உயிரி எரிபொருள் :: ஜோஜோபா

குடும்பம்      :           சிம்மன்ஸ்சியே

ஜோஜோபா புதிய தளிர்களில்தான் பூக்கள் உற்பத்தி செய்யும். இச்செடி சில மணி நேரம் குளிர்ந்த நிலையில் வளர்ச்சி பரவத்தை கழித்தால் மட்டுமே பூ மொட்டுகள் முதிர்ச்சி அடையும். இது பசுமை மாறா, பல்லாண்டு பயர், இருபால் பூ கொண்டது, காற்றும் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் புதர் வகை செடியாகும் 100-200 வருடங்கள் வாழ்நாள் கெர்ணடதாகும். இது சோனோரா பாலைவனத்தின் (கலிபோர்னியா) நிரந்தரமான மரமாகும். இதன் இலை பல மிருகங்களுக்கு தீவனமாகும். அணில், எலிகள், முயல்கள் மற்றும் பறவைகள் இதன் விதையினை உண்ணும். ஆயினும் ஒரு வகை எலி மட்டுமே (பெய்லி பாக்கெட் எலி) இதிலுள்ள கொழுப்புச்சத்தினை ஜீரணம் செய்யும். அதிக அளவு உண்பது நச்சாகும். மனிதர்களுக்கு இது ஒரு மலவிளக்கி மருந்தாகும்.

வளர்ச்சி தன்மைகள் :

உயரம் : பொதுவாக 5-6 அடி வரையிலும் சில சமயம் 15 அடி வரையிலும் வளரும்.

பெண் பூக்கள்
ஆண் பூக்கள்

பூக்கள்: பூக்கள் இதழ்கள் அற்றவை. பெண் பூக்கள் ஒற்றையோகவும், ஆண் பூக்கள் கூட்டமாகவும் பூக்கும் புதிய தளிர்களின் கிளைகளிலிருந்து கோடை காலத்தில் பூமொட்டுகள் தோன்றும், இவை குளிர்ந்த காலத்தில் விரிந்து முதிர்ச்சி அடையும், பூக்கள் வசந்த காலத்தின் போது, காற்றின் வெப்பநிலை 150 செல்சியஸ் இருக்கும் பொழுது பூக்கும்.நீர் குறைவாக இருப்பின் பூக்காது.

மார்ச்-மே மாதங்களில் பூக்கும் காலமாகும். காய் காயினுள் 1-3 பழுப்பு நிற விதைகள் இருக்கும். இதன் உலர் எடை 0.5-1.1 கிராமாகவும், 49-56 சதவிகிதம் மெழுகு பொருள் கொண்டும் இருக்கும் வசந்த காலத்தில் காய்கள் பழுத்து, பின் கோடை காலத்தில் விதைகள் கீழே விழும்.

இலைகள்: தடியான மேல் பகுதியுடன் கூடிய இலைகளில், மூடிய இலைத்துளிகள், சாம்பல் நிறத்துடன் இருக்கும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013