நன்னெறி ஆய்வக முறைகள் ::ஆய்வுக்கூடத் துணுக்குகள்


 1. அங்கக ஆய்வுக்கூடத்தில் மட்டும் தண்ணீர் உபயோகிப்பது மிகவும் மோசமான செயல் நிறைய மாணவர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் செய்முறையை ஆரம்பிக்கும் பொழுது கண்ணாடிக் கருவியைக் கழுவி விடுகிறார்கள். இவ்வாறு செய்யும்பொழுது கண்ணாடிக் கருவி ஈராமாகி உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் இதனால் நேரம் வீணாகின்றது. ஆய்வு வகுப்பு முடியும் பொழுது கண்ணாடிக் கருவியை தண்ணீரில் கழுவி வைத்துவிட்டு செல்ல வேண்டுமு். அப்போதுதான் அடுத்த வகுப்பிற்கு வரும் முன் கண்ணாடிக் கருவி உலர்ந்துவிடும். ஒரு சமயம் தண்ணீரில் கழுவுவதை தவிர்க்க முடியாத சமயங்களில் அசிட்டோனை பயன்படுத்தலாம்.

 2. எப்பொழுதும் வினைபொருளுக்கும், குடுவையில் உள்ள உட்பொருள்களுக்கும் குறியிடுதல் வேண்டும். நிறைய அங்கக திரவங்கள் அதாவது அமிலங்கள் மற்றும் காரங்கள் சுத்தமாகவும், நிறம் இல்லாமலும் தண்ணீர் போன்று இருக்கும். அதனால் குடுவையிலும் விளை பொருளுக்கும் குறியிடுதல் வேண்டும்

 3. அங்கக திரவ விளைபொருளை கொள்ளளவு கொண்டு அளக்கலாம். பொதுவாக அங்க திரவங்களின் அளவை ஒன்று அல்லது  நிறைய மேற்கோள் சுவடியில் குறிப்பிட்டுள்ளார்கள்.(பொருண்மை கொள்ளவு = அடர்த்தி)

 4. திரவத்தைப் பற்றி பேசும்பொழுது - சில துணிகள் நைலான், செயற்கைப்பட்டு ஆகியவை அசிட்டோன் மற்றும் எத்தில் அசிடேட் கரைப்பானுடன் சேர்த்தால் அது கரைந்துவிடும். சல்ஃப்யூரிக் அமிலம் (இதே அமிலத்தை கார் பேட்ரிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது) வீரியங்குறைந்த பிறகும் காட்டன் துணிகளில் துளையை ஏற்படுத்தும். ஆதலால் ஆய்வுக்கூடத்தில் இருக்கும்பொழுது உங்கள் உடைகளுக்கு மேல் ஆய்வு உடுப்புகளை அணிந்து கொண்டு செய்முறையை துவங்க வேண்டும்.

 5. பொதுவாக அங்கக இரசாயணங்களை பற்றி இளநிலை ஆய்வுக் கூடங்களில் இதைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அறிந்து கொள்ள சில புத்தகங்கள் உள்ளன. அவை பின்வருமாறு

 1. வேதியியல் மற்றும் இயற்பியல் கைப்புத்தகங்கள்

 2. ஆல்டிரிச் இரசாயண நிறுவண அட்டவணை

 3. தி மெர்க் இண்டக்ஸ்

 1. குளிர்ந்த நீர் எப்பொழுதுமே குளிர்வியில் அடியில் புகுந்து குளிர்வியின் மேலே வெளியே வந்து விடும். நீரை ஊதவோ அல்லது முக்கவோ அவசியம் இல்லை. சூடாகும் முன் தண்ணீர் ஒடுகிறதா என்பதை மட்டும் தெளிவு படுத்திக் கொள்ளவும்

 2. காய்ச்சி வடிப்பதற்கு முன் மற்றும் சாதனங்கள் பின் வாங்கும் முன் கண்ணாடியின் மேலே வெப்பநிலையை கண்டறியவும்

 3. நிறைய அங்ககங்கள் தண்ணீரில் கலக்காமலும், கரையாமலும் இருக்கும். அதற்காக உபயோகமற்ற கொள்கலம் தேவைப்படுகின்றது. அங்ககத்தை கண்ணாடியினுள் ஊற்றக் கூடாது

 4. அங்ககப் பொருள் மற்றும் நீரைப் பிரித்தெடுக்கும் போது ஆய்வின் கருப்பொருள் எதில் உள்ளது என்று உறுதிபடத் தெரியும். வரை அதை வீணாக்கிவிடாமல் சேமித்து வைக்க வேண்டும்

 5. கொதிக்கும் குவளை உலர்வதற்கு முன் வடித்து விடுதல் வேண்டும்.

 6. போதுமான அளவு   மசகையை கண்ணாடி ஒட்டுகளில் போடவும். எதற்காக என்றால் உரைவைக் கட்டுப்படுத்த (அதிகமாக மசகையை போடக்கூடாது ஏன்னென்றால் ஒட்டுகளில் சொட்டு சொட்டாக வடிய ஆரம்பித்துவிடும்) மற்றும் டெஃளான் நெகிழ்வுக்குழாயை தவிர அனைத்து ஒட்டுகளிலும் போடவும். கண்ணாடி ஒட்டுகள் “திடமான காரம்” (பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியன) இவைகளுக்கு மசகையை ஒட்டுதல் மிகவும் அவசியம். செய்முறை முடித்த பிறகு சுத்தம் செய்யத் தவறினால் கண்ணாடியின் மேற்புறத்தில் என்றும் நிரந்தரமான முத்திரை படிந்துவிடும்.

 7. எப்பொழுதும் எதிர்விளைவை பாதியிலே விட்டுவிட்டு செல்லக்கூடாது. தற்பொழுது ஆய்வுக்கூடத்தை விட்டு சிறிது நிமிடம் வெளியே செல்ல வேண்டும் என்றால் (ஓய்வு அறை இடைவெளியில்) உங்களில் ஒருவரை அல்லது பயிற்றுனரிடம் எதிர்விளைவையைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு செல்ல வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013