானிட்,பெத்திலிட் மற்றும் கூட்டுப்புழு ஒட்டுண்ணிகளான சால்சிட்  முறையே 20:10:1 என்ற அளவில் நான்கு முறை விடும் பட்சத்தில் கருந்தலைப்  புழுவின் தாக்குதல் 460 லிருந்து 22 என்ற  எண்ணிக்கையில் கட்டுப்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதனால் நன்மை செய்யும் ஒட்டுண்ணிகளான  பிரக்கானிட்,பெத்திலிட், சால்சிட் எண்ணிக்கை  முறையே 4.16, 20.03 மற்றும் 0.75 சதம் முதல்  23.57, 13.01 மற்றும் 5.75 என்ற அளவில் அதிகமாக  இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
 
            - தென்னையில் வேர் மூலம் அசாடிரக்டின்  எஃப்.5 சதவீதம்(50000 பிபிஎம்) 10 மிலி + 10 மிலி தண்ணீர் என்ற அளவில் செலுத்தி  21 நாட்கள் இடைவெளியில் லார்வா ஒட்டுண்ணிகளான பிரக்கானிட்,பெத்திலிட் மற்றும் கூட்டுப்புழு ஒட்டுண்ணிகளான சால்சிட் முறையே  20:10:1 என்ற அளவில் நான்கு முறை விடும் பட்சத்தில் கருந்தலைப் புழுவின்  தாக்குதல் 785.60 லிருந்து 4.35 என்ற எண்ணிக்கையில்  கட்டுப்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதனால் நன்மை செய்யும் ஒட்டுண்ணிகளான  பிரக்கானிட்,பெத்திலிட், சால்சிட் எண்ணிக்கை  முறையே 3.65, 2.80 மற்றும் 1.46 சதம் முதல்  29.40, 16.96 மற்றும் 6.25 என்ற அளவில் அதிகமாக  இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
 
            -  தென்னையில்  கருந்தலைப் புழுவின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்உருவாக்கப்பட்டுள்ளது.
 
            - தென்னையில் சிவப்பு கூன் வண்டின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு  முறைகள்  உருவாக்கப்பட்டுள்ளது
 
            - தென்னையில் காண்டாமிருக வண்டின்  ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்  உருவாக்கப்பட்டுள்ளது
 
            - தென்னையில் கருந்தலைப் புழுவை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துவதற்கு  நுகாச்சி கோளங்கள் தூண்டுதல் என்ற முறையில் உருவாக்கப்பட்ட பிரக்கான் பிரேவிகார்னியஸ் என்ற ஒட்டுண்ணிகள் சாதாரண முறையில் உற்பத்தி  செய்யும் ஒட்டுண்ணிகளை காட்டிலும் கருந்தலைப புழுவை  அதிகளவில் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுண்ணிகளினுடைய எண்ணிக்கையும்  அதிகளவில் உற்பத்தியாகி இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
 
            - தென்னையில் கார்டியோ ஸ்டெத்தஸ் எக்ஸிகூவஸ் என்ற ஆன்தோகரிட் நாவாய்ப்பூச்சி என்ற இரை விழுங்கியை மரம் ஒன்றுக்கு 50 என்ற எண்ணிக்கையில் 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து  6 தடவை விடும் பட்சத்தில் கருந்தலைப் புழுவை அதிகளவில்  கட்டுப்படுத்துவதாகக்  கண்டறியப்பட்டுள்ளது.
 
           
          ஆ) பயிர் நோயியல் 
            அடித்தண்டழுகல் நோய்  
          
            - வருடத்திற்கு இருமுறை ஒரு மரத்திற்கு 50 கி டிரைக்கோடெர்மா ஹார்சியானம் மற்றும் 50 கி சூடோமொனாஸ்  புளுரசன்ஸ் ஆகியவற்றை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடுவதால்  அடித்தண்டழுகல் நோயின் தாக்குதல் வீதம் குறைகிறது.
 
            - வருடத்திற்கு மூன்று முறை காலாண்டு இடைவெளியில், ஆரியோப்பஞ்சின்கால் 1.3 கிராம்  + 0.5 கி காப்பர் சல்பேட் அல்லது  2 மிலி டிரைடிமார்ப் என்ற மருந்தினை 100 மிலி தண்ணீரில்  கலந்து வேர் மூலம் செலுத்துவதினாலும் அத்துடன்  40 லிட்டர் ஒரு சத போர்டோ கலவையை மண்ணில் ஊற்றுவதாலும் இந்நோய் குறைகிறது.
 
           
          இலைக்கருகல் 
          
            - போர்டோ கலவை 1% மருந்து 30 நாள் இடைவெளியில்  இருமுறை தெளித்தல் அல்லது வேர் மூலம் கார்பனாடிசம்  2 கிராம்  / 100 மிலி தண்ணீரில் வருடம்  மூன்று முறை மூன்று மாத இடைவெளியில்  செலுத்துவதால் இலைக்கருகல் நோய் கட்டுப்படுத்தப் படுகிறது. 
 
            - ஒரு மரத்திற்கு பரிந்துரைக்கப் பட்ட உர  அளவுடன், 1.5 கிலோ பொட்டாஷ் அதிகப்படியாக இடுதல் வேண்டும். 
 
            -  சூடோமொனாஸ்  புளுரசன்ஸ் 100 சத கலவை ஒரு மரத்திற்கு 26 மிலி என்ற அளவில் வேர் மூலம் ஒரு மரத்திற்கு  வருடம் 4 முறை (காலாண்டு இடைவெளியில்)  செலுத்துவதோடு சேர்த்து சூடோமொனாஸ் புளுரசன்ஸ் 50 கிராம், மரம், வருடம் + வேப்பம்புண்ணாக்கு  5 கிராம் / மரம் /வருடம் இடுவதால் இலைக்கருகல் நோய் குறைகிறது.
 
           
          குருத்தழுகல் நோய்  
          
            - நோய் தாக்கப்பட்ட மரத்தில் உள்ள குருத்துகள் மற்றும் அருகில்  உள்ள மற்ற மரங்களுக்கும் 3 கிராம், லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிப்பதால்   குருத்தழுகல் நோய் குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
 
            - நோய் தாக்கப்பட்ட மரங்களின் பாத்தியைச் சுற்றிலும் சூடோமொனாஸ்  புளுரசன்ஸ் 100கி + 50 கிலோ தொழு உரம்  + 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து இடுவதால் நோயின் தாக்குதல் குறைவதாகக்  கண்டறியப்பட்டுள்ளது.          
 
           
          வேர்வாடல் நோய்  
            வேர்வாடல் நோய் பற்றிய ஆய்வு கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி  ஆகிய மாவட்டங்களில்  மேற்கொள்ளப்பட்டதில்  இந்நோயின் தாக்குதல் தீவிரமாக உள்ள  பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நோயின் தாக்குதல் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் தீவிரமாக தாக்கப்பட்ட  மரங்களை வெட்டி அப்புறப்படுத்துமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் வேர்வாடல் நோயின் தன்மையைக்  குறித்தும், நோய் பரவுவதால் ஏற்படும்  இழப்புகள் குறித்தும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் அவ்வப்போது விவசாயிகள் நலனுக்காக  நடத்தப்படுகின்றன. 
          நிலக்கடலை  
            வெளியிட்டுள்ள நிலக்கடலை இரகங்களும், சிறப்பியல்புகளும்  
            1. ஏஎல்ஆர் 1 (ஆழியார் 1) சிறப்பியல்புகள் 
          
            - தோற்றம் – பொள்ளாச்சி  2 x  பிபிஜி 4  ஆகிய இரகங்களின் இனக்கலப்பிலிருந்து  உருவாக்கப்பட்டது
 
            - வகை – வெர்ஜினியா கொத்து
 
            - வயது- 120 நாட்கள்
 
            - இறவை மற்றும் மானாவரிக்கு எற்றது.
 
            - மகசூல் – மானாவரி – 1840 கிலோ  / எக்டர்
 
            - துரு  மற்றும் இலைப்புள்ளி நோய் தாங்கி வளரக்கூடியது 
 
           
          2. ஏஎல்ஆர் 2 (ஆழியார் 2) 
          
            - தோற்றம் – ஐசிஜிவி 86011 இரகத்திலிருந்து  தனிவழித்தேர்வு
 
            - வகை –  கொத்து  இரகம்
 
            - வயது- 105-110 நாட்கள்
 
            - பருவம்- சித்திரை, ஆடி,  மார்கழிபட்டங்களில்  சாகுபடி   செய்ய ஏற்றது.
 
            - மகசூல் –– மானாவாரி 1740 கிலோ  / எக்டர் 
 
           
                          இறவை –  2550 கிலோ / எக்டர்                                                          
          
            - எண்ணெய் சத்து 52 %
 
            - அறுவடை சமயத்திலும் பசுமை மாறாமல் உள்ளதால் சிறந்த தீவனம் 
 
            -  விதை உறங்கும் தன்மை 15 நாட்கள்
 
            - துரு மற்றும் இலைப்புள்ளி நோய்களையும் தாங்கி வளரக்கூடியது  
 
           
          3. ஏஎல்ஆர் 3 (ஆழியார் 3) 
          
            - தோற்றம் – ஆர்.33-1 x ஐசிஜி(எப்.டி.ஆர்.எஸ்) 68 x (என்.சி.ஏசி.17090 x ஏ.எல்.ஆர்.1)  
 
            - வகை –  கொத்து  இரகம்
 
            - வயது- 110-115 நாட்கள்
 
            - பருவம் – மானாவாரி மற்றும் இறவை சாகுபடிக்கு உகந்தது.
 
           
                         மானாவாரி 
          
            - சித்திரை பட்டம் (ஏப்ரல் - மே)
 
            - முன் ஆடிப் பட்டம்(ஜுன் - ஜுலை)
 
            - பின் ஆடிப் பட்டம்(ஜுலை - ஆகஸ்ட்)
 
           
                                             இறவை 
          
            - மார்கழிபட்டம்(டிசம்பர் - ஜனவரி)
 
            - மகசூல் –– மானாவாரி 2095 கிலோ  / எக்டர் 
 
           
                          இறவை –  2720 கிலோ / எக்டர்                                                          
          
            - உடைப்புத்துறன் – 69 சதவிகிதம்
 
            - எண்ணெய் சத்து – 50 சதவிகிதம்
 
           
          சிறப்பியல்புகள்  
          
            - துரு நோயை எதிர்த்தும் இலைப்புள்ளி நோயைத் தாங்கியும் வளரக்கூடியது .
 
            - இலைப்பேன் மற்றும் இலை தத்துப்பூச்சியை எதிர்த்து வளரும் தன்மை கொண்டது.
 
            - அறுவடை சமயத்திலும் செடிகள் பசுமை மாறாமல் இருப்பதால் நல்ல மாட்டுத் தீவனம் 
 
            - இந்த இரகம் தமிழ்நாட்டில் விழுப்புரம், சேலம், ஈரோடு, திருச்சி,  திண்டுக்கல், விருதுநகர்,    தூத்துக்குடி குறிப்பாக கோவை மாவட்டத்திலும் பயரிட சிபாரிசு செய்யப்படுகிறது.
 
           
          பயிர் சாகுபடி - நிலக்கடலையில் உழவியல் தொழில்நுட்பங்கள் 
          
            - நிலக்கடலையில் உயர் விளைச்சல் பெற பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 75 சதவீதத்தை அடி உரமாகவும் மீதம் 75 சதவீதத்தை  30 ஆம் நாளில் மேலுரமாகவும் எக்டருக்கு 7.5 டன்  தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.( அல்லது) பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 50 சதவீதத்தை அடி உரமாகவும்  மீதம் 50 சதவீத உரத்தை 30 ஆம் நாளில் மேலுரமாக  எக்டருக்கு 7.5 டன் தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.
 
            - அங்கக நிலக்கடலை உற்பத்தியில் உயர் விளைச்சலுக்கு உகந்த ஒருங்கிணைந்த செயல்முறை  வருமாறு விதைப்பிற்கு முன் 15 ஆவது நாளில் எக்டருக்கு 7.5 டன் தொழு உரத்துடன் நுண்ணுயரிகளை (சூடோமொனாஸ்,  ரைசோபியம் + பாஸ்பரஸ் கரைக்கும் பாக்டீரியா  3 பாக்கெட் கலந்து  வைத்து இட வேண்டும். இதனுடன் இலைத்தெளிப்பாக பஞ்சகவ்யா  3 சதவீதம் அல்லது சூடோமொனாஸ் 1 சதவீதம் அல்லது  வேப்பம்விதை தெளிவை  5 சதவீதம் போன்ற  ஏதாவது ஒன்றை  45 ஆவது நாளில் தெளிக்க வேண்டும்.
 
            - நிலக்கடலையில் அதிக மகசூலாக எக்டருக்கு 1682 கிலோ பெற சாம்பல் சத்தை எக்டருக்கு 50 அல்லது 75 கி இட வேண்டும்.  சுண்ணாம்பு சத்தை எக்டருக்கு150 கி என்ற அளவில்  இடும்பொழுது மகசூல் எக்டருக்கு 1908 கி கிடைக்கும்.
 
            - நிலக்கடலையில் எக்டருக்கு 400  கிலோ அல்லது 600  கிலோ சிப்சம் இடும்பொழுது  எக்டருக்கு 1870 கி மற்றும்  1989 கி  மகசூல் கிடைக்கும்.
 
            - இன்சுவை நிலக்கடலை இரகங்களில் கோ3  அதிக  மகசூல் கொடுக்கவல்லது.
 
            - வேறு அளவுகளில் தொழு உரம் இடும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில்,  21.88 டன், எக்டர் தொழு உரம் அளித்த  (175 சதம் பரிந்துரைக்கப்பட்ட  அளவு) பரிசோதனைத்  திடலில் அதிக நிலக்கடலை மகசூல் கிடைத்துள்ளது.
 
            - இன்சுவை நிலக்கடலை கோ3 இரகத்தில்  வேறுபட்ட பயிர் எண்ணிக்கையில் ஆராய்ச்சி  மேற்கொண்டதில், 30 x 15 செ.மீ. இடைவெளி உகந்தது என உறுதி செய்யப்பட்டது.
 
            - வெவ்வேறு அளவுகளில் உரமிடுதலில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில்  17:34:54 கிலோ / எக்டர் தழை:மணி : சாம்பல் + ரைசோபியம்  + பாஸ்போபாக்டீரியா  அளித்த பரிசோதனைத் திடலில் அதிக நிலக்கடலை  காய் மகசூலாக கிடைத்துள்ளது.
 
           
          பயிர் பாதுகாப்பு  
            அ) பூச்சியியல்   
          
            - நிலக்கடலையில் பச்சைத்தத்துப்பூச்சி மற்றும் இலைப்பேனை எதிர்த்து வாழக்கூடிய ஆதார நிலக்கடலை இரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மேலும்  இனப்பெருக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
 
            - நிலக்கடலையை தாக்கும் பூச்சிகளின் கணிப்பைமாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
 
            - நிலக்கடலையில் இலை சுருட்டுப்புழு,  பச்சைத்தத்துப்பூச்சி மற்றும் இலைப்பேன்களை மேலாண்மை செய்யக்கூடிய புதிய பயிர் திட்டமாக (கடலை + கம்பு 8:1 விகிதம்)  உருவாக்கப்பட்டுள்ளது.
 
            - நிலக்கடலையை தாக்கும் இலை சுருட்டுப்புழுவின் இரண்டு புதிய மாற்ற உணவுப் பயிராக குப்பைக் கீரை(அமரான்தஸ் விரிடிஸ்) மற்றும் (முக்கரட்டை) போயர்கெவியா  டிவியூசா என்ற களைச்செடிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
 
            - நிலக்கடலை பூச்சிகளின் எதிர்ப்புத்திறன் கொண்ட மேம்பட்ட வளர்ப்பு இனப்பெருக்க நிலக்கடலை ஐசிஜிவி  90226, 90227, 90228, 90261, 90265, 91167, 91175, 91176, 99180, 91185, 91190, 91192,  91205 மற்றும் 91215 என்ற இரகங்களில் பச்சைத்தத்துப்பூச்சியின் தாக்குதலுக்கு  எதிர்ப்புத்திறன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
 
            - நிலக்கடலையில் பச்சைத்தத்துப்பூச்சி மற்றும் இலைப்பேனை கட்டுப்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை  திறனாய்வு செய்ததில்,  லேம்டா சைஹலோதிரின் ஒரு ஹெக்டேருக்கு 20 கிராம் என்ற அளவில் தெளிப்பது செய்ததில் மேற்கண்ட பூச்சிகளின் தாக்குதலை மித்தைல் டெமட்டான்(0.05 சதவிகிதம்) பூச்சிகளைக் காட்டிலும் அதிகளவு கட்டுப்படுத்துவதாகக்  கண்டறியப்பட்டுள்ளது. 
 
           
           ஆ)  பயிர் நோயியல் 
          
            - பொள்ளாச்சி பகுதியில்  கழுத்தழுகல் நோய், வேரழுகல் நோய், தண்டழுகல் நோய்,
 
           
          துரு மற்றும் இலைப்புள்ளி நோய் ஆகியவை நிலக்கடலையை தாக்கும் முக்கிய       நோய்களாகும். பொள்ளாச்சி பகுதி தேசிய அளவில் நிலக்கடலை  இலைப்புள்ளி மற்றும் துரு நோய்க்கு அதிக தாக்குதலுக்கு  உள்ளாகும் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இலைப்புள்ளி மற்றும் துரு நோய் பயிரின் முதிர்ச்சி பருவத்தில் அதிகமாகக்  காணப்படுகிறது. 
          
            - நிலக்கடலையில் சுமார் 2500க்கும் மேற்பட்ட வகைகள் துரு மற்றும்  இலைப்புள்ளி நோய்
 
           
          தாக்குதல் அளவிற்கு கண்காணிப்பு செய்யப்பட்டதில் 42 வகைகள் இவ்விரு நோய்க்கும்  
            எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளதாகக்  கண்டறியப்பட்டுள்ளது.இந்த எதிர்ப்புத்தன்மை  
            கொண்டுள்ள வகைகள் கலப்பின சேர்க்கைக்கு  உட்படுத்தப்பட்டு மேற்கண்ட   ஆராய்ச்சியில் சில வகைகளான ஏ.எல்.ஜி. 320 மற்றும் ஏ.எல்.ஜி. 323 ஆகியவை நோய் எதிர்ப்பு இரகங்களோடு வெளிவரக்கூடிய  நிலையில் உள்ளது. இதுவரையில் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து  ஆழியார் 1, ஆழியார் 2 மற்றும் ஆழியார்  3 ஆகிய நோய் எதிர்ப்பு இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
          
            - மேங்கோசெப் 2 கி / கிலோ(விதைநேர்த்தி ) + துரு நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் குறைவதாகக்  கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த்தாக டெபுனோசோல்  1.5கி, கிலோ(விதைநேர்த்தி)  + டெபுனோசோல் தெளிப்பதால் இந்நோயின் தாக்குதல் குறைவதாகக்   கண்டறியப்பட்டுள்ளது.
 
            - டெபுனோசோல் 1.5கி, கிலோ விதைக்கு  (விதைநேர்த்தி) செய்வதால் நிலக்கடலை கழுத்தழுகல் நோய், தண்டழுகல் நோய் ஆகியவை குறைவதாகக்   கண்டறியப்பட்டுள்ளது.
 
            - டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமொனாஸ் புளுரசன்ஸ் கலவை கொண்டு  விதைநேர்த்தி செய்வதாலும், இந்த கலவையை மண்ணில் இடுவதாலும் (ஒவ்வொரு  2 கிலோ என்ற அளவில் 250 கிலோ  தொழு உரத்துடன் கலந்து ஒரு எக்டருக்கு) மற்றும் டி.விரிடி + சூடோமொனாஸ்  புளுரசன்ஸ் கலவை 10கி / லிட்டர் தண்ணீரில்  கலந்து 30 மற்றும் 45 நாட்களில் தெளிப்பதாலும்  மண் மூலம் பரவக்கூடிய கழுத்தழுகல் நோய், தண்டழுகல் நோய் ஆகியவை குறைவதாகக்   கண்டறியப்பட்டுள்ளது.          
 
           
          
          தொடர்புக்கு 
          பேராசிரியர் மற்றும் தலைவர், 
            வேளாண்    ஆராய்ச்சி நிலையம்,  
            ஆழியார் நகர்-642 101. 
            Phone:04253  - 2288722 
          Email:arsaliar@tnau.ac.in           
           |