முதல் பக்கம் தொடர்புக்கு  

பாக்டீரியா இலைக்கருகல் நோய்
(சேந்தோமோனாஸ் ஒரைசே)

அறிகுறிகள்:  
நாற்று வாடல் அல்லது கிரசெக்
  • நடவு செய்து 1-3 வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும்.
  • வெட்டுப்பட்ட பகுதி வழியே பச்சை நிற நீர் படலம் காணப்படும்  அல்லது இலைகளின் இலை நுனியிலும் இது போன்ற படலம் ஏற்படும்.
  • இலைகள் கருகி மேல் நோக்கி சுருண்டு, பின் சாம்பல் நிற பச்சையிலிருந்து மஞ்சள் நிறமாக மாறும்.
  • முழு பயிரும் முழுவதுமாக அழுகிவிடும்.
இலைக்கருகல் (அழுகல்) நோய்:
  • இலைப்பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும் அல்லது இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும்.
  • இலைகளில் வளைந்து நெளிந்த அலை போன்ற மஞ்சள் கலந்த வெண்மை அல்லது தங்கநிற மஞ்சள் நிறத்தில் காய்ந்த ஓரத்துடன் காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும் பின் சுருண்டும், இலை நடுநரம்பு பழுதடையாமலும் காணப்படும்.
  • அதிகாலை நேரங்களில் இளம்புள்ளிகளின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல் காணப்படும்.
  • தீவிர தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவில் காய்ந்துவிடும்.
  • 60% வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும்.
உறுதிப்பாடு:
  • தண்டு துளைப்பான் சேதத்திலிருந்து நாற்று வாடல் நோயை வேறுபடுத்துவதற்கு, தாக்கப்பட்ட நாற்றின் அடிப்பகுதியை விரல்களுக்கிடையே வைத்து நசுக்க வேண்டும்.
  • நசுக்கிப் பிழியும்போது, வெட்டப்பட்ட பகுதியிலிருந்து மஞ்சள் நிற நுண்ணுயிர் திரவம் வடிவதலைக் காணமுடியும்.
  • வெட்டப்பட்ட பகுதியை ஒளிக்கு எதிராக வைத்து நோக்கினால் வெட்டப்பட்ட பகுதியிலிருந்து நுண்ணுயிர் திரவம் நீருக்குள் வடிதலைக் காண முடியும்.
  • 1-2 மணி நேரத்திற்குப் பின், இந்த நீர் கலங்கலாக மாறிவிடும்.
நாற்று வாடல் - கிரிசெக் இலைகள் நெளிந்து, விளிம்புகளில் மஞ்சள் நிறத்தில் காய்ந்து காணப்படும்
இலை நரம்புகளை தவிர இலைகள் சுருண்டு, காய்ந்து காணப்படும் இலைகள் நெளிந்து, மஞ்சள் நிற விளிம்புடன் காய்ந்து காணப்படும்
   

மேலே செல்க

  நோய்க்காரணி - சேந்தோமோனஸ் ஒரைசே
  • உருளையாக, 1.2 x 0.3 - 0.5 மீட்டர் அளவு கொண்டது. இவை தனித்தும், சில சமயம் இணைந்தும் காணப்படும். ஆனால் தொடர்ந்து இருக்காது.
  • இந்நோய்க்காரணிகள் கிராம் எதிர் விளைவுடையவை. பூசணவித்துக்கள் உருவாக்கம் இன்றியும் கனி அறை இன்றியும் காணப்படும்.
  • ஊட்டச்சத்து கடற்பாசியில் இருக்கும் கூட்டுயிரிகள் வெளுத்த மஞ்சுள் நிறுத்துடனும் வட்ட வடிவத்திலும், மென்மையான ஓரத்துடனும், காணப்படும்.
  • இவை குவிந்த உருவம் மற்றும் ஒட்டும் இயல்புடையது.

நோய் வளர்ச்சிக்கு சாதகமான காரணிகள்:

  • களைகளின் இருப்பு.
  • நெற்பயிர் துார்கள் மற்றும் தாக்கப்பட்ட கட்டைப் பயிர்கள்.
  • நெற்பயிரிலும் மற்றும் பாசன வாய்க்காலிலும் நுண்ணுயிர் தாக்கம்.
  • சூடான வெப்பநிலை (25-30 செ), அதிக ஈரப்பதம், மற்றும் மழை.
  • அதிக காற்று வீசினால் காயங்களை ஏற்படுத்தும் மற்றும் மிகுந்த உரமளித்தல் பாசன நீர் மற்றும் சிதறல் அல்லது காற்றுடன் கலந்த மழை ஆகியவை ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு நுண்ணுயிரிகளை பரப்புகிறது.
  • நடவு செய்வதற்கான சீராக்கும் கருவி மற்றும் அதனை நடவின் போது கையாலும் விதம் ஆகியவை கூட புதிய தாக்குதல் ஏற்பட காரணமாய் உள்ளன.
பாக்டீரியா நுண்ணோக்கியில் சேந்தோமோனஸ் ஒரைசே
சேந்தோமோனஸ் ஒரைசே

மேலே செல்க

கட்டுப்பாடு:  
தடுப்பு முறை:
  • பிளீச்சிங் பவுடர் (100 கிராம்/லிட்டர், துத்தநாக சல்பேட் (2%) உடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  • அக்ரிமைசின் (0.025%), நனையும் செரிசன் (0.05%) உடன் விதை நேர்த்தி செய்து பின் அதனைத் தொடர்ந்து வெந்நீரில் (52-54° செ) 30 நிமிடங்கள் விதைகளை ஊற வைத்து வெந்நீர் நேர்த்தி செய்யவேண்டும்.
  • செரசன்(0.1%) என்ற அளவில் 8 மணி நேரம் விதைகளை ஊற வைத்து பின், ஸ்ட்ரெப்டோசைக்லின் (3 கிராம்/லிட்டர் நீர்) உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • 3% வேப்பெண்ணெய் அல்லது 5% வேப்பங்கொட்டையிலிருந்து எடுத்த சாற்றை தெளிக்க வேண்டும்.
  • பசுமையான மாட்டுச் சாண சாறை நுண்ணுயிரி அழுகல் நோயைக் கட்டுபடுத்துவதற்காக தெளித்தல்.
  • 20 கிராம் மாட்டு சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, அதனை படியவிட்டு பின் வடிகட்ட வேண்டும்.
  • நன்கு வடிகட்டிய திரவத்தைப் பயன்படுத்த வேண்டும். (நோய் முதல் அறிகுறி தோன்றியவுடனும், இரண்டு வார கால இடைவெளி விட்டு தெளிக்கவேண்டும்).
அக்ரிமைசின் கரைசலில் 8 மணி நேரத்திற்கு விதைகளை ஊற வைக்கவும் சாணிக்கரைசலை தெளிக்கவும்
வேப்பெண்ணெய் தெளிக்கவும் பளீச்சிங் தூளுடன் விதைகளை நேர்த்தி செய்யவும்


உழவியல் முறை:
  • நோய் தாங்கும் திறனுள்ள இரகங்களை பயிரிடுதல் (ஐஆர் 20, ஐஆர் 72, பொன்மணி, டிகேஎம் 6)
  • நோயற்ற விதைகளைப் பயன்படுத்தல்.
  • தனிமையான மேட்டுப்பாங்கான சூழ்நிலையில் நாற்றங்கால்களை அமைத்தல்.
  • பயிர் நடவு செய்யும்போது நாற்றுக்கள் கத்திரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சரி விகித உரமளித்தல், மிகுதியான தழைச்சத்து அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • கதிர்ப் பருவத்தில் தழைச்சத்து உரம் அளிப்பதை தள்ளிப் போட வேண்டும். வயலில் நீரை வடிகட்ட வேண்டும். (பயிரின் பூத்தல் பருவத்தை தவிர)
  • களைகளை மற்றும் மாற்று பயிர்களை அழித்தல்.
  • நோய்த் தாக்கப்பட்ட வயலிலிருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • முறையான பயிர் இடைவெளியை பாதுகாக்க வேண்டும்.
வயலுக்கு வயல் பாசனம் செய்வதை தவிர்க்கவும் பயிர்களுக்கிடையில் சரியான இடைவெளி விடவும்

இராசயன முறை /உயிர் எதிர்ப்புப் பொருள்:
  • அக்ரிமைசின் (0.25%), செரிசன் (0.05%) உடன் 8 மணி நேரம் விதைகளை நன்கு ஊற வைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து வெந்நீருடன் (52-54 செ) விதைகளை 30 நிமிடங்களுக்கு ஊற வைத்தல் வேண்டும்.
  • செரிசன் (0.1%) என்ற அளவில் விதைகளை 8 மணிநேரம் நன்கு ஊற வைத்து பின் அதனை தொடர்ந்து ஸ்ட்ரெப்டோசைக்லின் (3 கிராம்/1 லிட்டர் நீர்) உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் + டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் + காப்பர் ஆக்சிக்லோரைடு 1.25 கிலோ எக்டர் ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும். பின் தேவை ஏற்பட்டால், 15 நாட்களுக்குப் பின் ஒருமுறை இக்கலவையைத் தெளிக்கலாம்.
  • பிளீச்சிங் பவுடர் @ 5 கிலோ/எக்டர் என்ற அளவில் பாசன நீருடன் கலந்து அளிக்கலாம்.
  • தாமிர பூசணக் கொல்லிகளை(அ) ஸ்ட்ரெப்டோசைக்லின் (250 பிபிஎம்) உடன் இலைவழி மூலம் அளித்து இரண்டாம் நிலை நோய் பரவலை தடுக்கலாம்.
seed treatment with zinc sulphate
தாமிர பூசணக்கொல்லிகளை இலை வழி உரமாக இடவும் துத்தநாக சல்பேட் உடன் விதை நேர்த்தி செய்யவும்
 
மேலே செல்க