டிரைக்கோகிரம்மா,  கிரைசோபா, சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா, என். பி. வி நச்சுயிர் வைரஸ். 
               
              டிரைக்கோகிரம்மா: 
              முட்டை ஒட்டுண்ணியான  டிரைக்கோகிரம்மா பூச்சியை ஏக்கருக்கு 40,000 என்ற அளவில் பயன்படுத்தி பச்சைக் காய்ப்  புழு மற்றும் வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். தயாரிக்கப்பட்ட மட்டை ஒட்டுண்ணிகள்  வேளாண்மைத் துறையிலும், தனியார் துறைகளிலும் கிடைக்கின்றன. 
            என்.  பி. வி வைரஸ்: 
              நிலக்கடலையில் சிவப்புக்  கம்பளிப்புழு மற்றும் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த மாலை நேரத்தில் ஏக்கருக்கு  100 புழு என்ற அளவில் தெளிக்க வேண்டும். 
            கிரைசோபா: 
              இரை விழுங்கியான பச்சைக்  கண்ணாடி இறக்கைப் பூச்சியின் புழுக்களை ஒரு ஏக்கருக்கு 20,000 என்ற அளவில் விடுவதால்  சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அசுவுணி மற்றும் தத்துப்பூச்சிகளை  அழிக்க ஏக்கருக்கு 2000 புழுக்கள் வீதம் விட வேண்டும். இவை காய்ப்புழுக்களையும் அழிக்கும். 
            டிரைக்கோடெர்மா,  சூடோமோனாஸ்: 
              இவ்விரண்டு பூசண வித்துக்களும்  நிலக்கடலையில் வேர் அழுகல் மற்றும் வாடல் நோயை அழிக்கவல்லது. டிரைக்கோடெர்மாவைக்  கொண்டு ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு 4 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.  மேலும் சூடோமோனசை 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.  நிலத்தில் இடும்போது ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனசை 50 கிலோ உலர்ந்த சாண எரு  அல்லது மணலுடன் கலந்து இட வேண்டும். 
                        
  |