தவேப வேளாண் இணைய தளம் :: முன்னுரை

வளம் குன்றா வேளாண்மை என்பது வேளாண்மையின் ஒரு முறையாகும். வேளாண்மையின் உற்பத்தித் திறனை நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரி வைத்திருக்க உதவும் முறையே வளம் குன்றா வேளாண்மையாகும். வளம் குன்றா வேளாண்மை என்பது பண்ணை முறையும், தத்துவமும்  இணைந்ததாகும். சூழ்நிலை மற்றும் சமூக யதார்த்தங்களை பிரதிபலிக்கக் கூடிய பெறுமானத்தின் வேர் போன்று செயல்படுகிறது. அனைத்து வளங்களை பாதுகாத்தல், கழிவுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுப் புற சூழலில் ஏற்படும் சேதம், போன்றவற்றை இயற்கை முறைகளுடன் இணைந்து செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை மண் முறைகளுடன் செயல்படுவது தான் மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஏற்கெனவே இருக்கிற மண் சத்துக்கள்  மற்றும் நீர் சுழற்சி, சக்தி தருதல், உணவு உற்பத்திக்கான மண் உயிரிகள் போன்றவற்றின் பயன்களை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த வளம் குன்றா வேளாண்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறையால் உற்பத்தி உணவு சத்துக்கள் நிறைந்ததாகவும், எந்த வித பொருளுடன் கலப்பிடமில்லாமலும், மனிதனின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைக்காமலும் இருக்கிறது.

நடைமுறையில், இந்த முறை செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வளர்ச்சி ஊக்கிகள், கால்நடைகளுக்கான உணவுகளுடன் சேர்க்கும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறது. இந்த பொருட்கள் அதனுடைய புதுப்பிக்க முடியாத வளங்களை சார்ந்திருத்தலாலும், சுற்றுப்புற சூழலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள், வனவிலங்களுக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள், கால்நடை மற்றும் மனித நலத்திற்கு ஊரு விளைவிப்பதாலும் தவிர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மண்ணில் நடைபெறும்  உயிரியல் செயல்முறைகளை மட்டுபடுத்துகின்றன. சில வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் உணவுடன் கலக்கும் பொருட்கள் உரங்கள் சிதைவுறச் செய்யாமல், மனித நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. வளம் குன்றா வேளாண்மை முறைகள் பயிர் சுழற்சிகள், பயிர் கழிவுகள், விலங்கின் உரங்கள், பயிறு வகைகள், பசுந்தாள் உரங்கள் பண்ணையில்லாத அங்கக கழிவுகள், தகுந்த இயந்திர சாகுபடிமுறை மற்றும் கனிமங்களுடைய பாறைகள் போன்றவற்றை நம்பி இருக்கிறது. இதனால் மண்ணில் உயிர்களின் செயல்பாடுகள், அதிகரிக்கின்றன மற்றும் மண் வளம் மற்றும் உற்பத்தித் திறனை நிலைபடச் செய்கின்றன. இயற்கை, உயிரியல், உழவு முறைகளைப் பயன்படுத்தி பூச்சிசள், களைகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

வளம் குன்றா வேளாண்மையின் நோக்கம் வேளாண்மையை நீண்ட காலத்திற்கு செயல்படச் செய்யதாகும். முதல் பயிர் விதைத்திருந்தாலும், விலங்குகளை பட்டியில் அடைத்தாலும், விவசாயிகள் தங்களுடை நிலத்திலிருந்து குறிப்பிடத்தக்க விளைச்சல் ஒவ்வொரு வருடமும் கிடைக்க செய்ய வேண்டும் என்பதில் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தற்போதைய புதிய முயற்சிகளால் இந்த முறை பிரபலமடைந்து வருகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013