வங்கி மற்றும் கடன் :: கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்

i) விவசாய கடன் தள்ளுபடி
அரசின் எதிர்பார்க்கப்படாத பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் 31.3.2006 அன்று வரை நிலுவையில் இருந்த கூட்டுறவு வங்கிக் கடன்கள் பெற்ற லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் விவசாயிகள் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டது மட்டுமன்றி, கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு புது வாழ்வு  அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த சாதனையைப் பின்பற்றி, இந்திய அரசு தற்போது பெரிய அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடியை 2008-09 வரவு செலவுக் கணக்கு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் பொழுது ரூ. 60,000 §காடி என்று அறிவித்துள்ளது.

இந்த பாராட்டத்தக்க நடவடிக்கை இந்திய அரசு விவசாயத்  துறையில் பின்தங்கி இருப்பதில் இருந்து மேலும் வளர்ச்சி அடையத் தூண்டுகிறது. இதன் மூலம் இந்திய அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி தமிழ்நாட்டுக்கும் சேர்த்து என்றும் மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள தொகையை இந்திய அரசின் மூலம் ஈடு செய்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ii) பயிர் கடன்களுக்கு வட்டியில் மானியம் வழங்குதல்
2006-07 ஆம் ஆண்டு முதல் பயிர் கடன் வட்டி விகிதத்தில் மானியம் வழங்கி அதன் வெளியீடுகள் 9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடம் கடனை சரியாக திருப்பிச் செலுத்தவேண்டும் என்ற ஒழுங்குமுறையை ஏற்படுத்த, தமிழக அரசு வட்டி விகிதத்தை 2 சதவிகிதம் அளவிற்கு  2007-08 ஆம் ஆண்டு முதல் மேலும் குறைந்துள்ளது. இதன் மூலம் பயிர்க் கடன்களை சரியாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்குக் கடன்கள் 5 சதவிகிதம் வட்டியில் வழங்க உத்திரவிட்டுள்ளது.

iii) பண்ணை சாரா கடன்களுக்கு வட்டி குறைத்தல்
நிலுவையில் உள்ள அனைத்து பண்ணை சாரா கடன்களுக்கும் 31.03.2001 – ன் படி அனைத்து கூட்டுறவு கடன் நிறுவனங்களிடம் பெற்ற கடன்களுக்கு அதன் வட்டி விகிதத்தை 12 சதவிகிதமாகக் குறைக்க ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து தவணை கடந்த வட்டிகளை ஒரே முறையாக தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக கடன் பெற்றுள்ளவர், நிலுவையில் உள்ளவற்றிற்கு 25 சதவிகிதம் செலுத்த வேண்டும் மற்றும் சலுகைகள் வழங்கியுள்ளதைப் பெற்றுக் கொண்டு மீதம் உள்ள 75 சதவிகிதம் தொகையை குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் செலுத்தவேண்டும்.

iv) நகைக் கடன்
கூட்டுறவு வங்கிகள் நகைகளை வைத்து அதன் மீது விவசாயம் மற்றும் விவசாயம் சாரா தேவைகளுக்கு கடன் உதவிகளை வழங்கிறது. நகைக் கடன்கள் பொது மக்களிடம் மிகவும் பிரபலமானது மற்றும் வங்கிகள் இதன் மூலம் பாதுகாப்பாக இருப்பதுடனும் கடன் வாங்குவோர் எளிதாகப் பெற்றுக் கொள்வர்.

v) கிசான் கடன் அட்டைத் திட்டம்
கிசான் கடன் அட்டைத் திட்டம் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் கடன் வழங்குவதும் மேலும் கடன் வழங்குவதில் உள்ள தாமதத்தைக் குறைக்கவும் வழிவகை செய்கிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016