தவேப வேளாண் இணைய தளம் ::வளம் குன்றா வேளாண்மையின் அடிப்படை ஆதாரங்கள்

வளம் குன்றா வேளாண்மை பண்ணைக்கும், பண்ணை சமூக பொருளாதாரத்திற்கும் பயன்தரும்  வகையில் பொருளாதார வளர்ச்சியை கொண்ட 4 கொள்கைகளும், ஐந்தாவது சமூகத்திற்காகவும் உள்ளது.

குறிப்பிட்ட அளவு இடுபொருள் இடுதல்:
வளம் குன்றா உற்பத்தியால் பண்ணை வளங்களை அதிகப்படுத்த முடிகிறது. உள்ளுக்குள்ளே பெறப்படும் இடுபொருள்களான, வேலையாட்கள், அதி தீவிர புல்வெளி அமைப்புக்கள், சுழற்சி செய்த சத்துக்கள், பயிறு வகை தழைச்சத்து, பயிர் சுழற்சிகள், புதுப்பிக்கும் சூரிய ஆற்றல் பயன்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட பூச்சி மண் மற்றம் நிலக் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்களாகும். விளைச்சலை ஒரேமாதிரி வைத்துக் கொள்ளும் பொழுது இந்த மாதிரி மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தப்படும் என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. இதனால் மொத்த பண்ணை வருமானம் அதிகரிக்கும். இந்த வருமானத்தால் பயன்படும் வகையில் சில்லறை விற்பனை அதிகரிக்கப்படுவதால் மற்றும் வரி விதிப்பாலும், சமூகத்திற்கு பயன்பாடு அதிகரிக்கிறது,

மாற்று வழிமுறை: ஆரோக்கியமான மண் உருவாக்குவதற்கும், இடுபொருட்கள் வாங்குவதை குறைப்பதற்கும், வளம் குன்றா வேளாண்மை மாற்று பயிரிடுதல் மற்றும் கால்நடை அமைப்புக்களை மாற்றுதல் போன்றவற்றை வலியுறுத்துகிறது. மாற்று வழிமுறையால் அதிகப்படியான பண்ணை வருமானம், பொருளாதார இடர்களான வானிலை, பூச்சி வேளாண் சந்தை மாற்றங்களை குறைப்பதாலும் பெற முடிகிறது. இதனால் நிலங்களை விவசாயிகள் வைத்துக் கொள்ளவும், உள்ளூர் பொருளாதாரத்திலிருந்து ஏற்படும் இடர்பாடுகளை களையவும் உதவுகிறது.

இயற்கை மூலத்தனத்தைப் பாதுகாத்தல்:
மூலதன சொத்துக்களின்மதிப்புக் குறைநிலை மதிப்பிடுதலாகும். விவசாயிகள் இந்த முறை நிலையாகப் பயன்படுத்துவதில்லை. பண்ணை முறைகளின் மதிப்பு குறைவதால் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாமல் போகிறது. இந்த இழப்பு, விளைச்சலைப் பாதிக்கும், பண்ணை வருவாய், நிலைப்பாட்டையும் பாதிக்கும், வளம் குன்றா வேளாண்மையில், நிலத்தின் உற்பத்தித் திறன் மற்றும் நீர் வளங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதாலும், மனித வளம் மற்றும் சுற்றறுப்புறச்சூழல் மேம்படுவதாலும் பொருளாதார மதிப்பு உயருகிறது.

மதிப்புக் கூட்டல்: விவசாயிகளுக்கு விளைவித்த விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுவதிலும் பங்கு உள்ளது. உண்மையான வளம் குன்றா வேளாண்மையை உருவாக்கி, நிலைப்படுத்துவதில், விவசாயிகள் மிக அதிகளவு மதிப்புக் கூட்டிய வழிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த முறையால் தனி விவசாயிகளால் இதை வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் தங்களுடைய பொருட்கள நேரடி விற்பனை செய்ய முடியும். மற்ற மதிப்புக் கூட்டால் நுட்பங்களுக்கு அதிக வளங்கள் தேவைப்படும். ஆனால் ஒரு விவசாயினால் இதை கையாளுவது எளிதாக இருக்கும். ஆகவே, இந்த மதிப்பு கூட்டல் நுட்பங்களுக்காக உள்ளூர் விவசாயிகள் குழுவாக உருவாக வேண்டும் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணைந்த உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சமூகம்: அனைத்து சமூகத்தினருக்கும் ஒருங்கிணைப்பாக வளம் குன்றா வேளாண்மை உள்ளது. வளம் குன்றா வேளாண்மையை வளரச் செய்ய வேண்டுமானால், நாம் முதலில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான தொடர்பை அறிந்திருக்க வேண்டும் மற்றும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிகமான சந்தர்ப்பங்களையும் அறிந்திருக்க வேண்டும். வளம் குன்றா வேளாண்மையால், விளைச்சல், உணவு பாதுகாப்பு, நீர் உற்பத்தி  செய்ய திறந்த வெளி இடம், தாவரங்கள் வளருவதற்கான இயற்கை வாழிடங்கள் மற்றும் சமூக, பொருளாதார கட்டமைப்புகள் ஒருங்கிணைந்து இருத்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகின்றன. தற்பொழுது, நகர சமூகங்கள் விவசாய சமூகத்திலிருந்து தத்துவம்  மட்டுமல்லாமல், புரிந்து கொள்ளல், குறிப்பாக, உணவு உற்பத்தி மற்றும் பரவுச் செய்தல் போன்றவற்றில் தனித்து இருக்கின்றன. நம்முடைய சமூகத்தை நிலைபடச் செய்வதில் உள்ள சிக்கல் (அ) நாம் ஒருங்கிணைந்து இல்லாமல் இருத்தல் வாழ்வாதாலும் நல்லபடியாக இல்லாமல் இருத்தல் போன்றவற்றில் பண்ணை முறையின் பங்கு எவ்வளவு என்பது தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது, இதற்காக நாம் நம்முடைய அக்கம்பக்கத்தினரும் ஒன்றுபட்டு இருந்தால் நகர்புற மற்றும் கிராமப்புற சமூகங்கள் நல்லநிலையைில் இருக்க முடியும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013