கடல் உணவுகள் ::நண்டு
நண்டுபிடித்தல் மற்றும் பதனிடுதல்
நண்டு பிடித்தல்:
நண்டு கரையிலிருந்து சுமார் 6 மைல்களுக்கு பிடிக்கப்படுகிறது. நண்டுகளை பிடிக்க பயன்படும் பொறிவலைகளில் மீன்களை உள்ளே அனுமதிக்கும் வகையிலும் ஆனால் வெளியே தப்பாத வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.
கடலில் நண்டுகளை கையாளுதல்:
உயிருள்ள நண்டுகளை சிறப்பாக கையாள வேண்டும். அவற்றை பிடித்தவுடன் பெட்டிகளிலோ அல்லது கீழ்தளத்திலோ வைக்க வேண்டும். மாறாக மேல்தளத்தில் வெயிலிலும் காற்றிலும் படுமாறு வைத்தால் அவை இறக்க நேரிடும். நண்டுகளை உயிருடன் வைக்க வேண்டுமானால் அவற்றை காற்றோட்டமான கூடைகளில் நெருக்கமான வைத்து இருக்கமாக கட்டவேண்டும்.
நண்டுகள் ஏற்றுமதி :
நண்டுகள் நீண்ட பயணத்திற்கு ஏற்றதல்ல. நண்டுகள் ஈரமான வைக்கோல் அல்லது மரச்சீவல்கள் கொண்ட பெட்டி அல்லது கொள்கலங்களில் பரப்பி அதன்மேல் நெருக்கமாக பொதிப்பதால் பயணத்தில் குளிர்ச்சி சூழ்நிலை அளிப்பதோடு வறண்டு விடாமலும் செய்யலாம்.
நண்டுகளை கொல்லுதல் :
நண்டு பதப்படுத்துவதற்கு முன்வரை உயிரோடு இருத்தல் வேண்டும். நண்டுகளை வேகவைக்கும் முன் கொல்லப்பட வேண்டும். அல்லது அவற்றின் கூர் நகங்களை இழக்க நேரிடும் . நண்டுகள் குடிநீரில் மூழ்கியோ அல்லது கூர்மையான ஊசி கொண்டோ கொல்லப்பட வேண்டும். கூர்மையான ஊசியை வாய்ப்பகுதிக்கு மேலாக நரம்பு மண்டலத்தின் மையப்பகுதியில் செலுத்தும் போது நண்டுகள் உடனே இறந்துவிடும்.
வேகவைக்கும் முறை :
நண்டுகளை கொன்றவுடன் உடனடியாக கொதிக்கும் 2-3% உப்பு தண்ணீரில் 20-30 நிமிடம் வரை வேகவைக்க வேண்டும். இதன் மூலம் நுண்ணுயிரிகளை அழிக்கமுடியும்.
இறைச்சி சேகரிப்பு :
வேகவைத்த நண்டுகளை இறைச்சி சேகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி சுத்தம் செய்து பொதிக்கப்படுகிறது.
குளிர்பதன சேமிப்பு :
நண்டு இறைச்சி பொதிகலனில் இடும் வரை குளிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். தேவையெனில் இறைச்சியை உறைந்த நிலையிலும் சேமிக்கலாம்.

உருகவைத்தல்:
நண்டு இறைச்சியை தேவைப்படும் போது தொட்டிகளில் சுழன்று கொண்டிருக்கும் சுத்தமான குடிநீரில் மூழ்கவைத்து உருகவைக்கவேண்டும். இறைச்சி உணர்வு முறை சோதனை செய்து தரநிர்ணயம் செய்ய வேண்டும்.
வேகவைத்தல்/குளிர்வித்தல் :
இறைச்சியை தகர பெட்டியில்  இடுவதற்கு முன் வேகவைத்து பின் உடனடியாக குளிர்விக்கவேண்டும்.
சுத்தம் செய்தல்:
வேகவைத்து குளிர்வித்த இறைச்சியை சுத்தம் செய்யும் மேசைகளில் வைத்து ஓடுகளை நீக்கவேண்டும். பின்னர் தரம் மற்றும் உணர்வு முறை சோதனை மேற்கொள்ள வேண்டும்.
தகர பெட்டியில் நிரப்புதல் :
குறிப்பிட்ட அளவு இறைச்சியை பார்ச்சிமண்ட காகிதத்தில் சுற்றி தகர அடைப்பில் வைக்கவும். திரவ பொதியிடும் ஊடகம், மற்ற பொருட்களை கொண்டு அல்லது கரைப்பான் மூலம் சேர்க்கலாம்.

தகர பெட்டியில் அடைத்தல் :
நிரப்பட்ட தகரபெட்டியில் வைக்கவும். ஒவ்வொரு தகர பெட்டியின் மேல் நிரந்தர உற்பத்தி குறியீடு , உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை , உற்பத்தி  செய்யப்பட்ட தேதி ஆகியவற்றை கொண்ட தகவல்களை ஒட்டவேண்டும். உற்பத்தி பொருளின் பாதுகாப்பை அடிக்கடி மதிப்பீடு செய்தல் வேண்டும்.

வெப்பம் சார்ந்து பதனிடுதல் :
அடைக்கப்பட்ட தகர பெட்டிகளை வெப்பம் மற்றும் காற்றழுத்தம் கொண்டு நிபுணர்களின் மேற்பார்வையில் வணீகரீதியாக நுண்ணுயிரிகள் இல்லாத வண்ணம் தயார் செய்யப்படுகின்றன. வெப்பம் சார்ந்த பதனிடுதல் சிறந்த முறையில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
நிறைவடைந்த பொருட்களின் மதிப்பீடு :
ஒவ்வொரு நிறைவடைந்த பொருட்களின் மாதிரிகளும் தரரீதியாகவும் மதிப்பீடு செய்யப்பட்டு குறியீடுதலுக்கு அனுப்பப்படுகிறது.
குறியீடு மற்றும் உறையிடுதல் :
நிர்ணயித்த தரத்தைக் கொண்ட பொருட்கள் குறியீடு செய்து உறை செய்யப்படுகிறது. உறையிடப்பட்ட பொருட்கள் உற்பத்தி இடம் அறியும் வகையில் குறிக்கப்படுகிறது. உறையிடப்பட்ட பொருட்களை கிடங்கில் சேமித்து வைத்தோ அல்லது உடனடியாக விற்பனைக்கு அனுப்பப்படிகிறது.

ஆதாரம்:

http://chickenofthesea.com/company/know-your-seafood/crab-meat
http://nutrition.indobase.com/articles/crab-nutrition.php
http://health.wikinut.com/10-Health-Benefits-of-Crabs/337spzb0/

 

 
  முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015