| 
        மத்திய சேமிப்புக்  கழகம் 
          (அரசாங்க நிறுவனம்) 
          4 / 1, சிரி  இன்ஸ்ட்டியூஸன்ஸ் ஏரியா 
          ஹஸ் காஸ்  
          புதுடெல்லி 110 016. 
          குடிமகனுக்கான  அடிப்படை வசதிகள் 
             
          
          கையேடு – XV          
           
          மத்திய சேமிப்புக்  கழகமானது 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் செயலானது சேமிப்புக் கழக ஆணை  1962ன் கீழ் உள்ளது. இந்தக் கழகமானது வேளாண்மை உற்பத்திப் பொருள்கள் மற்றும் மற்ற  வர்த்தகம் பொருட்களை சேமித்து வைக்கின்றது. 
             
          இந்தக் கழகத்தின் குறிக்கோள் யாதெனில்,  வேளாண்மை உற்பத்திப் பொருட்கள், விதைகள், இயற்கை உரங்கள், உரங்கள் மற்றும் பிற  வர்த்தகம் பொருட்களை சேமிப்பிற்காக கிடங்குகளில் கிடத்துவதாகும். தொழிற்துறையின்  / ஏற்றுமதியின் மற்றும் இறக்குமதியின் பொருட்களை சேமிப்பதற்காக தனிச்சிறப்புடைய  சேமிப்புக் கிடங்கு மற்றும் சரக்கு கொள்கலனின் நிலையம் அல்லது கையிருப்பிலுள்ள  சரக்குகளின் கிடங்கு போன்றவை நிறுவனப்படுத்தப்படுகிறது. மேலும் அறுவடைக்குப் பின்  ஏற்படும் இருப்புக்களை தடுப்பதற்கு செய்யப்படும் அறிவியல் பூர்வ தொழில்நுட்ப  சேமிப்பு மற்றும் தொற்றுக்களை நீக்குவதற்கான நேர்த்தி போன்றவற்றை பற்றிய  பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்து, உதவி புரிவது இதன் முக்கிய குறிக்கோள் ஆகும். 
சேமிப்பு  கழகத்தின்  விதிமுறைகள் 1963ன் படி  வாடிக்கையாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு, தொற்றுக்களை நீக்கும் நேர்த்தி பற்றிய  பயிற்சிகளை சேமிப்பு கழகமானது அளித்து வருகின்றது. சேமிப்புப் பணிகள் மட்டும்  அல்லாமல் கீழ்க்கண்ட பல்வேறு பணிகளையையும் செய்து வருகின்றது. 
  
    - பல்வேறு வாடிக்கையாளர்களின் வர்த்தகப் பொருட்களை  சேமிப்பதற்கான இட ஒதுக்கீடு.
 
    - சேமிப்புக் கிடங்கு இரசீது மூலம் வங்கிகளிலிருந்து  கடனைப் பெறுதல்.
 
    - நாட்டின் அனைத்து இடங்களிலும் உள்ள 495 சேமிப்புக்  கிடங்குகளில், நியாயமான விலைகளில் சேமித்தல்.
 
    - அழுகத்தக்க / சேதம் அடையும்  பொருட்களான பழங்கள், காய்கறி, பால் பொருட்கள்  மருந்துப் பொருட்கள் போன்றவற்றை குளிர்ப்பதனச் சேமிப்பு முறையின் மூலம்  சேமித்தல்.
 
    - தலைநகரின் துறைமுகங்கள், தொழிற்துறை வளாகம் மற்றும்  கடற்கரைக்கு அப்பாலிலுள்ள பல்வேறு ஏற்றுமதி / இறக்குமதி சரக்குகளின் நிலையம்  போன்றவற்றின் சுங்க இலாக்கா ஒப்பந்த அடிப்படையில் சேமிப்புக் கிடங்கு.
 
    - விமான துறைமுகங்களில் உள்ள இறக்குமதி / ஏற்றுமதி  மற்றும் தனிப்பட்ட பொதிக்கான விமான சரக்கு வளாகம்.
 
    - இறக்குமதி கொள்களலன்களை வெளியே எடுப்பது மற்றும்  சரக்குகளை விநியோகம் செய்வது போன்ற செயல்களை சரக்கு கொள்கலன் நிலையங்கள் (CFS)  மற்றும் திணித்த ஏற்றுமதி சரக்குகளை சாலை அல்லது இரயில் போக்குவரத்து மூலம்.  துறைமுக வாயிலுக்கு எடுத்துச் செல்கிறது.
 
    - பொருள் வைப்பவரிடம் இருந்து கையாளுதல் மற்றும்  போக்குவரத்து வசதிகளுக்கான உண்மையான மற்றும் பெயரளவேயான மேற்பார்வை கட்டணங்கள்.
 
    - இறக்குமதி சந்தை மற்றும் நுகர்வோர் மையங்கள் மூலம்  கையாளுதல், தரம் பிரித்தல், வர்த்தகப் பொருட்களின் பகிர்மானம் போன்ற ஒழுங்கான  விற்பனை வசதிகள்.
 
    - தீ ஆபத்து, வெள்ளம் மற்றும் திருட்டு போன்றவற்றினால  சேதமடையும் பொருட்களுக்கு, பொருள் வைத்தவர்களுக்கு நஷ்டஈடு தந்து உதவி புரிதல்.
 
    - பிற தொழிற்சாலைகளுக்கு சேமிப்புக் கிடங்கு  கட்டுமானப் பணிகள் பற்றிய நிகழ்ச்சிகளை   அமைத்தல்.
 
    - அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கென,  விவசாய விரிவாக்க சேவைத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணையில் /  விளைநிலத்தில் அறிவியல் பூர்வ பதன்படுத்தும் முறையைப் பற்றி பயிற்சியளிப்பு.
 
    - மேலும் மத்திய சேமிப்புக் கழகமானது, தொழில்நுட்பம்  அறிந்து  வல்லுநர்கள் மூலம்  பூச்சிக்கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி விவசாயிகள், வணிகர்கள், கூட்டுறவு அரசாங்க  அமைப்புகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்ற நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள  அமைப்புகளுக்கு விபரங்களை அவர்களைத் தேடி, முன் சென்று வழங்குகிறது. வேளாண்மை  அமைச்சகத்தின் பயிர் பாதுகாப்பு மற்றும் தொற்று நீக்கும் இயக்ககம் மற்றும்  ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளில் நச்சு வாயு நேர்த்தி செய்யும் நபர்களிடம் இருந்து  விபரங்களை, மத்திய சேமிப்புக் கழகமானது அறிந்து கொள்கிறது. மேலும் சேமிப்புக்  கழகமானது கப்பல் மற்றும் விமாகச் சரக்குகளின் நச்சு வாயு நோத்தியையும் சில  அரசாங்க மற்றும் தனியார் அமைப்புகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் இரயில்  பெட்டிகள் போன்றவற்றில் தொற்று நீக்கும் நேர்த்தியையும் செய்து வருகிறது.
 
    - சேமிப்பு பிரச்சனைகளுக்கு சிறந்த வல்லுநர்களின்  ஆலோசனை மற்றும் பயிற்சிகள்.
 
    - ஆலோசனை வசதிகள் - அனைத்து சேமிப்புக் கிடங்குகள்  வசதிகளை பற்றிய பணித்திட்டம் தயாரிப்பு, தொழில்நுட்ப - பொருளாதாரத்தின்  சாத்தியமான அறிக்கைத் தயாரிப்பு.
 
   
 
           | 
          |