வேளாண் ஆராய்ச்சி நிலையம், திருபதிசாரம்,  கன்னியாகுமரி மாவட்டம் 
          
          தொடக்கம்: 
            கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடியில் புதிய  தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்காகவும், நெல் சாகுபடியில் ஏற்படும் இடர்ப்பாடுகளை  களைவதற்காகவும் இந்த ஆராய்ச்சி நிலையம் 1976ம் ஆண்டு திருப்பதிசாரத்தில் தொடங்கப்பட்டது.  இது நாகர்கோவிலில் இருந்து 7 கி.மி. கிழக்கில் நாகர்கோவில்-திருநெல்வேலி நெடுஞ்சாலையில்  அமைந்துள்ளது. சுசீந்திரம் (10கி.மீ.), கன்னியாகுமரி (20கி.மீ.),  திருவனந்தபுரம்(75கி.மீ.) ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க ஊர்கள் இதன் அருகில் அமைந்துள்ளன. 
            நோக்கம்: 
            கன்னியாகுமரி  மாவட்டத்தில் நெல் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்காகவும், நெல்  சாகுபடியில் ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்காகவும் தொடங்கப்பட்டது. 
          ஆய்வும் கண்டுபிடிப்புகளும்: 
          
            - நான்கு புதிய       நெல் இரகங்கள் (திருப்பதிசாரம் 1, திருப்பதிசாரம் 2, திருப்பதிசாரம் 3 மற்றும்       திருப்பதிசாரம்; ( R ) 4 இந்த       ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
 
            - திருப்பதிசாரம்       3 இரகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப் பூ பட்டத்தில் அதிக அளவில் சாகுபடி       செய்யப்படுகிறது.
 
            - கடந்த ஆண்டு வெளியிடப் பட்ட திருப்பதிசாரம்        ( R       ) 4 என்ற இரகம் மிகக் குறைந்த வயதுடையது       (95 நாள்). பாசன நீர் குறைவாக உள்ள கடைவரம்பு பகுதிகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
 
            - நெல்லுக்கு       ஏற்ற ஒருங்கிணைந்த உர நிர்வாகம், களை கட்டுப்பாடு, பயிர் திட்டம், நூற்புழு மற்றும்       இதர பூச்சி நோய் கட்டுப்பாடு ஆகிய தொழில் நுட்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
 
            - தற்சமயம்       உழவர்கள் அதிக வருவாய் பெற உயர் தர நெல் இரகங்கள் உருவாக்கப்படுகின்றன. பொன்னி       வகை நெல்லும் (திருப்பதிசாரம் 7008) நறுமண நெல்லும் (திருப்பதிசாரம் 7014) ஆய்வில்       உள்ளன.
 
            - வேளாண்மையில்       சாகுபடிச் செலவைக் குறைக்கவும், விளைச்சலை அதிகரிக்கவும், திருந்திய நெல் சாகுபடி       முறைகளும், இயந்திர நடவு முறைகளும் விளக்கத் திடல் மூலமாக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
 
           
          டி.பி.08010: 
          
            - வேளாண்மை       ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து குறுகிய       கால வயதுடைய டி.பி.08010 என்ற வளர்ப்பு கண்டறியப்பட்டது. இந்த நெல் வளர்ப்பானது       அம்பை 16 இரகத்தையும் ஆடுதுறை 37 என்ற இரகத்தையம் ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது.       இதன் சராசரி வயது 118 நாட்கள்.
 
               
             
            - வேளாண்மை       ஆராய்ச்சி நிலையத்தில் நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த வளர்ப்பானது       சராசரியாக எக்டருக்கு 6134 கிலோ மகசூல் கொடுத்தது. இந்த மகசூலானது ஒப்பீட்டு       இரகமான அம்பை 16 விட 15.0 சதம் அதிகமாகும்.
 
               
             
            - 2009-10       ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பல்திடல் ஆய்வில் இந்த வளர்ப்பபானது எக்டருக்கு 6315 கிலோ       மகசூல் கொடுத்தது. இந்த மகசூலானது ஒப்பீட்டு இரகமான அம்மை 16, ஆடுதுறை 43 ஐ விட       15 சதம் அதிக மகசூல் கொடுத்துள்ளது. மேலும் மற்றொரு ஒப்பீட்டு இரகமான ஆடுதுறை       45 விட 4 சதம் அதிக மகசூல் கொடுத்துள்ளது. இந்த வளர்ப்பானது 10 பல் திடல் ஆய்வில்       மற்ற வளர்ப்புகளை ஒப்பிடும் போது இரண்டாவது இடத்தை தக்க வைத்தது.
 
               
             
            - அனுசரணை       ஆராய்ச்சி திடலில் இந்த வளர்ப்பானது 2010-11 ஆம் ஆண்டு 12 மாவட்டங்களில் ஆராயப்பட்டதில்       7 மாவட்டங்களில் ஒப்பீட்டு இரகமான அம்பை 16 விட அதிக மகசூல் கொடுத்துள்ளது.       2011-12 ஆம் ஆண்டு 10 மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6 மாவட்டங்களில் ஒப்பீட்டு       இரகத்தை விட அதிக மகசூல் கொடுத்துள்ளது. மொத்தத்தில் 102 இடங்களில் நடத்தப்பட்ட       ஆய்வில் சராசரியாக எக்டருக்கு 5710 கி.மகசூல் கொடுத்துள்ளது. இந்த உயர் மகசூலானது       அம்பை 16 விட 2.4 சதம் கூடுதலாகும்.
 
               
             
            - கடந்த       5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த வளர்ப்பானது சராசரி மகசூலாக எக்டருக்கு       6134 கிலோ மகசூல் கொடுத்துள்ளது. இந்த மகசூலானது அம்பை 16 இரகத்தை விட 10.6       சதம் அதிகமாகும். நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்தில் நடத்தப்பட்ட வயல்வெளி       ஆய்வில் மிக அதிக மகசூலாக எக்டேருக்கு 11,657 கிலோ பதிவு செய்யப்பட்டுள்ளது.       இந்த உயரிய மகசூல் இந்த வளர்ப்பின் தன்னக ஆற்றலுக்கான மகசூலாகும்.
 
               
             
            - இந்த       வளர்ப்பானது தண்டுதுளைப்பான், இலை சுருட்டுப்புழு, தத்துப்பூச்சி ஆகிய பூச்சிகளுக்கு       மத்திய எதிர்ப்புத்திறனும் உடையது. குறுகிய பருமனான அரிசியை உடைய இந்த இரகம் நல்ல       அறவைத்திறன், நடுத்தர அமைலோஸ் மாவுத்தன்மையும் உடையது. மேலும், உணவு தயாரிப்பிற்கான       சிறந்த குணங்களை கொண்டுள்ளது.
 
               
             
            - அதிக       மகசூல் பூச்சி, நோய் எதிர்ப்புத்தன்மை, சமையல் பண்புகள் போன்ற குணங்கள் ஒப்பீட்டு       இரகமான அம்பை 16 ஐ விட சிறந்ததாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த இரகம் கார் மற்றும்       பிந்திய பிசான பருவத்தில் பயிரிட ஏற்ற ஒரு சிறந்த இரகமாகும்.
 
           
          பயிர்  மேலாண்மை 
          
            - பொடி       விதைப்பில் களைக்கட்டுப்பாட்டு
 
           
          பூட்டாகுளோர் எக்டருக்கு 2 கிலோ (வீ.ம.)  வீதம் விதைத்த 8-ம் நாள் நிலத்தில் போதிய ஈரம் இருக்கும் போது இடுவதிலனால் முளைத்து  வரும் எல்லா களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. 
          
          நடைமுறையிலுள்ள நெல்-நெல்- உளுந்து பயிர்முறையைிவிட  நெல்-நெல்- வெண்டை பயிர் முறை அதிக லாபம் அளிக்கிறது. 
          
            - கடைமடை       பகுதிகளுக்கு ஏற்ற பயிர்முறை:
 
           
          முதல் பருவத்தில் நிலக்கடலை அல்லது பாசிப்பயறும்,  தொடர்ந்து இரண்டாம் பருவத்தில் மத்தியகால வயதுடைய நெல்லும் சிறந்த பயிர் முறை எனக்கண்டறியப்பட்டுள்ளது. 
            நெல்லுக்கு  ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து 
            எக்டருக்கு 12.5 டன் தொழு எரு, அசோஸ்பைரில்லம்,  மண் ஆய்வுப்படி இரசாயன உரம் ஆகியவை பயன்படுத்தினால் நெல்லில் அதிக விளைச்சல் பெற முடியும். 
  பயிர்  பாதுகாப்பு: 
  நெல் வெள்ளை  நுனி இலை நூற்புழு: 
          
            - அறுவடைக்குப்பின்       நெல் அடித்தாள்களை எரித்து ஆதார நூற்புழுக்ககைள அழிக்க வேண்டும்.
 
            - நெல்       விதைகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் இரண்டு நாள் காய வைத்து விதை       சுத்தம் செய்ய வேண்டும்.
 
            - தூர்       கட்டும் சமயம் காற்றில் அதிக ஈரப்பதம் இருந்தால் தடுப்பு முறையாக எக்டேருக்கு       1250 மி.லி. குளோர்பைரிபாஸ் அல்லது 500 மி.லி. மானோகுரோடோபாஸ் அல்லது 100       மி.லி. குனைல்பாலஸ் பூச்சிகொல்லி தெளிக்க வேண்டும்.
 
            - தென்னை       தஞ்சாவூர் வாடல் நோயின் ஆரம்ப நிலையில் மரத்திற்கு 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கை       இட வேண்டும் அல்லது 2 கிராம் கார்பன்டிசம் அல்லது கார்பாக்ஸின் பூசணக்கொல்லியை       100 மி.லி.நீரில் கலந்து வேர்மூலமாக கொடுக்க வேண்டும். இவைகளை தனியாகவோ சேர்த்தோ       செய்தால் நோய் கட்டுப்படும்.
 
            - நெல்       குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த குளேரான்டிரானிலிப்ரோல் 0.6 மி.லி/லிட்டர்       தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 
 
           
 
            மேலும்  தகவல்கள் தொலைபேசி அல்லது தபால் மூலம் எழுதுங்கள் 
             
            பேராசிரியர்  மற்றும் தலைவர் 
            வேளாண்  ஆராய்ச்சி நிலையம் 
            திருபதி  சாரம் 629 901 
            கன்னியாகுமரி  மாவட்டம், தமிழ்நாடு 
            (04652)  276728 
            தொலைநகலி  : 04652 -275357 
            மின்னஞ்சல்  : arstps@tnau.ac.in 
          விஞ்ஞானிகளை தொடர்புகொள்ள  
            முனைவர்  M. ஆறுமுகம் 
            பேராசிரியர்  மற்றும் தலைவர் 
            அலைப்பேசி  : 9443555302 
            மின்னஞ்சல்  : arstps@tnau.ac.in 
          முனைவர்  A.P.M. கிருபாகரன் செளந்தர்ராஜ் 
            பேராசிரியர்  (பயிர் பெருக்கம்) 
            அலைப்பேசி  : 9443434724 
            மின்னஞ்சல்  : arstps@tnau.ac.in 
            முனைவர்  C.கியாசியோ அகஸ்டீன் 
            பேராசிரியர்  (வேளாண் பூச்சியியல்) 
            அலைப்பேசி  : 9442364204 
            மின்னஞ்சல்  : arstps@tnau.ac.in 
          
            
           |