வங்கி மற்றும் கடன் :: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்

மத்திய கூட்டுறவு வங்கிகள் மாவட்ட தலைமையிடம் அல்லது மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளில் இருக்கும். இவ்வங்கிகளுக்கு சில தனிநபர்கள், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றை வழங்குபவர் இருப்பர். மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மூன்று முக்கிய ஆதார நிதிகள் உள்ளது.

  • அவர்களின் சொந்த பங்கு முதலீடு மற்றும் இருப்புகள்
  • பொது மக்களிடம் இருந்து பெறும் வைப்பு நிதிகள்
  • மாநில கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பெறும் கடன்கள்

வங்கிகளின் முக்கிய செயற்கூறுகள்

  • சங்க உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
  • வங்கி வணிகம் செய்தல்
  • பி.ஏ.சி.எஸ் (PACS) - க்கு சமமான நிலையமாக செயல்பட்டு சில சங்கங்களின் அதிகமான நிதியை நிதி பற்றாக்குறை உள்ளவற்றிற்கு பிரித்து அனுப்புதல்.
  • கடன் இல்லா செயல்களை மேற்கொள்ளுதல்
  • பி.ஏ.சி.எஸ் (PACS) உடன் நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான தொடர்பு வைத்துக் கொண்டு, அவற்றிற்கு தலைமை மற்றும் வழிகாட்டுதல் செய்தல்.
  • பி.ஏ.சி.எஸ் (PACS) - கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல்
  • பி.ஏ.சி.எஸ் (PACS) - வளத்தை முதலீடு செய்ய பாதுகாப்பான இடத்தை வழங்குதல்.

மாநிலத்தில் மொத்தம் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 717 கிளைகள் அதிகபட்சமாக கிராமப் பகுதிகளில் உள்ளது. அவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு §சவை செய்வதற்காக உள்ளது. இதனுடன், இவை பால்பண்ணை, கைத்தறி, சர்க்கரை மற்றும் இதர இணைக்கப்பட்ட கூட்டுறவுகளுக்கு கடன் தேவைகளை பூர்த்தி செய்கிறது. மேலும் இவை விவசாயம் அல்லாத தேவைகளுக்கும் வங்கி கிளையின் பகுதிகளுக்குள் வருவனவற்றிற்கு நேரடியாகக் கடன் வழங்குகிறது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் முகவரி

ஆதாரம்: http://www.nafscob.org/dir(dccb) /dir(dccb)_2008.pdf

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016