அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
நுங்கு பனிக்கூழ்

      தேவையான பொருட்கள்

பனங்கூழ் 20 கி
சோளமாவு   80 கி
சர்க்கரை 800 கி
கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொடி 100 கி
நிலைபடுத்தி(ஜெலாடின்) 6 கி
பால்மமாக்கி 6 கி
பால் 500 மிலி
பாலேடு 60கி
திரவ குளுக்கோஸ் 15கி

செய்முறை :

  • கனமான பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்கவைக்கவும்.

  • கொதிக்கவைக்கவும்.பனங்கூழ்,சோளமாவு, சர்க்கரை கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொடி, நிலைபடுத்தி(ஜெலாடின்), பால்மமாக்கி ஆகியவற்றை காய்ச்சாத பால் சேர்த்து கூழாக அரைத்து கொதிக்கும் பாலுடன் சேர்க்கவும்.

  • பின் திரவ குளுக்கோஸ் சேர்த்து இடைவிடாது கலக்கவும்.

  • ஆரவைத்தப்பின் பாலேடு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  • இவற்றை கலவை கருவியில் இட்டு உறைவிக்கும் முன் 30 நிமிடம் கலக்க வேண்டும்.

  • இந்த கலவையை பனிக்கூழ் கோப்பையில் ஊற்றி உறைநிலை கருவியில் 4 மணி நேரம் வைக்கவும்.

  • மிருதுவான வழுவழுப்பான பனிக்கூழ் பெற ஒவ்வொரு 1/2 மணி நேரத்திற்கும் கலக்கி -2° c உறைநிலையில் வைக்கவேண்டும்


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015