கடல் உணவுகள் :: நண்டு

நண்டுகள் நீர்வாழ் மேலோடுள்ள கணுக்காலி குழுமத்தைஸ் சேர்ந்த்தவையாகும். இவற்றை கடினமான மேலோடுகள் மற்றும் பத்து கால்களைக் கொண்டு அடையாளப்படுத்தலாம். இவை தோலுரித்தல் மூலம் வளர்கின்றன. தோலுரிக்கும் போது கடினமான மேலோட்டை துறந்து நிறைய நீரை உட்கொண்டு அளவில் பெரிதாகும். சிறிது காலத்திற்கு அவை மிருதுவான மேலோட்டையே கொண்டிருக்கும். நாள்பட அந்த ஓடுகள் அடுத்த தோலுரிப்பு நிகழ்முறை வரை கடினமாகும். சில உணவுத்துறை வல்லுநர்கள் மிருதுவான ஓடுடைய நண்டுகளையே பரிமாற விரும்புகின்றனர், ஏனெனில் அவை சதைப்பற்றுடன் இருப்பதோடு சுவைமிகுந்ததாகவும் உள்ளது. உலகளவில் உட்கொள்ளப்படும் கடல் வாழ் உயிரினங்களில் நண்டு 20% ஆகும். இது வருடத்திற்கு 1.5 மில்லியன் டன் ஆகும்.

நண்டில் ஊட்டச்சத்தின் அளவு:

ஊட்டச்சத்துக்கள் அளவு
கலோரிகள் 87 கலோரி
புரதங்கள் 18 கிராம்
நீர் 79 கிராம்
சாம்பல் 1.8 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் 40 மிகி
கொழுப்பு 78 மிகி
கொழுப்புகள் & கொழுப்பு அமிலங்கள்  
மொத்த கொழுப்பு 1கிராம்
நிறைவு கொழுப்பு 222 மிகி
நிரம்பாத கொழுப்பு 192 மிகி
பல்கொழுப்பியம் கொழுப்பு 387 மிகி
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் 320 மிகி
ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் 12 மிகி
வைட்டமின்கள்  
வைட்டமின் A 5 IU
வைட்டமின் C 3 மிகி
தியாமின் 80 ைம/கி
ரைபோஃவிளேவின் 40 ைம/கி
நியாஸின் 2.7 மிகி
வைட்டமின் B6 150 ைம/கி
ஃபோலேட் 43ைம/கி
வைட்டமின் B12 9 ைம/கி
பேண்டோதெனிக் ஆசிட் 350 ைம/கி
கனிமங்கள்  
கால்சியம் 89 மிகி
இரும்பு 740 ைம/கி
மெக்னீசியம் 34 ைம/கி
பாஸ்பரஸ் 229ைம/கி
பொட்டாசியம் 329 ைம/கி
சோடியம் 293 ைம/கி
துத்தநாக 3.6 மிகி
காப்பர் 668 ைம/கி
மாங்கனீசு 150 ைம/கி
செலினியம் 37ைம/கி

நண்டின் பயன்பாடுகள்:

  • நண்டிறைச்சியில் வைட்டமீன் பி12 நிறைந்துள்ளது. இவை ரத்த அணுக்களை உற்பத்தி செய்யவும் இரத்த சோகையை நீக்கவும் பயன்படுகிறது.
  • செலனியம் இதில் உள்ளதால் இவை முடக்குவாதத்திலிருந்து காக்கிறது.
  • இவற்றின் புரதம் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் முடி, நகம் மற்றும் தோல்களின் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.
  • தாமிரம் துத்தநாகத்துடன் இணைந்து வைட்டமின் டி, கால்சியம் உடம்பில்  உறுஞ்சுவதற்கு உதவுகிறது. 
  • துத்தனாகம் - தோலின் எண்ணை தன்மையை குறைத்து பருக்கள் வருவதை தடுக்கிறது.
  • நயாசின் - உடலில் நல்ல கொழுப்பை அதிகரிப்பதோடு கேடு விளைவிக்கும் கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது.
  • ரைபோபிலேவின் - உதடுகள் மற்றும் வாயில் ஏற்பட கூடிய புண்களையும் பிளவுகளையும் தடுக்கும்.
  • போலேட் - இது ஆரோக்குயமான குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • ஒமேகா -3 - கொழுப்பு அமிலம் - இவை இருதய நோய்களை தடுக்கவல்லது.  

ஆதாரம்:

http://chickenofthesea.com/company/know-your-seafood/crab-meat
http://nutrition.indobase.com/articles/crab-nutrition.php
http://health.wikinut.com/10-Health-Benefits-of-Crabs/337spzb0/

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015