இந்திய அறக்கட்டளை சட்டம் :  
                  தனியார் அறக்கட்டளை மற்றும் அறங்காவலர்களை சட்ட தொடர்புக்காக இந்திய அறக்கட்டளை சமயம், 1882 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 
அறக்கட்டளை என்றால் யாது ? 
                  அறக்கட்டளை என்பது தொழிலதிபர் ஒருவர் தனது உடமைகள் அனைத்தும் பொறுப்பாக நிர்வகிக்க ஒருவரை நம்பிக்கையுடன் நியமித்து, அவற்றிலிருந்து வரும் லாபம் மற்றும் நன்மைகளைக் கொண்டு பயனடைவதாகும். 
                  அறங்காவலர்களின் கடமைகள் 
                  
                    
                      - 
                        
அறக்கட்டளை உடமையின் நிலைமைப் பற்றிய தகவல்களை தனக்கே கூறுவது. 
                       
                      - 
                        
அறக்கட்டளை உடமைகளைப் பாதுகாப்பது 
                       
                      - 
                        
நடுநிலையாக இருப்பது 
                       
                      - 
                        
கழிவுகளைத் தடுப்பது 
                       
                      - 
                        
கணக்கு வழக்குத் தகவல்களை சரிவர பராமரிப்பது 
                       
                      - 
                        
அறக்கட்டளை வருமானத்தைக் குறிப்பிட்ட பாதுகாப்பு முறையில் முதலீடு செய்வது. 
                       
                     
                   
                  அறங்காவலர்களின் உரிமை மற்றும் வல்லமைகள் : 
                  
                    
                      - 
                        
அறக்கட்டளை பெயரை நிர்ணயிக்கும் உரிமை 
                       
                      - 
                        
செலவிட்டத் தொகையை திரும்பப் பெறுதலுக்கான உரிமை 
                       
                      - 
                        
அறக்கட்டளை உடமைகள் மேம்பாடுகளுக்கான அறிவுரை கிடைக்க நீதி மன்றத்தில விண்ணப்பிக்கும் உரிமை 
                       
                      - 
                        
கணக்கு தீர்வுக்கான உரிமை 
                       
                      - 
                        
அங்கீகரித்த உடமைகளின் விற்பனைக்கான உரிமை 
                       
                      - 
                        
முதலீடுகளை ஓர் பாதுகாப்பு பத்திரத்திலிருந்து மற்றொன்று மாற்றி அமைப்பதற்கான உரிமை. 
                       
                     
                   
                  பயனாளிகளின் உரிமை மற்றும் சுமைகள் : 
                  
                    
                      - 
                        
வாடகை மற்றும் லாபங்களுக்கான உரிமை 
                       
                      - 
                        
அறக்கட்டளையின் ஒப்பந்தம் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்வதற்கான உரிமை 
                       
                      - 
                        
சாதகமான வட்டியை மாற்றம் செய்யும் உரிமை 
                       
                      - 
                        
அறக்கட்டளை எதிராக வழக்கு தொடுக்கும் உரிமை 
                       
                      - 
                        
அறங்காவலர்களை தேர்வு செய்யும் உரிமை 
                       
                      - 
                        
அறக்கட்டளை உடமைகளை மூன்றாம் நபரின் கைகளுக்கு கிடைத்த பிறகு அதிகக் கவனம் கொள்ளவேண்டும். 
                       
                      - 
                        
அறக்கட்டளையில் பிரச்சனை ஏற்படின், பயனாளிகள் அவற்றை பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும். 
                       
                     
                   
                  அறக்கட்டளை திரும்பப் பெறுதல் : 
                  அறக்கட்டளை அமைப்பை உரியவர் விருப்பப்பட்டால் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 
                  இந்திய அறக்கட்டளைச் சட்டம் : 
 
 அறக்கட்டளை சட்டம் பற்றிய அறிய இங்கே செடுக்கவும் 
                                      அறக்கட்டளை பத்திரம் 
                                      இந்திய அறக்கட்டளைச் சட்டம் 1882 ம் ஆண்டு அறக்கட்டளைகள் மற்றும் அறங்காவலர்களையும் பாதுகாக்கும் பொருட்டு வரையறுக்கப்பட்ட அமல்படுத்தப்பட்டது. அறக்கட்டளை என்பது சட்டபூர்வமான நபர் அல்ல. அறக்கட்டளையின் சொத்துக்கள் நலன்பெறுபவர்களின் நன்மைகளாக தர்மகர்த்தாவின் பெயரில் நிர்வகிக்கப்படும். 
                     
                    அறக்கட்டளை என்றால் என்ன : 
                                      அறக்கட்டளை என்பது சொத்துரிமையோடு இணைந்த கடமை மற்றும் பொறுப்புகளை உரிமையாளரால் ஏற்றுக்கொள்ளப்படுதல் அல்லது அறிவிக்கப்படுதல் மற்றும் மற்றவர்களின் நன்மைக்காக அவரால் ஏற்றுக்கொள்ளப்படுதல் அல்லது அவராலோ அல்லது அவருக்காகவோ ஏற்றுக்கொள்ளுதல். நம்பிக்கை நபராக யார் பெற்றுக்கொள்ள படுகிறார்களோ அவர்கள் அறக்கட்டளையின் அமைப்பாளர் நம்பிக்கைக்கு யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தர்மகர்த்தா மற்றும் இதனை நம்பி யார் இதன் பயனை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் பயனாளிகள் எனப் படுகிறார்கள். அறக்கட்டளையின் கருத்துப்பொருள்கள் அறக்கட்டளை சொத்து மற்றும் அறக்கட்டளை பணம் என்றழைக்கப்படுகிறது. பயனாளிகளின் நணமைக்காகவும் அல்லது பயனாளிகளின் விருப்பத்திற்காகவும் தர்மகர்த்தா அறக்கட்டளையின் சொத்துக்களுக்கு உரிமையாளராவார் இந்த உள்ளிடங்களிலின் மூலம் இவை அறக்கட்டளையின் கருப்பொருள்கள் என்று அழைக்கப்படுகிறது. 
                     
                    மேலும் தர்மகர்த்தாவானலர் மற்றவர்களின் நன்மைக்காக சொத்துக்களின் பொறுப்புக்களை கொண்டிருக்கிறார். இது அறக்கட்டளை என அழைக்கப்படுகிறது. அறக்கட்டளைகள் இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் வருகிறது. இது மாநில அறசால் மாற்றியமைக்கப்படலாம் 
                    ஒரு அறக்கட்டளையானது எந்த ஒரு சட்டபூர்வமான நோக்கங்களுக்காகவும் உருவாக்கப்படலாம். ஒரு அறக்கட்டளையானது பத்திரங்களின் மூலமாகவோ அல்லது வாய் வார்த்தைகளின் மூலமாகவோ ஆரம்பிக்கப்படலாம். இருப்பினும் அறக்கட்டளையின் அசையா சொத்துக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக அறக்கட்டளையை தேர்ந்துளப்பவர் ஆவணத்தில் கையெப்பமிட வேண்டும் மற்றும் பதிவு செய்ய வேண்டும். அல்லது உயிலை எழுதுபவர் கையெப்பமிட வேண்டும். இதை பதிவு செய்யப்படுவதற்கு உயில் தேவையில்லை அசைய சொத்துக்களாக இருப்பினும் இது பொருந்தும். 
                     
                    தர்மகர்த்தாவின் கடமைகள் : 
                                      தர்மகர்த்தாவினால் அறக்கடடளையை கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் ஒரு முறை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் அதில் இருந்து நீதிமன்ற அனுமதி அல்லது பயனாளிகள் (பதினெட்டு வயது நிரம்பியவராக இருப்பின்) அல்லது அறக்கட்டளையில் கருப்பொருளில் உள்ள விசேஷ அதிகாரத்தை உபயோகப்படுத்துவது போன்ற முறையான அனுமதி இல்லாமல் விலக முடியாது. அறக்கட்டளைக்கு தர்மகர்த்தாவாக இருக்க பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் அவர் அந்த அறக்கட்டளையின் குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். மேலும் அறக்கட்டளையை ஆரம்பிக்கும் பொழுது கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 
                    பயனாளியின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற முடியாது. 
                     
                    தர்மகர்த்தாவின் கடமைகள் : 
                  
                    - 
                      
அறக்கட்டளை சொத்துக்கள் பற்றிய விபரங்களை அவரே தெரிவிக்க வேண்டும் 
                     
                    - 
                      
அறக்கட்டளையின் சொத்துக்களை பாதுகாத்தல் 
                     
                    - 
                      
பயனாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது 
                     
                    - 
                      
அறக்கட்டளையின் சொத்துக்களை கவனமுடன் தன்னுடைய சொத்துக்களை போன்று பாதுகாத்தல் விரைவில் மதிப்பு இழக்க கூடிய சொத்துக்களை நிரந்திர சொத்துக்களாக மாற்றுதல் மற்றும் விரைவில் லாபம் தரக்கூடிய வகையில் மாற்றியமைத்தல் 
                     
                    - 
                      
நடுநிலையாக செயல்படுதல் 
                     
                    - 
                      
விரயங்களை தடுத்தல் 
                     
                    - 
                      
கணக்கு பதிவு மற்றும் இதர தகவல்களை முறையாக பராமரித்தல் 
                     
                    - 
                      
மற்ற வழிகளில் அல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட முறையான வழிகளில் அறக்கட்டளையின் பணத்தை முதலீடு செய்தல் 
                     
                   
                  தர்மகர்த்தா அறக்கட்டளையின் விதிமுறைகளை மீறினால் அதற்கு அவர் பொறுப்பாவர். அறக்கட்டளையின் விதிமுறைகளுக்கு அத்துமீறும் பொழுது தர்மகர்த்தா தன் கடமையில் நேரிடும் பொழுது அறக்கட்டளையின் மீறுதல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலைகளில் சட்டம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 
                     
                    தர்மகர்த்தாவின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் : 
                  தர்மகர்த்தா கீழ்கண்ட அதிகாரங்களை கொண்டிருக்கிறார்,  
                  
                    - 
                      
பத்திரங்களை உருவாக்கும் உரிமை 
                     
                    - 
                      
செலவு செய்த பணத்தை பெரும் உரிமை 
                     
                    - 
                      
ஒப்பந்த முறிவு ஏற்படுத்துபவரிடமிருந்து நஷ்டஈடு பெறும் உரிமை 
                     
                    - 
                      
அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிக்கும் பொருட்டு வழக்கு தொடுக்கும் உரிமை 
                     
                    - 
                      
கணக்குகளை தீர்வு செய்யும் உரிமை 
                     
                    - 
                      
அனைத்து தேவையான நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் முறையாக பராமரித்தல் மூலம் அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாத்தல் அல்லது பயனாளிகளை பாதுகாத்தல் 
                     
                    - 
                      
சொத்துக்களை விற்கும் உரிமை இருந்தால் அந்த உரிமையை மாற்றிக்கொடுக்கும் உரிமை 
                     
                    - 
                      
சொத்துக்கள் மிதமான சிக்கல்கள் வரும்பொழுது அதை பராமரிக்கும் உரிமை 
                     
                    - 
                      
ரசீதுகள் வழங்கும் உரிமை 
                     
                    - 
                      
ஒருங்கிணைக்கும் அல்லது சமரசம் செய்யும் உரிமை 
                     
                   
                  பயனாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் : 
                  
                    - 
                      
வாடகை மற்றும் லாபம் பெறும் உரிமை 
                     
                    - 
                      
அறக்கட்டளையின் உருவாக்கியவரின் குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றம் உரிமை 
                     
                    - 
                      
அறக்கட்டளையின் கருத்துக்கள் மற்றும் கணக்குகளை பிரதி எடுக்கும் மற்றும் பரிசோதனை செய்யும் உரிமை 
                     
                    - 
                      
லாபம் பெரும் உரிமையை மற்றும் உரிமை 
                     
                    - 
                      
அறக்கட்டளையின் குறிப்பிட்ட விஸயங்களின் மீது வழக்கு தொடுக்கும் உரிமை 
                     
                    - 
                      
தர்மகர்த்தா ஆகும் உரிமை 
                     
                    - 
                      
தர்மகர்த்தாவை கடமையை சரியாக செய்ய வழியுறுத்தும் உரிமை 
                     
                    - 
                      
அறக்கட்டளையின் சொத்துக்களை முன்றாவது நபரிடம் இருக்கும்பொழுது கணிகாணிக்கும் உரிமை மற்றும் அதை மாற்றும் உரிமை 
                     
                   
                  அறக்கட்டளையின் ஒப்பந்த முறிவுக்கு பயனாளியும் பொறுப்பு : 
                  
                    - 
                      
அறக்கட்டளையை உருவாக்கியவரின் விருப்பத்தின் பெயரில் இது திரும்ப பெறப்படும். உயில் இல்லாமல் உருவாக்கப்படும் அறக்கட்டளைகள் கீழ்கண்ட காரணங்களால் திரும்ப பெறப்படும் 
                     
                    - 
                      
அனைத்து பயனாளிகளின் ஒப்புதலின் பெயரில் திரும்பபெறலாம். ஆனால் அனைவருக்கும் ஒப்பந்தத்தில் ஈடுபெற தகுதியிருக்க வேண்டும் 
                     
                    - 
                      
அறக்கட்டளை கருத்துக்களை வெளிப்படுத்தாத தன்மைகளை கொண்டிருப்பின் அல்லது வாய் வார்த்தைகளினாலோ அமைக்கப்பட்டிருக்குமானால் அந்த அறக்கட்டளையை உருவாக்கியவர் வேண்டும் என்றால் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தி அதனை கலைத்துவிட முடியும் 
                     
                    - 
                      
அறக்கட்டளையானது கடன்களை தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பொழுதும் அந்த அறக்கட்டளைதாரர் கடன் கொடுத்தவர்களிடம் தொடர்பு கொள்ளாத நேரங்களிலும் அறக்கட்டளையை உருவாக்கியவரின் விருப்பத்தின் பெயரில் திரும்ப பெற முடியும். 
                     
                   
                  ஆதாரம்: http://clafevs.com/genero6.HTM 
                  மூலதனம் : http://dateyvs.com/gener06.htm                                    
                  |