முதல் பக்கம் தொடர்புக்கு

கேள்வி பதில்

கறவைமாட்டினங்கள்
 
தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு உகந்த அதிக பால் தரும் கறவைபசுக்கள் எவை?

பொதுவாக ஜெர்சி மற்றும் ஜெர்சி கலப்பினங்கள் தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு உகந்த கறவை பசுக்களாகும். மேலும், ஹால்ஸ்டைன் - ப்ரிஸியன் மற்றும் ப்ரிஸியன் வகை கலப்பினங்கள் மலை பகுதிகள் மற்றும் அதிக மழை பகுதிகளுக்கு ஏற்ற இனங்களாகும்.

உழவு மற்றும் வேலை திறனுக்கு ஏற்ற மாட்டினங்கள் எவை?

அலிகார், காங்கேயம், அமிர்த்மகால் போன்ற மாட்டினங்கள் உழவு மற்றும் வேலை திறனுக்கு ஏற்ற இனங்களாகும்.

நம் நாட்டு கறவை மாட்டினங்களின் பாலில் உள்ள கொழுப்புசத்து எவ்வளவு?

4-5%

இந்திய எருமை பசுக்களின் பாலில் உள்ள கொழுப்பின் அளவு எவ்வளவு?

5-6%

பால் உற்பத்தி மற்றும் வேலைதிறனுக்கு ஏற்ற இந்திய மாட்டினங்கள் எவை?

தார்பார்க்கர், காங்ரேஜ், ஒங்கோல் மற்றும் கிருஷ்ணாபள்ளத்தாக்கு போன்ற இனங்கள்.


top
கொட்டகை அமைப்பு மேலாண்மை  
ஒரு வரிசை கொட்டகை அமைப்பில் எத்தனை மாடுகள் வைத்து பராமரிக்கலாம்?

12 முதல் 16 மாடுகளை வைத்து பராமரிக்காலம்

இருவரிசை கொட்டகை அமைப்பில் எத்தனை மாடுகள் வைத்து பராமரிக்கலாம்?

50 மாடுகள் வரை வைத்து பராமரிக்கலாம்

கறவை மாடுகளுக்கான கொட்டகையில் ஒரு மாட்டிற்கு தேவைப்படும் தரையளவு எவ்வளவு?

ஒரு மாட்டிற்க்கு சுமார் 3.5 மீ2 இடம் தேவைப்படும்.

திறந்த வெளி கொட்டகை அமைப்புகளில் ஒரு கறவைமாட்டிற்க்கு தேவைப்படும் தரையளவு எவ்வளவு?

ஒரு மாட்டிற்க்கு சுமார் 7.0 மீ2 இடம் தேவைப்படும்

எருமை மாடுகளுக்கான கொட்டகையில் ஒரு மாட்டிற்க்கு தேவைப்படும் தரையளவு எவ்வளவு?

ஒரு மாட்டிற்க்கு சுமார் 4.0 மீ2 இடம் தேவைப்படும்.

திறந்தவெளி கொட்டகை அமைப்புகளில் ஒரு எருமை மாட்டிற்கு தேவைப்படும் தரையளவு எவ்வளவு?

ஒரு மாட்டிற்கு சுமார் 8.0 மீ2 இடத் தேவைப்படும்.

கறவை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பில் எவ்வகை கூரைகள் விலை குறைவானவை?

தென்னை அல்லது பனை ஓலை கூரைகள்

கறவைமாட்டு கொட்டகைகளில் கழிவுநீர் வடிகால் அமைக்க தேவைப்படும் சரிவின் அளவு எவ்வளவு?

1/40 முதல் 1/60 வரையில் சரிவினை கொண்டு கழிவுநீர் வடிகால் அமைக்கலாம்.

கறவைமாட்டு கொட்டகை அமைக்க எவ்வகை தரைகள் தரமானவகையாகும்?

பொதுவாக, சிமெண்ட் காண்கீரிட் தரைகள் உகந்தவை

இருவரிசை கொண்டு அமைக்கப்படும் கறவைமாட்டு கொட்டகைக்கு ஏற்ற பண்ணை முறை எது?

வாலுக்கு-வால் அமைப்பில் மாடுகளை கட்டும் முறையே சிறந்தது.

கறவைமாட்டு கொட்டகையில் மாடுகள் நிற்கத் தேவைப்படும் நீளம் மற்றும் அகலம் எவ்வளவு?

நீளம் - 1.5 மீ முதல் 1.7 மீ வரை அகலம் - 1.5 மீ முதல் 1.2 மீ வரை

கொட்டகை அமைப்பில் எத்தனை காளை மாடுகளை வளர்க்கலாம்?

ஒரு காளை மாட்டினை மட்டும் வைத்து பராமரித்தல் நல்லது.


top
தீவன உற்பத்தி  
கால்நடைகளுக்கு ஏற்ற பசுந்தீவனங்கள் எவை?

C தானிய வகை : தீவனசோளம், கோ-27, கோ-10, கம்பு, நேப்பியர் ஓட்டுப்புல் கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கினியாபுல், கர்னால் புல், எருமைபுல் மற்றும் கொழுகட்டைப்புல் போன்றவை. பயறுவகை : குதிரைமசால், கொள்ளு, தட்டைப்பயிறு, முயல் மாசல், வேலி மாசல், கலப்பகேனிம், போன்றவை

கால்நடைகளுக்கு ஏற்ற தீவன மரங்கள் எவை?

.எண்

பொது பெயர்கள்

வழக்க பெயர்கள்

1

சுபாபுல்

சவுண்டல்

2

குடைவேல்

குடவேல்

3

சிரிஸ்

குடவேல்

4

செஸ்பேனியா

வாகை

5

ஆலம்

அகத்தி

6

அரசமரம்

ஆலமரம்

7

வேப்பமரம்

அரசமரம் வேம்பு

பண்ணையாளர்கள் தீவன விதைகள் மற்றும் தீவன புல் கரனைகளை எங்கு பெற முடியும்?
  • கால்நடை அறிவியலுக்கான முதுநிலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்
  • மாநில விதைப்பண்ணை, படப்பை
  • மண்டல தீவன ஆராய்ச்சி மற்றும் செயல்முறை மையம், அலமாதி, திருவள்ளூர் மாவட்டம்
  • தாவர மரபியல் மற்றும் இனவிருத்தி துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
  • வேளாண் தகவல் தொழில்நுட்ப தகவல் மையம், காட்டுப்பாக்கம்
கலப்பின நேப்பியர் ஒட்டின புல் வகைகள் எவை?

கோ-1, கோ-2 மற்றும் கோ-3 போன்ற புல் வகைகளாகும்.

தீவன விதைகள் எங்கு கிடைக்கும்?

பேராசிரியர் மற்றும் தலைவர்
      தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,  கோயம்புத்தூர்
      இயக்குநர் மண்டல தீவனப்புல் உற்பத்தி மற்றும் பகுப்பாய்வு மையம்,
அலமாதி, சென்னை - 52

வறட்சி பகுதிகளுக்கு ஏற்ற தீவன மரங்கள் எவை?
  • விவசாயத்திற்கு ஏற்ற தரிசு நிலங்கள் : சுபாபுல், அகத்தி, சித்தகத்தி
  • பாறைகளுடன் கூடிய தரிசு நிலங்கள் : வாகை, அச்சாமரம், வேம்பு
  • காரதன்மைமிக்க தரிசு நிலம்            : கருவேலம், சித்தகத்தி

top
தீவன மேலாண்மை  
கால்நடைகளுக்கு கரும்புத் தோகையை தீவனமாகக் கொடுக்கலாமா?

கொடுக்கலாம். கரும்புத் தோகையை கால்நடைகள் விரும்பி உண்ணும். இதில் குறிப்பிட்ட அளவு தாதுக்கள் நிறைந்துள்ளன. கரும்புத் தோகை என்பது கரும்பின் பச்சை இலை, இலைக்கூட மற்றும் முற்றாத கரும்புத்தண்டு அடங்கியப் பகுதியாகும். கரும்புத்தோகையில் புரதத்தின் அளவு குறைவாக உள்ளதால் இதனை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் போது புரதம் நிறைந்த பிற தீவனங்களும், அளிக்கப்பட வேண்டும். (பயறு வகைத் தீவனப்பயிர்களான காராமணி மற்றும் வேலிமசால் போன்றவை) ஓரு எக்டரில் 21 டன் கரும்புத்தோகை கிடைக்கும். இதனைக் கொண்டு ஓரு பசுவிற்கு ஓராண்டு தீவனமளிக்க முடியும்.

வாழை இலையை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாமா?

கொடுக்கலாம். வாழை இலையும் கால்நடைகளுக்கான தீவனமாகக் கருதப்படுகிறது. வாழையின் இலை, தண்டு மற்றும் பூ ஆகியவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். வாழையின் இலை மற்றும் பூவில் போதிய அளவு கச்சாப்புரதமும், கால்சியமும் அடங்கியுள்ளன. இதில் கரோட்டின் எனப்படும் சத்தும் நிறைந்துள்ளது. வாழைத் தண்டில் புரதச் சத்து குறைந்து காணப்பட்டாலும் அது கால்நடைகளுக்கு அதிக தீவனம் கிடைத்த உணர்வை ஏற்படுத்தும். வாழையின் மேல் மற்றும் அடித்தண்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பிறகு கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பது நல்லது.

சினையான கறவை பசுக்களுக்கு எள்ளு பிண்ணாக்கு அளிப்பது கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பது சரியா?

கறவைமாடுகளுக்கு எள் பிண்ணாக்கு அளிப்பது கருச்சிதைவு ஏற்படுத்தாது.

யூரியா செறிவூட்டப்பட்ட வைக்கோலை சினையான கறவை பசுக்களுக்கு அளிக்கலாமா?

சினையான கறவை பசுக்களுக்கு யூரியா செறிவூட்டப்பட்ட வைக்கோல் அளிக்கலாம்.

கறவைமாடுகளுக்கு கரும்புத் தோகையை அளிப்பது இனப்பெருக்க பிரச்சனைகளை ஏற்படுத்துமா?

கறவைமாடுகளுக்கு கரும்புத் தோகை அளிப்பது இனப்பெருக்க பிரசச்சனைகளை உண்டு பண்ணாது. இருப்பினும், கரும்புத் தோகையை பிற தீவனங்களுடன் கலந்து அளிப்பது சிறந்தது.

கறவைமாடுகளுக்கான சமச்சீர் உணவு என்பது என்ன?

கறவைமாடுகளுக்கான சமச்சீர் உணவு என்பது என்ன?

பசுந்தீவனங்களை மட்டுமே அளித்து கறவைமாடுகளில் தேவைப்படும் பால் உற்பத்தியை பெற முடியுமா?
  • பெற முடியும். சுமார் 6-8 லிட்டர் பால் வழங்கும் பசுக்களை 25-30 கிலோ வரையில் பயிறு வகை தீனங்களுடன் சேர்த்து பசுக்களின் உடல் எடைக்கு ஏற்ப பசுந்தீவனம் அளித்து பராமரிக்கலாம்.
  • 10-15 கிலோ /  நாள்  2.) 08-10 கிலோ /  நாள் 3.)  03-04 கிலோ /  நாள்
  • செயற்கை முறை கருவூட்டல் அல்லது கருவூட்டலுக்கு முன்பாகவும், 60-90 நாட்கள் கன்று ஈனுதலுக்கு முன்பாகவும், சினையுற்ற கறவை மாடுகளுக்கும் 1.5 -2 கிலோ கலப்புத் தீவனம் கூடுதலாக அளிப்பது நன்று.

 

எள் பிண்ணாக்கு பாலில் கொழுப்பின் அளவை குறைத்திடுமா?

எள் பிண்ணாக்கு அளிப்பது பாலில் கொழுப்பின் அளவை குறைக்காது

கறவை மாடுகளுக்கு தாது உப்புகள் மற்றும் உப்பின் முக்கியத்துவம் என்ன?

கறவைமாடுகளுக்கான தீவனத்தில் தேவையான அளவு உப்புகள் அளிப்பது எரிசக்தியையும், புரதசத்தையும் அளிக்க வல்லது. பொதுவாக 2 சதவீதம் தாது உப்புக்கள் கறவை மாடுகளின் தீவனத்தில் அளிப்பது தாது உப்புகளின் பற்றாக்குறையை போக்கிடும். மேலும், 1 சதவீதம் உப்பு தீவனம் உட்கொள்ளும் திறன் மற்றும் அளவை அதிகப்படுத்திடும்


top
இனப்பெருக்க மேலாண்மை  
கறவைமாடுகளுக்கு கரும்புத் தோகையை உணவாக அளிப்பது இனப்பெருக்க சிக்கல்களை உண்டு பண்ணுமா?

கரும்புத் தோகையை கறவைமாடுகளுக்கு உணவாக அளிப்பது இனப்பெருக்க சிக்கல்களை உண்டு பண்ணாது. பொதுவாக, கரும்புத் தோகையை மற்ற பசுந்தீவனங்களுடன் சேர்த்து அளிப்பது நல்லது.

கன்று ஈன்ற பசுக்களில் உறுப்பு வெளியாகும் வரை சில பண்ணையாளர்கள் பால் கறப்பதில்லை. இம்முறை சரியா?
  • இவ்வாறு செய்வது தவறாகும்.
  • கன்று ஈன்ற பசுக்களில் உறுப்பு வெளியாகும் முன்போ, பிறந்த கன்றுகளை பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கன்றுகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, சீம்பால் மூலமாக கிடைக்கிறது.
  • கன்றுகள் பசுக்களின் மடியில் பால் உண்ண துவங்க செய்வதன் மூலம் ஆக்சிடோசின் ஹார்மோன்கள் வெளியாகி அதன் மூலம் உறுப்பு வெளியாதலும் நடைபெற ஏதுவாகிறது.
சில பசுக்கள் எப்பொழுதும் சினையாவதில்லை – இதற்கான காரணம் என்ன?
  • சரியான நேரத்தில் கருவூட்டல் செய்தல் வேண்டும். அதாவது, சினை தருணம் வெளிப்பட்ட 12 மணி நேரம் கழித்து கருவூட்டல் செய்தல்
  • நல்ல ஆரோக்கியமான, நோய்கள் பாதிப்பில்லாமல் பராமரிக்கப்பட வேண்டும்.
  • இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனைகள் அதாவது, கர்ப்பபைகளில் நோய்கள், ஹார்மோன் பிரச்சனைகள், கருமுட்டைகள் உருவாகுதலில் பிரச்சனைகள் போன்ற காரணங்கள் சினைபிடிக்காமைக்கான காரணங்களாகும். இத்தகைய பிரச்சனைகளை கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு அறிந்து அதற்கேற்ற சிகிச்சைகள் செய்திடுதல் நன்மையை தரும்.
கலப்பின பிரிஸியன் கறவை இனங்களில் இனப்பெருக்க பிரச்சனைகள் அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் எவை? இப்பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது?

பிரிஸியன் இன கறவை மாடுகள் அதிக உடல் எடையும் வேகமாக வளர்ச்சியடையும் திறனும் உடையவை. எனவே, ஜெர்சி போன்ற பிற கலப்பினங்கள் அல்லது நம் நாட்டு இனங்களை விட இவற்றிற்கு அதிக அளவு உணவு சத்துக்கள் தேவைப்படும். இவற்றை நாம் சரியாக அளிக்க இயலவில்லை எனில் இனப்பெருக்க சிக்கல்கள் இவ்வகை இனங்களில் அதிகம் காணப்படும். மேலும், இத்தகைய  இன கறவை பசுக்களுக்கு தேவைப்படும் சமச்சீர் உணவு அளித்தல் அவசியமான ஒன்றாகும்.

சினையான சில கறவைமாடுகளில் சினைத் தருணத்தில் தோன்றவது போன்று பிறப்பு உறுப்புகளில் கண்ணாடி போன்று நீர் வடிதல் ஏற்படுதலுக்கான காரணம் என்ன? இத்தகைய பிரச்சனைகளை எவ்வாறு குணப்படுத்தலாம்?
  • இத்தகைய அறிகுறிகள் கர்ப்பகால சினை அறிகுறிகள் எனப்படும்.
  • முந்தைய சினைகாலங்களில், கர்ப்பபைகளில் சினைமுட்டைகள் அதிக அளவில் சில பசுக்களில் உற்பத்தியாகி அதன் மூலம் அதிக அளவில் ஈஸ்டேரஜன் ஹார்மோன்கள் உற்பத்தியாகும் என்தால் இத்தகைய அறிகுறிகள் தோன்றும்.
  • இது சினையுற்ற கறவைமாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மேலும், இதற்காக தனிப்பட்ட சிகிச்சையும் மேற்கொள்ள தேவையில்லை.
எருமைகளில் சினைபிடித்தல் ஒரு கடினமாக நிகழ்வாக உள்ளதன் காரணம் என்ன?

அமைதியான சினைத்தருணம், மிக குறைவான சினைத் தருணம் மற்றும் மந்தமான சினைத்தருணம் போன்ற காரணங்கள் எருமைகளின் சினை பிடிப்பினை பாதிக்கும் காரணிகளாகும். இத்தகைய பிரச்சனைகளை மேற்கொள்ள நாம் கவனமான மேற் பார்வையும், முறையான பதிவேடுகளை கொண்டும், தரமான பண்ணை மேலாண்மை மூலமும் எதிர் கொள்ள இயலும்.

தொடர் பருவ சுழற்சி ஏற்படுத்தும் கறவைமாடுகளை எவ்வகையில் பராமரிக்க இயலும்?
  • தரமான சமச்சீர் உணவு அளித்தல் அவசியம்
  • சினைத் தருண அறிகுறிகளை கண்காணித்து உரிய நேரத்தில் சினை ஊசி அதாவது செயற்கை முறை கருவூட்டல் செய்தல் அவசியமாகும்.
  • சுமார் 12 மணிநேர இடைவெளியில் கறவைமாடுகளுக்கு இரண்டு முறை சினை ஊசி போடலாம்.
  • செயற்கை கருவூட்டல் செய்த 5ம் நாள் 500 மி.கி அளவில் ப்ரஜெஸ்டிரான் ஹார்மேன் செலுத்த வேண்டும்.
  • செயற்கை கருவூட்டலின் போது ஜி.என்.ஆர்.எச் அல்லது எல்.எச் போன்ற ஹார்மேன்களை பயன்படுத்துதல் நல்லது.
  • ஆன்டிபயாடிக் மருந்துகளை கொண்டு கர்ப்ப காலங்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துதல் அவசியம்.
  • மாறாக செயற்கை முறை கருவூட்டல் செய்யாமல், பிஜி.எப்2 ஆப்h, ஹார்மேன்களை கொண்டு சினை பருவ அறிகுறிகளை ஏற்படுத்தி குறித்த காலத்தில் கருவூட்டல் செய்தலும் மேற்கொள்ளலாம்.
கறவைமாடுகளில் செயற்கை முறை கருவூட்டலுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன?
  • செயற்கை முறை கருவூட்டல் செய்த பிறகு பசுக்களின் பிறப்பு உறுப்பு பகுதியினை கைகளால் மெதுவாக பிசைந்து விட வேண்டும்.
  • செயற்கை முறை கருவூட்டலுக்கு பிறகு, கறவைமாடுகளுக்கு அயர்ச்சி எதுவும் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கருவூட்டலுக்கு பிறகு பசுக்களை அதிக தூரம் ஓட்டி செல்லுதல் கூடாது.
  • குளிர்ந்த நீரை கறவை பசுக்களின் உடலில் தெளிப்பதன் மூலம், அயர்ச்சியை போக்கி சினைபிடித்தலில் துணை புரியும்
கன்று ஈனுதலுக்கு முன்பாக கர்ப்பபை வெளியாதலை தவிர்ப்பது எப்படி?
  • கன்று ஈனுதலுக்கு முன்பாக கறவைமாடுகளை நல்ல மேட்டுப்பாங்கான பகுதிகளில் முன்கால் பகுதியினை கொண்டு நிற்குமாறு பார்த்து கொள்ளுதல் வேண்டும்.
  •  “ஈஸ்டேரஜன்” ஹார்மேன்கள் அடங்கிய தீவனங்கள் அளித்தலை தவிர்த்திட வேண்டும்.
  • சினையுற்ற பசுக்களுக்கு சிறுசிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள செய்திட வேண்டும்.
  • தேவையான தீவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து அளித்திடல் வேண்டும்.
கன்று பிறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் எவை?

கன்று பிறந்தவுடன் கன்றின் சுவாசித்தல் சீராக உள்ளதா என்பதை அறிய வேண்டும். உடலின் மீது படர்ந்துள்ள சளி போன்ற திரவத்தை துடைக்க வேண்டும். கன்று பிறந்தவுடன் பசுவின் மடியில் சீம்பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். பின்னர் தொப்புள் கொடியை வெட்டிவிட வேண்டும். அதன் மீது டிங்சர் அயோடின் தடவுதல் வேண்டும்.

கன்று பிறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் எவை?

கன்று பிறந்தவுடன் கன்றின் சுவாசித்தல் சீராக உள்ளதா என்பதை அறிய வேண்டும். உடலின் மீது படர்ந்துள்ள சளி போன்ற திரவத்தை துடைக்க வேண்டும். கன்று பிறந்தவுடன் பசுவின் மடியில் சீம்பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். பின்னர் தொப்புள் கொடியை வெட்டிவிட வேண்டும். அதன் மீது டிங்சர் அயோடின் தடவுதல் வேண்டும்.

எருமை கிடோரிகள் அடிக்கடி சினை பருவ அறிகுறிகளை வெளிப்படுத்துவது பரவலாக காணப்படுகிறது. இதனை எவ்வாறு நாம் சமாளிக்கலாம்?

பொதுவாக எருமை பசுக்களும், கன்றுகளும் சிணைத் தருண அறிகுறிகளை அதிகம் வெளிபடுத்துவதில்லை. எருமைகளில் ஏற்படும் இப்பிரச்சனையை நாம் தற்போது நடைமுறையில் உள்ள சினைப் பருவ ஒருங்கிணைப்பு மருத்துவம் மூலம்  சரி செய்திடல் முடியும்.

பசுக்களில் செயற்கை முறை கருவூட்டல் செய்திட சரியான தருணம் எது?

பசுக்களில் சினைத் தருண அறிகுறிகள் காலை வேலைகளில் தென்பட்டால், அன்றைய தினம் மாலையிலும், மாலை வேலைகளில் தென்பட்டால் மறுநாள் காலையிலும் செயற்கைமுறை கருவூட்டல் செய்திடல் வேண்டும்.

கறவைமாடுகளில் சினையுறுதலை நாம் எவ்வாறு, எத்தனை நாட்களில் உறுதி செய்யலாம் ?

கறவைமாடுகள் சினையுறுதலை, செயற்கைமுறை கருவூட்டல் செய்த சுமார் 45 முதல் 60 நாட்கள் கழித்து கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு உறுதி செய்ய முடியும்

இனப்பெருக்கத்திற்கு ஏற்ற ஜெர்சி இன காளைகள் எங்கு கிடைக்கும்?

இனப்பெருக்கத்திற்கு ஏற்ற ஜெர்சி இன காளைகளை மாவட்ட கால்நடைப் பண்ணை, ஈச்சங்கோட்டை, தஞ்சாவூரிலும், ஜெர்சி மைய கரு மையம், உதகமண்டலத்திலும் கிடைக்க பெறலாம்.


top
நோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு மேலாண்மை  
கறவைமாடுகளில் மடிவீக்க நோயை எவ்வாறு ஆய்வறிய முடியும்?
  • பாலில் ஏற்படும் மாற்றங்கள் (இரத்தம், கட்டி, சீழ் கலந்திருத்தல்).
  • மடியில் ஏற்படும் மாற்றறங்கள் (மடியில் வலியுடன் கூடிய சூடான வீக்கம், அழற்சி)
  • ில நிறுவனங்கள் மடி நோய் கண்டறியும் சிறு துணுக்குகளைத் தயாரிக்கின்றன. இத்துணுக்கினை பாதிக்கப்பட்ட பாலில் புகுத்தினால் அதன் நிறம் மாறும்.
கோமாரி நோய் பாதிப்பு அடைந்த மாடுகளை சினைபடுத்த இயலுமா?

ஆம் முடியும். முறையான சிகிச்சையும், தடுப்பூசிகளையும் அளித்து பராமரித்திடுதல் மூலம் இயலும்

அதிக சீம்பால் குடிப்பதால் பிறந்த கன்றுகளில் ஏற்படும் கழிச்சலை எவ்வாறு தவிர்க்க முடியும்?

பிறந்த கன்றுகள், வேண்டும் அளவிற்கு சீம்பால் குடிக்க அனுமதித்தல் அவசியமாகும். மேலும், இளங்கன்றுகள் தரையில் உள்ள மண் போன்றவற்றை உண்ண அனுமதித்தல் கூடாது. இது போன்ற காரணங்களால் கன்றுகளுக்கு கழிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பசுமடிக் காம்புகளில் வெடிப்பு ஏற்பட காரணமென்ன, அதனை நிவர்த்தி செய்வது எப்படி?

சூரிய வெப்பத்தாக்கம், இரசாயனம், மாசுபட்ட படுக்கை, சூரியஓளி தோல் ஆழற்சி, பசு அம்மை, மருக்கள்.

சிகிச்சை :
ஓவ்வொருமுறை பால்கறந்த பின்னும் நோய் ஏதிர்ப்புக் களிம்புகளைக் கொண்டு தீவிர சிகிச்சை அளித்தல்.  குளோரோஹெக்சிடின் மற்றும் ஆயோடோபோர் நோய் ஏதிர்ப்புகளை பயன்படுத்தலாம்.

கறவை மாடுகளை நாய்கள் கடித்த பின் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எவை?

நாய் கடித்த இடத்தினை சோப்பு நீரை கொண்டு கழுவி விட வேண்டும். சிறிய அசைபோடும் விலங்கினங்கள் எனில் bட்டனஸ் டாக்ஸாய்டு ஊசியை உடனே போடலாம். நாய் கடித்த விலங்கினங்களை வெறிநோய் தடுப்பூசி (கடித்த பிறகு போடப்படும்) மருந்தினை நாய் கடித்த அன்றும் அதாவது 0 நாள், 3வது நாள், 7வது நாள், 14வது நாள் மற்றும் 21வது நாளிலில் அளித்தல் நன்று.

கறவைமாடுகளின் பால் மடியில் ஒரு பால் காம்பு மட்டும் பால் சுரக்காமல் போவதற்கான காரணங்கள் எவை?

மடிவீக்க நோயின் பாதிப்பே இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணம் ஆகும்.

அதிக பால் கொடுக்கும் கறவைமாடுகள் அடிக்கடி மடி நோயினால் பாதிக்கப்படுவது ஏன்?

அதிகப் பால் உற்பத்தி செய்யும் கறவைமாடுகளில் எரிசக்தி குறைவினால் நோய் எதிர்ப்புசக்தி பாதிக்கப்படுகின்றது. இதனால் மடிநோய்த் தாக்கம் அடிக்கடி காணப்படுகின்றது.

கறவைமாடுகளில் பால் மடியில் நோயின் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பொதுவாக பால் கறவைக்குபின் பால் காம்பின் துவாரங்கள் சுமார் 30 நிமிடங்கள் திறந்த நிலையில் இருக்கும். எனவே பால் கறவைக்குப்பின் பசுக்களை உடனே தரையில் படுக்கச் செய்தல் கூடாது. பால் கறவைக்கு பின் பசுக்களுக்கு தீவனம் அளிப்பதன் மூலம் பசுக்களை நிற்க செய்து இத்தகைய மடி நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

கறவைமாடுகளில் வயிறு உப்பசம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

உணவுகளும், உடல் உள் உறுப்புகள் பாதிப்பினாலும் வயிறு உப்பசம் ஏற்படும்.

கறவைமாடுகளில் ஆன்டிபாயடிக் / குடற்புழு நீக்க மருந்துகள் அளித்த பின்பும் தொடர் கழிச்சல் ஏற்படுவதற்கான காரணம்?

ஜோனிஸ் நோயின் பாதிப்பு இதற்கான முக்கிய காரணமாகும்.

கோமாரி நோய் பாதிக்கப்பட்ட தாய் பசுவின் பாலை உன்னும் கன்றுகள் உடனே இறப்பதற்கான காரணம் என்ன?

கன்றுகளில் இதய துடிப்பு பாதிப்புகளை ஏற்படுத்துலே இதற்கானமுக்கிய காரணமாகும்.

எருமை கன்றுகளில் ஏற்படும் கன்றுகள் இறப்பிற்கான காரணம் மற்றும் இப்பிரச்சனைகளை எவ்வாறு கட்டுபபத்துவது?

தேவையான அளவு கன்றுகளுக்கு சீம்பால் அளிப்பதன் மூலம் கன்றுகள் இறப்பினை தவிர்க்காலம்.

கோமாரி நோய்க்கான தடுப்பூசி அட்டவனை என்ன?
  • முதல் தடுப்பூசி 4 மாத வயதிற்கு மேலுள்ள கன்றுகளுக்கு
  • துணை ஊக்கத் தடுப்பூசி 2-லிருந்து 4 வாரங்களுக்குப் பின் ஆதன் பின்னர் ஓவ்வொரு 4-6 மாத இடைவெளிக்குள்ளும் ஓரு தடுப்பூசி போட வேண்டும்
கால்நடை வளர்ப்பில் வேப்பெண்ணய் அளிப்பதன் பயன் என்ன?

கால்நடைகளில் ஏற்படும் புண்/ காய்ங்களில் ஈக்கள் / பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுகின்றது.

மடிநோய் பாதிக்கப்பட்ட பசுக்களின் பால் மடியின் ஒரு பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு கெட்டுப்போனால் அடுத்த கறவை காலத்தில் அப்பகுதி குணமாகியதன் பின்பு பால் கறவைக்கு பயன்படுமா?

பயன் தர இயலாது.

மாடுகளில் வயிறு உப்புசம் / அமிலநோய்களை தடுப்பது எப்படி?

கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளை தவிர்த்து, நார்ச்சத்து மிகுந்த உணவு அளிப்பதன் மூலம் தவிர்க்கலாம்.

கன்று வீச்சு நோயினால் பாதிப்புக்குள்ளான பசுக்கள் சிகிச்சைக்குப்பின் சினைபிடிக்க வாய்ப்புகள் உண்டா? அப்படி சினையான பசுக்கள் முறையாக கன்று ஈன இயலுமா?

கன்று வீச்சு நோயினால் பாதிக்கப்பட்ட பசுக்களை முறையான சிகிச்சைக்கு பிறகு 90 நாட்கள் கழித்து சினைபடுத்தலாம். ஆனால், இத்தகைய பசுக்கள் மீண்டும் கருச்சிதைவு அடைய வாய்ப்பு உண்டு. மேலும் இத்தகைய பசுக்கள் மூலம் பிற மாடுகளுக்கும் இந்நோயின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பசுக்களின் கர்ப்பபை வெளித்தள்ளுதல் ஏற்படும் போது நாம் மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் எவை?
  • முதலில் வெளித்தள்ளப்பட்ட கர்ப்பபை உறுப்பினை ஒரு சுத்தமான ஈர துணி கொண்டு மூட வேண்டும்.
  • இத்தகைய பசுக்களை தரையில் படுக்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி இயலாது போது பசுக்களுக்கு முறையான படுக்கை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும்.
  • வெளித்தள்ளப்பட்ட பசுக்களின் கர்ப்பபை உறுப்பினை ஆசன தூவரத்தின் அளவிற்கு உயர்த்தி விடுவதுதன் மூலம் இதர பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
  • கால்நடை மருத்துவரின் உதவியுடன் வெளித்தள்ளப்பட்ட கர்ப்பபை உறுப்பினை சரி செய்திட வேண்டும்.
பசுக்களில் கன்று பிறந்தவுடன் நச்சு கொடி வெளியேற நாம் எவ்வளவு நேரம் பெருத்திருக்கலாம்?

கன்று பிறப்பிற்கு பின் சுமார் 12 மணி நேரம் வரை நச்சு கொடி வெளியேற நாம் காத்திருக்கலாம். பொதுவாக, இத்தகைய நிகழ்வுகளை கால்நடை மருத்துவரின் உதவியுடன் கண்கணிப்பது நல்லது.


top
உற்பத்தி தொழில்நுட்பம்  
கறவைமாடுகளில் பால் கறவைக்கான சரியான முறை என்ன?

முழு கைகளையும் பயன்படுத்தும் முறையே சரியான முறையாகும்

கறவைமாடுகளில் பால் கற்பபதில் தவறான முறை எது?

கை விரல்களை கொண்ண் அழுத்தத்துடன் கறத்தல் முறை தவறானது ஆகும்.

சாதாரண அறை வெப்பநிலையில் பால் எவ்வளவு நேரம் கெடாமல் இருக்கும்?

சுமார் 6-8 மணி நேரம் வரை பால் கெடாமல் இருக்கும்

கலப்பின கறவைமாடுகளில் பால் கறத்தலுக்கு பால் கறக்கும் இயந்திரத்தை பயன்படுத்தலாமா?

அனைத்து வகை பசுக்களுக்கும் ஏற்ற வகையில் பால் கறவை இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

பால் சேமிப்பு முறைகள் எவை?

பால் குளிரூட்டும் அமைப்புகளை கொண்டு சுமார் 4 டிகிரி செல்சியஸ் (சென்டிகிரட்) அளவில் பாலை குளிரூட்டல் செய்யலாம்.

கறவைமாடுகளை தினமும் குளிப்பாட்ட வேண்டுமா?

போதுமான நீரும் தேவையான ஆட்களும் இருந்தால் கறவைமாடுகளைத் தினந்தோறும் குளிக்க வைப்பது அவற்றின் உடல் நலத்திற்குச் சிறந்தது. அத்துடன் இதனால் தூய பால் உற்பத்திக்கும் ஏதுவாகிறது. .

கன்றுகள் பிறந்தவுடன் இறந்துவிடும் பசுக்களின் சீம்பாலை மனிதர்கள் குடிக்க பயன்படுத்தலாமா?

கன்றுகள் பிறந்தவுடன் கன்று இறத்தலுக்கான சரியான காரணத்தை மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிதல் வேண்டும். அவ்வாறு இறக்கும் கன்றுகள் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் சில நோய்கள் மூலம் இறந்திருப்பின் அத்தகைய பசுக்களின் பாலினை யாரும் பயன்படுத்தக் கூடாது. பொதுவாக கன்று இறந்துவிட்டால் தாய்ப் பசுவின் பாலை மனிதர்கள் குடிப்பதற்கு அல்லது பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் கூடாது.

கால்நடைகளின் இறைச்சிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்கள் எவை?

ஆந்த்ராக்ஸ், எலும்புருக்கி நோய் மற்றும் கன்று வீச்சு நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சியை பயன்படுத்த கூடாது.

பாலில் கொழுப்புச்சத்தின் அளவை எவ்வாறு அதிகபடுத்திட முடியும்?

பால் கறவை மாடுகளுக்கு, பருத்தி கொட்டை பிண்ணாக்கு அளிப்பதன் மூலம் பாலில் கொழுப்புச்சத்தின் அளவை நாம் அதிகப்படுத்திட முடியும்.

பாலில் கொழுப்புச் சத்து மறாமல் பாலில் கொழுப்பல்லாத திடப்பொருட்களின் அளவினை எவ்வாறு அதிகரிக்க முடியும்?

உலர்த்தீவனங்கள் அதாவது பிண்ணாக்கு போன்ற அடர்தீவனங்களை முறையாக அளிப்பதன் மூலம் பாலில் கொழுப்பல்லாத திடப்பொருட்களின் அளவினை அதிகரித்திட முடியும்.


top
கன்று வளர்ப்பு  
கன்றுகளுக்கு சீம்பால் அளிப்பதன் முக்கியத்துவம் என்ன?

கன்று ஈன்றபின் சுரக்கும் முதல் பாலே சீம்பால் ஆகும். சீம்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமிருப்பதால் பிறந்த கன்றுகளை நோய்களின்று பாதுகாக்கின்றது. மேலும், சீம்பால் மலமிளக்கியாதலால், உணவு சீரணிக்க உதவுகின்றது. சீம்பாலை கன்று பிறந்த 1-1ஙூ மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள இம்முனோகிளாபுலின் குடலிலிருந்து உறிஞ்சப்படுவது நேரம் ஆக ஆக குறைகிறது.

கன்றுகளுக்கு சீம்பால் எந்த அளவில் அளிக்கப்பட வேண்டும்?

பிறந்த அரை (ஙூ) மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரையில், கன்றின் உடல் எடையில் 5-8 சதவீதம் அளவிலும், பிறகு 2 மற்றும் 3ம் நாளிலில் கன்றின் உடல் எடையில் 10 சதவீதம் அளவிற்கும் சீம்பால் அளித்திட வேண்டும்.

இளங்கன்றுகளுக்கு அளிக்கப்படும் பாலின் அளவு எவ்வளவு?

      இளங் கன்றுகளுக்கு அதன் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு பால் தினமும் கிடைத்திட வேண்டும். அதாவது 20-25 கிலோ உடல் எடை உள்ள கன்றுகளுக்கு தினமும் சுமார் 2-2. 5 கிலோ பசுவின் பால் கிடைத்திட உறுதி செய்தல் வேண்டும்.

பிறந்த கன்றுகளுக்கு எப்பொழுது குடற்புழு நீக்கம் செய்யலாம் மற்றும் எந்த குடற்புழு நீக்க மருந்துகளை கொடுக்கலாம்?

எருமைக் கன்றுகளுக்குப் பிறந்த முதல் நாளிலேயே குடற்புழுநீக்க மருந்தினை அளிக்க வேண்டும். பசுங்கன்றுகளுக்கு ஒரு வாரத்தில் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். முதல் ஆறுமாத வயது வரை பைப்பரசின் மருந்தினை உபயோகிக்காலம். பின்னர் மூன்று மாதத்திற்கொரு முறை சுழற்சி முறையில் குடற்புழுநீக்க மருந்தினை அளிக்க வேண்டும்.  ஆல்பென்டசோல், ஃபென்பென்டசோல், லீவாபிசோல் போன்றவை கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மருந்தினை அளிப்பது நலம்.

கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் எந்த வயதில் செய்யலாம்?

பொதுவாக கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் கன்று பிறந்த 15 முதல் 20ம் நாட்களில் செய்திட வேண்டும்.


top
பண்ணை பராமரிப்பு மேலாண்மை  
தீவனம் மற்றும் பசுந்தீவனம் அளிக்கும் போது தீவனம் வீணாகாமல் பாதுகாப்பது எப்படி?

தீவனங்களை குருணைகளாகவும், சிறு உருண்டைகளாகவும் மாற்றி அளிக்க வேண்டும். தவிடு போன்ற உணவுகளை அளிக்கும் போது, சிறிது தண்ணீர் தெளித்து அளிப்பதன் மூலம் தீவனம் வீணாகுவதை தவிர்க்கலாம். குறிப்பாக ஆடுகளுக்கு, தீவனங்களை உயரப் பகுதியில் வைத்து அளிப்பதன் மூலம் தீவனம் விரயமாதல் தவிர்க்கப்படும். தீவன புற்களை சிறு துண்டுகளாக நறுக்கி அளிப்பதன் மூலமும் தீவன விரயத்தை குறைக்கலாம்.

கால்நடைகளில் நுண்ணுயிர் ஊட்டச்சத்துகளின் முக்கியத்துவமும் அதன் பயன்களும் என்ன?

கால்நடைகளின் உடல் வளர்ச்சி, ஹார்மேன்கள் உற்பத்தி, உணவு மாற்றுத்திறன், இரத்த அணுக்கள் உற்பத்தி, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு நுண்ணுயிர் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது மட்டுமன்றி முறையான இனப்பெருக்க திறனுக்கும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன

பசுக்கள் மற்றும் எருமை பாலின் விற்பனை விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

பொதுவாக, பாலில் கொழுப்பின் அளவு கொழுப்பில்லாத திடப்பொருட்களின் அளவினை பால்மானி கருவி மூலம் அறிந்து பாலின் விற்பனை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கறவைமாடுகளை எந்த வயதில் பண்ணையில் இருந்து நீக்கம் செய்தல் நன்று?

கறவைமாடுகளில் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு பிறகு பால் உற்பத்தி அளவு குறைய தொடங்கும் என்பதால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை பண்ணையிலிருந்து நீக்கம் செய்வது நல்லது.

பண்ணை முறையில் பராமரிக்கப்படும் கறவை மாடுகளை எவ்வாறு கண்டறிய முடியும்?

பண்ணை முறையில் வளர்க்கப்படும் கறவை மாடுகளை காதணி பட்டன்கள் மூலம் கண்டறிய முடியும்.

இளம் வயது கிடோரிகளை எந்த வயதில் வீதை நீக்கம் செய்யலாம்?

சுமார் 2-3 மாத வயதில் வீதை நீக்கம் செய்தல் உகந்தது.

கறவைமாடுகளுக்கான காப்பீட்டு நிர்ணயத் தொகை எவ்வளவு?

கறவைமாடுகளின் மொத்த விலையில் 5 சதவீதம் விலை காப்பீட்டு நிர்ணயத் தொகையாகும்.

பண்ணையில் பராமரிக்கப்படும் பொதுவான பதிவேடுகள் எவை?

தினப் பதிவேடு, பிறப்பு / இறப்பு பதிவேடு, கன்று / இளங்கன்று இருப்பு பதிவேடு, கிடோரிகள் பதிவேடு, இனப்பெருக்க பதிவேடு, செயற்கைமுறை கருவூட்டல் பதிவேடு, உடல் வளர்ச்சி (எடை) அளவு பதிவேடு, பால் உற்பத்தி மற்றும் பால் விநியோக பதிவேடு, விற்பனை / உற்பத்தி நீக்க பதிவேடு, பசுந்தீவனம் / தீவன அளவு பதிவேடு, வருமான பதிவேடு மற்றும் பண்ணை சுகாதார பதிவேடு போன்றவை மிக முக்கிய பதிவேடுகளாகும்.


top