விளை நிலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னொறி மேலாண்மை முறைகள் 
              
                - செயற்கை காற்றுத் தடுப்பான்
 
                - மூடுப்பயிர்
 
                - பாளங்களில் பயிரிடுதல்
 
                - தாவர தடுப்பான்
 
                - உரமிடுதல்
 
                - நிலப்போர்வை
 
                - நிரந்தர மூடாக்கு
 
                - பயிர்க்கழிவு மேலாண்மை
 
                - தொடர் சாகுபடி முறை
 
                - மேற்பரப்பு கடினமாக்குதல்
 
                - மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள்
 
                - மரம், செடி / காற்றுத் தடுப்பான அமைத்தல்
 
               
              1.செயற்க்கை காற்றுத் தடுப்பான் 
                 
                செயற்க்கை காற்றுத் தடுப்பான் என்பது காற்றின் வேகத்தைத் தடுக்கும் தடுப்பான். இத்தடுப்பான்கள் வேகமாக வீசும் காற்றின் வேகத்தைத் தனித்துப் பயிர் சேதமடையாமல் பாதுகாக்கும். 
                 
                நடைமுறைப்படுத்தப்படுத்த சில ஆலோசனைகள் 
              
                - 
                  
தொடர் மரப்பலகை வேலி, வைக்கோல் போர் மற்றும் இது போன்ற சாதனங்களால், காற்றின் வேகத்தைத் தடுக்க பயன்படுத்தலாம். 
                 
                - 
                  
தடுப்பான்கள் காற்றின் திசைக்கு எதிர்மறை திசை அல்லது குறுக்கு வாட்டமாக அமைக்கவேண்டும். தடுப்பான்கள் செங்குத்தாக அல்லது 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு அமைத்தால் பயிர் சேதமடையாமல் தடுக்கும். 
                 
                - 
                  
தடுப்பான்களில் உயரத்தில் பத்து மடங்கு தூரமுள்ள இடங்கள், பாதுகாப்பான பகுதியாகும். 
                 
               
              மேலே 
              2. மூடுப்பயிர்கள் 
                 
                மூடுப்பயிர்கள் என்பது பசுந்தாள் செடிகளை மண் அரிப்பை தடுப்பதற்கோ அல்லது மண்வள மேம்பாட்டிற்கோ பயிரிடுவதாகும். 
                 
                நடைமுறைக்கு சில ஆலோசனைகள் 
              
                - 
                  
மூடுபயிர்கள், 60 சதவிகிதத்திற்கு மேல் மண்ணை மூடத்தக்க அளவிற்கு அடர்த்தியான வளர்ச்சியுடைய தாவரங்களைத் தெரிவு செய்யவேண்டும். 
                 
                - 
                  
குறுகிய காலப் பயிர்களை இரண்டு முக்கிய பயிர்களுக்கிடையே பயிரிடலாம். 
                 
               
              அப்பயிர்கள் அடுத்தப்பயிர் செய்வதற்கு முன் நிலத்தில் மடக்கி உழவேண்டும். நீண்ட கால மூடுப்பயிரை 60 சதவிகிதம் மூடும் வரை விட்டுப் பிறகு, அதிக அடர்த்தியான பாகங்களை கழித்துவிடவேண்டும். 
              மேலே 
               3.பாளங்களில் பயிரிடுதல் 
                 
              குறுக்கு வட்டத்தில் அமைக்கப்பட்ட மண் மேடுகள் அல்லது பார்கள் உழவு செய்யும் போது அமைத்தல் மண் அரிப்பை தடுக்க, காற்றுத் தடுப்பான்களாக பயன்படுகிறது. 
              நடைமுறைக்கு சில ஆலோசனைகள் 
                 
                உழவு செய்யும் போது அமைக்கும் பார்கள் காற்றின் திசைக்கு எதிர்த்திசையில் / குறுக்காக அமைக்கவேண்டும். பார்கள் சேதமடைந்தாலோ, திறன் குறைந்தாலோ, சீரமைக்கவேண்டும், இல்லாவிடில் பயிர் சேதமடைய வாய்ப்புகள் அதிகம். களிமண், வண்டல் மண், மணல் கலந்த இருபொறை மண் ஆகிய மண் வகைகளில் தடுப்புப் பார்கள் அமைப்பது மிகச் சிறந்த பலனளிக்கும் மற்ற வகை மண்ணில் (மணல் சாரி மற்றும் அங்ககப் பொருள் அதிகமுள்ள மண்) தடுப்புப் பார் அமைத்தல் பலன் அளிக்காது. 
                 
                குறுக்கு வாட்டத்தில் பயிரினால் அமைக்கப்பட்ட காற்றுத் தடுப்பான் 
                 
                பயிர்களுக்கிடையே, பாலங்களில் பயிர் செய்வதே இதன் பொருளாகும். பயிரின் அடர்த்தி 25 அடி முதல் 330 அடி வரை இருக்கலாம். இவ்வகை காற்றுத் தடுப்பான்கள், காற்றின் வேகத்திற்கு குறுக்காக 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு அமைத்தல் நல்ல பலன் தரும். இவ்வகை தடுப்பான்கள், பயிரை பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும்.
                 
               
              மேலே 
              4.குறுக்கு - தாவர காற்றுத் தடுப்பான் 
               
              காற்றின் வேகத்தைக் குறைக்க தாவரத்தை ஒரு வரிசையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட வரிசைகளில் அமைப்பதாகும். இவ்வகைத் தடுப்பான் காற்றின் வேகத்தைக் குறைத்து, மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. 
               
              நடைமுறைக்கு சில ஆலோசனைகள் 
               
              தாவரங்கள், ஒரு ஆண்டு தாவரங்களோ அல்லது பல்லாண்டு தாவரங்களோ எதுவானாலும் தெரிவு செய்யலாம். ஒரு வரியுள்ள தடுப்பான்களில் காற்றோட்டம் அதிகமாக இருக்கும், ஆனால் பல வரிசைகள் உள்ளவற்றில் காற்றோட்டம் இராது. எனவே பல்வரிசையில் அமைக்கும் போது, 36 அங்குலம் இடைவெளிவிட்டு அமைத்தல் அவசியம். 
              ஓர் ஆண்டுத் தாவரங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வரிசைகளில் 2 அடி உயரம் வரை அமைக்கலாம். இவ்வகை தடுப்பான்களில் 40-50 சதவீத காற்றோட்டம் இருக்கும். வரிகளின் இடைவெளி தாவரத்தின் உயரத்தை விட 12 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.
மேலே 
              5. எருவிடுதல் 
               
              கால்நடைக் கழிவுகள் / இயற்கை திடப்பொருள்கள் ஆகியவற்றை உரமாக நிலத்திலிடுதல் மண்வளம் மேம்பாடு மற்றும் பராமரிப்பு செய்து மண்ணின் உயிரித்தன்மையை அதிகரிப்பதோடு, மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க எருவிடவேண்டும். 
               
              நடைமுறைக்கு சில ஆலோசனைகள் 
              எரு சேமிப்பு குழிகள் நீர் நிலைகளுக்கு அருகில் இல்லாமல், கசிவு ஏற்படாத வண்ணம் தடுக்கவேண்டும். இல்லையேல் நீர் வழிந்தோடல் மூலம், தேவையில்லாத பகுதிகளில், நீரிலோ அல்லது தாவரங்களையோ பாதிக்க நேரிடும்.
              
                - உள்ளூர் மற்றும் மாநில விதிமுறைகளுக்கு மீராத வண்ணம், எரு உபயோகிக்க வேண்டும்.
 
                - சிலவகை எருக்களிலிருந்து சத்துக்கள் துரிதமாக ஆவியாக வாய்ப்புள்ளது. அவ்வாறு நேரிட்டால், துர்நாற்றமும் அமோனியா வெளியேற்றமும் ஆகும்.
 
                - எருக்களை நிலத்தில் இட்டவுடன் விரைவில் அவற்றை மண்ணில் புதையுமாறு மடக்கி உழவேண்டும். இதன் மூலம் ஆவியாதலை தடுக்கலாம்.
 
               
              மேலே 
              6.நிலப்போர்வை 
                 
                நிலப்போர்வை என்பது, பயிரின் கழிவுகளை மண்ணில் மேல் போர்வையாக பரப்பி வைத்தல். நிலப்போர்வை மண் அரிப்பை தடுப்பதோடு, வேகமாக காற்று வீசும் போது மண்ணின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. 
                 
                நடைமுறைக்கு சில ஆலோசனைகள் 
              
                - கழிவுப் பொருட்கள் அங்ககத் தன்மையுடையதாய் இருக்கவேண்டும்.
 
                - தொழிற்சாலை கழிவுகளிலிருந்து வரும் பொருட்களையும் பயன்படுத்தலாம்.
 
                - வைக்கோல், மரத்தூள், உணவுப் பதனக் கழிவுகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
 
                - வைக்கோல் பயன்படுத்தும் போது குறைந்த பட்சம் ஏக்கருக்கு 450 கிலோவை சீராக பரப்பி சற்று மண்ணில் புதைக்குமாறு செய்யவேண்டும்.
 
                - மரத்தின் நாரை பயன்படுத்தும் போது 900 கி எடையுள்ள பொருட்களை ஒரு ஏக்கருக்கு உபயோகித்தால் 80 சதவிகிதம் மண் மூட ஏதுவாகும்.
 
               
              
                 
              
              மேலே 
              7.நிரந்தர மூடாக்கு 
                 
                நிரந்தர மூடாக்கு என்பது பல்லாண்டு தாவரங்களை நிரந்தரமாக நிலத்தில் மூடாக்காக உபயோகித்தல் நீண்ட நாள் தாவரங்களை நிலத்தில் பயிரிடுதல் மண் அரிப்பை தடுக்க உதவும்.                பல்லாண்டு இனங்களான புல் மற்றும் பயறு வகைத் தாவரங்களை 60 சதவிகிதம் நில மூடாக்கு ஏற்படும் வகையில் வளர்க்கலாம். பல்லாண்டு தாவரங்களை அதிகம் வளர்ந்து இருக்கும் போது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெட்டி / கிளைகளை தரித்துவிடவேண்டும். 
              மேலே 
              8.பயிர்க்கழிவு மேலாண்மை 
                 
                பயிர்க்கழிவு மேலாண்மை என்பது மண்ணில், பயிர் மற்றும் பயிர்க்கழிவுகளை தேவையான அளவு பராமரித்தல். நிலத்தில் பயிர் / பயிர்க்கழிவுகளை பராமரித்தல், ஒரு பயிரின் அறுவடைக்கும் அடுத்தப் பயிரின் வளர்ச்சிக்கு இடையேயுள்ள காலங்களில் மண் அரிப்பை தடுக்க உதவும். 
              
                 
              
               
              நடைமுறைக்கு சில ஆலோசனை 
              பல்வேறு விதமான முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.  
              அவையாவன:
              
                - 
                  
குறைந்த உழவு முறை நிலப்போர்வை உழவு போன்ற முறைகளில், பயிர்க் கழிவுகள் மண்ணில் சேர்த்து உழவேண்டும். 
                 
                - 
                  
உழவு தவிர்த்தல் முறையில் உழவு செய்யாமல் நேரடியாக நிலத்தில் விதைகளை ஊன்றுதல். எ.கா நெல் தாளில் உளுந்து விதைத்தல். 
                 
                - 
                  
மண் பாதுகாப்பிற்கு முடிந்த வரை பயிர்க் கழிவுகளை நிலத்திலேயே வைத்து வைத்தல் (எ.கா. பயிர் நடுவதற்கு முன்பு வரை, உழவு செய்தலை காலம் தாழ்த்தல்) 
                 
                - 
                  
6 அடி அங்குலமுள்ள நெற்தாள்கள் நிலத்திலேயே விட்டு விடுதல். 
                 
                - 
                  
அறுவடைக்குப் பின் கழிவுகளை நிலத்திலேயே சீராக பரப்பி வைக்கவேண்டும். 
                 
                - 
                  
உழவு எண்ணிக்கைகளை குறைக்க வேண்டும். 
                 
                - 
                  
முன் பருவப் பயிரின் கழிவுகளை 60 சதவிகிதம் மண் மூடாக்காக போடவேண்டும். 
                 
               
              மேலே 
              9.தொடர் சாகுபடி முறை 
                 
                தொடர் சாகுபடி முறை என்பது தொடர்ச்சியாக அடுத்தடுத்து பயிர் சாகுபடி செய்து, நிலம் வெறுமையாயிராமல் (பயிரிடாத காலத்தை) தவிர்த்தலாகும். இவ்வாறு தொடர் சாகுபடி முறையில் மண் அரிப்புக்கு ஏதுவாகாமல் தடுக்கலாம். இரண்டு பருத்திப் பயிர்களுக்கு இடையே ஒரு பணப்பயிர் சாகுபடி செய்தல் / அல்லது காய்கறிப் பயிர் சாகுபடி செய்தல், நில வெற்றிடங்களைத் தவிர்க்கலாம். 
              
                 
              
               
              நடைமுறைக்கு சில ஆலோசனை
              
              நில மேற்பரப்பை கடினப்படுத்துதல் 
                 
                நில மேற்பரப்பை கடினப்படுத்துதல் என்பது மண் கட்டிகள் உருவாகுதலை மண் கட்டிகள் காற்றினால் ஏற்படும் மண் அரிப்பைத் தவிர்க்கவும் உதவுகிறது. உழவுக் கருவிகளால் போதிய ஈரப்பதமுள்ள நிலங்களில் மண் கட்டிகள் உருவாக்கலாம். 
                 
                நடைமுறைக்கு சில ஆலோசனை 
              
                - 
                  
எல்லாவகை மண் நிலங்களும் மண் கட்டி உருவாக்க வாய்ப்பில்லை. அருகிலுள்ள மண் பரிசோதனை நிலையம் / மண் ஆய்வு நிலையங்களின் உதவியுடன் மண்ணை பரிசோதித்து பின் கடைப்பிடிக்கலாம். 
                 
                - 
                  
மண் கட்டிகள் உருவாக சரியான நேரத்தில் உழவு செய்து நடவு செய்வதற்கு இடையூறாக இல்லாத நேரத்தில் கடைப்பிடிக்கலாம் ஏனெனில், சாதாரண மண்ணை விட இம்மண் கடினப்படுவதால் மண் அதி சீக்கிரத்தில் உலர்ந்து இறுகிவிடும். 
                 
               
              மேலே 
              10.மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள்  
                 
                மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உழவுகளின் எண்ணிக்கை மற்றும் சாகுபடி முறைகளைக் குறைத்து, மண் கிளர்ச்சியை வெகுவாக குறைக்கிறது. 
              மேலே 
              11. மரம், புதர் செடி / காட்டுத் தடுப்பான் நடுதல் 
                 
                மரங்கள் மூலம் காற்றுத் தடுப்பான் அமைத்தல், தடுப்பான்கள், காற்றின் திசைக்கு செங்குத்தாக தடுப்பான்கள் அமைத்தல் காற்றின் வேகத்தைக் குறைத்து, நிலத்தின் மேல் வீசும் காற்றின் தன்மையை மாற்றுகிறது, இதனால் மண் அரிப்பும் குறைகிறது. 
                 
                சில ஆலோசனைகள்
               
              
                - 
                  
தடுப்பானின், 10 மடங்கு உயரத்தின் தூரம் பாதுகாப்பு பகுதியாகும். 
                 
                - 
                  
ஓர் வரிசை தடுப்பான்களே விளைநிலங்களுக்கு உகந்தது ஏனெனில் இவற்றிற்கு குறைந்த நீர் போதுமானது. 
                 
                - 
                  
எளிதில் கிடைக்கக்கூடிய இரகங்களையே பரிந்துரை செய்யவேண்டும். 
                 
                - 
                  
ஈரப்பதம் பாதுகாத்தல் மற்றும் நீர்ப்பாசனமும் தாவரங்கள் வேர் ஊன்றி வளரும் வரை அளிக்கலாம். வறட்சியைத் தாங்க கூடிய இரகங்களையும் உபயோகிக்கலாம். 
                 
               
              மேலே 
             
  |