தவேப வேளாண் இணைய தளம் ::வளம் குன்றா வேளாண்மையின் படிகள்

வேளாண் சூழ்நிலை அமைப்பு பல இடைப்பட்ட பகுதிகளுடன் பல குறிக்கோளுடன்  அமைக்கப்பட்டுள்ளது.  மண் தரம் வளம் குன்றா வேளாண் சூழ்நிலை மேம்பாட்டின் முக்கியமான பகுதியாகும். இதுவே நீர் மற்றும் காற்றின் தரத்திலும் வளம் குன்றா வேளாண்மை முக்கியமானது, மண் தரத்தை மதிப்பிடுவதால் மேலாளர்கள் எளிதாக செயல்படுது்த வேண்டிய முறைகளை கண்டுபிடிக்க முடிகிறது.
வளம் குன்றா வேளாண் சூழல் மேம்பாட்டின் முக்கியமான பகுதி மண் தரமாகும்.

 1. தரமான பண்ணை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல்:
 • மண் அரிப்பை அடுக்குத்தளம் அமைத்தல், படிப்படியாக பயிரிடுதல், சுழமான குழிகளை சரிசெய்தல் போன்றவற்றால் தடுக்கலாம்
 • மண்ணுடன் அங்ககப் பொருட்களை சேர்க்கலாம் (பசுந்தாள் உரப்பயிர்கள் வரப்பு பயிர்களாக வளர்த்தல், மட்கிய உரம், உரங்கள், பயிர்க் குப்பைகள், அங்கக உரங்கள்)
 • நிலப் பண்படுத்துதலை பேணுதல்
 • காற்று தடுப்புக்களை வளர்த்தல்

பணப்பயிர்களுடன் வைக்கோல், புற்கள் அல்லது வரப்பு பயிர்களுடன் சுழற்சி செய்தல்

 1. நீரின் தரத்தைப் பாதுகாத்தல் மற்றும் பேணிக் காத்தல்:
 • வயல் மற்றும் புல்வெளியில் மண் அரிப்பதை் தடுத்தல்
 • வேதிப்பொருட்கள் பயன்படுத்துதலை குறைக்கலாம்
 • பாதுகாக்கப்பட்ட செறிவான பகுதிகளை விரிவுபடுத்தல்
 • மழை பெறுவதைப் பொறுத்து பயிர்களை வளர்த்தல்
 • பயனுள்ள பாசன முறைகளை பயன்படுத்துதல்
 1. அங்ககக் கழிவுகள் மற்றும் பண்ணை வேதிப்பொருட்கள் மாசுபடாதவாறு மேலாண்மை செய்தல்:

அங்ககக் கழிவுகள்:

 • மண் பரிசோதனை செய்து, தேவைப்படும் அளவு உரங்கள் மற்றும் பறவை எச்சங்களை இடவேண்டும்
 • இறந்த பறவைகள் மற்றும் எச்சங்கள், கழிவுகளை மட்கச் செய்ய வேண்டும்
 • மழை மற்றும் பனியிலிருந்து பறவைக் கழிவுகளை பாதுகாக்க வேண்டும்
 • புல்வெளி (அ) கோழிப்பண்ணையை அமைக்கலாம்
 • பண்ணை வேதிப் பொருட்கள் மற்றம் அகற்றுதல்
 • வேதிப்பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தல்
 • குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்
 • நச்சுத்தன்மை குறைவான வேதிப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்
 • மறுசுழற்சி
 • அட்டையில் கொடுத்துள்ள வழிமுறைப்படி அகற்றிவிட வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013