முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் :: நன்னெறி வேளாண் முறைகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் நுகர்வு அமெரிக்க மக்களின் உணவுக் கட்டுப்பாட்டில் முக்கிய அங்கமாகும். அமெரிக்காவில் புதிய உற்பத்தி நுகர்வு அதிகரித்திருக்கும் நிலையில், புதிய உற்பத்தி பொருட்களில் உணவு தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மோசமான விவசாய நடைமுறைகளால் உணவு வழிப்பரவும் நோய்கள் உருவாகின்றன என்பதை சில வழக்கு ஆவண ஆதாரங்கள் மூலம் அறியமுடியும். புதிய உற்பத்தி தொடர்புடைய நோய்கள் ஊடக கவனத்தை ஈர்த்துள்ளன. இதன் விளைவாக, உணவு நிபுணர்கள் நுண்ணுயிரி மாசுபாட்டை குறைக்க வியூகம் வகுத்துள்ளனர். மேலும், உணவு பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் உற்பத்தியாளர்களை நுண்ணுயிரி மாசு குறைக்கும் அல்லது அழிக்கும் நல்ல உற்பத்தி முறைகளை பின்பற்றுமாறு வற்புறுத்துகின்றனர். இந்த நடைமுறைகள் நன்னெறி வேளாண் முறைகள் என்று அழைக்கப்படுகின்றன (GAP).

நன்னெறி வேளாண் முறைகள் என்ற கருத்து மற்றும் மாறி வரும் வேகமாக வளரும் பொருளாதார சூழல் மற்றும்  உலகமயமாக்கலில் சமீப ஆண்டுகளாக அறியப்படுகிறது மற்றும் உணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் மற்றும் விவசாய சுற்றுச் சூழலை பாதுகாப்பது பங்குதாரர்களின் கடமையாகும். இந்த பங்குதாரர்களில் அரசாங்கம், உணவு பதப்படுத்துபவர் மற்றும் சில்லறை விற்பனையாளர், உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு, உணவின் தரம், உற்பத்தி ஆற்றல் மற்றும் சுகாதார நன்மைகளை மத்திய மற்றும் நீண்ட காலத்தில் அனுபவிப்பவர்கள் அடங்குவர்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), நன்னெறி வேளாண் முறைகள் என்பது பண்ணை உற்பத்தி மற்றும் உற்பத்திக்கு பின் நடைமுறைகளை பாதுகாப்பான சுற்றுச்சுழல், சிக்கனமான மற்றும் சமூக நிலைப்புத் தன்மை என்று அறியப்படுகிறது. இதன் விளைவாக பாதுகாப்பான மற்றும் ஆரோக்கயமான உணவு கிடைக்கிறது.  வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பல விவசாயிகள் ஏற்கனவே ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வேளாண்மை ஆகியவற்றின் மூலம் நன்னெறி வேளாண் முறைகளை நடைமுறைபடுத்தியுள்ளனர்.

தற்போது, நன்னெறி வேளாண் முறைகள் என்பது, சர்வதேச ஒழுங்குறைக் கட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு பூச்சிக்கொல்லி பயன்பாடு தொடர்பான ஆபத்துகளை குறைத்து பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படுவதாகும்.
நன்னெறி வேளாண் முறைகளின் முக்கியத்துவத்தை அறிந்து பழங்கள் மற்றும் காய்கறி விவசாயிகள் பயிர் நடவிற்கு முன்பு முதல் பயிர் அறுவடைக்குப் பின்சார் நிலை வரை இந்த முறையை பின்பற்றி இடர் மற்றும் மாசுகளை குறைந்து இலாபம் பெறுகின்றனர்.
இடர்கள் மற்றும் அதை குறைப்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நடவிற்கு முன் நடவடிக்கைகள்

நிலத்தை தேர்ந்தெடுத்தல்

பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்திக்காக நிலத்தை தேர்ந்தெடுக்கும்போது நிலத்தின் வரலாறு, முந்தைய உரப் பயன்பாடு மற்றும் பயிர் சுழற்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். நிலத்திற்கு அருகில் கால்நடை பண்ணை, மேய்ச்சல் நிலம் மற்றும் பண்ணை முற்றம் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கால்நடைக் கழிவுகள் மழைநீர் அல்லது நீரோடை போன்றவற்றின் வாயிலாக விளை நிலத்தில் கலக்காமல் இருக்கிறதா என்பதை விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உரப் பயன்பாடு

கால்நடை எரு மதிப்புமிக்க உரமாகும். ஆனால் இவை சரியாக நிர்வகிக்கப்படாமல் இருந்தால் நோய் கிருமிகள் உருவாகும். சரியாக மற்றும் முழுமையாக மக்கிய உரம், நடவிற்கு முன் மண்ணில் இட வேண்டும் மற்றும் தாவரத்தின் மேல் இடக்கூடாது ஆகியவை சுகாதாரமின்மையைக் குறைக்கும் முக்கிய படிகளாகும்.

உர சேமிப்பு மற்றும் ஆதாரம்

விளை நிலம் மற்றும் உற்பத்தியை கையாளும் இடத்திலிருந்து தொலைவில் உரங்களை சேமிக்க வேண்டும். காற்று அல்லது நீர் மூலம் உரங்கள் வழிந்தோடாமல் இருக்க தடைகள் அமைக்க வேண்டும். உரங்கள் நன்கு நிர்வகிக்கப்பட்டால் மட்டுமே அவை ஊறுவிளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும்.

உரிய நேரத்தில் உரப் பயன்பாடு

உரங்களை அனைத்து காய்கறி பயிர்களுக்கும் பருவநிலையின் இறுதியில் அளிக்க வேண்டும். பொதுவாக, மண் இளவெப்பமாக இருக்கும்பொழுது அளிக்கலாம். பருவ துவக்கத்தில் உரம் அளிக்கப்பட்டால், பின்னர் நடவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு முக்கியமாக தானிய மற்றும் தீவன பயிர்களுக்கு அளிக்க வேண்டும்.

தகுந்த பயிர் தேர்வு

உரம் அளிக்கப்பட்ட நிலத்தில் கிழங்கு அல்லது கீரை வகைகளை விவசாயிகள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். உரங்கள் நீண்ட கால பயிர்களுக்கு நடவு ஆண்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உரப்பயன்பாடு மற்றும் அறுவடைக்கு இடையில் நீண்ட காலம் இருப்பின் அவை ஆபத்துகளை குறைக்கும்.

உற்பத்தி நடவடிக்கைகள்

பாசன நீர் தரம்

பாசனம் மற்றும் இரசாயன தெளிப்பிற்கு பயன்படுத்தப்படும் நீர் நோய்க்கிருமி இல்லாமல் இருக்க வேண்டும். எனினும், சுத்தமான நீர் அல்லது நகராட்சி நீர் பயிர் உற்பத்தி உபயோகங்களுக்கு சாத்தியமானது அல்ல. அதனால், பாசனத்திற்கு உபயோகிக்கும் நீரை காலாண்டுக்கு ஒரு முறை நோய்கிருமி உள்ளனவா என்பதை ஆய்வுக் கூட சோதனை செய்ய வேண்டும். விவசாயிகள் படிவுக் குட்டைகள் அமைத்து பாசன நீரின் தரத்தை மேம்படுத்தலாம். காய்கறி மற்றும் பழப் பயிர்களுக்கு சேற்றுக்குழம்பு உரங்களை பயன்படுத்தக் கூடாது. உரமிட வேண்டுமெனில், மக்கிய அல்லது பழமையான (ஓர் ஆண்டிற்கும் அதிகமான) உரங்களை பயன்படுத்த வேண்டும்.

நீர்ப்பாசன முறைகள்

பயிரின் உணவிற்காக பயன்படுத்தப்படும் பாகங்கள் சேதமடையாமல் இருக்க சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தலாம். இதனால் பயிரின் மற்ற பாகங்கள் நேரடியாக ஈரமாகமல் இருக்கும். பயிர் நோய் நிலைகள் குறையும் மற்றும் இந்த முறை மூலம் நீர் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கிறது.

நிலத்தின் சுகாதாரம்

விவசாயிகள் பயிர் மற்றும் மனித நோய்க் கிருமிகள் பரவுவதைத் தடுக்க நிலத்தை உலர்வாக வைத்திருக்க வேண்டும். உரங்கள் கையாளப் பயன்படுத்தப்படும் டிராக்டரை நிலத்தில் அனுமதிக்கும் முன் சுத்தப்படுத்த வேண்டும். விலங்குகள், கோழி உட்பட மற்றும் செல்லப் பிராணிகளை பயிர் பகுதிகளில் சுற்ற விடக் கூடாது முக்கியமாக அறுவடை சமயத்தில் விளை நிலத்தில் அனுமதிக்கக் கூடாது.

பணியாளர் வசதிகள் மற்றும் சுகாதாரம்

பண்ணை தொழிலாளர்களுக்கு விளை நிலங்களைச் சுற்றி சுத்தமான நன்கு பராமரிக்கப்படும் மற்றும் சுகாதாரமான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விவசாயிகள் பண்ணை ஆட்களுக்கு தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் உணவு சுகாதாரம் பற்றிய பயிற்சிகள் அளிக்க வேண்டும். இந்த வசதிகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

அறுவடை

சுத்தமான அறுவடை சாதனங்கள்

அனைத்து பயிர் கொள்கலன்களும் உயர் அழுத்தத்தில் நன்றாக கழுவி சுத்தமாக வைக்க வேண்டும். அனைத்து பயிர் கொள்கலன்களும் அறுவடைக்கு முன் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவற்றை பறவை மற்றும் விலங்குகள் அசுத்தம் செய்யாமல் இருக்க நன்றாக மூடி வைக்க வேண்டும்.

பணியாளர் சுகாதாரம் மற்றும் பயிற்சி

பயிர் அறுவடையின் போது பணியாளர்களின் தனிப்பட்ட சுகாதாரம் முக்கியமானதாகும். நோய்வாய்ப்பட்ட ஊழியர்கள் மற்றும் தூய்மையற்ற கைகளால் பயிர்களில் நோய்க்கிருமி பரவும். பணியாளர் விழிப்புணர்வு, பயிற்சி மற்றும் கை சுத்தம்செய்யும் வசதியுடன் சுகாதாரமான கழிவறை அகியவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

அறுவடைக்கு பின் கையாளுதல்

பணியாளர் சுகாதாரம்
அசுத்தமான கைகளால் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் நுண்கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம். பேக் செய்யும் பகுதிகள் சுகாதாரமாக இருக்க வேண்டும். நீர்ம சோப்பு, குடிநீர் மற்றும் ஒற்றைப் பயன் காகித துண்டுகள் ஆகியவற்றை விநியோகிக்க வேண்டும். பண்ணை ஆட்களுக்கு கழிவறை மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புண்ர்வை ஏற்படுத்த வேண்டும். பேக்கிங் செய்யும்பொழுது கையுறைகளை அணிய பழக்க வேண்டும். நோயுற்ற பணியாளர்களுக்கு மற்ற பணியாளர்களுக்கான உணவு தொடர்பான வேலைகளை அளிக்கக் கூடாது.

நீரின் தரத்தை கண்காணித்தல்

சுத்தமான தண்ணீரை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும். தொட்டியில் தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். புதிய உற்பத்திப் பொருட்களை சுத்தம் செய்ய குளோரின் தண்ணீர் அல்லது பிற பெயரிடப்பட்ட கிருமி நாசினிகளை பயன்படுத்தலாம்.

சுகாதாரமான பேக்கிங் நடவடிக்கைகள்

சுமையேற்றம் மற்றும் அனைத்து உணவு தொடர்பான நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களை ஒவ்வொரு நாள் முடிவிலும் சுத்தம் செய்ய வேண்டும்.  பேக்கிங் செய்ய உபயோகிக்கும் பெல்ட், எடுத்துச் செல்பவை மற்றும் உணவு சம்பந்தமான பரப்புகள் ஆகியவற்றை நுண்ணுயிரி தாக்கா வண்ணம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பேக் செய்யப்பட்ட பொருட்கள் சுத்தமான பகுதிகளில் சேகரிக்கப்பட வேண்டும்.

குளிரவைத்தல் மற்றும் குளிர் சேமிப்பு

அறுவடைக்குப் பின்னர், பழங்கள் மற்றும் காய்கறிகளை நோய் தாக்காமல் இருக்க மற்றும் நல்ல தரமுடன் பாதுகாக்க  விரைவில் குளிர வைக்க வேண்டும். 100F க்கும் அதிகமான குளிர் இருக்கக் கூடாது. குளிர்பதன அறையின் கொள்ளளவிற்கு மேல் அதிகமாக சேமிக்கக் கூடாது.

பண்ணையில் இருந்து சந்தைக்கு போக்குவரத்து

உற்பத்திப் பொருட்களை ஏற்றுவதற்கு முன் போக்குவரத்து வாகனம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யவும். விவசாயிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை டிரக்குகள் மூலம் கொண்டு செல்லாமல் கால்நடைகள் மூலம் கொண்டு செல்லலாம். டிரக்குகளை உபயோகிக்க வேண்டுமெனில் புதிய உற்பத்தி பொருட்களை ஏற்றும் முன் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கண்டறிதல் நெறிகள், ஒவ்வொரு பேக்கும் பண்ணையிலிருந்து கொண்டு செல்லப்படும்பொழுது விளைந்த இடம் மற்றும் பேக் செய்யப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள வேளாண் நன்னெறி முறைகள் இந்தியாவில் தற்பொழுது தொடக்க அளவிலேயே உள்ளன. ஒரு சில விவசாயிகள் மட்டுமே சர்வதேச நுகர்வோரின் கட்டாயத்தின் பேரில் இம்முறையை கடைபிடிக்கின்றனர்.  ஆனால் உணவு பாதுகாப்பு என்பது உணவு பொருள் பண்ணையிலிருந்து நுகர்வோர் கையில் சேரும்வரை அனைவரது பொறுப்பாகும். அதாவது, விவசாயிகள், உணவை கையாளுபவர்கள் அதாவது, பதப்படுத்துபவர்கள், சில்லறை வியாபாரிகள், உணவு தொடர்பான தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் ஆகிய ஒவ்வொருவரும் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.


மேலே செல்க

Updated on : Aug 2014

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு