| பயிர் பாதுகாப்பு  :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            மொக்கு துளைப்பான்: ஹென்டிகாசிஸ் டூபளிஃபெசியாலிஸ்  
                சேதத்தின் அறிகுறிகள்
                
                  - புழு மொக்குகளைத் துளைத்து சாப்பிடும்.
 
                  - தாக்கப்பட்ட மொக்குகள் இலேசான மெல்லிய நூலாம்படையில்       பின்னப்பட்டிருக்கும்.
 
                 
                பூச்சியின் விபரம்
                
                  - புழு பச்சையாக கருந்தலையுடன் இருக்கும்.
 
                  - அந்துப்பூச்சி,       வெண்ணிற       அந்துப்பூச்சி, வெள்ளை       இறக்கையில் பழுப்பு நிறக்கோடுகளுடன் காணப்படும்.
 
                   
                 
                
                
               
              கட்டுப்படுத்தும் முறைகள் 
              
                
                  - தாக்கப்பட்ட மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து       அழிக்கவும்.
 
                  - விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து       அழிக்கலாம்.
 
                  - வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதம் தெளிக்கலாம்.
 
                  - 1 லிட்டர்       தண்ணீரில் 2 மிலி       மாலத்தியான் கலந்து தெளிக்கலாம்.
 
                  - செடிகளை சீரான கவாத்து செய்து, தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
 
                 
  | 
              
             
  | 
           
         
         
 |