அறுவடை பின்சார் தொழில் நுட்பம்:: திட்டங்கள் / பயிற்சிகள் 

கேள்விகளும் பதில்களும்

1.உணவு பாதுகாப்பு என்றால் என்ன?

உணவுகளின் அளவு பயன்பாட்டிற்கு மீறி கிடைக்கும் என்னும் நிலையில் அவற்றை பின்வரும் காலங்களில் நுகர்வதற்காக பாதுகாக்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்துதல் பருவமற்ற காலகட்டங்களில் அனைத்து இடங்களிலும் உணவு கிடைக்க வழி வகுக்கிறது.

2.உணவு கெட்டு போவதற்குண்டான காரணம் யாது?

 • நுண்ணுயிர்களான பாக்டீரியா காடி மற்றும் பூஞ்சான வளர்ச்சி
 • நொதிகளின் செயல்பாடு
 • உணவுகளின் நொதிகளற்ற வினை செயல்பாடுகளான ஆக்ஸீஜனேற்றம் எலி மற்றும் பூச்சிகளினால் ஏற்படும் பொருட்கள் அழிவு

3.உணவு பாதுகாக்கும் முறைகள் யாது?

தற்காலிக பாதுகாப்பு:
இத்தகைய முறையில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியானது சில வேதிப் பொருட்கள் பயன்பாட்டினால் தடுக்கப்பட்டு உணவு பாதுகாக்கப்படுகிறது.

நிரந்தர பாதுகாப்பு:
இத்தகைய முறையில் பதப்படுத்துதல், உறையிடுதல் மற்றும் உலர்த்தல் செயல்பாடுகளினால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

4.உணவு பாதுகாப்புகளின் கொள்கைகள் யாது?

  • நுண்ணுயிர்கள் சிதைவுறுதல் தடுக்கப்படுகிறது அல்லது தாமதப்படுத்தப்படுகிறது
  • நுண்ணுயிர்கள் வெளியேற்றப்படுகிறது
  • நுண்ணுயிர்கள் வடிகட்டுதலின் மூலம் நீக்கப்படுகிறது
  • குறைந்த வெப்பநிலை உலர்த்தல், வேதிப்பொருட்கள் மூலம் நுண்ணுயிர் வளர்ச்சி தடுக்கப்படுகிறது
  • வெப்ப கதிர் வீச்சின் மூலம் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகிறது

5.வெப்ப செயல்பாடு என்றால் என்ன?
வெப்பநிலை மற்றும் கால அளவைக்கொண்டு பொருட்கள் சூடேற்றப்பட்டு பின்பு வேதிப்பொருட்கள் கொண்டு நுண்ணுயிர்களை அழிப்பதாகும்.

6.நுண்ணுயிரி வளர்ச்சி தடை செயல்பாடு என்றால் என்ன?

100 டிகிரி செல்சியஸ்க்கு குறைந்த வெப்பநிலையை கொண்டு முழுமையாக அல்லாமல் பாதி நுண்ணுயிர்களை அழிப்பதாகும். ஆவி, சுடு நீர், உலர் வெப்பம் அல்லது மின்சாரத்தை கொண்டு நுண்ணுயிரிகளை அழிக்கலாம்.

7. அடைப்புதல் என்றால் என்ன?
செய்யப்பட்ட கலனில் உணவுப் பொருட்களை அடைத்து அதிக வெப்ப நிலையைக் கொண்டு சூடேற்றி நுண்ணுயிரிகளை அழிப்பதாகும்.

8. வேதி பொருட்களைக் கொண்டு உணவு பொருட்களை பாதுகாத்தல் யாது?
பதப்படுத்தும் பொருட்களானது வேதி பொருட்களாகும். அவற்றின் பயன்பாடு நுண்ணுயிரிகள் வளர்ச்சியை அழிக்க வல்லதாகும். (எ-டு) பென்சோயிக் அமிலம். சல்பர் டை ஆக்சைடு. சோடியம் பென்சோயேட் சல்பைட்டு, சார்பிக் அமிலம்.

9. நீர் அகற்றுதல் செயல்பாடுகள் யாது?
நீர் அகற்றுதல் என்றால் வெப்ப காற்றை உணவு பொருட்களனில் செலுத்தி நுண்ணுயிரிகளை கொள்வதாகும். (எ-டு) தானியங்கள், பயிறு வகைகள்.

10. பழ மற்றும் காய்கறி பொருட்கள் உலர்த்தல் யாது?
வெயிலில் உலர்த்தல், இயந்திர உலர்த்தல், சவ்வூடு பரவல் கொண்டு நீர் அகற்றல், தெளிப்பு உலர்த்தல், உறையிடுதல் ஆகியவற்றைக் கொண்டு பழ மற்றும் காய்கறி பொருட்களை உலர்த்தலாம்.

11. சவ்வூடு பரவல் உலர்த்தல் என்றால் என்ன?
உலர்த்தல் என்பது அனைத்து திசுக்களிலிருந்து நீரை அகற்றுவதாகும். அடர்த்திய சர்க்கரை கரைசல், மற்றும் சவ்வூடு கரைசலை கொண்டு பழப்பொருட்களின் ஒரு பங்கு நீரை அகற்றுதலாகும்.

12. சவ்வூடு பரவலைக் கொண்டு நீர் அகற்றுதலுக்கு உகந்த பழங்கள் யாது?
ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி, எலுமிச்சை, திராட்சை, கொய்யா, மாம்பழம், பப்பாளி, அன்னாசி, பிளம்ஸ், மற்றும் பலா.

13. சவ்வூடு பரவலைக் கொண்டு நீர் அகற்றுதலின் நன்மைகள் யாது?

 • குறைந்தபட்ச நிறம் மற்றும் சுவை இழப்பு
 • பழப்பாவது தடுக்கப்படுகிறது
 • பொருட்களின் இனிப்பு கூட்டப்படுகிறது
 • நீர் அகற்றல் எளிதாக்கப்படுகிறது
 • பொருட்களின் அடர்த்தி திடப்படுத்தப்படுகிறது
 • பொருட்களின் இழைநய அமைப்பு விருத்தியடைகிறது
 • எளிதான வசதி மற்றும் கருவிகள் தேவைப்படுகிறது
 • குறைந்த செலவுகளை கொண்டதாகும்

14. சவ்வூடு பரவலைக் கொண்டு நீர் விளிம்புகள் யாது?

 • திரவு அளவு குறைவதால் சில பொருட்களின் சுவை குறைக்கப்படுகிறது
 • சர்க்கரை உட்கொள்ளும் திறன் சில பொருட்களில் குறைகிறது

15. சவ்வூடு பரவலை செயல்பாடுகளுக்கு உண்டான காரணிகள் யாவை?

 • முன் நேர்த்தி
 • சவ்வூடு பரவல் வேதி பொருட்கள்
 • பொருட்கள் அடர்த்தி நிலைப்படுத்துதல்
 • வெப்பநிலை
 • சுற்றனுப்புதல்
 • பொருட்களின் அளவு மட்டும் அடர்த்தி
 • பழ ரகம் மற்றும் அவற்றின் முதிர்ச்சி

16. எவ்வித பொருட்கள் சவ்வூடு பரவல் மூலம் நீர் அகற்றப்படுகிறது?
உடனடியாக உட்கொள்ளும் பட்சணங்கள் ஆகும்.

17. தெளி உலர்த்தல் என்றால் என்ன?
அன்னாசி, ஆரஞ்சு பழச்சாறுகளை தெளி உலர்த்தலைக் கொண்டு உலர்த்தி பொடிகள் தயாரிக்கலாம்.

18. உறை உலர்த்தல் என்றால் என்ன?
பதப்படுத்தப்பட்ட பொருட்களை உறையவைத்து பின்பு பனிக்கட்டிகளை வெற்றிடத்தில் பதங்கமாதல் செய்ய வேண்டும். இதுவே உறை உலர்த்தல் முறை ஆகும்.

19. திராட்சை உலர்த்தல் முறை யாது?
மூலப்பொருட்களை தேர்வு செய்து, பின்பு எண்ணெய் நேர்த்தி, சல்பர் கொண்டு புகையூட்டுதல், வெயிலில் உலர்த்தல், இறுதியாக உலர் திராட்சையை பிரித்து, இளவெப்ப நீரில் சுழலி பின்பு கலனில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும்.

20. உலர் திராட்சையின் தர சிறப்பு யாது?
உலர் திராட்சை, சிறு அளவு, உருண்டை மற்றும் பெருத்த வடிவம் கொண்டதாகவும் பச்சை மற்றும் லேசான பழுப்பு நிறம் மற்றும் அதிக சுவை கொண்டதாக உள்ளது.

21. உறைமுறை பதப்படுத்தல் என்றால் என்ன?
உணவு பொருட்களை குறைந்த வெப்ப நிலையான (-18 டிகிரி செல்சியஸ்-ல்) பதப்படுத்தலாகும்.

22. உறை பதப்படுத்தலுக்கு உகந்த காய்கறிகள் யாது?
பட்டாணி, காரட், பூக்கோசு, பிரெஞ்சு பீன்ஸ், காளான் வகைகள் ஆகும். 

23. பதப்படுத்தலின் செயல்பாடுகளுக்கு எவ்வித இடம் உகந்தது?
பதப்படுத்தலின் செயல்பாடுகளுக்கு சிறந்த இடம் யாதெனில் குறைந்த உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் நீர் கிடைக்கும் திறன் வேலையாட்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள இடமாகும்.

24. காய்கறியிலிருந்து தயாரிக்கும் பதனிடப்பட்ட பொருட்கள் யாது?
தக்காளி - கூழ், சூப், குழம்பு, பழச்சாறு, பசை, சாம்பார் மற்றும் பல
வெங்காயம் - அப்பளம், பொடி, பசை
பட்டாணி - உறை, நீர் அகற்றிய வகை
வெண்டை - உறை, நீர் அகற்றிய வகை
தர்பூசணி - உடனடி பான பரிமாறுதல் 
காரட் - உறை, நீர் அகற்றிய வகை
பீன்ஸ் - உறை, நீர் அகற்றிய வகை
காளான் - உறை, நீர் அகற்றிய வகை
ஊறுகாய்கள் - காய்கறி கலவையான வெள்ளரி, புர்கோசு, காரட் மற்றும் பட்டாணி

25. பழ மற்றும் காய்கறி பதப்படுத்தலுக்கான எளிய முறை யாது?
பழ மற்றும் காய்கறிகளை சாறு பிழிதல், குழம்பு, எடுத்தல் கெட்ச்அப், பானங்கள், நீர் அகற்றுதல் ஆகியவை எளிய முறையாகும்.

26. தக்காளியை எவ்வாறு எளிய முறையில் பதப்படுத்தலாம்?
தக்காளியில் புரி, குழம்பு, சாம்பார், தயாரிப்பதே எளிய முறையாகும்.

27. படி மற்றும் காய்கறி பதனிடுதல் பொதுவாக பயன்படுத்தப்படும் வேதி பதப்பொருட்கள் யாது?
பொட்டாசியம் மெட்டாபை சல்பைடு, சோடியம் பென்சோயேட் 

28. பொருட்கள் பதப்படுத்தலில் வேதிப் பொருட்களின் பயன்படுத்தும் பரிந்துறை அளவு யாது?
உலர் திராட்சை - சல்பர்டைஆக்சைடு (750 பிபிஎம்)
ஜாம் தயாரிப்பு - சல்பர்டைஆக்சைடு (40 பிபிஎம்)
பழக்கூழ்மம் - சல்பர்டைஆக்சைடு (1500 பிபிஎம்)

29. அத்தி பழங்கள் பதப்படுத்தும் முறை யாது?
முன் நேர்த்திக்கு பின் நீர் அகற்றுதல் முறையாகும்.

30. பழ மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கும் பானங்கள் யாது?
உடனடியாக பரிமாறும் பான வகை, பழ கலவை பானங்கள்.

31. திராட்சையிலிருந்து தயாரிக்கும் பொருட்கள் யாது? 
மது பானம், பழச்சாறு ஸ்குவாஷ் மற்றும் உலர் திராட்சைகள்.

32. பழச்சாறு பிழிதலுக்கு ஏற்ற திராட்சை பொருட்கள் யாது?
அதிக சுவை மற்றும் மணம் கொண்ட குலாபி இரகம்.

33. பெங்களூர் நீல ரகம் பழச்சாறு பிழிதலுக்கு ஏற்றவையா?
பெங்களூர் நீல ரகத்தை குலாபி இரகத்தோடு 50:50 என்ற விகிதத்தில் கலந்து பழச்சாறு எடுக்கலாம்.

34. ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிப்புகளின் வேறுபாடு யாது?

 • ஜாம் கூழ் கொண்டு தயாரிப்பதாகும்
 • ஜெல்லி பழச்சாற்றை கொண்டு தயாரிப்பதாகும் எனவே அவை தெள்ளத் தெளிவாக காணப்படும்

35. புளியிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் யாது?
பழச்சாறு அடர்த்தி உடனடி பரிமாறும் வகை, சாம்பார் மற்றும் ரசமாகும். 

36. பதப்படுத்துதல் செயல்பாடு எவ்வகையில் உற்பத்தியாளருக்கு பயன்படும்?
உச்ச காலகட்டத்தில், பழங்களின் வழலை மிக குறைவாக காணப்படும். அத்தகைய சூழ்நிலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்பட்ட பொருட்களாக்கி விற்பனை செய்வதன் மூலம் நல்ல இலாபம் பெறலாம்.

37. பலவிதமான பழ வகைகளிலிருந்து உற்பத்தியாகும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் யாது?
மாம்பழம் - கூழ், சாறு, பானங்கள், பட்டைகள் மற்றும் ஜாம் 
திராட்சை - மதுபானம், உலர்திராட்சை, கலவைச்சாறு, பலவகை பழ ஜாம்
வாழைப்பழம் - சிப்ஸ், பானம், உடனடி, பரிமாறும் பான வகைகள், பட்டைகள்
அன்னாசி - உடனடி தயாரிக்கும் பான வகைகள், பட்டைகள்
பப்பாளி - கற்கண்டு, பட்டைகள், கலவைச்சாறு, கலவை பழ ஜாம்
பேஷன் பழம் - கலவை சாறு
கொய்யா - ஜெல்லி, ஜாம்
ஆப்பிள் - சாறு, ஜாம், பட்டைகள்

38. பதப்படுத்தப்பட்ட பொருட்களின் வைப்புத் திறன் யாது?
குறைந்த பட்சம் 6 மாத காலங்கள் குளிர் பெட்டியைக் கொண்டு வைப்புத்திறனை இரட்டிப்பாக்கலாம்.

39. பதப்படுத்தப்பட்ட பொருட்கள் சாதாரண பழ வகை காட்டிலும் சத்து மிகுந்ததா?
சில பதப்படுத்தப்பட்ட பொருட்கள் குறைந்த சத்துக்களை இழக்க வாய்ப்பு உள்ளது. 

40. பால் பதனிடும் சமயத்தில் வைட்டமின் இழப்பு ஏற்படுவது உண்மையா?
இல்லை பொதுவாக பால் 70 முதல் 75 டிகிரி செல்சியஸ் 15 விநாடி பதப்படுத்துவதன் மூலம் நுண்ணுயிரிகள் செயலிழக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

41. பதப்படுத்தப்பட்ட பொருட்களை வெற்றிட அடைத்தல் மூலம் பதப்படுத்துவதின் நன்மைகள் யாது?
பொதுவாக பொருட்கள் நெகிழி அல்லத
ு அலுமினிய பாயில் கொண்டு அடைத்தால், காற்று முதலியன அகற்றப்படுவதால் உணவு வகைகள் புதுமையாக காணப்படும். (எ-டு) குழம்பி மற்றும் மசாலா பொருட்கள்.

42. பதப்படுத்த பயன்படும் வேதி பொருட்கள் மனிதர்களுக்கு தீமையா?
ஆம், ஆட்டு இறைச்சி பதனிடப்பட்ட பயன்படும் வயிறு புற்று நோய் வர காரணமாகும். எனவே குறைந்த அளவு உபயோகிக்க வேண்டும்.

43. பொருட்கள் பதப்படுத்தப்படும்பொழுது கூட்டுப்பொருள் பொருட்களை பொலிவு அதிக சுவை மற்றும் இழை நய அமைப்பு உடையதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்கும். 

44. பெட்டியிட்ட உணவு பொருட்களில் முத்திரை சீட்டு எதைக் குறிக்கிறது?
உணவு பொருட்களின் பெயர்
செய் பொருட்களின் பட்டியல்
சிறப்பான சேமிப்பு நிலை
பதிவு அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
முடிவு காலம்
பயன்படுத்தும் விதிமுறைகள்

45. அம்சூர் என்றால் என்ன?
மாங்காயிலிருந்து தயாரிக்கும் பொடி வகையே அம்சூர் ஆகும். அதிக புளிப்பின் காரணத்தினால் கறி தயாரிப்பில் பயன்படுத்தலாம். 

46. அம்சூர் தயாரிப்பது எப்படி?
குறைந்த நார் சத்து அடங்கிய மாங்காய்களை கழுவி, தோல் செதுக்கி துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்த வேண்டும். பின்பு உலர்த்த துண்டுகளை பொடியாக்க வேண்டும். 

47. தக்காளி பூரி மற்றும் தக்காளி பசைகளின் வேறுபாடு யாது?
இவை இரண்டும் மொத்த கரையும் திடப்பொருட்களின் அளவில் வேறுபடும். தக்காளி பூரியின் மொத்த கரையும் திடப்பொருட்களின் அளவு 8-23.9 சதவிகிதமாகும். தக்காளி பசையின் மொத்த கரையும் திடப்பொருட்களின் அளவு 24 சதவிகிதமாகும்.

48. பப்பாளியை கொண்டு இறைச்சியை மென்மையாக்குவது எவ்வாறு?
பப்பாளி இலை மற்றும் தோல்களில் பப்பாயின் என்ற பால் வகை உள்ளது. அவற்றை பயன்படுத்துவதால் இறைச்சியில் உள்ள அணுக்களின் கூட்டு திசுக்கள் பிரிக்கப்பட்டு மென்மையாக்கப்படுகிறது.

49. தொற்று நீக்க செய்த பால் யாது?
பால் சுட வைக்கும் போது வெப்ப நிலையை அதிகப்படுத்தி 162 டிகிரி பாரன்ஹீட்டிற்கு 15 விநாடிகள் வைப்பதால் அனைத்து நுண்ணுயிர்களான பாக்டீரியா மற்றும் நொதிகளை அழித்துவிடுகிறது.

50. உலர் பால் என்றால் என்ன?
தொற்று நீக்கம் செய்யப்பட்ட பாலிருந்து தண்ணீரை முழுமையாக நீக்குவதே உலர் பாலாகும்.

51. கதிர் வீச்சு உணவு பதப்படுத்துதல் யாது?
காமா கதிர் வீச்சு எலக்ட்ரான் மற்றும் எக்ஸ் ரே கதிர் வீச்சு கொண்டு உணவு வகைகளை பதப்படுத்துவதாகும். 

52. பழச்சாறுகளின் தரத்தை பாதிக்கும் காரணிகள் யாது?
இரகங்கள்
சத்து மேம்பாடு உத்திகள்
முதிர்ச்சி நிலை
மண் வளமை
அறுவடை முறை
போக்குவரத்து கால இடைவெளி
பூச்சி மற்றும் நோய் தாக்கம்

53. வெள்ளத்தின் சத்துக் கூறுகள் யாது?
சுக்ரோசு - 60 - 85 சதவிகிதம்
க்ளுகோஸ் மற்றும் பிரக்டோசு - 5 - 15 சதவிகிதம்
புரதம் - 0.4 சதவிகிதம்
கொழுப்பு - 0.1 கிராம்
தாலுக்கள் - 0.6 - 1.0 கிராம்
(கால்சியம்: 8 மி்கி, பாஸ்பரஸ் - 4 மி.கி மற்றும் இரும்பு 11.4 மி.கி குறைந்த அளவில் வைட்டமின் மற்றும் அமினோ அமிலமும் உள்ளது.

54. வெள்ளம் தயாரிப்பதற்கு உபயோகப்படும் காய்கறி தெளிவுப்பொருட்கள் யாவை?
டியோலா மற்றும் வெண்டையின் தண்டு மற்றும் வேர் பகுதிகள் சுக்லாய் தாவரத்தின் பச்சை பட்டை, ஆமணக்கு, நிலக்கடலை மற்றும் சோயா விதைகளாகும்.

55. வெள்ளம் தயாரிப்பதற்கு உபயோகப்படும் தெளி வேதி பொருட்கள் யாவை?
ஹைடுரோஸ் (சோடியம் ஹைட்ரஜன் சல்பைட்), லைம் (காலிசியம் ஆக்சைடு), சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட்டு, சூப்பர் பாஸ்பேட், அலும் மற்றும் பல.

56. கீரை வகைகள் பழப்பாகமல் இருப்பது எப்படி?
கீரை சமைக்கும் பொழுது சிறிது சிட்ரிக் அமிலத்தை சேர்க்கவும். பச்சை கீரையின் நிறத்தை பாதுகாக்க சிறிது எலுமிச்சை சாறு அல்லது கூழ்களை சேர்க்கவும்.

57. வாயு தொல்லைகள் வராமல் இருக்க பீன்ஸை எவ்வாறு சமைக்க வேண்டும்?
பீன்சில் உள்ள ‘ரபினோஸ்’ என்ற ஒரு வகை சர்க்கரைப்பொருள் உண்ணும் பொழுது மற்றும் பெருங்குடலுக்கு சென்று வாயு தொல்லை உருவாக்கும். எனவே பீன்ஸ் மற்றும் இதர பருப்பு வகையை சுமார் எட்டு மணி நேரம் ஊர வைத்து பின்பு குளிர்ந்த நீரில் அலசி பின்பு ஐந்து நிமிடம் வேக வைப்பதால் வாயு உருவாக்கம் தடைப்படுகிறது.

58. ஒருபடித்தான பால் என்றால் என்ன?
பாலை இயந்திரத்தின் சிறு துளைகளில் செலுத்தி கொழுப்பு பொருட்களின் அளவை குறைப்பதே ஒருபடித்தான பாவாகும்.

59. கதிர் வீச்சு எவ்வாறு இயங்கும்?
கதிர் வீச்சு பயன்பாடு உயிரியல் செயல்பாடுகளை தடைசெய்வதன் மூலம் நுண்ணுயிரின் வளர்ச்சியை தடுத்து பொருட்கள் கெடாமல் இருக்க உதவுகிறது.

60. கதிர் வீச்சு பயன்பாட்டின் நன்மைகள் யாது?

 • உணவுகளை தொற்று நீக்கம் செய்ய பயன்படுகிறது
 • இழைநய அமைப்பு மற்றும் பொலிவுகளை மேம்படுத்துகிறது
 • கதிர்வீச்சு பயன்பாடுகளினால் எவ்வித தீங்கும் விளைவிக்கும் பொருட்களும் பதப்படுத்தப்பட்ட பொருட்களில் தென்படாது   

61. கதிர் வீச்சு பயன்பாடு உணவு சத்துக்களில் விளைவு ஏற்படுத்துமா?
இல்லை, குறை்நத விளைவுகளையே ஏற்படுத்தும். 

62. கரும்பு சாறின் தரத்தை எவ்வாறு அறியலாம்?

 • சுக்குரோஸின் அளவு அதிகம் காணப்படும்
 • குறைந்த அளவு சர்க்கரையற்ற சர்க்கரைகள்
 • மதிமார் நார் சத்து
 • குறைந்த அளவு தேவையற்ற பொருட்கள்
 • அதிக சாறு அளவு

63. கரும்பில் அறுவடை பின்சார் அழிவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

 • முதிராத மற்றும் அதிக முதிர்ச்சி அடைந்த கரும்பை அறுவடை செய்யக்கூடாது
 • அறுவடை பின்சார் அழைவுகளுக்குண்டான இரகங்களை உடனடியாக போக்குவரத்து செய்ய வேண்டும்.
 • அதிக வெப்ப காலத்தில் அறுவடையான கரும்புனளை நிழலில் வைக்க வேண்டும்

64. அறுவடையாக கரும்புகளை கெடாமல் எத்தனை காலம் பாதுகாக்கலாம்?
கரும்புகள் அறுவடை செய்த சில நாட்களிலேயே சர்க்கரை அல்லது இனிப்பு தன்மையை இழந்து விடும்.

65. வெள்ளத்திலிருந்து தயாரிக்கப்படும் கூட்டு பொருட்கள் யாது?
வெள்ளத்தை அரிசி, பசை, விளக்கெண்ணெய் மற்றும் முந்திரி, பாதாமுடன் சேர்த்து இனிப்பு பொருட்களை தயாரிக்கலாம்.

66. நுண்ணலை அடுப்பில் காய்கறி சமைத்தலினால் சத்துக்கள் குறை ஏற்படுமா?
குறைந்த அளவு சத்துக்கள் இழக்க நேரிடும். பாரம்பரிய உணவுகளைக் காட்டிலும் நுண்ணலை அடுப்பில் வேகவைத்த உணவுகளின் வைட்டமின் சத்துக்களின் இழப்பு குறைந்த அளவே காணப்படுகிறது.

67. உணவுகள் சமைக்கும் அல்லது வேகவைக்கும் போது பழுப்பாவதற்கு காரணம் யாது?
ரொட்டிகளை சுடும் பொழுது தனித்தன்மை வாய்ந்த நிறம் மட்டும் சுவை ஏற்படுகிறது. இவற்றை மைலார்டு வினை எனப்படும்.

68. நவீன காற்று அடைப்புக் கொண்டு பெட்டியிடும் 5 பதப்படுத்தப்பட்ட பொருட்கள் யாவை?
ஆட்டு இறைச்சி, கடல் உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பழ மற்றும் காய்கறி பொருட்கள், பாஸ்தா, சீஸ், கோழிக்கறி சமைத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உலர் உணவுகள்.

மூலதனம்:
http://www.iihy.res.in/FAQ/htm
கரும்புபயிர் பெருக்க நிலையம், கோவை

குலாப் ஜாமுன்:
கோவாவிலிருந்து குலாப் ஜாமுன் தயாரிப்பு:
தேவையான பொருட்கள்:
கோவா (கி) - 75 
மைதா (கி) - 25 
சோடியம் பை கார்பனேட் (கி)  - 0.1
தண்ணீர் (மி.லி) - 15
இனிப்புக் கூழ்:
தண்ணீர் (மி.லி) -300
சர்க்கரை (கி) - 300
எண்ணெய் (மி.லி) - 100 
கோவாக்கொண்டு தயாரித்த குலாப் ஜாமுன்.

பர்பி:
தேவையான பொருட்கள்:
கோவா (கி) - 250
சீனி (படிகம்) (கி) - 75 
மிட்டாய் (கி) - 10 
கோவாவை துண்டுகளாக்கி வானலியில் பரப்ப வேண்டும். பின்பு சீனி படிகத்தை சேர்த்து மரக் கரண்டியைக் கொண்டு கலக்க வேண்டும். இதுவே பர்பி ஆகும். மூன்றில் ஒரு பாதி கலவையை பிரித்து மிட்டாயுடன் சேர்க்க வேண்டும். பின்பு ஒரு தட்டில் பரவலாக அடுக்கி வைத்து மிட்டாய் கலவையை கலந்து பரிமாற வேண்டும்.

கீர்: 
சர்க்கரை பாலை 3-4 நிமிடம் நன்றாக காய்ச்சி பின்பு கரண்டியை கொண்டு நன்கு கிளர வேண்டும். உயர் ரக அரிசி கஞ்சியை வேக வைக்க வேண்டும். பின்பு 5 சதவிகித சீனியை சேர்க்க வேண்டும். இதுவே கீர் ஆகும்.

பன்னீர்: 
மிருதுவான நெய் என்றும் கூறலாம்.

சத்துக் கூறுகள்:

இயல்புகள் பசுமாடு (விகிதம்) எருமை (விகிதம்)
ஈரப்பதம் 71.2 71.1
கொழுப்பு 13.5 13.1
மொத்த திடம் பொருள் 28.8 28.9

 
சன்னா:
          சன்னா என்பது பன்னீரின் ஒரு வகையாகும்.

இயல்புகள்
பசு மாடு (விகிதம்) எருமை (விகிதம்)
ஈரப்பதம் 53.4 51.6
கொழுப்பு 24.8 29.6
புரதம் 17.4 14.4
லாக்டோஸ் 2.1 2.3
சாம்பல் 2.1 2.0

செய்முறை:
5 முதல் 15 கிலோ பாலை பாத்திரத்தில் ஊற்றி திரள்தல் பொருட்களை சேர்த்து பாலுடன் திரள வேண்டும். பின்பு கரண்டியைக் கொண்டு நன்றாக கிளற வேண்டும். பின்பு சன்னாவை நல்ல துணியைக் கொண்டு வடிகட்ட வேண்டும்.

சந்தேஷ்: 
தேவையான பொருட்கள்:
சன்னா : 250 கிராம்
சீனி : 75 கிராம்
சுவை (தேவை எனில்) : சிறு துளிகள் 
ஏலக்காய் (தேவையெனில்) : சிறு துளிகள்
தயாரித்த சன்னாவை துண்டுகளாக்கி சீனி சேர்க்க வேண்டும். பின்பு பெரிய பாத்திரத்தில் இட்டு இளந்நெருப்பில் வறுக்க வேண்டும். கரண்டியைக் கொண்டு கிளற வேண்டும். பின்பு நசுக்கிய ஏலக்காய் தேவையெனில் இறுதியாக சேர்க்கவும். சந்தேஷ் தயார் ஆனதும் அவற்றை தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும். பின்பு வேண்டிய வடிவத்தில் வெட்டி சுவைக்க வேண்டும்.

ரசகுல்லா:
தேவையான பொருட்கள்:
சன்னா (மிருதுவான) : 200 கிராம்
மைதா (தேவையெனில்) : 8 கிராம்
சீனி : 250 கிராம்
கீர் : 1 கிலோ
ஏலக்காய் : சிறு துண்டுகள்
ரோஸ் வாட்டர் (சுவைக்காக) : சிறு துளிகள்
செய்முறை:
மேற்கூறிய சன்னாவை சிறு துண்டுகளாக்கி மாவு பிசைத்தல் வேண்டும். இவ்வாறு செயல்படும் பொழுது கொழுப்பு சத்து வெளியேறாமல் இருக்க பனிக்கட்டி அல்லது குளிர்ந்த நீரை தட்டில் வைத்து பிசைய வேண்டும். தேவையெனில் சிறிது மைதாவை சேர்க்கலாம். பிசைந்த மாவுகளின் தரத்தை எவ்வாறு அறியலாம் எனில் மாவுகளை உருண்டையாக்கும் பொழுது பிளவுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சீனியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்பு 2 தேக்கரண்டி பாலை சேர்த்து தெளிவான கரண்டி கொண்டு கிளற வேண்டும். பின்பு சன்னா உருண்டைகளை எண்ணெயில் சுட்டு கூழில் (பாகு) 10-15 செ.மீ ஆழத்தில் ஊற வைக்க வேண்டும்.

குல்பி:
ஐஸ் பனிக்கூழை சிறு பாத்திரத்தில் உறையவைக்க வேண்டும். பாலை நன்றாக காய்ச்சி, சீனியை 2க்கு ஓர் பங்கு என்ற அளவில் சர்க்கரையை சேர்த்து பின்பு சூடு பண்ண வேண்டும். குளிர்ந்த பிறகு மலாய் (பசை), நொறுக்கிய பருப்புகள், வனிலா அல்லது ரோஸ் சாரத்தை சேர்க்க வேண்டும். இக்கலவையை முக்கோணம், கூம்பு, கலன் வடிவத்தில் விற்பனை செய்ய வேண்டும். 

நவீன தொழில்நுட்பங்கள் பற்றி அறிய:

 • அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், த.வே.ப.கழகம், கோவை
 • மனையியல் கல்லூர் மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், மதுரை

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015