அரசு திட்டங்கள் & சேவைகள் :: இந்திய திட்டக்குழு

திட்டக்குழு இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டக்குழு நாட்டிலுள்ள வளங்களை வைத்து மக்களுடைய வாழ்க்கை தரத்தை துரிதமாக உயர்த்துவதற்கு தொடங்கப்பட்டது. இத்திட்டக்குழு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவையான வேலைவாய்ப்புகளை அனைவருக்கும் உருவாக்கியது. நாட்டு வளங்களை சிறந்த முறையில் உபயோகப்படுத்தக்கூடிய திட்டங்களை வகுக்க வேண்டிய பொறுப்பு இத்திட்டக்குழுவிற்கு உள்ளது. இத்திட்டக்குழுவின் முதல் தலைவர் ஜவஹர்லால் நேரு ஆவார்.

திட்டக்குழுவின் அமைப்பு:

இத்திட்டக்குழுவின் தலைவர் முதலமைச்சர் ஆவார். ஐந்தாண்டு திட்டம், ஆண்டு திட்டம், மாநில திட்டம், திட்டங்களை துணை தலைவர் மற்றும் வழிகாட்டுதலின் படி முறைபடுத்தப்படுகிறது.

திட்டக்குழுவின் பணிகள்:

கீழ்வருவன இந்திய திட்டக்குழுவின் பணிகள்:

  • நாட்டிலுள்ள வளங்களில் எவ்வளங்கள் பற்றாக்குறையான வளங்கள் என ஆராய்தல்
  • நாட்டின் வளங்களை மிகச் சிறந்த நற்பயன் அளிக்கக் கூடிய விகையில் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தல்
  • பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ள காரணிகளை சுட்டிக்காட்டுதல்
  • ஒவ்வொரு பருவத்திலும் திட்டமிடப்படும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட தேவையான காரணிகளை கண்டறிதல்
  • திட்டங்களின் வளர்ச்சி நிலையை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆராய்தல்

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதளம் மூலம் அறியலாம்.

http://planning commission.nic.in/


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013