அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: உணவு பொதியிடும் முறைகள்

பொதியலின் பிரிவுகள்:

  • ஒற்றைப்பொதியல்/தொகுதிபொதியல் : இது முதன்மை பொதியல் அல்லது நுகர்வோரை சென்றடையக் கூடிய பொதியலாகும். ஒவ்வொரு பொதியலில் வைக்ககூடிய அலகுகள் மற்றும் அளகுகள் தயாரிக்கப்பட்ட பொருளின் தன்மையையும் வர்த்த முறையையும் பொறுத்தது.

  • இடைநிலை பொதியல்: இது முதன்மை பொதியல் அல்லது நுகர்வோரை சென்றடையக் கூடிய பொதியலாகும். ஒவ்வொரு பொதியலில் வைக்ககூடிய அலகுகள் மற்றும் அளகுகள் தயாரிக்கப்பட்ட பொருளின் தன்மையையும் வர்த்த முறையையும் பொறுத்தது.

  • மொத்தப்பொதியல்:இது மூலப்பொதியல், விநியோகப்பொதியல் மற்றும் போக்குவரத்திற்கான பொதியல் என்றும் அழைக்கப்படும். இது தனி/ஒற்றை பொதியல் அல்லது இடைநிலை பொதியலுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுவாக இவ்வகை பொதியல் இயந்திர தன்மையுடைய பாதிப்பிலிருந்து காக்கப்படவேண்டும்.

செயல்பாடுகள்:

பொதியலின் முக்கியமான 3 செயல்பாடுகள் - பாதுகாப்பு, பதனிடுதல் மற்றும் விற்பனை மேம்படுத்துதல்/ஊக்குவிப்பு ஆகும்.

  • பாதுகாப்பு - இது காலநிலை மற்றும் எந்திரத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாத்தல். காலநிலை பாதுகாப்பு காற்று மண்டல ஈரப்பத்தம், ஆக்ஜிஸன், ஒளி, வெப்பம், குளிர் மற்றும் நுண்ணுயிரி வழியாக ஏற்படக்கூடியது.எந்திரத்தன்மையுடைய பாதிப்பு என்பது பொதியல், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம், தாக்கவிளைவு, அதிர்வு மற்றும் அழுத்தத்தால் ஏற்படக்கூடியதாகும்.

  • பதனிடுதல் - உணவுப் பதனிடுதல்/ பாதுகாத்தல் என்பது குறிப்பிட்ட உணவு பொதியலில் எத்தனை காலத்திற்கு கெடாமல் பாதுகாக்க முடியும் என்பதாகும். உணவின் தரம் நுகரும் வரை அதன் தரம் கெடாமல் பாதுகாக்கவேண்டும்.

  • விற்பனை ஊக்குவிப்பு - சரியான பொதியல் சிறந்த விற்பனையாளராக செயல்பட்டு நுகர்வோரை ஈர்க்கின்றது. இதன் மூலம் விளம்பரஸ் செலவுகளும் கனிசமாக குறையும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015