பாரம்பரிய வேளாண்மை :: பஞ்சாங்கம்
alman1
பஞ்சாங்கம் என்பது இந்துக்களின் சோதிட காலண்டர், இந்தியர்களின் பழங்கால வானியியலை அடிப்படையாகக் கொண்டு, முக்கிய சோதிடத் தகவல்களை அட்டவணை வடிவத்தில் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பஞ்சாங்கமானது, படித்த ஆசிரியர்கள், சமூகத்தினர், கல்வியாளர் மற்றும் பல்கலைக்கழகத்தினரால் வெளியிடப்படுகிறது. அவைகள் பல்வேறுபட்டவர்களால் வெளியிடப்பட்டாலும், ஒரு சில சிறிய வேறுபாடுகளே காணப்படும். அவைகள் அனைத்தும், சூரிய கிராணம், வானிலை தகவல் போன்றவற்றை முன்கூட்டியே வெளியிடுகிறது. நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையை வைத்து, அதனால் மனிதர்கள் மற்றும் செயல்பாடுகளில் எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை அறியவும். விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரையான செயல்களும் உதவவும் பஞ்சாங்கம் பயன்படுகிறது.பஞ்சாங்கத்தின் தோற்றமானது பாபிலோனியர்களின் சோதிடத்திலேயே ஆரம்பமாகியது எனலாம்.
alman2

விவசாயி பஞ்சாங்கம் என்பது, நெடுநாள் முன்னறிவிப்பான வானிலை அறிவிப்புடன் வீடு, தோட்டம், சோதிடம், இயற்கை நிகழ்வுகள் மற்றும் சமையல்களைக் குறித்த தகவல்களை வழங்குகிறது. விவசாயி பஞ்சாங்கம் என்றி நூலானது, அமெரிக்க விவசாயிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானது, இது விவசாயிகளுக்கு , ஒவ்வொரு நாள் நிகழ்வுகளான விவசாயம், காலநிலை, குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் ஆலோசனை வழங்குகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014