வறட்சியிலும் புரட்சி செய்த அண்ணா 4 நெல்

பெயர் : ச.ராம் மகேஷ்  
முகவரி : த/பெ. சம்பந்தமூர்த்தி,
வல்லம் தச்சங்காடு,
பி.முட்லூர்
சிதம்பரம் அலைபேசி எண் : 9884401114
குறு /சிறு/ பெரு விவசாயிகள் : பெரு விவசாயி  

வெற்றிக்கான காரணங்கள் மற்றும் அவைகளின் பங்கு

பயிர் இரகம்
நெல் – அண்ணா 4
மேலாண்மை உத்திகள்

  • 2012 ம் ஆண்டு திரு.ச.ராம் மகேஷ் அவர்கள் பரங்கிப்பேட்டை வட்டம் தச்சங்காடு என்ற கிராமத்தில் அண்ணா -4 என்ற நெல் இரகத்தினை 2 எக்டர் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்தார்.
  • வறட்சியை தாங்குவதற்காக நிலைய வல்லுநர் குழுவின் பரிந்துரையின் பேரில் பிபிஎப்எம் என்ற கரைசலை இலைவழியாக தெளிக்கப்பட்டது.>

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் பங்கு

  • அண்ணா 4 என்ற நெல் ரகம் வறட்சியை தாங்கி அதிக விளைச்சல் தரும் ரகமாகும்.
  • 2012 சம்பா பருவத்தில் கடும் வறட்சி நிலவியதால் எமது பரிந்துரையின் பேரில் பி.பி.எப்.எம் 1 சதக் கரைசலை இலைவழி தெளிப்பு செய்தார். இது பயிரின் வறட்சி தாங்கும் தன்மையை அதிகரிக்கக் கூடிய தொழில்நுட்பமாகும்.
  • 2012ம் ஆண்டு சம்பா பருவத்தில் அண்ணா 4 என்ற நெல் இரகத்தினையும், பி.பி.எப்.எம் என்ற கரைசலை இலைவழியாக வறட்சி காலங்களில் தெளித்தல் மூலமாக, இவர் ஒரு எக்டருக்கு 5880 கிலோ மகசூலை எடுத்து, நிகர லாபமாக ரூ.11485 ஈட்டினார்.

செயல் விளக்கத்திடல்களின் பங்கு

  • இந்த தொழில்நுட்பங்கள் இவரது வயலில் பண்ணை வழி ஆய்வுத்திடல் மூலம் 2012 இறுதியில் நடத்தப்பட்டது.
இத்திடலில் கிடைத்த அபிரிதமான விளைச்சலில் 2000 கிலோவினை உண்மை நிலை விதையாக எமது நிலையத்தில் பெற்று மாவட்ட மற்ற விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.

விளைச்சல் /ஏக்கர்/உற்பத்தி

அண்ணா 4 நெல் இரகம் 2149 கிலோ /ஏக்கர் மகசூலை கொடுத்தது.

வேலை வாய்ப்புகள்

இந்த இரகத்தின் விதையை உற்பததி செய்வதன் மூலம் விதை உற்பத்தியாளர்கள் உருவெடுக்க முடியும்

தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மாத வருமானம்

ரூ.11,485/எக்டர்

பண்ணை விரிவாக்கம் பற்றிய எதிர்கால திட்டம்

அண்ணா 4 இரகத்தினை இவர் மேலும் 10 எக்டருக்கு இந்த ஆண்டு பயிர் செய்துள்ளார். (2013)

பிறருக்கு எடுத்துக் கூறும் உண்மை

  • கொத்தட்டை, தச்சங்காடு, பரங்கிப்பேட்டை வட்டத்தில் மற்றும் கடைமடை நெல் சாகுபடி செய்யப்படும் இடங்களில் அண்ணா 4 நெல் மிகவும் எற்ற இரகமாகும்.
  • இது தவிர நிலைய வல்லுநர்களின் பரிந்துரைகளை செவ்வனே கடைபிடிப்பதன் மூலம் சாதாரண  விவசாயி கூட மகசூலில் பெரும் புரட்சிகளைச் செய்ய முடியும்.

தொழில்நுட்பம் சார்ந்த படங்கள்

அண்ணா 4 நெல் வயல்வெளி திடல் ஆய்வு

திரு.ராம் மகேஷ் அவர்கள் மாநிலத்தின் சிறந்த விவசாயி விருதினை பெறுகி
Updated on Feb , 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015