கரூர் வைஸ்யா வங்கி (KVB)  
              
                
                  - பச்சை அட்டைகள்
 
                  - பச்சை அட்டை
 
                  - விவசாயிகளுக்கு இரு சக்கர வாகனத் திட்டம்
 
                  - பச்சை அறுவடை இயந்திரம்
 
                  - பச்சை டிராக்
 
                  - கிசான் மித்ரா திட்டம்
 
                  - கரூர் வைஸ்யா வங்கியின் மகிழ்ச்சியான விவசாயி
 
                 
               
              1. பச்சை அட்டைகள் 
                கரூர் வைஸ்யா வங்கி (KVB) விவசாயிகளுக்கு கடன் வசதிகளை KVB பச்சை அட்டை திட்டம் மூலம் வழங்குகிறது. 
              சிறப்பு அம்சங்கள் 
              
                
                  - தனிப்பட்ட சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஏற்கெனவே நல்ல முறையில் வங்கியுடன் அணுகுமுறை வைத்திருப்போர் அனைவரும் இதற்குத் தகுதியானவர்கள்.
 
                  - இந்த அட்டை மூலம் விவசாயிகளுக்கு முதலீட்டுக் கடன் வசதி, விரைவான சிறு தவணை கடன் தேவைகளை வழங்குகிறது.
 
                  - இதில் ஒரு அட்டைக்கு / கடன் அளவான ரூ. 10,000 வரை எந்த வரைவு அளவும்  பொருந்தாது.
 
                 
               
              மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
              2. பச்சை அட்டை 
              
                
                  - தனிப்பட்ட சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஏற்கெனவே நல்ல முறையில் வங்கியுடன் அணுகுமுறை வைத்திருப்போர் அனைவரும் இதற்குத் தகுதியானவர்கள்.
 
                  - இந்த அட்டை மூலம் விவசாயிகளுக்கு முதலீட்டுக் கடன் வசதி விரைவான சிறு தவணை கடன் தேவைகளை வழங்குகிறது.
 
                  - இதில் ஒரு அட்டைக்கு / கடன் அளவான ரூ. 10,000 வரை எந்த வரைவு அளவும்  பொருந்தாது.
 
                  - இதில் ஒரு அட்டைக்கு / கடன் அளவான ரூ. 50,000 / வரை எந்த வரைவு அளவும் பொருந்தாது.
 
                 
               
              மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
              3. விவசாயிகளுக்கான இருசக்கர வாகனத் திட்டம் 
                கரூர் வைஸ்யா வங்கி சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு இருசக்கர வாகனத் திட்டத்தை வழங்குகிறது. 
              சிறப்பம்சங்கள் 
              
                
                  - தனிப்பட்ட விண்ணப்பதாரருக்கு கடன் அளவு அதிகபட்சமாக ரூ. 40,000 /- வரை வழங்கப்படுகிறது.
 
                  - கடன் தொகையை மூன்று முதல் ஐந்து முறை ஆண்டு ஒன்றுக்கு தவணை முறைகளிலும் அல்லது 6 முதல் 10 அரையாண்டு தவணை முறையில் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். (இது பயிர் சுழற்சி முறையைப் பொருத்தும் / விண்ணப்பதாரரின் வருமானத்தைப் பொருத்தும்).
 
                 
               
              மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
              4. பச்சை அறுவடை இயந்திரம் 
                கூட்டு அறுவடை இயந்திரம் வாங்குவதற்கு தனிப்பட்ட நபர்களுக்கு வங்கி கடனுதவி அளிக்கின்றது. 
                சிறப்பம்சங்கள் 
              
                
                  - வங்கியிடமிருந்து தனிப்பட்ட நபர்கள் இந்த வசதியைப்  பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.
 
                  - அறுவடை இயந்திரத்தின் மொத்தத் தொகையில் அதிகபட்ச அளவு கடனாக வழங்கப்படும்.
 
                  - கடன் அளவுகள் ஒவ்வொரு தகுதிக்கு ஏற்றாற்போல்  15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை வேறுபடும்.
 
                 
               
              மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
                 
                5. பச்சை டிராக் 
                வங்கிகள் விவசாயிகளுக்கு உழவு உந்து / பவர் டில்லர் வாங்குவதற்கு கடன் வழங்குகிறது. 
                 
              சிறப்பு அம்சங்கள் 
              
                
                  - தனிப்பட்ட / கூட்டு விண்ணப்பங்கள் இதில் கடன் பெற தகுதியானவை.
 
                  - உழவு உந்து வாங்குவதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருத்தல் வேண்டும் மற்றும் பவர் டில்லர்கள் வாங்குவதற்கு 2 முதல் 8 ஏக்கர் வரை நிலம் வைத்திருத்தல் வேண்டும்.
 
                  - 5 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை அளவிற்கு கடன் பெற தகுதியுள்ளவை.
 
                  - 5 முதல் 7 வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
 
                 
               
              மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
              6. கிசான் மித்ரா திட்டம் 
                 
                வசதியின் வகை 
                எஸ்.ஓ.டி (SOD) (விவசாயம்) 
                 
                தேவை 
                பயிர் சாகுபடி மற்றும் பல்வேறு நுகர்வுத் தேவைகளுக்கான செலவுகளுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்குதல். 
                 
                காலம்  
                1 வருடம் 
                அளவுகள் முகவர்களைப் பொருத்து விவசாயிகளின் எண்ணிக்கையை அதில் கொண்டு, விவசாயிகள் பயிரிடும் பயிர்களைப் பொருத்து, அதன் சாகுபடிப் பரப்பு மற்றும் எல் & பி பாதுகாப்பின் மதிப்புகள். 
                 
                டிபி (DP)  
                விவசாயிகள் முகவர்களுக்குக் கொடுக்க வேண்டிய 90 சதவிகிதம் மீதி அளவு. 
                 
              மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
              7. கரூர் வைஸ்யா வங்கியின் மகிழ்ச்சியான விவசாயி 
                 
                 தகுதியான விவசாயிகள்  
                சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் முதன்மை அலுவலர் மூலம் அங்கீகரிக்கப்பட்டு தொடர் முறை முகவர்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டவர்கள் இதற்குத்  தகுதியானவர்கள். 
                 
                வசதியின் வகை 
                சிறு தவணை பயிர்க்கடன் (சாகுபடி செலவு) நுகர்வு மற்றும்  தனிப்பட்ட செலவுகளும் அடங்கும். 
                 
                தகுதியான பயிர்கள் 
                அந்த பகுதியில் வளர்க்கும் அனைத்துப் பயிர்களுக்கும் தகுதியானவை. 
              அளவு 
              
                
                  - ரூ. 0.50 லட்சம் வரையிலான அளவு இல்லை
 
                  - ரூ. 0.50 லட்சத்திற்கும் மேல் உள்ள அளவு - விவசாய நிலம்
 
                 
               
              மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
                ஆதாரம் : http://www.kvb.co.in 
  
   |