முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு  
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து :: முன்னுரை

முன்னுரை :

தகுந்த ஊட்டச்சத்து, வலுவானதும் நல்லதும் ஆகும். ஏனெனில் எந்த மனிதன் தகுந்த ஊட்டசத்தினை எடுத்துக் கொள்கிறானோ, அவன் நோயில்லாதவனாகவும், வேலைகளை திறம்படச் செய்யக்கூடியவனாகவும் மேலும் நன்கு கற்றுக் கொள்ளும் திறமையுள்ளவனாகவும் மாற்றும் நல்ல ஊட்டச்சத்து, குடும்பத்திற்கு பயனுள்ளதாகவும், அவர்களின் சமூகத்திற்கு பயன் உள்ளதாக இருப்பதோடு, உலகம் அனைத்துக்கும் பயன் அளிக்க கூடியது. சத்தான உணவு என்பது, ஊட்டசத்து குறைபாடுகள் மற்றும மிகுதயைத் தடுக்கக்கூடிய அளவு முக்கிய சத்துகளையும் கலோரி அளவையும் கொண்டதே. சத்தான உணவு கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து), புரதம் மற்றும் கொழுப்பு தரக்கூடிய சரியான சரிவிகித உணவே. மேலும் மரபுவழி நோய்கள் தாக்கக்கூடிய அபாயத்தை குறைக்கவும், முழுமையாகவும் உபயோகமானதுமான வாழ்க்கை முறையை வழங்க பங்களிப்பதே சத்தான உணவு. இத்தகைய உணவானது இருக்கக்கூடியதும், வழங்கக்கூடியதும் விரும்பக்கூடியதுமான பல்வேறுபட்ட உணவுகளிலிருந்து பெறலாம்.

மனிதன், உடலிலுள்ள பல்வேறு செயல்களை செய்யவும், நோய் இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக பல்வேறு நிலையிலுள்ள சத்துக்கள் தேவைப்படுகிறது. இத்தகைய சத்துக்கள் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, வைட்டமின், தாது உப்புகள் மற்றும் நீர் முதலானவைகளே. தினந்தோறும் உண்ணும் உணவில் உண்ணக்கூடிய உணவினை, தானியங்கள், பயிறு வகைகள், கடலைகள் (கொட்டைகள்) மற்றும் எண்ணெய் வித்துக்கள், பழங்கள், காய்கறிகள் பால் மற்றும் பால் பொருட்கள். மீன், ஆட்டு இறைச்சி மற்றம் கோழி இறைச்சிகளான சதை உணவுகள் என வகைப்படுத்தலாம். புரதம், கொழுப்பு மற்றும் மாவுச்சத்து முதலியவை சில சமயத்தில் முக்கிய கருப்பொருள்கள் என கருதப்படுகிறது. அவைகள் உடலுக்கு தேவைப்படும்போது, உடலில் ஆக்ஜிஸனேற்றம் அடைத்து, ஆற்றலை வழங்கக்கூடியது. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் ஆற்றலை வழங்காது ஆனால் அவை உடலில் செயல்பாடுகளை சரியானதாக்க முக்கியமாக உபயோகமாகிறது மேலும் முக்கிய கருப்பொருள் (Proximate principle) உபயோகிக்க உதவுகிறது.

சத்து தேவைகளை ஈடுசெய்யவும். நலமாக வாழவும், பயனுள்ள வாழ்வு வாழவும், மரபுவழி நோய்களின் தாக்கத்தை குறைக்கவும் கூடிய உணவினை தேர்ந்தெடுப்பதற்காக உணவு வழிமுறைகள் உதவுகிறது. சிலவகை உணவுகள், மரபுவழி நோய்களின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது. அத்தகைய உணவானது அதிக கொழுப்புள்ளதும், ஈடுச் செய்த கொழுப்புள்ளதும், கொலஸ்ட்ரால் மற்றும் உப்பு மற்றும் உடலின் தேவைக்கு விட அதிக கலோரி கொண்டதுமாகும். மேலும் அவைகள், குறைந்த தானிய பொருட்களும், காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து கொண்டவையே.

மனிதனுக்கு ஆற்லை தரக்கூடிய சத்துகளுடன் இதர சில முதன்மை சத்துக்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய சத்துகள் முதன்மையானது. ஏனெனில் அவை உடலை உருவாக்கவும், உணவிலிருந்து மட்டும் பெறக்கூடியதும் ஆகும். முதன்மை சத்துகள், வைட்டமின்கள், தாது உப்புகள், சில அமினோ அமிலங்கள் மற்றும் சில கொழுப்பு அமிலங்கள் உள்ளடக்கியதே. உணவானது, உடல்நலத்திற்கு முக்கியமான நார்ச்சத்துக்களையும் கொண்டதும் ஆகும். எப்படி இருந்தாலும், ஒவ்வொரு உணவு கூறுகளும், உடலின் சிறப்பு செயல்பாடுகளுக்கு தேவைப்படுவதும், முழு நலத்திற்கு அனைத்தும் இணைந்து தேவைப்படுவதுமாகும். மனிதனுக்கு கால்சியமானது உடல் வளர்ச்சிக்கும், நல்ல எலும்புக்கு தேவை ஆனாலும் இதர சத்துக்களும் அதில் ஈடுபடுகின்றன.
இருக்கக்கூடியதும், ஆற்றலை வழங்கக்கூடியதுமான உணவில் மாவுசத்துக்கள் கொழுப்புகள் மற்றும் புரதங்கள் கலோரி என்ற அலகில் மதிப்பிடப்படுகிறது. மாவுச்சத்து மற்றும் புரதங்கள் ஒரு கிராமில் 4 கலோரி அளவு தரக்கூடியது. கொழுப்பானது அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக அதாவது ஒரு கிராமிற்கு 9 கலோரி அளிக்கக்கூடியது. ஆல்கஹால், ஒரு ஊட்டச்சத்து அல்ல, ஆனாலும் அது 7 உணவில் அதிக கொழுப்பு இருந்தால், அதிக கலோரி உள்ளதும் ஆகும். அப்படியே இருந்தாலும், பல குறை கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லா உணவும் அதிக கலோரியை கொடுக்கக் கூடியதே.

அநேக மரபு, சுற்றுச்சூழல், நடத்தை மற்றும் கலாச்சார காரணங்களால் மனிதனின் நலமானது கெடுகிறது. குடும்ப நோய் வரலாறு அல்லது தாக்கக்கூடிய அபாயங்கள் மற்றும உடல் எடை, கொழுப்பு பரவியுள்ள போன்றவற்றை பற்றி புரிந்து கொண்டால், அது மனிதனுக்கு நலத்தை எங்ஙனம் மேம்படுத்துவது என்பதற்கு முடிவு எடுக்க உதவும். நல்ல உணவு தேர்ந்தெடுப்பது, அது நலத்தை மேம்படுத்த திறம்பட உதவும்.

பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு, வளர்ச்சி, மேம்பாடு அடைய மற்றும் நன்றாக சிந்தித்து செயல்பட உதவுகிறது. முதியோர்களுக்கு நல்ல உணவு கொடுத்தால், அவர்கள் திறம்பட செயல்படவும் நன்றாக இருப்பதாக உணரவும் வழி வகுக்கும். நல்ல உணவு தேர்ந்தெடுத்து உண்பதால், இருதய நோய்கள், சிலவகை புற்று நோய்கள் வலிப்பு நோய் மற்றும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்றவைகளால் உயிர் இழக்கக்கூடிய நிலை மற்றும் செயல்பட முடியாத நிலமையைக்கூட தடுக்க உதவும் உடல் பருமன், அதிக இரத்த அழுத்தம் மற்றும் அதிக இரத்த கொலஸ்ட்ரால் போன்ற மரவுவழி நோய் தாக்கம் ஏற்பட முக்கிய காரணிகளைக் கூட நல்ல ஒழுங்கான உணவு முறைகளால் குறைக்க முடியும்.

ஒரு தனிநபரின் உணவு தேர்வானது, அவர்களுக்கு தேவையான ஆற்றல், ஊட்டச்சத்து தேவை மற்றும் விருப்பத்தை பொறுத்ததே.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015