நன்னெறி மேலாண்மை முறைகள் ::உரம் உபயோகம்

உரம் உபயோகித்தலில் நன்னெறி மேலாண்மை
தழைச்சத்து நிர்வாகம்
பயிருக்கு தழைச்சத்து இடுவதில் உழவர் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். தழைச்சத்திடும் நேரம், வீதம் மற்றும் முறைகள், தழைச்சத்தின் மூல ஆதாரம் ஆகியவை, ஒவ்வொரு மாநிலத்திலும், ஏன் இடத்துக்கிடம் மாறுபடும். சில சூழ்நிலைகளில், தட்பவெப்பநிலைகளில், தழைச்சத்துப் பயிர் கிரகிக்கும் முன்பே இழந்துவிடும். சிரமமான தழைச்சத்து நிர்வாகத்தை வெற்றிகரமான பயிர்ச் சாகுபடி முறைகளுக்கு சில வழிமுறைகள்.
தழைச்சத்து மேலாண்மை பயிருக்குத் தேவையான தழைச்சத்தை அளித்து நல்ல மகசூல் பெறவும், நீர் மற்றும் காற்றினால் சேதப்படுதலை குறைக்கவும் உதவுகிறது.

வழிமுறைக் கொள்கைகள்
பயிரின் வளர்ச்சியை  அதிகரித்து நீரின் தரம் குறையாமல் மகசூல் பெற தழைச்சத்து நிர்வாகம் மிகவும் முக்கியம். நன்னெறி வேளாண் முறை தழைச்சத்து நிர்வாகத்திற்கு கவனிக்க வேண்டியவை, கசிவு ஏற்படக்கூடிய அபாயகரத்தன்மை, முழு வரவு செலவுகள், குறுகிய கால மற்றும் நீண்ட கால பண்ணை மேலாண்மை திட்டம்.

பொதுவான நன்னெறி மேலாண்மை முறைகள்

GMP Fertilizer

  • அடியுர தழைச்சத்தின் விகிதம், மண் பரிசோதனை, பாசன நீர் மற்றும் பயிர்ப் பரிசோதனை முடிவுகளைப் பொருத்து இடவேண்டும்.
  • மண் பரிசோதனை ஒவ்வொரு நிலத்திலும் தனித் தனியாக செய்யவேண்டும்.
  • மண் பரிசோதனை செய்ய, மண் மாதிரி 2-3 அடி ஆழத்தில் அல்லது வேரின் மண்டல ஆழத்திலிருந்து எடுக்கவேண்டும்.
  • ஒவ்வொரு பயிருக்கும் நிச்சயமான பயிர் மகசூல் கணிப்புகள், மண்ணின் தரம், ஈரப்பதம், முந்தைய மகசூல் விவரம் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை நிர்ணயிக்கவேண்டும். நன்னெறி முறையினைக் கையாளும் போது மகசூல் 5 சதவிகிதம்  அதிகரிக்கும்.
  • பாசன முறை நன்னெறி மேலாண்மையில், நீரின் உபயோகத்தை அதிகரித்து, கசிவினால் ஏற்படும் இழப்பினை தவிர்க்கலாம்.
  • அதிக கசிவு ஏற்படும் நிலங்களைக் கண்டறிந்து எல்லாவித நன்னெறி முறைகளையும் பின்பற்றி தழைச்சத்தை (நைட்ரஜன்) நீரில் கலந்திடாமல் தடுக்கவேண்டும்.

வருடாந்திர நிலம் மற்றும் பயிர்களுக்கான நைட்ரஜன் மேலாண்மை திட்டத்தை உருவாக்கவேண்டும்.

  • முன்போகப் பயிர், இரகம் மற்றும் மகசூல்
  • நிகழ்காலப் பயிர், இரகம் மற்றும் எதிர்பார்க்கப்படும் மகசூல்
  • மண் பரிசோதனை விவரம் (தழைச்சத்தின் அளவு குறிப்பிடப்பட்ட)
  • மண்ணின் அங்ககச் சத்து, உரம் மற்றும் முன்போகத்திலிருந்த பயறு வகைப் பயறுகளின் நைட்ரஜனின் அளவு.
  • எதிர்பார்க்கப்படும் மகசூல் அளவை சந்திக்கத் தேவையான நைட்ரஜன் அளவு.
  • நைட்ரஜன் கசிவைத் தடுக்கக்கூடிய மேலாண்மை முறைகள், (உரமிடும் நேரம், அளவு, பக்க முறை, இலைவழி, மண்வழி, நீர்வழி, நிலைத்து நிற்கும் தன்மை, நைட்ரஜன் இழப்பினைத் தடுப்பான், பயிர் சாகுபடி முறையில் தேவைப்படும் மாற்றங்கள்).
  • இந்தப் பதிவேட்டை குறைந்தபட்சம் மூன்று ஆண்டும் பராமரித்து நிர்வகிக்க வேண்டும்.

நைட்ரஜன் தழைச்சத்திடுவதில் நன்னெறி மேலாண்மை முறைகள்

  • பயிருக்குத் தேவையான நேரத்தில் கிரகிக்கக்கூடிய வகையில் தழைச்சத்திடவேண்டும்.
  • பக்கவாட்டில் தழைச்சத்திடவேண்டும்.
  • அதிகக் கசிவு ஏற்படும் வயலில், முழு அளவு நைட்ரஜன் உரமிடுவதைத் தவிர்க்கவேண்டும்.

பயிர் நன்றாக கிரகிக்கும் இடங்களில் உரமிடுதல்

  • ஓரு வரிசை விட்டு மறு வரிசைப் பாசனம் செய்யும் இடங்களில் கீழ் நோக்கி கசிவு ஏற்படாமல் தடுக்க மேல் வரப்புகளில் நைட்ரஜன் இடலாம்.
  • தெளிப்பு நீர்ப் பாசனத்தின் மூலம், சிறிது சிறிதாக உரமிடுதல், உர அளவைக் குறைப்பதோடு, திறனையும் அதிகரிக்கலாம்.
  • நீர்ப்பாசன நிலங்களில், நைட்ரஜன் மேற்பரப்பில் இட்டால் இழப்பு அதிகமாகும் நிலங்களில் உரமிட்டவுடன் மண்ணில் உடனே சேர்த்து கலந்துவிடவேண்டும்.
  • நீர்வழி உரமிட்ட நைட்ரஜன் சத்தை உகந்த சாதனத்தின் மூலம் கணக்கிடவேண்டும்.
  • பாரம்பரிய முறையில் நீர் கசிவினாலும், நீர் வழிந்தோடலிலும் அதிக உர இழப்பு ஏற்படுவதால், இம்முறை பரிந்துரைக்கப்படுவதில்லை.

நைட்ரஜன் உரம் கையாளுவதிலும் சேமிப்பிலும் நன்னெறி மேலாண்மை முறைகள்

  • நைட்ரஜன் உரங்களை (100 அடி தள்ளி) கிணறு மற்றும் நீர் நிலைகள் உள்ள இடங்களிலிருந்து சேமித்து வைக்கவேண்டும்.
  • நிரந்தர உர சேமிப்புக் கிடங்குகளை, வடிகால் பகுதி, கசிவு ஏற்படும் இடம் மற்றும் புயல் காற்று ஆகியவற்றில் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
  • உரங்களை நிலத்தடியில் உள்ள பாத்திரங்களிலோ, குழிகளிலோ சேமிக்கக்கூடாது.
  • உரச் சேமிப்புப் பாத்திரங்களை காற்றுப்புகா வண்ணம் சேமித்து வைக்கவேண்டும்.
  • நீர்வழி உரமிடும் அமைப்பை நீர்க்கசிவினாலோ நீர் வடிகாலினால் பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டும்.
  • வருடம் ஒரு முறை உரமிடும் கருவியை பரிசோதித்து சரி செய்யவும்.
  • உரமிடும் கருவியை சுத்தம் செய்யும் போது எஞ்சியுள்ள உரங்களை அகற்றி, சுத்தம் செய்யவும்.
  • சுத்தம் செய்ய உபயோகித்த நீரை மீண்டும் விளைநிலங்களில் பயன்படுத்தலாம்

பூமி வெப்பமயமாதலின் சாத்தியக்கூறு மற்றும் நைட்ரஜன் உபயோகம்
தட்பவெப்ப மாற்றமும் உலக வெப்ப மயமாதலுமே தற்பொழுது நிலவும் அறிவியல்பூர்வ தற்கமும் பொதுவான கவலையும் ஆகும். வேளாண்மையே, பசுமைக் கூடார புகைக்கு முக்கியக் காரணமாகவும், உலக வெப்பமயமாதலுக்கும் வழிவகுக்கிறது, அதில் நைட்ரஜன் உபயோகம் பெரும் பங்கு வகிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வேளாண்மை மூலம் வெப்பமயமாதலுக்கு மூன்று முக்கியக் காரணிகளான கார்பன்டைஆக்சைடு (CO2) நைட்ரஸ் ஆக்சைடு (N2o) மற்றும் மீத்தேன் (CH4) ஆகியவை அதிக அளவில் வெளியேற்றமாகிறது. இவற்றுள் நைட்ரஸ் ஆக்சைடு (N2o) என்ற வாயு  உரத்திலிருந்து வெளியாகிறது. இந்த வாயு  வெப்பமயமாதலுக்கு பெரும் பங்கு வகிக்கிறது.
தீவிர பயிர்ச்சாகுபடி அமைப்பின் உலக வெப்பமயமாதலின் சாத்தியக்கூறுகள்
பசுமைக்கூடார வாய்வு வெளியிடுதலில் வேளாண்மை பங்கு வகித்தாலும், சில சமயங்களில், அவை கார்பன்டை ஆக்சைடு (CO2) வாய்வு சேமிப்புக்கும், அதை நிலைப்படுத்தி உலக வெப்பமயமாக்குதலை குறைக்கவும் வழி வகுக்கின்றது. போதிய உரமிடுதல், மண்ணின் அங்ககச் சத்தை அதிகரிப்பதோடு, அவை குறையாமல் தடுக்கிறது. தேவையான அளவு உரமிடாத போது பயிரின் வளர்ச்சி குன்றி, கார்பன் நிலைநிறுத்தும் தன்மையும் குறைகிறது, மட்டுமல்லாது மண்ணின் அங்ககச் சத்தும் குறைந்து, நீண்ட நாள் உற்பத்தித் திறனும் பாதிப்படைகிறது.
தேவையான அளவு நைட்ரஜன் இடுபொருள் பயிரின் உற்பத்திக்கும், மண்ணின் அங்கக சத்தை நிலைப்படுத்தவும், மிகவும் இன்றியமையாதது. சிறந்த பயிர் மகசூலுக்குத் தேவையான உர  ஆதாரம், வீதம், உரமிடும் காலம் மற்றும் இடம் ஆகியவை உலக வெப்பமயமாதலை குறைப்பதோடு, வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்படுவதும், குறைக்கப்படுகிறது.
பயிர்ச்சாகுபடியின் மூலம் வெளியாகும் வாய்வுகளை வெகுவாக குறைக்க, தாது சத்துக்களின் கிரகிப்புத் தன்மை அதிகரித்து உயர் விளைச்சல் பெறுவதே சிறந்த வழியாகும். உயர் விளைச்சல் தரும் பயிர்கள் மண்ணின் கார்பன் சேமிப்பை அதிகரிக்கும். 
நிகர உலக வெப்பமயமாதலின் காரணிகளைக்குறைக்க பயிர், மண் மற்றும் உர மேலாண்மை

  • இரகம் / வீரிய இரகம், நடவு தேதி மற்றும் பயிர் அடர்த்தி ஆகியவற்றில் அதிக விளைச்சல் தரக்கூடிய சிறந்தக் கலவையை தேர்ந்தெடுத்தல்.
  • சீரான நீர் மற்றும் நைட்ரஜன் மேலாண்மை, அதாவது நைட்ரஸ் ஆக்சைடு வெளியாவதை குறைக்கக்கூடிய வகையில் தேவையான பருவத்தில் நைட்ரஜனை பிரித்திடுத்தல்.
  • பயிர்க் கழவு மேலாண்மை மூலம் மண்ணின் அங்கக பொருளை அதிகரித்தல்.

உர மேலாண்மை

  • மண்ணின் அங்ககச் சத்து (SOM) அதிகரித்து பராமரிக்க, சரியான அளவு நைட்ரஜன் உரமிட்டுப் பயிர் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்.
  • மண்ணில் எஞ்சி நிற்கும் நைட்டிரேட்டை குறைத்து நைட்ரஸ் ஆக்சைடு வாய்வு வெளியாதலை தடுக்க நைட்ரஜன் உரத்தின் நன்னெறி மேலாண்மை முறைகள் பெரும் பங்கு வகிக்கிறது.
  • பயிர்க் கழிவுகளை மண்ணில் பராமரித்து அங்ககப் பொருளை அதிகரிக்க சரியான உழவு முறையை கடைப்பிடிக்கவேண்டும்.
  • வெவ்வேறான நைட்ரஜன் உரத்தின் ஆதாரப் பொருளிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு வெளியாதல், நிலத்தையும் தட்பவெப்பத்தையும் பொறுத்தது.
  • தீவிரப் பயிர் சாகுபடி, பசுமைக் கூடார வாய்வு அதிகரிப்புக்கு காரணமாகாமல், வணங்கள் அழிக்கப்படாமலும், தற்பொழுதுள்ள விளை நிலத்திலிருந்து அதிக உற்பத்தி செய்து உலக, உணவு, நார்ப்பொருள் மற்றும் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, வனப்பகுதியை அதிகரித்து உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்.

வேளாண்மை தொழில் செய்வோருக்காக குறுகிய கால கல்வி

  • நீடித்த பயிர்ச்சாகுபடி மேலாண்மை அமைப்பின் அடிப்படை கொள்கைகள்.
  • பயிர்ச்சத்துக்கள், காற்றிலும், நீரிலும் விரயமாகும் வழிகள்
  • பசுமைக்கூடார வாய்வு வெளியாதலை தடுக்க உதவும் நன்னெறி மேலாண்மை முறைகள்.
  • உழவியல் அறிஞர்கள் மற்றும் சுற்றுச்சூழலியல் அறிஞர்களிடையே நிலவும் சுமுகமான புரிந்துக் கொள்ளுதல் மற்றும் ஒத்துழைப்பும் பசுமைக்கூடார வாய்வு வெளியேற்றத்தை தவிர்க்கும் வகையில் உள்ளது.
  • பசுமைக்கூடார வாய்வு வெளியேற்றம் அதிகரிப்பு, பயிர் உற்பத்தியில் நன்னெறி உர மேலாண்மையின் தேவையை வலியுறுத்துகிறது.

பாஸ்பரஸ் உரமிடுதலில் நன்னெறி மேலாண்மை முறைகள்
உரமிடும் காலமும் இடமும், உர உபயோகத்திறன் மற்றும் பயிர் உற்பத்தியை நிர்ணயிக்கிறது. உரமிடுதலின் முக்கிய நோக்கம் என்னவெனில், உரங்கள் சரியாகப் பயிர் கிரகித்து நல்ல விளைச்சல் தருவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்காமல் தவிர்த்தலேயாகும். சிறந்தப் பயிர் சத்து மேலாண்மை என்பது அதிக அளவு உரமிடுதல் அல்லது பயிர் அல்லாத இடங்களில் உரமிட்டு சேதமடையாமல் தவிர்ப்பதாகும்.
பாஸ்பரஸ் உரத்தை பொருத்தவரை, அதிக அளவு அல்லது தவறான முறை கடைப்பிடித்தல், விளைநிலத்திலிருந்து வெளியேறும் நீரில் பாஸ்பரஸின் அடர்த்தி எதிர் மறையான விளைவை ஏற்படுத்தும்.

கட்டுப்பாட்டான பாஸ்பரஸ் உரமிடுதல்
உரம் வைத்தல் என்பது, வயல் முழுவதும் உரத்தை சீராக வீசுவதற்கு பதிலாக, பயிரின் வேர்ப்பகுதியில் வைப்பதாகும். உரமிடும் முறை பாஸ்பரஸ் கிரகிப்புத் திறன் மற்றும் நீர் வழி விரயம் ஆகியவற்றை நிர்ணயிக்கும். பாஸ்பரஸ் வீதமும், உரமிடும் முறையும், உபரி நீர் வழிந்தோடலில் சேரக்கூடிய பாஸ்பரசின் அளவில் நேரடித் தொடர்புடையது. நன்னெறி வேளாண்மை முறையின், பயிர் கிரகிப்பு நிலையில் உள்ள பாஸ்பரஸின் அளவை அறிதலும் மண்ணில்  சேரக்கூடிய பாஸ்பரஸ் அளவைக் குறைக்க உதவும். இதன் விளைவாக விளைநிலத்திலிருந்து கழிவு நீரை சென்றடையும் பாஸ்பரஸின் அளவு மற்ற முறையைக் காட்டிலும் மிகவும் குறைவாக காணப்படும்.

பாஸ்பரஸ் உரம் வைத்தலுக்கான காரணங்கள்

GMP Pho

  • பாஸ்பரஸ் உரம் செடியின் வேர்ப்பகுதியில் வைத்தல் முறை நல்ல விளைச்சல் ஏற்படுத்தியுள்ளது. பாஸ்பரஸ் சத்துக் குறைந்த நிலங்களில் வேர்ப்பகுதியில் வைக்கும் போது பயிர் எளிதில் கிரகித்து பயன்பாட்டு திறனும் அதிகரிக்கிறது.
  • குறைந்த உரப் பரிந்துரையில், பாஸ்பரஸ் கிரகிப்புத் திறன் பரவலாக வீசும் முறையை விட வேர்ப்பகுதியில் வைக்கும் முறையில் அதிகம், அதிலும் குறிப்பாக பாஸ்பரஸ் நிலைப்படுத்தும் தன்மை அதிகம் இருக்கும். அங்கக மண்ணில், வேர்ப்பகுதியில் வைத்தல் மிகவும் சிறந்தது.
  • வேர்ப்பகுதியில் வைக்கும் போது பாஸ்பரஸ் மண்ணில் நிலையாக ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு குறைகிறது.
  • இம்முறை உரமிடுதல் ஒன்றிற்கொன்று முரண்படாமல், உரமிட்ட இடத்தைத் தவிர்த்து உரமிடாது இடங்களில் வைக்க உதவும்.
  • வேர்ப்பகுதியில் உரம் வைத்தல் முறையின் முக்கியப் பயன், என்னவெனில், பாஸ்பரஸ் உரத்தின் அளவை வெகுவாகக் குறைக்கலாம்.

தவறான முறையில் பாஸ்பரஸ் உரமிடுதலைத் தவிர்த்தல்
அதிக பாஸ்பரஸ் தன்மையுள்ள மண் மற்றும் அதிக அளவு பாஸ்பரஸ் உரமிடப்பட்ட நிலங்களில் மண் பரிசோதனையில், பாஸ்பரஸின் அளவு அதிகமாக காணப்படும். இப்பரிசோதனை முடிவைக் கொண்டு நிலத்தில் பாஸ்பரஸ் உரம் பரிந்துரை செய்யும் போது, நீரில் பாஸ்பரஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அதிக உரமிடுதல் அல்லது தவறான முறையில் தேவையில்லாத இடங்களில் இடுவதைக் குறைத்து நீர் கழிவு நீரில் சேர்வதைத் தவிர்க்கலாம்.
சில நடைமுறையில் கடைப்பிடிக்கவேண்டிய யுத்திகள்

  • பாஸ்பரஸ் உரமிட வேண்டிய அட்டவணையை சரியாகப் பதிவு செய்து மண் பரிசோதனை முடிவிற்கேற்ப உழவியல் மற்றும் பொருளாதார ரீதியில் பரிந்துரை செய்யவேண்டும்.
  • சரியான அளவைக் கணக்கீடு செய்து, பயிர் சாகுபடி செய்ய ஆரம்பிக்குமுன் சரிபார்க்கவும்.
  • கால்வாய், சாக்கடை ஆகிய இடங்களின் அருகில் உரம் பரவலாக வீசுவதைத் தவிர்க்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013