முதல் பக்கம் தொடர்புக்கு  

தானியம் நிறமாற்றம் ஏற்படுதல்

தாக்குதலின் அறிகுறிகள்:  
  • பல்வேறு பூஞ்சாணங்களால் பயிர் அறுவடைக்கு முன்னர் அல்லது அறுவடைக்குப்பின், தானியங்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டு நிறமாற்றம் அடைகிறது. மேலும் பருவம் மற்றும் இடத்தைப் பொருத்து அதன் வளர்ச்சி அதிகமாகும்.
  • தானியத்தின் உட்புற அல்லது வெளிப்புற தாக்குதலாகவும் இருக்கலாம். இதனால் உமிச்செதில் அல்லது நெல்மணிகள் அல்லது இரண்டும் நிறமாற்றம் அடைகிறது. கரும்பழுப்பு அல்லது கரும்புள்ளிகள் தானியங்களின் மேல் காணப்படும்.
  • நோய் பரப்பும் உயிரி மற்றும் நோய் தாக்கத்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சிவப்பு, மஞ்சள், ஆரங்சு, இளஞ்சிவப்பு, அல்லது கருப்பு நிறங்களாக நிறமாற்றம் ஏற்படுகின்றன.
  • இந்நோயினால் நெல்மணிகளின் அளவு மற்றும் தரம் குறைகின்றது.

நோய் பரவும் முறை மற்றும் நிலைத்திருக்கும் தன்மை:

  • காற்றுவழி, பூசண இழைகள் மூலம் பரவுகின்றது. நோய் தாக்கப்பட்ட தானியங்களில், பூசணமானது ஒட்டுண்ணி அல்லது சாறுண்ணிகளாக நிலைக்கின்றன. மேலும் நெற்பயிர்துார்கள் மற்றும் மற்ற பயிர்த்துார்களிலும் இவை வாழ்கின்றன.
Discolouration of grains 2- black spots appear on grains with  prominent fungal discolouration
நிறமாற்றமாகிய தானிய மணிகள் தானியங்களின் மீது கரும் பூசண புள்ளிகள் தோன்றும்
3- black spots appear on grains 4-fungal growth on grains
தானிய மணிகளின் மீது கருப்பு நிற புள்ளிகள் இருக்கும் தானிய மணிகளின் மீது பூஞ்சாண வளர்ச்சி காணப்படும்

மேலே செல்க

  நோய்க்காரணி:
Curvularia lunata spores filamentous fungus(fusarium monoliforme) பலவகை பூஞ்சாண்கள்
  • டிரெச்ஸ்லிரோ ஒரைசே, டிரெச்ஸிலிரா ரோஸ்ட்ரேட்டம், டிரெச்ஸிரா டெட்ராமீரா, கர்வுலேரியா லுனேடா, டிரைகோகோனஸ் படவிக்கீ, சேரோகிலேடியம் ஒரைசே, ஆல்டர்னேரியா டென்னுாயிஸ், ஃபுசேரியம் மொனிலிஃபார்ம், கிலேடோஸ்போரியம் ஹெர்பேரியம், எபிகாக்கம் கர்பூராசென்ஸ், செபலோஸ்போரியம், சிற்றினம், போமா சிற்றினம், நைக்ரோஸ்போரா சிற்றினம்.
சாதகமான நிலைகள்:
  • பூட்டைப் பருவத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் முகில் மூடிய வானிலை
கர்வேலேரியாவின் பூசண வுித்துகள் இழைவடிவ பூசண வித்துக்கள்

மேலே செல்க

கட்டுப்பாடு முறைகள்:  
தடுப்பு முறை:
  • நோயற்ற விதைகளைப் பயன்படுத்துதல்.
  • ஒரு கிலோ விதைக்கு 2.0 கிராம் கார்பென்டசிம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்தல் வேண்டும்.
  • பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்.
  • நோய் தாக்கப்பட்ட பயிர்த் துார்களை அகற்றி அழித்துவிட வேண்டும்.
Use Dieases Free Seeds Seed treatment with Carbendazim
நோயற்ற விதைகளை பயன்படுத்தவும் கார்பெண்டசிமுடன் விதை நேர்த்தி

இராசயன முறை:
  • கேப்டன், கேப்டஃபால், ஃபென்டின் ஹைடுராக்சைடு, மற்றும் மேன்கோசெப் அளிக்கவேண்டும்.
  • துார்விடும் பருவம் மற்றும் பூத்தல் முன் பருவங்களில் கார்பெடன்சிம் மற்றும் தாமிரம் சார்ந்த பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவேண்டும்.
  • அறுவடைக்கு முன் மற்றும் அறுவடைக்குப் பின்னர் பின்பற்றப்படும் செயல்முறைகளை மேற்கொள்ளுவதால், தானியம் நிறமாற்றம் அடைவதைத் தடுக்க முடிகிறது.
  • நெற்பயிரின் கதிர் இலைப்பருவத்தில் மேன்கோசெப் 1 கிலோ (அல்லது) இப்ரோபென்பாஸ் 500 மிலி (அல்லது) கார்பென்டசீம் 250 கிராம்/எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • தானியங்களை 13.5-14% ஈரத்தன்மையில் சேமிப்புக் கூடத்தில் பாதுகாக்க வேண்டும்.
captan spray Mancozeb at boot leaf stage
கேப்டான் கண்ணாடி இலைபருவத்தில் மேங்கோசெப் தெளிக்கவும்
  மேலே செல்க