உயிரி எரிபொருள் :: த.வே.ப. உயிரி எரிபொருள் உற்பத்தி நிலையம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உயிரி எரிபொருள் உற்பத்தி நிலையம்

த.நா.வே.ப பயோடீசல் உற்பத்தி கலன்

பயோடீசல் உற்பத்தி முறைகள்:

பயோடீசல் என்பது தாவர எண்ணெய் அல்லது கழிவு எண்ணெயிலிருந்து வீட்டு உபயோக முறைகளில் தயாரிக்கப்படும் வற்றாத எரிபொருள் ஆகும். தாவர எண்ணெயின் முக்கிய பொருள் ட்ரைகிளிசரைட்ஸ் (Triglycerides) ஆகும். ட்ரைகிளிசரைட்ஸ் என்பவை க்ளிசராலி (glycerol)-ன் எஸ்டர் (ester)-கள் ஆகும். இவை நீண்ட சங்கிலிகள் கொண்ட கொழுப்புள்ள அமிலங்களாகும் (fatty acids). வேதியியல் கூற்றாக பயோடீசல் என்பது தாவர எண்ணெயிலிருந்து எடுக்கப்பட்ட நீண்ட சங்கில் கொழுப்பு அமிலங்கள் கொண்ட ஒருமய ஆல்க்கைல் எஸ்டர்களாகும் (monoalkyl ester). பயோடீசல் தயாரிக்கும் முறை “ட்ரான்ஸ்எஸ்டரிபிக்கேசன்” என்றழைக்கப்படுகின்றது. இம்முறையில் ஏதேனும் தாவர / கழிவு எண்ணெய், ஆல்கஹால் மற்றும் வினை ஊக்கி ஆகியவை இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பயோடீசல் உற்பத்திற்கான முறைகள் பலவாக இருந்தாலும் வணிகரீதியாக திறன் வாய்ந்த மற்றும் எளிய முறை இதுவே ஆகும்.

பயோடீசல் உற்பத்தி தொழில்நுட்பம்:

தநாவேப பயோடீசல் உற்பத்தி கலன்:

ஐட்ரோபா எண்ணெயின் எஸ்டரிபிக்கேசனிற் (esterification) காக, காரத் தன்மைக் கொண்ட வினை ஊக்கி பயன்படுத்தப்படுகிறது. ஐட்ரோபா எண்ணெய் ஆல்கஹால் மற்றும் வினை ஊக்கியுடன் கலக்கப்படும். ஐட்ரோபா விதையிலிருந்து எடுக்கப்படும். எண்ணெய் மெத்தனால் வினை ஊக்கியுடன் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், ஒரு விகிதத்தில் கலக்கப்படும். இக்கலவை தொடர்ந்து இரண்டு மணிநேரம் கலக்கப்படும். இச்செய்முறையின் பொழுது இக்கலவையில் உள்ள க்ளிசரால் தனியாக பிரிந்துவிடும். இது படிந்த பின்னர் பிரித்தெடுக்கப்படும். படிவதற்காக இக்கலனில் மூன்று தொட்டிகள் உள்ளன. க்ளிசராலை நீக்கியபின் திரவ பயோடீசல் கழுவும் தொட்டிக்கு மாற்றப்படும். இங்கு எரிவாயு இரு முறை கழுவிய பின்னர் தூய்மையான பயோடீசல் கிடைக்கும்.

ட்ரான்ஸ்எஸ்டரிபிக்கேசன் செயல் முறை:

  • ஒரு கலனில் 50 லிட்டர் ஐட்ரோபா எண்ணெய் எடுத்துக் கொண்டு அதனை பயோடீசல் தயாரிக்கும் கலனிற்கு ஒரு உட்புற குழாயின் வழியே செலுத்த வேண்டும்
  • இக்கலனில் வெப்பமாக்கியின் மின்விசையை (10 நிமிடங்கள்) இயக்க வேண்டும்
  • 20 சதம் மெத்தனால் மற்றும் 1 சதம் சோடியம் ஹைட்நாக்சைடு ஆகியவற்றை கலக்கும் தொட்டியில் எடுத்துக் கொள்ள வேண்டும். மெத்தனால் நிரப்பும் முன்னர் இத்தொட்டியின் மூடி நன்கு மூடியுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
  • இத்தொட்டியின் கலப்பான் மின்விசையினை இயக்கினால் (15 நிமிடங்கள்) சோடியம் மெத்தாக்சைடு கலவை கிடைக்கப்பெறலாம்
  • விளை செயலில் வெப்ப நிலையான 60 டிகிரி செல்சியசை அடைந்தவுடன் இக்கலவையை பயோடீசல் தயாரிக்கும் கலனிற்கு அனுப்பி மூடிவிட வேண்டும்
  • இக்கலனின் முக்கியமான கலப்பானை இயக்கி 2 மணிநேரம் வினை செயல் நடைபெற வேண்டும்
  • வினை செயல் முடிந்தவுடன் கிலிசரால் படியும் தொட்டிக்கு இக்கலவையை அனுப்ப வேண்டும் (சேமிக்கும் மின்விசையை இயக்க வேண்டும்)
  • இக்கலவையில் கிலிசரால் படிவதற்கு 12 மணிநேரம் ஆகும்
  • கழுவும் தொட்டியில் 100 லிட்டர் சுத்தமான நுீரினை கொண்டு கிலிசரால் நீக்கப்பட்ட பயோடீசலை கழுவ வேண்டும்
  • இங்கு காற்றாடியை 30 நிமிடங்கள் இயக்கி அதன் பின்னர் 3 மணிநேரம் கழிந்த பின்னர் கழுவும் தொட்டியிலிருந்து பயோடீசலை எடுக்க வேண்டும்
  • பயோடீசலின் ஈரப்பதத்தை நீக்குவதற்கு அதனை 20 நிமிடங்கள் சூடேற்ற வேண்டும் .


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013