கடல் உணவுகள் :: இறால்கள்
இறால்கள் கூனிறால்கள் போன்ற தோற்றமுடையது ஆனால் இறால்கள் செவுல்கள் கிளை கொண்டு இருப்பதை வைத்து வேறுபடுத்தமுடியும்.

கடல் உணவு கெட்டுப்போவதால் ஏற்படும் சத்துக்குறைவு:
இறால்களை பிடித்த 3 லிருந்து 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். அதன் மேல் இவை கெட்டுப்போவதற்கான வாய்ப்பு உள்ளது.

~ நுண்ணுயிரியல்
    பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சி பெருக்கம் மற்றும் அதன் தாக்கத்தினால் இறாலின் அனைத்து திசுக்கள் கொட்டுப்போவதன் மூலம் அதன் தரம் பாதிக்கப்படும்.
~ உயிர்வேதியியல்
    பாக்டீரியா என்சைம் பாஸ்போலிபிடுகளின் மற்றும் கோலைன் நடவடிக்கை காரணமாக டிரிம் எத்திலமைன் உற்பத்தி செய்யப்பட்டு இறால் சுவை பாதிக்கப்படும்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள் 100 கிராம்
ஆற்றல் 106 கலோரி
கார்போஹைட்ரேட் 1 கிராம்
புரதம் 20.31 கிராம்
கொழுப்பு 1.73 கிராம்
ஒமேகா 3 கொழுப்பு 0.30 கிராம்
கொலஸ்ட்ரால் 152 மி.கி
நார்ச்சத்து 0 கிராம்
செலினியம் 56.13 மை.கி
வைட்டமின் ஏ 99.06 மை.கி
வைட்டமின் பி12 1.77 மை.கி
வைட்டமின் இ 2.32 மி.கி
வைட்டமின் பி3 2.95 மி.கி
வைட்டமின் பி6 0.24 மி.கி
காப்பர் 0.25 மி.கி
அயோடின் 5 மி.கி
துத்தநாகம் 1.75 மி.கி
சோடியம் 148 மி.கி
பொட்டாசியம் 185 மி.கி
கால்சியம் 323 மி.கி
பாஸ்பரஸ் 278 மி.கி
இறால்கள் உட்கொள்வதால் உடல் நலத்திற்கான நன்மைகள
செலினியம்:
இறால்கள் உடலில் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுப்பதால் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
கொழுப்பு அமிலம்:
இறால்கள் இதயத்திற்கு நலம் தரும் ஒமேகா-3-கொழுப்பு அமிலங்களை மிகுதியாக கொண்டது. இது தமணிகளின் உட்சுவரில் படிந்துள்ள கெட்ட கொழுப்பை நீக்கி தமனிகளை அகலப்படுத்த உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து இதயத்தில் பளுவை குறைத்து இர்த்த சுழற்சியை மேம்படுத்துகிறது. இது மறதிநோய் மற்றும் மூளைசதி நோய்களுக்கு எதிராக செயல்படவும், கல்லீரலுக்கு நன்மை தருவதாகவும் இருக்கிறது.
கால்சியம்:
இறால்களில் கால்சியம் மிகுதியாக இருப்பதால் அவை பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
வைட்டமின் இ :
வைட்டமின் இ இறால்களின் நல்ல அளவில் காணப்படுகிறது. இவை தோல் நோய்களை குணப்படுத்துவதோடு தோலுக்கு பொலிவையும் அளிக்கும்.
வைட்டமின் பி12:
இறால்களில் வைட்டமின் பி12 சத்து நிறைந்துள்ளது. இது நினைவாற்றலுக்கு மட்டுமின்றி இருதயத்தின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. தமனிகள் மற்று, சிரைகள் சீராக வேலை செய்வதற்கும் உதவுகிறது.
புரதம்:
புரதம் கட்டமைப்பிற்கு இன்றியமையாதது. புரதம் உடலுக்கு ஆரோக்குயம் மட்டுமின்றி விபத்து அல்லது தினசரி உடலில் ஏற்படும் தேய்மான சேதாரத்தை ஈடுகட்டவும் உதவுகிறது.
கலோரி:
இறால்களில் மற்ற இறைச்சிகளைவிட குறைந்த அளவே கலோரி உள்ளது. அதனால் உடை எடை குறைக்கவும் உதவும்.
அஸ்டாசாந்தின்:
இறால் வழக்கத்திற்கு மாறாக உயிர்வளி இணைவு எதிர்ப்பி மற்றும் அழற்றி நீக்கிகளை கொண்டது. அழற்றி ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் வெளியிடுவதை குறைப்பதோடு மட்டுமல்லாது நோய் தடுப்பாற்றல் கொண்ட உயிரணுக்களில் கொழுப்பு உயிர்வளி ஏற்றத்தையும் தடுக்கிறது. விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அஸ்டாசாந்தின் உட்கொவதால் பெருங்குடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் குறைப்பதோடு நோய் தடுப்பாற்றல் தொடர்பான சர்க்கரை வியாதிகளையும் குறைக்கின்றது.

ஆதாரம்:
http://www.fao.org/fishery/culturedspecies/Penaeus_monodon/en
http://www.fao.org/docrep/field/003/ab915e/ab915e00.htm
 
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015