வங்கி மற்றும் கடன் :: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் (PACB)
தமிழ்நாட்டில் 4474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது.

செயற்கூறுகள்
  • இவ்வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வசதிகள், இடுபொருட்களான உரங்கள் வினியோகம் மற்றும் பொது வினியோக முறை கிளைகளை நடத்தி வருகிறது.
  • இவ்வங்கி சிறு தவணை மற்றும் நடுத்தர தவணை கடன்களை விவசாயம் மற்றும் இதர செயல்களுக்கு வழங்குகிறது.
  • சிறு தவணை கடன்கள் 2 முதல் 15 மாதங்கள் மற்றும் நடுத்தர தவணை கடன்கள் 3 முதல் 5 வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.
  • பயிர் கடன்கள் விவசாயிகளுக்குக் கொடுப்பது தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முக்கியப் பணியாகும். இதில் பதிவு செய்யப்பட்ட கரும்பு சாகுபடியாளர்களுக்கு 10 ஏக்கர் வரை கூட்டு பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் இதர பயிர்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
  • கடன் அளவு இதற்கு மேல் சென்றால், சொத்துக்கள் அல்லது நகைகள் அடமானம் வைத்து அதன் மீது வழங்கப்படுகிறது.
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் இதர வேளாண் தேவைகளான பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், விவசாயம் இல்லாத தேவைகளான நுகர்வோர் பயன்பாடு, வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள் மற்றும் தொழில் கடன்கள் வழங்குகிறது.
  • வேளாண் பொருட்கள் விற்பனைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித்  தருதல்.
  • சமுதாய மற்றும் பொருளாதார நலத் திட்டங்களை கிராமப்புறங்களில் உதவி செய்தல்.
வேளாண்மைத் துறையில் கடன் வழங்குவதை அதிகரிப்பதை உணர்ந்து கொண்டு, அரசு 2006-07 ஆண்டிலிருந்து பயிர்களுக்கான வட்டி விகிதத்தை வருடத்திற்கு 9 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. அரசு விவசாயிகளிடம் நிதி ஒழுங்கு முறை விதிகளை பழக்கப்படுத்த வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. சிறப்பு நடவடிக்கையாக சரியாக பணம் செலுத்தும் விவசாயிகளுக்கு அரசு வட்டி விகிதத்தை 7 சதவிகிதம் இருந்து 5 சதவிகிதமாக அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்துள்ளது. இந்தத் தொகை 2008-09 ஆம் ஆண்டு 4 சதவிகிதம் மேலும் குறைக்கப்பட்டது.

அரசு பயிர் கடன்களைத் தேவையான அளவிற்கு சரியான நேரத்தில் வழங்குவதற்கு முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறது. 2008-09 ஆம் ஆண்டு பயிர் கடன் ரூ. 1500 கோடி வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் கடன் வழங்குவதை விவசாயிகள் குழுவின் மூலம் இணை சொத்துக்குழுக்கள் அமைத்து அதற்கு ஊக்கமளித்தல் மற்றும் இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் உதவியாக சுழல் நிதி மூலம் ரூ. 10 கோடிகள் வரை கிடைக்கும். இது விவசாயிகளுக்கு பெரிய வகையில் உதவி கிடைத்தல் மற்றும் இடுபொருள் வழங்குதல், சாகுபடி செயல்களை ஒருங்கிணைத்தல், அவர்களின் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக விற்பனையில் கூட்டு முயற்சி எடுத்தல் ஆகியவை அடங்கும். இறுதியாக, இதன் மூலம் பண்ணை செயல்களுக்கு விவசாயிகளுக்கு ஒருங்கிணைப்பு கிடைத்தல், மற்றும் சரியான தொழில்நுட்ப தலையீடுகள் மூலம் விவசாயத் துறையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இயல்கிறது.

அரசின் கொள்கை முடிவின்படி, எந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியையும் பணம் பெருக்கும் நோக்கத்துடன் செயல்படாமல், இவை விவசாயிகளின் நன்மைக்காக குறிப்பிட்ட தேவைக்காக செயல்படும்  பகுதிகளில் சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. இந்த அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை முக்கியமான அச்சாணியாகக் கருதி, இதன் மீது ஒருங்கிணைந்த தேவைகளான கடன், காப்பீடு, இடுபொருள் சந்தைப்படுத்துதல் மற்றும் விரிவாக்க செயல்பாடுகளை விவசாயிகளுக்கு வழங்க முடிகிறது. விவசாயத் துறயைில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து, 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த சேவைகள் தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள் வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகுக்கின்றது. விவசாயிகளின் செழிப்புகளை அதிகரிப்பது மற்றும் சரியான சேவைகளைப் பெற்று தொழில்நுட்ப தலையீடுகளுடன் மேம்படுத்த முனைந்துள்ளது. இந்த முறையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயத் துறை, ஆராய்ச்சி மற்றும் சேவைகளை ஒரு குடையின் கீழ் வழங்குகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் நெல் கொள்முதல் நிலையங்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்காக செயல்பட்டு நெல் கொள்முதலை குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு அறிவித்த தொகையில் டெல்டா இல்லாத பகுதிகளில் செயல்படுகிறது. இது தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மூலம் இயக்கும் நேரடி கொள்முதல் நிலையங்கள் சேர்க்காமல் தனித்து இயங்குகிறது.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை மற்றும் இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (NAFED) ஆகியவற்றின் மூலம் விவசாயப் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கு உதவுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி விளைபொருட்கள் மீது கடன் வழங்குவதை விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டத்தை விளைச்சல் மீது கடன் வழங்குவதை விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டத்தை விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் தவிர்ப்பதற்காக பயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

ஆதாரம்: http://www.tn.gov.in/policynotes/cooperation_2.html
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016